RAJA RAJA CHOLAN HISTORY IN TAMIL | ராஜ ராஜ சோழன் பற்றிய கட்டுரைRAJA RAJA CHOLAN HISTORY IN TAMIL | ராஜ ராஜ சோழன் பற்றிய கட்டுரை

RAJA RAJA CHOLAN HISTORY IN TAMIL: சோழப் பேரரசின் மாபெரும் வல்லமை பெற்ற பேரரசர் ஆவார். அவர் காலத்தை வென்ற புகழை ஈட்டினார். தென்னிந்தியாவின் பெரும் பகுதியின் மீது சோழர்களின் அதிகாரத்தை அவர் நிலைநாட்டினார்.

அவருடைய கப்பற்படையெடுப்புகள் மேலைக் கடற்கரையிலும் இலங்கையிலும் சோழர் ஆட்சி விரிவடைவதற்கு வழிவகுத்தது. இவன் காலத்தில் சோழநாட்டின் வலிமை பெருகியது. திருவாலங்காடு செப்பேடுகள் – இவறை பற்றி.

புகழ் பெற்ற ராஜராஜேஸ்வரம் கோவிலைத் (பிரகதீஸ்வரர் கோவில்) தஞ்சாவூரில் கட்டினார். அவருடைய மகனும் அவருக்குப் பின்னர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவருமான முதலாம் ராஜேந்திரன் தந்தையைப் போலவே பேரரசை விரிவுபடுத்தி கைப்பற்றிய பகுதிகள் ஒருங்கிணைத்தவர்.

அருண்மொழிவர்மன் அல்லது அருள்மொழிவர்மன் என்கின்ற பேரரசர் இராசகேசரி வர்மன் முதலாம் இராசராச சோழன் சோழ பேரரசின் புகழ் பெற்ற மன்னர்களுள் ஒருவனாவார்.

ABDUL KALAM HISTORY IN TAMIL | அப்துல் கலாம் பற்றிய கட்டுரை

‘சோழ மரபினரின் பொற்காலம்’ என்று போற்றத்தக்க வகையில் ஆட்சி செய்த இம்மன்னனின் ஆட்சிக்காலம் பொ.ஊ. 985 முதல் பொ.ஊ. 1014 வரையாகும்.

இவர் மகன் முதலாம் இராசேந்திரன் காலத்தில் சோழநாடு கடல் கடந்து பரவிய பெருமைக்கு அடிகோலியதும் இம்மன்னனே. இராசராச சோழனின் முப்பதாண்டு ஆட்சிக்காலமே சோழப் பேரரசின் வரலாற்றில் மிக முக்கியமாக விளங்கியது.

ஆட்சி முறை, இராணுவம், நுண்கலை, கட்டிடக்கலை, சமயம், இலக்கியம் ஆகிய பல்வேறு துறைகளில் புதிய எழுச்சியைக் கண்ட சோழப்பேரரசின் கொள்கைகள் இவருடைய ஆட்சியில் உருப்பெற்றவையே.

இவர் பொ.ஊ. 957 முதல் பொ.ஊ. 973 வரை சோழ நாட்டை ஆண்ட சுந்தர சோழனுடைய இரண்டாவது மகனாவார். சுந்தர சோழனுக்கும் சேர நாட்டு வானவன் மாதேவிக்கும் ஐப்பசி திங்கள் சதய நன்னாளில் பிறந்த இவரது இயற்பெயர் “அருண்மொழிவர்மன்”.

இராசகேசரி அருண்மொழிவர்மன் என்ற பெயராலேயே தன் ஆட்சியின் தொடக்க காலத்தில் இம்மன்னர் அழைக்கப்பட்டார். இவர் ஆட்சியின் 3ம் ஆண்டு முதலே இராசராச சோழன் எனப்பட்டார் (988) தந்தை இறந்ததும் இவர் உடனடியாகப் பதவிக்கு வரவில்லை.

15 வருடகால உத்தம சோழனின் ஆட்சிக்குப் பின்னரே இவர் செத்திரிய முறைபடி ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இராசராசசோழன் தன்னை அரசர்களுக்கு எல்லாம் அரசன் (சத்திரிய சிகாமணி) என்று புனைபெயர் கொண்டு வாழ்ந்தார்.

விசயாலய சோழன் நிறுவிய சோழ அரசு இவர் காலத்திலும் இவர் மகன் இராசேந்திர சோழன் காலத்திலும் மிக உயர்நிலை எய்தியது. இராசராசனின் காலம் பிற்காலச் சோழர் வரலாற்றில் மட்டுமன்றித் தென்னிந்திய வரலாற்றிலேயே ஒரு பொற்காலமாகும்.

RAJA RAJA CHOLAN HISTORY IN TAMIL – இராசராசன் சிறப்பு

RAJA RAJA CHOLAN HISTORY IN TAMIL: விசயாலய சோழன் பின்வந்த சோழர்களின் சோழப்  பேரரத்தை சிறப்புற அமைத்து நிலைபெறச் செய்த பேரரசன் இராசராசன் ஆவார்.  இவன் உண்டாக்கிய பேரரசு ஏறக்குறைய இருநூறு ஆண்டுகள் நிலை பெற்றிருந்தது எனின்,  இவன் இட்ட அடிப்படை எவ்வளவு உறுதி வாய்ந்ததாக இருந்திருக்க வேண்டும்! 

இராசராசன் தந்தையிடமிருந்து சிற்றப்பன் இடமிருந்தும் அரசியல் அமைப்புகளை அறிந்தான்.  தான் பட்டம் பெற்ற பின்பு  இன்னின்ன வேலைகளை செய்து சோழப்பேரரசை உண்டாக்குதல் வேண்டுமென்று முன்னமே திட்டம் செய்திருந்தான்;  பட்டம்  பெற்ற  பின்னர் அத்திட்டத்தை செவ்வனே நிறைவேற்றி வெற்றி கண்டான். 

இவனது ஆட்சிக் காலத்திலேயே இவன் தன் மைந்தனான இராஜேந்திரனை பெருவீரனாக்கிவிட்டமை  பாராட்டுக்குரியது.   இராசேந்திரன் கடற்படை செலுத்தி கடாரம்  கைக்கொண்டான்!  இராசராசன்   ஆண்டகாலம் சோழர்  வரலாற்றின் பொற்காலம் எனலாம். 

இவனது ஆட்சியில் ஓவியம்,  சிற்பம், நாடகம்,  நடனம்,  இசை,  இலக்கியம் இன்ன பிறவும் நன்கு  வளரத் தொடங்கின.  இவன் காலத்திலேயே தேவாரத் திருமுறைகள் நாடு பரவின;  சைவ சமயம் நாடெங்கும் பரந்து மக்கள் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது.   

சோழப்  பேரரசை உண்டாக்கப் பெரும் படை திரட்டியவன் இராசராசனே ஆவான்;  அப்படை இவன் நினைத்தது யாவும் தடையின்றி செய்துவந்தது பாராட்டுக்குரியது.  அரசியல் அமைப்பை  திடம்பெற  அமைத்தவனும் இராசராசனே ஆவான். 

நாகரீகம் மிகுந்த இக்கால அரசியல் அமைப்பிற்கு  எள்ளளவும் வேறுபாடு இல்லை.  இராஷ்டிரகூடர்   படையெடுப்பால் துன்புற்ற சோழநாடு இராசராசன் காலத்தில்  கிருஷ்ணா நதி வரை பரவியது  மேற்கே அரபிக்கடல் வரை பரவியது. 

தெற்கே இலங்கை வரை பரவியது  எனின்,  இவன் சிறப்பை அறியலாம்.  தஞ்சை பெரிய கோவில்  உள்ள சுவர் மீது உள்ள ஓவியம் இராசராசன் ஓவியமாக  இருத்தல் வேண்டும். 

RAJA RAJA CHOLAN HISTORY IN TAMIL: இராசராசன் திருவுருவமும் கோப்பெருந்தேவியின் திருவுருவமும் சிலைவடிவில் திருவிசலூர் கோவிலில் இருக்கின்றன.  இவனைப் பற்றி கூறும்பொழுது இராசராசன் அரசியலில் பண்பட்ட அறிவுடையவன்,  சிறந்த  போர்த் தொழிலில் வல்லவன்;  சமயப்பற்று உடையவன்;   பேரரசை  உண்டாக்கும் தகுதி மற்றும் பொருந்த பெற்றவன் எனலாம்.  சோழர் வரலாற்றை இன்று நாம் அறிந்து இன்புற  வழிவகுத்தவன்.

RAJA RAJA CHOLAN HISTORY IN TAMIL | ராஜ ராஜ சோழன் பற்றிய கட்டுரை
RAJA RAJA CHOLAN HISTORY IN TAMIL | ராஜ ராஜ சோழன் பற்றிய கட்டுரை

சிறப்பு பெயர்கள்

  1. அருள்மொழிவர்மன்
  2. ரிசிவர்மன்
  3. மும்முடிச்சோழன்
  4. இராஜ கேசரி

காந்தளூர்ச் சாலை

RAJA RAJA CHOLAN HISTORY IN TAMIL: இவற்றுக்காக இராசராசன் நடத்திய போர்கள் பல. சேரர், பாண்டியர், சிங்களவர், ஒன்று கூடி காந்தளூர்ச் சாலை என்ற இடத்தில் சோழரை எதிர்த்தனர்.

இப்போரில் சேர மன்னன் பாசுகர ரவிவர்மனைத் தோற்கடித்தான். சேர மன்னனுடைய கப்பற்படையை அழித்து உதகை, விழிஞம் ஆகிய பகுதிகளையும் வென்றான்.

இப்போரில், சேரருக்கு உதவுவதற்காகச் சென்ற பாண்டிய மன்னன் அமரபுயங்க பாண்டியனை வென்று, இவர்களுக்கு உதவிய இலங்கை மீதும் படைநடத்தி அதன் தலை நகரைக் கைப்பற்றினான்.

இலங்கைத் தீவின் வடபகுதி சோழ நாட்டுடன் இணைக்கப்பட்டது. கொல்லம் சென்று சேரனுடன் இரண்டாவது முறைப் போர் புரிந்து சேர நாட்டின் எஞ்சிய பகுதிகளையும் வென்றான்.

இதனால் “காந்தளூர் சாலை கலமருதளிய“ எற்ற பட்டம் பெற்றார்.

கங்கபாடி, நுளம்பாடி

RAJA RAJA CHOLAN HISTORY IN TAMIL: சோழ நாட்டுக்கு வடக்கிலும், கங்கர்களைத் தோற்கடித்து கங்கபாடியைக் கைப்பற்றினான். தலைக்காட்டைத் தலைநகராகக் கொண்டு கங்கர்கள் இந்நாட்டைஆண்டனர்.

மைசூர் நாட்டின் கீழ்ப்பகுதியும் பல்லாரி மாவட்டமும் கொண்ட நுளம்பாடியைப் பல்லவர்களின் வம்சத்தவர் ஆகிய நுளம்பர்களுடன் போரில் வென்று இப்பகுதியைக் கைப்பற்றினான்.

ஈழத்துப் போர்

RAJA RAJA CHOLAN HISTORY IN TAMIL: இராசராசன் வலிமை மிக்கக் கடற்படையைக் கொண்டு இலங்கையை வென்றான் எனத் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் புகழ்கின்றன.

அப்போது ஐந்தாம் மகிந்தன் இலங்கை வேந்தனாக இருந்தான். சோழ நாட்டு மண்டலங்களில் ஒன்றாக மாறிய ஈழம் ‘மும்முடிச் சோழ மண்டலம்’ எனப் பெயர் பெற்றது.

இலங்கையின் தலைநகராகத் திகழ்ந்த அநுராதபுரம் போரில் அழிந்தது. ‘சனநாத மங்கலம்’ என்று புதிய பெயர் சூட்டப்பட்டு ‘பொலன்னருவை’ ஈழத்தின் புதிய தலைநகராயிற்று.

இங்குள்ள ஒரு பௌத்த-விகாரையின் பெயர் ராசராச பெரும்பள்ளி. ராசராசசோழ மன்னனின் பெயரில் இது இருப்பது குறிப்பிடத்தக்கது. இதே பெயரில் தமிழ்நாட்டிலுள்ளநாகப்பட்டினத்தில் ஒரு புத்த விகாரை அக்காலத்தில் இருந்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.

இராசேந்திரன் ‘வானவன் மாதேச்சுரம்’ என்ற பெயரில் இங்கு கற்றளி எடுத்தான். விளிஞ்சம் பகுதியில் திக் விஜயம் நடத்தினார். புலனருவா என்ற புதிய தலைநகரம்.

1010 ல் பிரகதீஸ்வரர் என்ற தஞ்சை பெரிய கோயிலை கட்டினார். ஆனை மங்கலத்தை நன்கொடையாக புத்த மடாலாயத்திற்கு கொடுத்தார்.

தஞ்சைப் பெருவுடையார் கோயில்

RAJA RAJA CHOLAN HISTORY IN TAMIL: இராசராச சோழனால் தஞ்சையில் எடுப்பிக்கப்பட்ட இராசராசேச்சரம் என்னும் சிவன் கோயில், தென் இந்திய வரலாற்றுப் பகுதியில் தலைசிறந்த சின்னமாகும் தென்னிந்திய கட்டடக் கலைக்கே பெருமை தேடித்தரும் கலைக் கருவூலமாகவும் இம்மன்னனின் ஒப்பற்ற ஆட்சியின் நினைவுச் சின்னமாகவும் இன்றளவும் இக்கோயில் விளங்கி வருகிறது.

இக்கோயில் வானளாவி நிற்பதோடு எளிமையான அமைப்பையும் உடையது. இராசராசனின் 25ம் ஆண்டின் 275ம் நாளில் இது கட்டி முடிக்கப்பட்டது. இராசராசன் காலத்தில் இராசராசேச்சரம் என்று அழைக்கப்பட்ட இக்கோவிலின் பெயரானது பெருவுடையார் கோவில் என்ற தமிழ்ப் பெயரின் வடமொழி வடிவமாகும்.

நிர்வாகம்

RAJA RAJA CHOLAN HISTORY IN TAMIL: நிலவரியை நிர்ணயிக்க வேண்டி நாடெங்கும் நிலங்களை அளந்து, நிலத்திற்கேற்ப வரி விதித்து, இப்போதைய நிர்வாகத்தில் உள்ளது போல் செயலாளர்களைக் கொண்ட மத்திய அரசை இராசராச சோழன் நன்கு அமைத்தான்.

மேலும் நிர்வாகத்தை வலுவாக்கி, மத்திய அரசின் பிரதிநிதிகளை ஆங்காங்கு மேற்பார்வைக்காக அமர்த்தி, கிராம சபைகளையும் மற்றப் பொதுக்குழுக்களையும் பொதுக் குழுக்களையும் தணிக்கையின் மூலம் கட்டுப் படுத்தினான்.

அதனால் நிறைந்த நிலைப்படையை உருவாக்கி, இராசேந்திரனின் கீழ் மேலும் பல வெற்றிகளை அடைந்த பெரும் கப்பற்படையை நிறுவி, தென் இந்தியாவின் வரலாற்றிலேயே இராச்சியங்களை நிர்மாணிப்பதில் ஒப்பற்றவனாகத் திகழந்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *