BHARATHIYAR HISTORY IN TAMIL | பாரதியார் பற்றிய கட்டுரை: BHARATHIYAR HISTORY IN TAMIL | பாரதியார் பற்றிய கட்டுரை: 
  • BHARATHIYAR HISTORY IN TAMIL | பாரதியார் பற்றிய கட்டுரை: சுப்ரமணிய பாரதியார் (Subramania Bharathiyar) ஒரு தமிழ் கவிஞர். இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் கனல் தெறிக்கும் விடுதலைப்போர் கவிதைகள் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். 
  • வர் ஒரு கவிஞர் மட்டுமல்லாமல் ஒரு  எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் தன்னுடைய பாட்டுகளின் மூலமாக சிந்தனைகளை மக்களிடம் தட்டியெழுப்பியவர். 
  • GANDHI JAYANTI HISTORY IN TAMIL | காந்தி ஜெயந்தி வரலாறு
  • தம் தாய்மொழியாம் தமிழ்மொழி மீது அளவுகடந்த பற்றுக்கொண்ட இவர், “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்” என்று போற்றி பாடியுள்ளார். 
  • விடுதலைப் போராட்ட காலத்தில், இவருடைய தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகள் மக்களை ஒருங்கிணைத்த காரணத்தினால் “தேசிய கவியாக” போற்றப்பட்ட மாபெரும் புரட்சி வீரனின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.
  • பிறப்பு: டிசம்பர் 11, 1882
  • பிறப்பிடம்: எட்டயபுரம், தமிழ்நாடு (இந்தியா)
  • பணி: கவிஞர், எழுத்தாளர், விடுதலை வீரர்
  • இறப்பு: செப்டம்பர் 11, 1921
பிறப்பு
  • BHARATHIYAR HISTORY IN TAMIL | பாரதியார் பற்றிய கட்டுரை: சுப்ரமணிய பாரதியார் அவர்கள்,  சின்னசாமி ஐயருக்கும், இலட்சுமி அம்மாளுக்கும் மகனாக 1882 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள எட்டயபுரத்தில் பிறந்தார்.  
  • அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் சுப்பிரமணியன். அவருடைய 5 வயதில் அவருடைய தாயார் காலமானார். இவர் இளம் வயதிலேயே தமிழில் புலமைப்பெற்றுத் திகழ்ந்தார்.
இளமைப் பருவம்
  • BHARATHIYAR HISTORY IN TAMIL | பாரதியார் பற்றிய கட்டுரை: சிறு வயதிலேயே பாரதியாருக்கு தமிழ் மொழி மீது சிறந்த பற்றும், புலமையும் இருந்தது. ஏழு வயதில் பள்ளியில் படித்துவரும்பொழுது கவிதைகள் எழுதத் தொடங்கினார். 
  • தன்னுடைய பதினொரு வயதில் கவிபாடும் ஆற்றலை வெளிப்படுத்தினார், இவருடைய கவிப்புலமையை பாராட்டிய எட்டயபுர மன்னர், இவருக்கு “பாரதி” என்ற பட்டத்தை வழங்கினார். அன்று முதல் இவர் “சுப்பிரமணிய பாரதியார்” என அழைக்கப்பெற்றார்.   
பாரதியாரின் திருமண வாழ்க்கை
  • BHARATHIYAR HISTORY IN TAMIL | பாரதியார் பற்றிய கட்டுரை: பாரதியார் அவர்கள், பள்ளியில் படித்துகொண்டிருக்கும் பொழுதே 1897 ஆம் ஆண்டு செல்லம்மா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். 
  • தனது தந்தையின் இறப்புக்குப் பிறகு பாரதியார் வறுமை நிலையினை அடைந்தார். சிறிது காலம் காசிக்கு சென்று தங்கியிருந்தார். பிறகு எட்டையபுர மன்னரின் அழைப்பை ஏற்று அரசவை கவிஞராக பணியாற்றினார்.
பாரதியாரின் இலக்கிய பணி
  • ‘மீசை கவிஞன்’ என்றும் ‘முண்டாசு கவிஞன்’ என்றும் தமிழ் இலக்கிய உலகம் போற்றும் பாரதியார்,  தாய் மொழியாம் தமிழ் மொழியின் மீது மிகுந்த பற்றுடையவராக திகழ்ந்தார். 
  • இவர் சமஸ்கிருதம், வங்காளம், இந்தி, ஆங்கிலம் போன்ற பிறமொழிகளிலும் தனி புலமைப்பெற்று விளங்கினார். 1912 ஆம் ஆண்டு கீதையை தமிழில் மொழிப்பெயர்த்தார். 
  • ‘கண்ணன்பாட்டு’, ‘குயில்பாட்டு’, ‘பாஞ்சாலி சபதம்’,’ புதிய ஆத்திச்சூடி’ போன்ற புகழ் பெற்ற காவியங்கள் பாரதியரால் எழுதப் பெற்றன.
விடுதலைப் போராட்டத்தில் பாரதியின் பங்கு
  • BHARATHIYAR HISTORY IN TAMIL | பாரதியார் பற்றிய கட்டுரை: சுதந்திரப் போரில், பாரதியின் பாடல்கள் உணர்ச்சி வெள்ளமாய், காட்டுத்தீயாய், சுதந்திரக் கனலாய் தமிழ்நாட்டை வீருகொள்ளச் செய்தது. பாரதியார் “இந்திய பத்திரிக்கையின்” மூலம் மக்களிடையே விடுதலை உணர்வை தூண்டும் வகையில் பல எழுச்சியூட்டும் கட்டுரைகளை எழுதினார். 
  • பாரதியின் எழுச்சிக்கு, தமிழ்நாட்டில் பலத்த ஆதரவு பெருகுவதைக் கண்ட பிரிட்டிஷ் ஆட்சி “இந்தியா பத்திரிக்கைக்கு” தடை விதித்து அவரை கைது செய்து சிறையிலும் அடைத்தது. 
  • அதுமட்டுமல்லாமல், விடுதலைப் போராட்டக் காலத்தில் தேசிய உணர்வுள்ள பல்வேறு கவிதைகளைப் படைத்து மக்களை ஒருங்கிணைத்த காரணத்தால், பாரதி “தேசிய கவியாக” அனைவராலும் போற்றப்பட்டார். 
  • இவர் சுதேசிமித்திரனில் உதவி ஆசிரியராக, நவம்பர் 1904 முதல் ஆகஸ்ட் 1906 வரை பணியாற்றினார். “ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம்” என்று சுதந்திரம் அடைவதற்கு முன்பே தன்னுடைய சுதந்திர தாகத்தை தன் பாட்டின் மூலம் வெளிபடுத்தியவர், மகாகவி சுப்பிரமணிய பாரதியார்.
இறப்பு
  • BHARATHIYAR HISTORY IN TAMIL | பாரதியார் பற்றிய கட்டுரை: 1921 ஆம் ஆண்டு ஜூலை மாதம் திருவல்லிகேணியில் உள்ள பார்த்தசாரதி கோவிலுக்கு சென்றபோது, எதிர்பாராவிதமாக அந்த கோவில் யானையால் தூக்கி எறியப்பட்டதால் பலத்த காயமுற்று மிகவும் நோய்வாய்ப்பட்டார். 
  • பிறகு, 1921 செப்டம்பர் 11ம் தேதி, தனது 39 ஆவது வயதில் இவ்வுலக வாழ்விலிருந்து விடுதலைப் பெற்றார்.
பாரதியாரை நினைவூட்டும் சின்னங்கள்
  • BHARATHIYAR HISTORY IN TAMIL | பாரதியார் பற்றிய கட்டுரை: எட்டயபுரத்திலும், சென்னையில் உள்ள திருவல்லிக்கேணியிலும் பாரதியார் வாழ்ந்த இடத்தை பாரதியாரின் நினைவு இல்லமாக தமிழ்நாடு அரசு மாற்றி இன்று வரை பொதுமக்களின் பார்வைக்காக பராமரித்து வருகிறது. 
  • இவர் பிறந்த எட்டயபுரத்தில், பாரதியின் நினைவாக மணிமண்டபமும் அமைக்கப்பட்டு இவருடைய திருவுருவச் சிலையும் வைக்கப்பட்டுள்ளது. 
  • பாரதியின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படக் கண்காட்சியும், இவருடைய திருவுருவச் சிலையும், இவரின் நினைவை போற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
  • பாரதியை மக்கள், ‘கவி’, ‘மானுடம் பாடவந்த மாகவி’, ‘புது நெறி காட்டிய புலவன்’, எ’ண்ணத்தாலும் எழுத்தாலும் இந்திய சிந்தனைக்கு வளம் சேர்த்தவர்’, ‘பல்துறை அறிஞர்’, ‘புதிய தமிழகத்தை உருவாக்க கனவு கண்ட கவிக்குயில்’, ‘தமிழின் கவிதை’ மற்றும் உரைநடையில் தன்னிகரற்ற புலமை பெற்ற பேரறிவாளர்,  என்றெல்லாம் புகழ்கின்றனர். 
  • உலக தமிழர் நாவில் மக்கள்கவி பாரதியாரின் பெயர் அடிக்கடி உச்சரிக்கபடுகிறது என்றால் அது மிகையாகாது.
பாரதியார் – புனைப் பெயர்கள்
  • காளிதாசன்
  • காசி
  • ரிஷி குமாரன்
  • சக்திதாசன்
  • சாவித்திரி
  • ஓர் உத்தம தேசாபிமானி
  • நித்திய தீரர்
  • ஷெல்லிதாசன்
சிறப்பு பெயர்
  • பாட்டுக்கொரு புலவன்
  • நீடுதுயில் நீக்கப் பாடி வந்த நிலா
  • சிந்துக்குத் தந்தை
  • தற்காலத் தமிழிலக்கியத்தின் விடிவெள்ளி
  • தேசிய கவி
  • மக்கள் கவி
  • மகாகவி (வ.ரா பெயரிட்டார்)
  • ஷெல்லிதாசன்
  • காளிதாசன்
  • சக்திதாசன்
  • சாவித்திரி
  • ஓர் உத்தம தேசாபிமானி
  • நித்திய தீரர்
உரைநடை நூல்கள்
  • ஞானரதம் (தமிழின் முதல் உரைநடை காவியம், பாரதிதாசன் = “ஞானரதம் போல் ஒரு நூல் எழுதுவதற்கு நானிலத்தில் ஆளில்லை” என்றார்)
  • தராசு
  • சந்திரிகையின் கதை
  • மாதர்
  • கலைகள்
  • பதஞ்சலியோக சூத்திரம்
  • ஹிந்து தருமம் (காந்தி உபதேசங்கள்)
  • ஆங்கில நூல்
  • THE FOX WITH THE GOLDEN TAIL
கவிதை நூல்கள்
  • கண்ணன் பாட்டு
  • குயில் பாட்டு
  • பாஞ்சாலி சபதம்
  • காட்சி (வசன கவிதை)
  • பாப்பா பாட்டு
  • பாரதமாதா திருப்பள்ளியெழுச்சி
  • பாரததேவியின் திருத்தசாங்கம்
  • விநாயகர் நான்மணிமாலை
  • சுதேச கீதங்கள் (முதல் கவிதை தொகுப்பு)
  • ஜன்மபூமி (2-வது கவிதை தொகுதி)
  • நீதி நூல்
  • புதிய ஆத்திச்சூடி
சிறுகதைகள்
  • திண்டிம சாஸ்திரி
  • பூலோக ரம்பை
  • ஆறில் ஒரு பங்கு
  • ஸ்வர்ண குமாரி
  • சின்ன சங்கரன் கதை
  • பொன்வால் நரி
  • நவதந்திரக்கதைகள்
  • கதைக்கொத்து (சிறுகதை தொகுப்பு)
  • சின்னஞ்சிறு கிளியே
  • மொழிபெயர்ப்பு நூல்
  • புதிய கட்சியின் கோட்பாடுகள் (திலகருக்கு ஆதரவாக)
  • பஞ்ச வியாசங்கள் (தாகூர் கவிதைகள்)
  • ஜீவவாக்கு (ஜகதீஸ் சந்திர போஸ் பற்றியது)
நாடகம்
  • ஜெகசித்திரம்
வசனகவிதை
  • காட்சி
இதழ்கள்
  • இந்தியா, சுதேசமித்திரன்
பாரதி பற்றி
1. இராஜாஜி
  • திலகர் விதைத்த விதை பாரதியாக முளைத்தது
2. பரலி நெல்லையப்பர்
  • பாரதியார் ஒரு அவதாரப் புருஷர், இவர் நூலைத் தமிழர் வேதமாகக் கொள்வார்களாக
3. நாமக்கல் கவிஞர்
  • பாரதியை நினைத்திட்டாலும் சுதந்திரத்தின் ஆவேசம் சுருக்கென்று ஏறும்;
  • இந்தியன் நான் என்றிடும் நல் இறுமாப்பு உண்டாம்
4. கவிமணி
  • பாட்டுக்கொரு புலவன் பாரதி
  • இவரின் பாப்பா பாட்டில் நெஞ்சை பறிகொடுத்தேன்
5. சிற்பி பாலசுப்ரமணியம்
  • அவனுக்கு (பாரதி) நந்தனார் சரித்திரக் கீர்த்தனை மெட்டும் தெரியும்; ஜப்பானிய ஹைக்கூ லாவகமும் புரியும். தாகூரையும் அறிவான்; வால்ட் விட்மனின் புதுக்கவிதை ஒளியையும் உணர்வான்.
  • காளிதாசனான அவன் ஷெல்லிதாசனாகவும் தன்னை அறிவித்துக் கொண்டவன்.
  • சுதந்திரத்தையும் பெண் உரிமையையும் புதுயுகக் கனவுகளையும் நவநவமான மொழிகளில் பேசியவன் என்கிறார்.
6. வையாபுரிப்பிள்ளை
  • இவருடைய பாடல்களில் கருத்தாழமும், ஆற்றலும், எளிமையும், இசை நயமும், தொடர் இன்பமும் ஒருங்கு அமையக் காண்கிறோம். இவ்வளவு சிறந்த கவிஞர் தமிழுலகில் சில நூற்றாண்டுகளாகத் தோன்றவில்லை
7. Dr.H.Cousins
  • அழகின் தூய – வாய்மையான வடிவத்தை பாரதி கவிதையிலே காண இயலும்
  • இந்தியாவின் நான்கு குறிப்பிடத்தக்க கவிஞர்கள் தாகூர், அரவிந்தர், சரோஜினி நாயுடு மற்றும் பாரதியார் ஆவர்
8. வ.ரா
  • பாரதியார் எதிர்காலத்தில் பல நூறு ஆண்டுகள் பெருமையுடன் மதிக்கப்படப் போகின்ற கவிஞர்களின் சிரோஸ்டமானவர்.
  • பாரதியாரின் கவிதை உள்ளம், நவரசங்கள் வழியாக வழிந்தோடி வெள்ளப் பெருக்கெடுத்திருப்பதை அவருடைய பாடல்களில் காணலாம்.
  • அவர் ஒரு சர்வக்கவி; அதாவது உலகக்கவி. இந்த ஸ்தானம் அவருடைய கவிதைக்கு கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை
  • பாரதியாரின் கவிதை ஆளாம் கரையும் காண முடியாத கடலாகும்; பாரதியாரை போகியும் போற்றுவான்; யோகியும் போற்றுவான்;
  • ஆகாயத்தில் இருந்து விழும் நீர்த்துளிகள் யாவும் எப்படியோ கடலுக்குப் போய்ச் சேர்ந்து விடுவது போல, பல்வேறு தன்மைகள் கொண்ட மனித உள்ளங்கள் மகாகவி என்ற அலையிலாப் பெருங்கடல் உள்ளத்தில் போய் அடங்கி விடுகின்றன. ஆகவே மகாகவி எல்லோருக்கும் சொந்தம்”
9. கண்ணதாசன்
  • தமிழகமே, பாரதியைக் கொண்டாடு. அதன்மூலம் பாரதத்தை நீ கொண்டாடுகிறாய்; தேசபக்தியைக் கொண்டாடுகிறாய்; தமிழ் மொழியைக் கொண்டாடுகிறாய்; பாரதியைக் கொண்டாடாதவனுக்கு தமிழன் என்று சொல்லிக் கொள்ள அருகதை இல்லை
10. வ.உ.சி
  • பாரதியை “அறிவின் சிகரம்” என்றார்
  • தன்னை சோழனாகவும், பாரதியை கம்பனாகவும் கருதி மகிழ்ந்தவர் வ.உ.சி
  • பாரதியை மாமனாகவும், தண்ணிய மருமகனாகவும் உறவு கொண்டாடியவர் வ.உ.சி ஆவர்.
  • மாமா இவ்வுலகை விட்டுப் போய்விட்டாலும் அவருடைய தேசிய கீதங்களும் மற்றைய பாடல்களும் கதைகளும் இவ்வுலகம் உள்ள அளவும் நிலைத்து நிற்குமென்பதில் ஐயம் இல்லை. அவருடைய பெயர் தேசாபிமானிகளுடைய சரித்திரத்தில் மட்டுமல்லாமல் கவிகளுடைய சரித்திரத்திலும் முதன்மையான இடத்தைப் பெரும்

11. பாவேந்தர்

பைந்தமிழ்த் தேர்ப்பாகன்
செந்தமிழ்த் தேனி
சிந்துக்குத் தந்தை
குவிக்கும் கவிதைக் குயில்
இந்நாட்டினைக் கவிழ்க்கும் பகையைக் கவிழ்க்கும் கவிமுரசு
நீடு துயில் நீக்கப் பாடிவந்த நிலா
காடு கமழும் கற்பூரச் சொற்கோ
கற்பனை ஊற்றாம் கவிதையின் புதையல்
திறம் பாட வந்த மறவன் புதிய
அறம் பாட வந்த அறிஞன்
என்னென்று சொல்வேன் என்னென்று சொல்வேன்
தமிழால் பாரதி தகுதி பெற்றதும்
தமிழ் பாரதியால் தகுதி பெற்றதும்
பாரதியார் உலககவி – அகத்தில் அன்பும்
பரந்துயர்ந்த அறிவினிலே ஒளியும் வாய்ந்தோர்
ஒரூர்க்கொரு நாட்டுக்குரிய தான
ஓட்டைச் சாண் நினைப்புடையார் அல்லர்
தமிழுக்கும், தமிழுக்கு உயர்வளிக்கும் தலைவனை எண்ணித் தவம் கிடக்கையில் இலகு பாரதிப் புலவர் தோன்றினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *