NAMAKKAL KAVIGNAR HISTORY IN TAMIL | நாமக்கல் கவிஞர் பற்றிய கட்டுரைNAMAKKAL KAVIGNAR HISTORY IN TAMIL | நாமக்கல் கவிஞர் பற்றிய கட்டுரை

NAMAKKAL KAVIGNAR HISTORY IN TAMIL: நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை தமிழறிஞரும், கவிஞரும் ஆவார். “கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது” போன்ற தேசபக்திப் பாடல்களைப் பாடிய இவர் தேசியத்தையும், காந்தியத்தையும் போற்றியவர்.

முதலில் பால கங்காதர திலகர் போன்றவர்களின் தீவிரவாதத்தால் ஈர்க்கப்பட்ட இவர் மகாத்மா காந்தியின் கொள்கைகளால் ஆட்கொள்ளப்பட்ட பின் அறப் போராட்டத்தால் மட்டுமே விடுதலையைப் பெறமுடியும் என்ற முடிவுக்கு வந்தவர். இவரது கவிதைகள் சுதந்திரப் போராட்டத்தைப் பற்றியும் அகிம்சை பற்றியும் இருந்ததால் இவர் காந்தியக் கவிஞர் என அழைக்கப்படுகிறார்.

வாழ்க்கைக் குறிப்பு – NAMAKKAL KAVIGNAR HISTORY IN TAMIL

NAMAKKAL KAVIGNAR HISTORY IN TAMIL: பழைய சேலம் மாவட்டம், தற்போதைய நாமக்கல் மாவட்டம் கரூருக்கும் ஈரோட்டுக்கும் இடையே அமைந்துள்ள மோகனூர் என்னும் ஊரில் 1888 ஆம் ஆண்டு அக்டோபர் 19 ஆம் தேதி பிறந்தார்.

அவரது தந்தை வெங்கட்டராம பிள்ளை தாயார் அம்மணி அம்மாள். அவ்வூர் ஹெட் கான்ஸ்டபிளாக பணியாற்றியவர் வெங்கட்டராம பிள்ளை.

NAMAKKAL KAVIGNAR HISTORY IN TAMIL | நாமக்கல் கவிஞர் பற்றிய கட்டுரை

கவிஞருக்கு இரண்டு மனைவியர். முதல் மனைவி முத்தம்மாள். அவர் வயிற்று வலியால் 1924இல் இறந்து விடுகிறார். அவர் வேண்டுகோளுக்கேற்ப, அவர்தம் தங்கை சௌந்தரம்மாளை மணக்கிறார் கவிஞர். அவர் மூலமாகப் பிறந்த குழந்தைகள் ஐவர். பெண்கள் இருவர்; ஆண்கள் மூவர்.

தேசபக்தி மிக்க தனது பேச்சினால் பல இளைஞர்களை தேசத்தொண்டர்களாக மாற்றினார். மேலும் இவர் அரசின் தடை உத்தரவுகளை மீறி மேடையில் சொற்பொழிவு ஆற்றும் வல்லமை கொண்டவர்.

“கத்தி யின்றி ரத்த மின்றி

யுத்த மொன்று வருகுது

சத்தியத்தின் நித்தியத்தை

நம்பும் யாரும் சேருவீர்”

என்னும் பாடலை 1930-ம் ஆண்டில் நடைபெற்ற உப்பு சத்தியாக்கிரக போராட்டத்தின் போது தொண்டர்களின் வழிநடைப் பாடலாக பாடிச் செல்வதற்கு இயற்றிக் கொடுத்தார்.இதை பொறுக்காத ஆங்கிலேய அரசு இவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்தது.

NAMAKKAL KAVIGNAR HISTORY IN TAMIL – நாமக்கல் கவிஞர் சிறப்பு பெயர்கள்

  • நாமக்கல் கவிஞர்
  • காந்தியக் கவிஞர்
  • ஆஸ்தானக் கவிஞர்
  • காங்கிரஸ் புலவர்
  • புலவர்(விஜயராகவ  ஆச்சாரியார்)

NAMAKKAL KAVIGNAR HISTORY IN TAMIL – கவிதை

  1. தேசபக்திப் பாடல்கள், 1938.
  2. பிரார்த்தனை, 1938.
  3. தமிழன் இதயம், 1942.
  4. காந்தி அஞ்சலி, 1951.
  5. சங்கொலி, 1953.
  6. கவிதாஞ்சலி, 1953.
  7. மலர்ந்த பூக்கள், 1953.
  8. தமிழ்மணம், 1953.
  9. தமிழ்த்தேன், 1953.
  10. நாமக்கல் கவிஞர் பாடல்கள், 1960.
  11. அவனும் அவளும்

NAMAKKAL KAVIGNAR HISTORY IN TAMIL – உரைநடைக் கட்டுரைகள்

  1. தமிழ்மொழியும் தமிழரசும், 1956.
  2. இசைத்தமிழ், 1965.
  3. கவிஞன் குரல், 1953.
  4. ஆரியராவது திராவிடராவது, 1947.
  5. பார்ப்பனச் சூழ்ச்சியா, 1948.
  6. திருக்குறள் – உரை
  7. கம்பன் கவிதை இன்பக் குவியல்

NAMAKKAL KAVIGNAR HISTORY IN TAMIL – புதினம்

  1. மலைக்கள்ளன், 1942.
  2. தாமரைக்கண்ணி, 1966.
  3. கற்பகவல்லி. 1962.
  4. மரகதவல்லி, 1962.
  5. காதல் திருமணம், 1962.
  6. மாமன் மகள்

NAMAKKAL KAVIGNAR HISTORY IN TAMIL – நாமக்கல் கவிஞரின் பாடல் வரிகள்

இச்சை கொண்ட நிமிஷமே நிச்சயம் சுதந்திரம்;

பிச்சை கேட்க வேண்டுமோ, பிறர் கொடுக்க வல்லதோ?

‘வேண்டும்’ என்ற உறுதியே விடுதலைக்கு வழிவிடும்

யாண்டிருந்து வருவது? யார் கொடுத்துப் பெறுவது?

‘அடிமையல்ல நான்’ எனும் ஆண்மையே சுதந்திரம்;

தடியெடுக்க வேண்டுமோ? சண்டையிட்டு வருவதோ?

ஆசைவிட்ட பொழுதிலே அடிமை வாழ்வும் விட்டிடும்;

மீசை துள்ளி வாயினால் மிரட்டினால் கிடைப்பதோ?

அரசவைக் கவிஞர்

NAMAKKAL KAVIGNAR HISTORY IN TAMIL: இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு 1949இல் ஆகஸ்ட் 15 சுதந்திரத் திருநாளில் அப்போதைய சென்னை மாகாண கவர்னர் பவநகர் மகாராஜா தலைமையில் இவருக்கு ‘அரசவைக் கவிஞர்’ எனும் பதவி வழங்கப்பட்டது.

1956 ஆண்டிலும் பின்னர் 1962ஆம் ஆண்டிலும் தமிழக சட்ட மேலவை உறுப்பினராக இவர் செயல்பட்டார்.

‘பத்மபூஷன்’ விருது

மத்திய அரசு 1971 இல் இவருக்கு தில்லியில் ‘பத்மபூஷன்’ விருதளித்து பாராட்டியது.

மறைவு

NAMAKKAL KAVIGNAR HISTORY IN TAMIL: 84 ஆண்டுகள் நிறை வாழ்வு வாழ்ந்த தேசிய, காந்தியக் கவிஞர், காவிய ஓவியர் நாமக்கல் வெ.இராமலிங்கம் பிள்ளை 1972-ஆம் ஆண்டு ஆகஸ்டு 24 ஆம் தேதி இரவு 2 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு சென்னையில், தாம் போற்றிய தமிழ்கூறு நல்லுலகைவிட்டு விண்ணுலகு அடைந்தார்.

நினைவு இல்லம்

NAMAKKAL KAVIGNAR HISTORY IN TAMIL: தமிழ்நாடு அரசு இவர் வாழ்ந்த நாமக்கல்லிலுள்ள இல்லத்தை நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை நினைவு இல்லம் ஆக்கியுள்ளது. இதில் நூலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

To Know More About – CSL PLASMA PROMO CODE 2024

மேலும் சென்னையிலுள்ள அரசு தலைமைச் செயலக பத்து மாடிக் கட்டிடத்திற்கு இவரது பெயர் சூட்டியுள்ளது. தட்டாரத் தெரு என்று அழைக்கப்பட்டு வந்த இவர் வாழ்ந்த தெரு கவிஞர் இராமலிங்கம் தெரு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

சேலம் அருங்காட்சியகத்தில் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அவர்களின் உடைமைகள் காட்சிக்கு வைக்கப்பெற்றுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *