RABINDRANATH TAGORE HISTORY IN TAMIL: இரவீந்தரநாத் தாகூர் (Rabindranath Tagore) புகழ் பெற்ற வங்காள பல்துறையறிஞர் ஆவார். 19-ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலும் இவர் வங்காள இலக்கியம் மற்றும் இசை வடிவத்தில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வந்தார்.
மேலும் இந்தியக் கலைகளிலும் மாற்றங்களைக் கொண்டு வந்தார். இவர் கீதாஞ்சலி எனும் கவிதைத் தொகுப்பின் ஆசிரியர் ஆவார். இந்த கவிதைத் தொகுப்பிற்காக இவர் 1913-ல் இலக்கியத்திற்கான நோபல் பரிசினைப் பெற்றார்.
இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியர் இவரேயாவார். மேலும் ஐரோப்பியர் அல்லாத ஒருவர் இந்த விருதைப் பெறுவதும் இதுவே முதல் முறையாகும். தாகூரின் படைப்புகள் ஆன்மீகத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருந்தது.
KARUNANIDHI HISTORY IN TAMIL | மு. கருணாநிதி பற்றிய கட்டுரை
இருந்த போதிலும் இவரின் படைப்புகளில் இருந்த நேர்த்தியான உரைநடையும், கவிதையின் மாயத் தன்மையும் வங்காளத்திற்கு மட்டுமல்லாது அனைத்துத் தரப்பிற்கும் பொருந்தக் கூடியதாக இருந்தது. சில நேரங்களில் இவர் வங்காளக் கவி எனவும் அறியப்படுகிறார்.
இந்தியாவின் தேசியகீதமான ஜன கண மன என்ற பாடலை இயற்றியவரும் இவரேயாவார். இவருடைய மற்றொரு பாடல் அமர் சோனார் பங்களா வங்காளதேசத்தின் தேசிய கீதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இவரது நூல்களில் சிலவற்றை த. நா. குமாரசாமி தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
RABINDRANATH TAGORE HISTORY IN TAMIL – வாழ்க்கை வரலாறு
பிறப்பு
RABINDRANATH TAGORE HISTORY IN TAMIL: கொல்கத்தாவைச் சேர்ந்த வங்காளப் பிராமணரான இவர் ஜெஸ்சூரைச் சேர்ந்த ஜமீந்தார் மரபைச் சேர்ந்தவர் ஆவார். தனது எட்டாவது வயதிலேயே கவிதைகளை எழுதத் தொடங்கினார்.
பதினாறாவது வயதில் இவரது முதலாவது கவிதைத் தொகுதியை பானுசிங்கோ (சூரிய சிங்கம்) என்னும் புனைபெயரில் வெளியிட்டார். 1877 ஆம் ஆண்டில் இவரது முதல் சிறுகதையும், நாடகமும் இவரது பெயரிலேயே வெளிவந்தன. தாகூர் பிரித்தானிய அரசை எதிர்த்து நாட்டின் விடுதலையை ஆதரித்தார்.
இவர் தனது போர்க்குணத்தை, போராட்டத்தை ஓவியங்களின் மூலமாகவும், கேலிச் சித்திரங்களின் மூலமாகவும், எழுத்துகள் மற்றும் இரண்டாயிரம் பாடல்களின் மூலமாகவும் வெளிப்படுத்தினார். மேலும் இவர் விசுவபாரதி பல்கலைக்கழகத்தையும் நிறுவினார்.
தாகூர் வங்காளக் கலையில் கடுமையான செந்நெறி வடிவங்களை மறு ஆக்கம் செய்து புதுமைகளைப் புகுத்தினார். இவரது புதினங்கள், கதைகள், பாடல்கள், கட்டுரைகள் போன்றவை அரசியல் மற்றும் மக்களின் வாழ்வியலைத் தழுவியிருந்தன.
கீதாஞ்சலி, கோரா, காரே பைரே ஆகியவை இவரது பிரபலமான படைப்புகள் ஆகும். இவரது பாடல்கள், சிறுகதைகள், புதினங்கள் ஆகியவை அவற்றின் கற்பனைத்திறன், மொழிநடைக்காகவும், இயல்புத்தன்மைக்காகவும் ,சமத்துவத்திற்காகவும் பெரிதும் புகழ் பெற்றன.
சில தடை செய்யப்பட்டன. இந்தியாவில் ஜன கண மன மற்றும் வங்காளதேசத்தில் அமர் சோனர் பங்களா ஆகிய இவரின் படைப்புகள் இரண்டு நாடுகளில் தேசிய கீதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
நோபல் பரிசு
RABINDRANATH TAGORE HISTORY IN TAMIL: 1913 ஆம் ஆண்டில், இவரது கீதாஞ்சலி இலக்கியப் படைப்புகளுக்காக, இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்றார். இவரது புகழ் பெற்ற கோரா புதினம தமிழ் மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 1915 ஆம் ஆண்டில், பிரித்தானிய அரசாங்கம் தாகூருக்கு (Knighthood) செவ்வீரர் (சர், knight) பட்டம் வழங்கி அவரை கௌரவித்தது.
1921 ஆம் ஆண்டு சாந்தினிகேதனுக்கு அருகில் உள்ள சுருல் என்ற கிராமத்தில் ஸ்ரீநிகேதன் (Abode of Peace) என்ற நிறுவனத்தை ஆரம்பித்தார்.
ரவீந்திரநாத் தாகூர் மற்றும் காந்தி
RABINDRANATH TAGORE HISTORY IN TAMIL: தாகூரும் காந்தியும் ஒரே தசாப்தத்தில் பிறந்தவர்கள். தாகூர் 1861ஆம் ஆண்டிலும், காந்தி 1869ஆம் ஆண்டிலும் பிறந்தனர்.
காந்திக்கு ‘மகாத்மா’ என்று பெயர் வைத்தவர் தாகூர். காந்தி எப்போதும் தாகூரை ‘குருதேவ்’ என்று அழைத்தார். பல விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும், இருவரும் ஒருவருக்கொருவர் மிகுந்த மரியாதையுடன் இருந்தனர்.
1921ல் காந்தியின் கிலாபத் உத்தியை தாகூர் கடுமையாகக் கண்டித்திருந்தார். நாட்டில் உள்ள அனைவரும் நூற்பு சக்கரத்தில் நூல் நூற்க ஆரம்பித்தால், ஓராண்டுக்குள் நாட்டில் சுயராஜ்ஜியத்தை நிலைநாட்டுவேன் என்று காந்தி கூறியதையும் தாகூர் கேலி செய்தார்.
ஒருமுறை காந்தி, பிகார் பூகம்பத்தை தீண்டாமை பாவிகளுக்கான தெய்வத்தின் தண்டனை என்று கூறியபோது, தாகூர் ஒரு பொது அறிக்கை வெளியிட்டார். “காந்தி கூறுவதை பெரும்பான்மையான இந்தியர்கள் கேள்வியின்றி ஏற்றுக்கொள்ளும் நிலையில் இயற்கை பேரிடரை தெய்வீக அதிருப்தியின் வெளிப்பாடாக அவர் பார்ப்பது துரதிர்ஷ்டவசமானது,” என்று கூறினார்.
காந்தியும் தாகூரும் இருவேறு துருவங்களாக இருந்தனர். அவர்களின் அன்றாட வாழ்க்கைமுறையில் மட்டுமல்ல, அவர்களது சமூக மற்றும் அரசியல் நம்பிக்கைகளிலும் வேறுபாடு இருந்தது. ஆனால் தாகூரின் வார்த்தைகளை பக்தியுடன் கேட்பதை காந்தி நிறுத்தவே இல்லை.
தாகூர் விஸ்வ பாரதி மற்றும் நாட்டின் எல்லைகளுக்கு அப்பாற்பட்ட ‘மனிதநேயம்’ மற்றும் ‘சர்வதேச வாதம்’ ஆகியவற்றை நம்பியதால், இருவருக்கும் இடையேயான கருத்து வேறுபாடுகள் தொடர்ந்து வளர்ந்தன.
1937 அக்டோபரில் மருத்துவப் பரிசோதனைக்காக கல்கத்தாவின் புறநகர்ப் பகுதியில் உள்ள பிரசாந்த் மஹாலனோபிஸின் வீட்டிற்கு சென்றார். அங்கிருந்து சரத் சந்திர போஸின் வீட்டிற்குச் சென்றபோது, காந்தி அவரைச் சந்திக்க காரில் இருந்து இறங்கினார்.
வழியில் காந்தி காரிலேயே மயங்கி விழுந்தார். தாகூர் இந்தச் செய்தியை அறிந்ததும், காந்தியைப் பார்க்க துடித்தார்.
RABINDRANATH TAGORE HISTORY IN TAMIL: காந்தி ஷரத் சந்திர போஸின் வீட்டின் மேல் தளத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தார். 49 வயதான ஜவஹர்லால் நேரு, 40 வயதான சுபாஷ் போஸ், 48 வயதான ஷரத் மற்றும் 45 வயதான மகாதேவ் தேசாய் ஆகியோர் தாகூரை ஒரு நாற்காலியில் உட்கார வைத்து காந்தியைச் சந்திக்க அவரைத் தூக்கிச்சென்றனர்.
இறப்பு
RABINDRANATH TAGORE HISTORY IN TAMIL: 1920 முதல் 1936 வரை ஒரே ஒரு ஆண்டுதான் அவர் சாந்திநிகேதனில் ஓய்வாக இருக்க முடிந்தது. இடைக்காலத்தில் அவர் பாரத நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டார்.
சீனா, சப்பான், இத்தாலி, நார்வே, அமெரிக்கா முதலிய நாடுகளுக்குச் சென்று விசுவபாரதிக்கு நன்கொடை திரட்டினார். அவர் உடல் பலவீனம் அடையும் வரை விசுவபாரதிக்கு நன்கொடை திரட்டினார். அவரின் கனவுகள் ஒவ்வொன்றாக பலித்து வந்தன, விசுவபாரதி வளர்ந்து வந்தது.
1940ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம் சாந்திநிகேதனுக்கே வந்து அவருக்கு டாக்டர் ஆப் லிட்ரேச்சர் என்ற விருது வழங்கியது. அவரின் 80வது பிறந்த நாள் விழா 1941ல் சாந்திநிகேதனில் கொண்டாடப்பட்டது.
அந்த நாட்களில் அவரது உடல் மேலும் பலவீனம் அடைந்திருந்தது. கல்கத்தாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை நடைபெற்றது. எனினும் சிகிச்சை பலனின்றி 7 ஆம் தேதி ஆகஸ்ட் திங்களில் அவரது உயிர் உடலைப் பிரிந்தது.
அருங்காட்சியகம்
- இந்தியாவின் கொல்கத்தாவின் ஜோரசங்கோ தாக்கூர் பாரியில் உள்ள ரவீந்திர பாரதி அருங்காட்சியகம்
- தாகூர் நினைவு மியூசியம், மணிக்கு சிலைதஹா குதிபடி, சிலைதஹா, வங்காளம்
- ஷசாத்பூர் ரவீந்திர நினைவு அருங்காட்சியகம், வங்காளம்
- இந்தியாவின் சாந்திநிகேதனில் உள்ள ரவீந்திர பவன் அருங்காட்சியகம்
- இந்தியாவின் கலிம்பொங்கிற்கு அருகிலுள்ள முங்பூவில் ரவீந்திர அருங்காட்சியகம்
- பிதாவோ ரவீந்திர நினைவு வளாகம், குல்னா வங்காளம்
- ரவீந்திர காம்ப்ளக்ஸ், டக்கின்திஹி கிராமம், குல்னா, வங்காளம்
இவரது பெயரிடப்பட்ட கல்வி நிறுவனங்கள்
- ரவீந்திர பாரதி பல்கலைக்கழகம், கொல்கத்தா, இந்தியா.
- ரவீந்திர பல்கலைக்கழகம், சஹாஜ்பூர், ஷிராஜ்கஞ்ச், பங்களாதேஷ்.
- ரவீந்திரநாத் தாகூர் பல்கலைக்கழகம், ஹோஜாய், அசாம், இந்தியா
- ரவீந்திர மைத்ரீ பல்கலைக்கழகம், கோர்ட்பாரா, குஸ்டியா, பங்களாதேஷ்.
- பிஷ்வகாபி ரவீந்திரநாத் தாகூர் ஹால், ஜஹாங்கிர்நகர் பல்கலைக்கழகம், பங்களாதேஷ்
- ரவீந்திர நஸ்ருல் கலை கட்டிடம், கலை பீடம், இஸ்லாமிய பல்கலைக்கழகம், பங்களாதேஷ்
- ரவீந்திர நூலகம் (மத்திய), அசாம் பல்கலைக்கழகம், இந்தியா
- ரவீந்திர ஸ்ரீஜோங்கலா பல்கலைக்கழகம், கெரானிகஞ்ச், டாக்கா, பங்களாதேஷ்
இரவீந்திரநாத் தாகூர் சிந்தனைகள்
RABINDRANATH TAGORE HISTORY IN TAMIL: 1861-ம் ஆண்டு முதல் 1941-ம் ஆண்டு வரை வாழ்ந்த ரவீந்திரநாத் தாகூர் வங்காள கவிஞர். நாடக ஆசிரியர், மெய்யியலாளர், இசைக்கலைஞர் மற்றும் ஓவியர் என பல்துறையறிஞராக விளங்கியவர்.
வங்காள இலக்கியம் மற்றும் இசை வடிவத்தில் பெரும் மாற்றங்களைக் கொண்டுவந்தவர். தனது எட்டாவது வயதிலேயே கவிதைகளை எழுதத்தொடங்கி சிறுகதை, நாடகம், ஓவியம், கேலிச்சித்திரம், கட்டுரை மற்றும் பாடல்கள் என பல படைப்புகளை கொடுத்துள்ளார்.
கீதாஞ்சலி என்னும் தனது புகழ்பெற்ற கவிதைத் தொகுப்பிற்காக இலக்கியத்திற்கான நோபல் பரிசினைப் பெற்றுள்ளார். இந்தியா மற்றும் வங்கதேசத்தின் தேசியகீதங்களை இயற்றிய பெருமை இவருக்கு உண்டு.
- வெறுமனே நின்று தண்ணீரைப் பார்த்துக்கொண்டு இருப்பதன் மூலமாக உங்களால் கடலை கடக்க முடியாது.
- உங்கள் அழைப்பிற்கு யாரும் பதிலளிக்கவில்லை என்றால், பிறகு உங்களது சொந்த வழியில் தனியாக செல்லுங்கள்.
- அன்பு என்பது வெறுமனே ஒரு உணர்வு அல்ல, அது உண்மை.
- நட்பின் ஆழம் அறிமுகத்தின் நீளத்தைச் சார்ந்தது அல்ல.
- நாம் இந்த உலகத்தை தவறாகப் படித்துவிட்டு, அது நம்மை ஏமாற்றுகிறது என்று சொல்கிறோம்.
- பூவின் இதழ்களை பறிப்பதன் மூலமாக, உங்களால் அதன் அழகை சேகரிக்க முடியாது.
- ஒரு இலையின் முனையில் உள்ள பனியைப்போல, நேரத்தின் விளிம்புகளில் உங்கள் வாழ்க்கை எளிமையாக நடனம் புரியட்டும்.
- பட்டாம்பூச்சி மாதங்களை கணக்கிடுவதில்லை தருணங்களை கணக்கிடுகிறது, அதுவே அதற்கு போதுமான நேரமாக உள்ளது.
- அன்பு ஒரு முடிவில்லா மர்மம், ஏனென்றால் அதை விளக்குவதற்கு வேறு எதுவுமில்லை.
- யார் அதிகமாக வைத்திருக்கிறார்களோ அவர்களே அதிகமாகப் பயப்படுகிறார்கள்.
- கலையில், மனிதன் தன்னை வெளிப்படுத்துகிறான் பொருட்களை அல்ல.
- மகிழ்ச்சியாக இருப்பது மிகவும் எளிது, ஆனால் எளிமையாக இருப்பது மிகவும் கடினம்.