KALLANAI DAM HISTORY IN TAMIL | கல்லணை பற்றிய கட்டுரைKALLANAI DAM HISTORY IN TAMIL | கல்லணை பற்றிய கட்டுரை

KALLANAI DAM HISTORY IN TAMIL: கல்லணை (Grand Anicut) இந்தியாவின், தமிழ்நாட்டில் உள்ள உலக பழமை வாய்ந்த அணையாகும். இந்த அணை கரிகால் சோழனால் பொ.ஊ. முதலாம் நூற்றாண்டில் காவிரி மீது கட்டப்பட்டுள்ளது. இது திருச்சிக்கு மிக அருகில் உள்ளது.

இந்த அணை தஞ்சாவூர் மாவட்டத்தில், பூதலூர் வட்டத்தில் உள்ள கல்லணை – தோகூர் கிராமத்தில் அமைந்துள்ளது. திருச்சியில் அகண்ட காவேரி என அறியப்படும் காவிரி ஆறு முக்கொம்பில் வடபுறமாக கொள்ளிடம், தென்புறமாக காவிரி என இரண்டாகப் பிரிகிறது.

இவ்விடத்தில் ஆங்கிலேயர் ஆட்சியில் மேலணை கட்டப்பட்டுள்ளது. காவிரிக்கும், கொள்ளிடத்துக்கும் இடையில் திருவரங்கம் ஆற்றுத்தீவு உள்ளது.

அங்கிருந்து காவிரி ஆறு கிளை கல்லணையை வந்தடைகிறது. அங்கு காவிரி ஆறானது உள்ளாறு (கொள்ளிடம்), காவிரி, வெண்ணாறு, புது ஆறு என 4 ஆகப் பிரிகிறது. உள்ளாறு (கொள்ளிடம்) மீண்டும் கொள்ளிடத்தில் இணைகிறது. காவிரி இவ்வாறு பிரியுமிடத்தில்தான் கல்லணை கட்டப்பட்டுள்ளது.

பாசன காலங்களில் காவிரி, வெண்ணாறு, புது ஆறு ஆகியவற்றிலும், வெள்ளக் காலங்களில் கொள்ளிடத்திலும் தண்ணீர் கல்லணையில் இருந்து திறந்துவிடப்படும்.

அதாவது வெள்ள காலங்களில் கல்லணைக்கு வரும் நீர் காவிரிக்கு இடது புறம் ஓடும் கொள்ளிடம் ஆற்றில் (முக்கொம்பில் காவிரியில் இருந்து பிரிந்த கிளை ஆறு) திருப்பி விடப்படும். எனவே தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டத்தின் பல இலட்சம் ஏக்கர் நிலம் வெள்ளத்தில் இருந்து காப்பற்றப்படுகிறது.

KALLANAI DAM HISTORY IN TAMIL – வரலாறு

KALLANAI DAM HISTORY IN TAMIL: இந்த அணை கரிகாலன் என்ற சோழ மன்னனால் பொ.ஊ. முதலாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. தற்போதுள்ள அணைகளில் கல்லணையே மிக பழமையானது எனவும், தற்போதும் புழக்கத்தில் உள்ளது எனவும் அறியப்படுகிறது.

இதுவே உலகின் மிகப்பழமையான நீர்ப்பாசனத் திட்டம் என்றும் கூறப்படுகிறது. மணலில் அடித்தளம் அமைத்து கல்லணையைக் கட்டிய பழந்தமிழர் தொழில்நுட்பம் இன்று வரை வியத்தகு சாதனையாகப் புகழப்படுகிறது.

RAJA RAJA CHOLAN HISTORY IN TAMIL | ராஜ ராஜ சோழன் பற்றிய கட்டுரை

கல்லணையின் நீளம் 1080 அடி, அகலம் 66 அடி, மற்றும் உயரம் 18 அடியாகும். இது நெளிந்து வளைந்த அமைப்புடன் காணப்படுகிறது. கல்லும் களிமண்ணும் மட்டுமே சேர்ந்த ஓர் அமைப்பு 1900 ஆண்டுகளுக்கு மேலாக காவிரி வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தி வருவது அதிசயமே ஆகும்.

1839 இல் அணையின் மீது பாலம் ஒன்று கட்டப்பட்டது. பல இடங்களிலிருந்து தினந்தோறும் ஏராளமானோர் இவ்வணையைக் காண வருவதால், இது ஒரு சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது.

அணை கட்டப்பட்ட தொழில்நுட்பம்

KALLANAI DAM HISTORY IN TAMIL: பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட கரிகால் சோழன் காவிரியில் அடிக்கடி பெருவெள்ளம் வந்து மக்கள் துயரப்பட்டதைக் கண்டு அதைத் தடுக்க காவிரியில் ஒரு பெரிய அணையைக் கட்ட முடிவெடுத்தான்.

ஒரு நொடிக்கு இரண்டு லட்சம் கனநீர் பாயும் காவிரியின் தண்ணீர் மேல் அணைக்கட்டுவதற்கும் ஒரு வழியைக் கண்டுபிடித்தார்கள் தமிழர்கள். காவிரி ஆற்றின் மீது பெரிய பாறைகளைக் கொண்டுவந்து போட்டனர்.

அந்தப் பாறைகளும் நீர் அரிப்பின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் சென்றன. அதன் மேல் வேறொரு பாறையை வைத்து நடுவே தண்ணீரில் கரையாத ஒருவித ஒட்டும் களி மண்ணைப் புதிய பாறைகளில் பூசி இரண்டையும் ஒட்டிக்கொள்ளும் விதமாகச் செய்தனர். இதுவே இவ்வணையினைக் கட்டப் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பமாகும்.

KALLANAI DAM HISTORY IN TAMIL | கல்லணை பற்றிய கட்டுரை
KALLANAI DAM HISTORY IN TAMIL | கல்லணை பற்றிய கட்டுரை

கல்லணை கட்டப்பட காரணம்

KALLANAI DAM HISTORY IN TAMIL: காவிரியின் வெள்ளப்பெருக்கை தடுக்கவும், நீரை பயன்படுத்தி பாசனப் பரப்பை அதிகமாக்கவும் இந்த கல்லணை கட்டப்பட்டது.

ஏறக்குறைய 2100 ஆண்டுகள் பழமையான இந்த கல்லணை இன்றும் காவிரி வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தி வருவது தான் மிகப்பெரிய ஆச்சரியம். கல்லணையின் வயது 2100 ஆண்டுகள் என்பதை கேட்டு ஆய்வாளர்களும் சுற்றுலா பயணிகளும் இன்றும் வியக்கின்றனர்.

சிறப்புகள்

  • KALLANAI DAM HISTORY IN TAMIL: கல்லும் களிமண்ணும் மட்டுமே சேர்ந்து கட்டப்பட்டது கல்லணை=
  • கல்லணையை கட்டிமுடிக்க 30 ஆண்டுகள் எடுத்தன. அதற்கு காரணம்
  • 12 அடி ஆழத்திற்கு கீழே பாறைகள் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி அணை கட்டப்பட்டது. அந்த பாறைகளின் இணைப்புக்கு களிமண் மட்டுமே பயன்படுத்தப்பட்டது கூடுதல் சிறப்பு.
  • 1839 ஆம் ஆண்டு கல்லணை மீது பாலம் ஒன்று அமைக்கப்பட்டது. அதன் மேல் நின்று பார்த்தால் மொத்த கல்லணையின் அழகும் ஆச்சரியும் கண்ணில் தெரியும். தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் பல ஊர்களில் இருந்து வந்து கல்லணையை வியப்புடனும் ஆச்சரியத்துடனும் பார்த்து செல்கின்றனர்.
  • பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆங்கில ஆட்சியின் போது கல்லணை புதுப்பிக்கப்பட்டது. ஆங்கிலேயர் கால மேற்கட்டுமான பணிகளால் கல்லணை புதுபிக்கப்பட்டது.
  • கேப்டன் கால்ட்வெல், மேஜர்சிம், சர் ஆர்தர் காட்டன் போன்ற வல்லுநர்கள் கரிகாலன் கட்டிய கல்லணையை பார்த்து வியந்து அதை இடிக்காமல் புதுப்பித்தனர்.

காவேரி கரை கண்ட கரிகால சோழ தேவர்

தொல்காப்பியத்தில்,
“வருவிசை புனலைக் ‘கற்சிதொல்காப்பியத்தில்கூட,
“வருவிசை புனலைக் ‘கற்சிறை’ போல
 ஒருவன் தாங்கிய பெருமையானும்”
என்றே வருகிறது. ‘கற்சிறை’ என்ற சொல்லே ‘அணை’ என்ற இக்கால பொருளில் தொல்காப்பியத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. சோழமன்னன் கரிகாற் பெருவளத்தான் கட்டிய கல்லணை பெயருக்கேற்றாற்போல அன்பின் அணை.
கல்லணை கற்சிறையல்ல , அது காவிரியில் ஓடும் நீரை தேவையான அளவே செல்ல விட்டு , பாசன பகுதிக்கும் , தஞ்சைக்கும் பாதிப்பு ஏற்படும் அளவு வெள்ளம் வரும் காலத்தில் அளவுக்கு அதிகமான நீரை அணைத்து வடகாவிரி என்று அழைக்கப்படும் கொள்ளிடத்தில் திருப்பி விடும் பணியை செய்வதே கல்லணையில் வேலை.
காவிரியை கல்லால் அணைத்து சோழ நாட்டைக் காத்தருளினான் கரிகாற் பெருவளத்தான் . (கற்-கல் சிறை-அணை )
KALLANAI DAM HISTORY IN TAMIL: கரிகாலன் காவிரிக்கு கரை (அணை) கட்டியதற்கான குறிப்பு இலக்கியங்களில் மட்டுமல்லாமல், தெலுங்கு சோழனின் 7ம் நூற்றாண்டு ‘மாலேபட்’ செப்பேடுகளிலும், பராந்தக சோழனின் வேலஞ்சேரிச் செப்பேட்டிலும் காணப்படுகிறது.

கரிகால சோழன் மணிமண்டபம்

KALLANAI DAM HISTORY IN TAMIL: பல நூற்றாண்டுகளை கடந்தும் உறுதியோடு நிற்கும் கல்லணை தமிழர்களின் கட்டுமான திறனை பறை சாற்றி கொண்டிருக்கிறது.

பழமையான இந்த அணையை கட்டிய கரிகால சோழனை கெளரவிக்க கல்லணையில் இருந்து திருக்காட்டுப்பள்ளி செல்லும் சாலையில் காவிரி ஆற்றின் இடது கரை ஓரத்தில் மணி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மண்டபத்தில் யானை மீது கரிகால சோழன் அமர்ந்த நிலையில் சிலை வெண்கலச் சிலை அமைக்கப்பட்டு உள்ளது.

கல்லணை பற்றி சங்க கால சான்றுகள்

KALLANAI DAM HISTORY IN TAMIL: சங்ககாலத்தில் கரிகாலன் கல்லணை கட்டி காவிரியின் போக்கைக் கட்டுப்படுத்திக் கழனிகளிற் பாய்ச்சிச் செழிப்பை உண்டாக்கியதை பட்டினப்பாலை, பொருநர் ஆற்றுப்படை பாடல்களும், தெலுங்குச் சோழக் கல்வெட்டுகளும், திருவாலங்காட்டுச் செப்பேடுகளும் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *