SAIBABA HISTORY IN TAMIL | சீரடி சாய்பாபா பற்றிய கட்டுரைSAIBABA HISTORY IN TAMIL | சீரடி சாய்பாபா பற்றிய கட்டுரை

SAIBABA HISTORY IN TAMIL: சீரடி சாய்பாபா மகாராட்டிரத்தில் அகமது நகர் மாவட்டத்தில் சீரடியில் வசித்திருந்த ஓர் இந்திய குரு, யோகி மற்றும் சுஃபி துறவி. இவரை இந்துக்களும் இசுலாமியரும் புனித சாமியாராக போற்றுகின்றனர்.

இந்துக்கள் இவரை கடவுள் தத்தாத்திரேயரின் அவதாரமாகக் கருதுகின்றனர். இசுலாமியர் பிர் (உருது: پیر) அல்லது குதுப் ஆக நம்புகின்றனர். சீரடியில் இவர் சமாதி அடைந்த இடம் தற்போது பல்லாயிரக்கணக்கானவர் தொழும் புண்ணியத் தலமாக விளங்குகிறது.

ஒருமுறை நீதிமன்ற ஆணையர் அவரது வயதைக் கேட்டபோது லட்சக்கணக்கான வருடங்கள் என்று சாய் பாபா தெரிவித்திருந்தார். பக்தர்கள் பலர் திரட்டிய தகவல்களில் இருந்து சாய் பாபாவின் அவதார தினம் 1838 செப்டம்பர் 28 என தெரியவந்தது.

SAIBABA HISTORY IN TAMIL – ஷீரடி சாய்பாபா கோவில்

SAIBABA HISTORY IN TAMIL: ஷீரடி சாய்பாபா கோவில்கள் உலகம் முழுவதும் பல இடங்களில் இருந்தாலும் மும்பையில் அருகில் இருக்கும் ஷீரடி தலமே, சாய்பாபாவின் வீடாக கருதப்படுகிறது. இங்கு சமாதி வடிவில் இருந்து இன்றும் சாய்பாபா பல அற்புதங்களை நிகழ்த்துவதுடன், பக்தர்களுக்கு நேரடியாக காட்சி கொடுத்தும், வழிகாட்டியும் வருகிறார்.

ஷீரடி சாய்பாபாவின் பிறப்பு, ஆரம்ப கால வாழ்க்கை, அவருடைய உண்மையான பெயர் என்ன என்பது பற்றிய தகவல்கள் ஏதும் கிடைக்காததால் அவரது பிறப்பு பற்றிய விபரங்கள் மர்மமாகவே உள்ளது. இவர் இந்து குடும்பத்தில் பிறந்து, இஸ்லாமிய குடும்பத்தில் வளர்ந்ததாக கூறப்படுகிறது.

மகானான சாய்பாபா

SAIBABA HISTORY IN TAMIL: சாய்பாபா தனது 16 வது வயதில், வேப்ப மரத்தடியில் முதன் முதலாக தியானத்தில் ஈடுபட்டிருந்த போது, அவர் மகானாக காட்சி அளித்தார். தன்னை நாடி வருபவர்களுக்கு சிறந்த ஆன்மிக தத்துவங்கள், போதனைகள் ஆகியவற்றை வழங்கி, தன்னை நாடி வரும் பக்தர்களின் நோய்களை குணப்படுத்தி வந்தார். பாபாவின் புகழ் மெல்ல மெல்ல மற்ற பகுதிகளிலும் பரவ துவங்கியது.

ஷீரடி திருத்தலத்திற்கு சென்ற சாய்பாபா

SAIBABA HISTORY IN TAMIL: குருநாதரின் வார்த்தைகளைக் கேட்டு மிகவும் நெகிழ்ச்சி அடைந்த சாயிநாதர், அவருடைய பாதங்களில் பணிந்து வணங்கி விடைபெற்று, அவர் அந்தரத்தில் நிலைநிறுத்திய செங்கல்லை அவருடைய நினைவாகப் பெற்றுக்கொண்டு, மேற்குத் திசையை நோக்கித் தன்னுடைய நெடிய அருள் பயணத்தைத் தொடர்ந்தார். அந்த இளைஞரின் திருப்பாதங்கள் சென்று சேர்ந்து நிலைபெற்ற திருவிடம்தான் ஷீர்டி திருத்தலம் ஆகும்.

SAIBABA HISTORY IN TAMIL | சீரடி சாய்பாபா பற்றிய கட்டுரை
SAIBABA HISTORY IN TAMIL | சீரடி சாய்பாபா பற்றிய கட்டுரை

இனிக்கும் வேப்ப மரம்

SAIBABA HISTORY IN TAMIL: சாய் பாபா சீரடிக்கு வந்தபோது, அவர் தனது பெரும்பாலான நேரத்தை ஒரு வேம்பு மரத்தின் கீழ் கழித்தார், அது இப்போது குருஸ்தான் என்று அழைக்கப்படுகிறது.

இந்த வேம்பு மரத்தின் இலை கசப்பதற்கு மாறாக இனிப்பு சுவையில் இருக்கும். மேலும் வேப்ப இலையை பெறுபவர்களுக்கு ஆரோக்கியமான வாழ்க்கை இருப்பதோடு எந்த நோய்களாலும் அவர்களை அண்டாது என்பது அங்குள்ளவர்களின் நம்பிக்கை.

சீரடி சாய் பாபாவின் ஆன்மிக வாழ்க்கை பயணம்

SAIBABA HISTORY IN TAMIL: 3 ஆண்டுகள் சீரடியிலேயே இருந்த சாய் பாபா, 1857 ம் ஆண்டு மாயமானார். ஒரு வருடத்திற்கு பின் மீண்டும் திரும்பியவர், ஜான்சி ராணிக்கு உதவி செய்ய சென்றதாக கூறியுள்ளார்.

சீரடியில் உள்ள ஒரு பாழடைந்த மசூதியில் தனியாக தங்கியிருந்த சாய்பாபா, அங்கே ஒரு தீக்குண்டத்தை உருவாக்கினார். அணையாமல் எரிந்த தீக்குண்டத்தில் இருந்து கிடைக்கும் சாம்பலை எடுத்து, விபூதியாக கொடுப்பார். தீமையை அகற்றும் சக்தி சாம்பலுக்கு இருப்பதாக, அவரது பக்தர்கள் நம்பினார்கள்.

BREAST TAX HISTORY IN TAMIL | மார்பக வரி பற்றிய கட்டுரை

இந்துக்கள் மட்டுமின்றி, முஸ்லீம்களும் இவரை நாடி வந்தனர். துறவி, சத்குரு என பக்தர்களால் இவர் அழைக்கப்பட்டார். இவரது போதனைகள், இந்து, இஸ்லாமிய மதத்தை பின்பற்றி இருந்தது. கடவுள் ஒருவரே எனும் பொருள் கொண்ட “Sabka Malik Ek” என, அடிக்கடி கூறுவார். தம்மிடம் வரும் முஸ்லீம்களை குரான் படிக்கவும், இந்துக்களை ராமாயணம், மகாபாரதம் படிக்கவும் வலியுறுத்துவார்.

சாய்பாபா இந்துவா ? முஸ்லீமா? என்பது விடையில்லா கேள்வியாகவே நீடிக்கிறது. கடவுள் மறுப்புக்கொள்கையை இவர் கடுமையாக விமர்சித்துள்ளார். Bhakti Yoga, Jnana Yoga, மற்றும் Karma Yoga ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளித்தார். அன்பு,மன்னிப்பு, உதவி, திருப்தி, குரு பக்தி மற்றும் கடவுள் பக்தி உள்ளிட்டவற்றை பக்தர்களிடையே வலியுறுத்தியுள்ளார்.

ஒரே நேரத்தில் இரு இடங்களில் இருப்பது, அந்தரத்தில் மிதப்பது, பிறர் மனதில் இருப்பதை கூறுவது, தண்ணீரில் தீ மூட்டுவது, வியாதிகளை தீர்ப்பது, கொதிக்கும் உலையில் கைவிடுவது என்று, ஆச்சரியப்படுத்தியுள்ளார். பக்தர்களை மகிழ்விக்க, இசைக்கு ஏற்றவாறு ஆனந்த நடனம் ஆடுவார். 1910ம் ஆண்டில், சாய்பாபாவின் புகழ் வெளி மாநிலங்களில் பரவியது.

1918 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி சாய்பாபா மறைந்தார். அவர் சமாதியடைந்து நூறாண்டுகளாகிறது. தற்போதும், கனவில் தோன்றி, தேவையான ஆலோசனைகளை பாபா வழங்குவதாக அவரது பக்தர்கள் நம்புகின்றனர்.

சாய்பாபா சமாதியடைந்த இடத்தில், அவருக்கு 1922ல் ஆலயம் எழுப்பப்பட்டது. இங்கு, சராசரியாக தினமும் 60 ஆயிரம் பேர் வருகின்றனர். முக்கிய நாட்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் குவிகின்றனர்.

பக்தர்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்வதற்காக, அதிக இடவசதி கொண்ட உணவுக் கூடம் இங்கு, செயல்படுகிறது. ஆசியாவிலேயே மிகப்பெரிய உணவுக்கூடமான இங்கு, ஒரே நேரத்தில் 7 ஆயிரம் பேர் சாப்பிடலாம்.

SAIBABA HISTORY IN TAMIL: இங்கு மிகக் குறைந்த கட்டணத்தில், உணவு வழங்கப்படுகிறது. உலகம் முழுக்க சாய் பாபாவின் பக்தர்கள் உள்ளனர். நேபாளம், கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு அமீரகம், மலேசியா, இங்கிலாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் சாய்பாபா சேவை மன்றம் உள்ளது.

கோவில் உருவான கதை

SAIBABA HISTORY IN TAMIL: 1918 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் இந்த உலக வாழ்க்கையை விட்டு நீங்கினார். சாய் பாபா பூவுலகைவிட்டு மறைந்த நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, சீரடியில் உள்ள சாய் பாபா கோயில் 1922 ஆம் ஆண்டு சீரமைக்கப்பட்டது. இந்த ஆலயம் நாக்பூரைச் சேர்ந்த கோடீஸ்வரராக இருந்த ஸ்ரீமந்த் கோபால்ராவ் என்பவருக்கு சொந்தமானது.

சாய் பாபாவின் பெரிய பக்தராக இருந்த அந்த பணக்காரர், பாபா மறைந்த பின்னர் ஒரு கோயில் கட்ட முடிவு செய்தார். இருப்பினும், இப்போது இந்த கோயில் ஸ்ரீ சாய்பாபா சான்ஸ்தான் அறக்கட்டளையின் கீழ் இயங்கி வருகிறது. ஆந்திராவின் திருப்பதிக்குப் பிறகு உலகெங்கிலும் உள்ள இரண்டாவது பணக்கார கோயில் இதுவாகும்.

முதல் முறையாக பூசாரி ஒருவர் பாபாவை ‘சாய்’ என அழைத்ததாகவும், அந்த பெயரே நிலைத்து விட்டதாகவும் பலர் கூறுகின்றனர். சாய்பாபாவின் பிறப்பு துவங்கி, கோவில் உருவான விதம் என பலவும் விடை தெரியாத மர்மமான, ஆச்சரியப்பட வைக்கும் விஷயங்களாக உள்ளது.

ஆனாலும் சாய் மகிமையால் ஈர்க்கப்பட்டு, ஷீரடிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஷீரடியில் மட்டுமல்ல எங்கெல்லாம் சாய் வழிபாடு நடக்கிறதோ அங்கெல்லாம் சாய்பாபா பல அற்புதங்களை இன்றளவும் நிகழ்த்தி வருகிறார்.

உதி மகிமை

SAIBABA HISTORY IN TAMIL: ஷீரடியில் கொடுக்கப்படும் விபூதிக்கு உதி என்று பெயர். இது மிகவும் மகிமை வாய்ந்தது. இதை நம்முடன் வைத்திருந்தால் கஷ்டங்கள், துக்கங்கள் விலகி விடும். சாய் உதி வீட்டில் இருந்து தீய சக்திகள் எதுவும் அண்டாது. உதியில் சாய்பாபா சூட்சும வடிவில் நம்முடன் இருந்து அருள் செய்கிறார் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

SAIBABA HISTORY IN TAMIL | சீரடி சாய்பாபா பற்றிய கட்டுரை
SAIBABA HISTORY IN TAMIL | சீரடி சாய்பாபா பற்றிய கட்டுரை

சாய்பாபாவின் இறப்பு

SAIBABA HISTORY IN TAMIL: இருபதாம் நூற்றாண்டில் இந்தியா முழுவதும் பரவலாக அறியப்பட்ட ‘முதல் அவதாரப் புருஷர்’ எனப் போற்றப்பட்ட சீரடி சாய் பாபா அவர்கள், 1918 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் இந்த உலக வாழ்க்கையை விட்டு நீங்கினார்.

இன்று அவர் இல்லாவிட்டாலும், சீரடியில் அவர் சமாதியான இடம் தற்பொழுது பல்லாயிரக்கணக்கானவர் புனிதமாக வணங்கும் புண்ணியத் தலமாக விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சாயிபாபாவின் சக்தி தரும் மூலமந்திரம்

SAIBABA HISTORY IN TAMIL: குருவருள் இருந்தால்தான் திருவருள் கிடைக்கும் என்பார்கள். குருவை எல்லாத் தருணங்களிலும் வழிபடவேண்டும் என்கிறது சாஸ்திரம். நாம் குருநாதராக எவரை வரித்துக் கொண்டிருக்கிறோமோ அவரை, அனுதினமும் வழிபட்டு நம்முடைய பிரார்த்தனைகளைச் சொல்லவேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

தென்னாடுடைய சிவபெருமானே தட்சிணாமூர்த்தி அம்சமாக இருந்து அருள்பாலிக்கிறார். கல்லால மரத்தடியில் அமர்ந்து சனகாதி முனிவர்களுக்கு உபதேசித்து அருளுகிறார் என்கிறது புராணம்.

குரு பிரகஸ்பதியை, நவக்கிரகங்களில் குருபகவானாக ஏற்று வணங்கிவருகிறோம். குருவுக்கு உண்டான ப்ரீத்தியை குறைவறைச் செய்து வருகிறோம். நம்மைப் படைத்த பிரம்மாவும் குரு அம்சம். ‘குரு பிரம்மா குரு விஷ்ணு’ என்று படைத்தவனையே முதல் குருவாகக் கொண்டு வணங்கச் சொல்கிறது இந்த ஸ்லோகம்.

மனித உலகில், கண்ணுக்கு முன்னே வாழ்ந்த குருமார்களை மகான்கள் என்று போற்றுகிறோம். வணங்குகிறோம். சதாசர்வ காலமும் அவர்களிடம் பிரார்த்தனை செய்கிறோம். அப்படி கண்கண்ட தெய்வமாக வணங்கப்படுகிறவர்தான் ஷீர்டி சாயிபாபா.

ஷீர்டி சாயிபாபா, மிக உன்னதமான குருநாதர் என்று கொண்டாடுகிறார்கள் பக்தர்கள். எவருடைய வீட்டில் சாயிபாபாவின் திருநாமம் சொல்லப்படுகிறதோ அந்த வீட்டுக்கு பாபாவின் அருள் கிடைக்கும் என்பது சாயி பக்தர்களின் நம்பிக்கை. குருவுக்கு உகந்த நாள் என்று வியாழக்கிழமையைச் சொல்வார்கள். ஆனாலும் தினமும் குருவை வந்தனம் செய்வது மகோன்னதமானது.

ஷீரடி சாய்பாபா 108 போற்றி

ஓம் சாயிநாதனே போற்றி
ஓம் சீரடி உறைந்தவனே போற்றி
ஓம் சீர்மிகு புதல்வனே போற்றி
ஓம் அன்பு வடிவானவனே போற்றி
ஓம் அறிவுறுத்துபவனே போற்றி
ஓம் அற்புதம் படைத்தவனே போற்றி
ஓம் எளியோர்க்கு எளியவனே போற்றி
ஓம் வலியோர்க்கு வலியனே போற்றி
ஓம் உலகைக் காப்பவனே போற்றி
ஓம் உவகை தருபவனே போற்றி
ஓம் உளமதை அறிபவனே போற்றி
ஓம் அச்சம் தீர்ப்பவனே போற்றி
ஓம் ஆணவம் அறுப்பவனே போற்றி
ஓம் விட்டலின் வடிவே போற்றி

ஓம் சுவாமியே போற்றி
ஓம் அப்பனே போற்றி
ஓம் பாபா போற்றி
ஓம் பாதமலரோன் போற்றி
ஓம் அனைத்தையும் உடையோனே போற்றி
ஓம் அறத்தை போதித்தவனே போற்றி
ஓம் கருணையின் இருப்பிடமே போற்றி
ஓம் ராமானந்த சீடனே போற்றி
ஓம் வேம்பு நிழல் அமர்ந்தோனே போற்றி
ஓம் வேதம் புரிந்தவனே போற்றி
ஓம் வேட்கை தீர்ப்பவனே போற்றி
ஓம் அபயம் தருபவனே போற்றி
ஓம் தீராத் துயர் தீர்ப்போனே போற்றி
ஓம் தீரர்க்கும் தீரனே போற்றி
ஓம் நற்குணனே போற்றி
ஓம் விற்பபன்னனே போற்றி
ஓம் பொற்பாதனே போற்றி
ஓம் மகிமைகள் புரிந்தவனே போற்றி
ஓம் மகத்துவமானவனே போற்றி
ஓம் மங்கள ரூபனே போற்றி
ஓம் நீரில் சுடர் எரித்தோனே போற்றி

ஓம் நீதியை புகட்டினன் போற்றி
ஓம் கொடைக் குணத்தோனே போற்றி
ஓம் நிறை குணத்தோனே போற்றி
ஓம் குறை தீர்ப்பவனே போற்றி
ஓம் மறை அறிந்தவனே போற்றி
ஓம் மாண்பு பொருந்தினை போற்றி
ஓம் மாதவத்தோனே போற்றி
ஓம் அபயக் கரத்தோனே போற்றி
ஓம் அமரர்க்கோனே போற்றி
ஓம் அகம் உறைபவனே போற்றி
ஓம் அசகாய சூரனே போற்றி
ஓம் அசுர நாசகனே போற்றி
ஓம் அசவுகர்ய நாசகனே போற்றி
ஓம் அணுவணுவானவனே போற்றி
ஓம் அமுத விழியோனே போற்றி
ஓம் அரங்க நாயகனே போற்றி
ஓம் அன்னம் அளிப்பவனே போற்றி
ஓம் அருவமானவனே போற்றி
ஓம் ஆதாரமானவனே போற்றி

SAIBABA HISTORY IN TAMIL | சீரடி சாய்பாபா பற்றிய கட்டுரை
SAIBABA HISTORY IN TAMIL | சீரடி சாய்பாபா பற்றிய கட்டுரை

ஓம் ஆனந்தம் அளிப்பவனே போற்றி
ஓம் ஆயிரம் கதிரொளி கொண்டவனே போற்றி
ஓம் விந்தைகள் புரிந்தோனே போற்றி
ஓம் ஆபத்பாந்தவனே போற்றி
ஓம் இக பரசுகம் அருள்பவனே போற்றி
ஓம் இச்சா சக்தியே போற்றி
ஓம் கிரியா சக்தியே போற்றி
ஓம் ஞான சக்தியே போற்றி
ஓம் இமையவனே போற்றி
ஓம் இங்கித குணத்தினனே போற்றி
ஓம் இம்மையில் அருள்பவனே போற்றி
ஓம் மறுமையில் அருள்பவனே போற்றி
ஓம் இருள் நீக்குவோனே போற்றி
ஓம் ஈகை கொண்டவனே போற்றி
ஓம் ஈடில்லா புகழோனே போற்றி
ஓம் ஈர நெஞ்சினனே போற்றி
ஓம் உலகைக் காப்பவனே போற்றி
ஓம் உமாமகேசுவரனே போற்றி
ஓம் உயிராய் நிற்பவனே போற்றி

ஓம் உவகை அளிப்பவனே போற்றி
ஓம் உண்மைப் பொருளானவனே போற்றி
ஓம் ஊழ்வினை அறுப்பவனே போற்றி
ஓம் எல்லையில்லாப் பொருளே போற்றி
ஓம் எமபயம் நீக்குவோனே போற்றி
ஓம் ஐயம் களைபவனே போற்றி
ஓம் ஒப்பில்லாதவனே போற்றி
ஓம் ஓங்கார ரூபனே போற்றி
ஓம் ஓங்கி நிற்கும் புகழோனே போற்றி
ஓம் ஓளடதமானவனே போற்றி
ஓம் சாகித்யம் அருள்பவனே போற்றி
ஓம் சிகரம் அமர்ந்தவனே போற்றி
ஓம் சுத்த ஆனந்தனே போற்றி
ஓம் சூதறுப்பவனே போற்றி
ஓம் சூனியம் களைபவனே போற்றி
ஓம் செம்மலரடியோனே போற்றி
ஓம் ஞாலம் தெரிந்தவனே போற்றி
ஓம் ஞானச் சுடரொளியே போற்றி
ஓம் சங்கடம் தீர்ப்பவனே போற்றி

ஓம் சச்சிதானந்தனே போற்றி
ஓம் பண்பின் வடிவானவனே போற்றி
ஓம் பலம் அருள்வோனே போற்றி
ஓம் அச்சம் தவிர்ப்போனே போற்றி
ஓம் தீவினைகள் போக்குவோனே போற்றி
ஓம் நன்மைகள் தருபவனே போற்றி
ஓம் பீடை ஒழிப்பவனே போற்றி
ஓம் பஞ்சம் தடுப்போனே போற்றி
ஓம் அன்னை வடிவினனே போற்றி
ஓம் எந்தையாயிருப்பவனே போற்றி
ஓம் பகைமை குணம் நீக்குவோனே போற்றி
ஓம் மகிமைகள் புரிபவனே போற்றி
ஓம் மகாயோகியே போற்றி
ஓம் மகத்துவமானவனே போற்றி
ஓம் வல்வினை முடிப்பவனே போற்றி
ஓம் நிர்மல வடிவினனே போற்றி போற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *