VALLALAR HISTORY IN TAMIL: வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் இந்தியாவைச் சேர்ந்த ஓர் இந்து சமய ஆன்மீகவாதி ஆவார். “எல்லா மதங்களிலும் உள்ள உண்மை ஒன்றே” என்பதைக் குறிக்கும் வண்ணம், இவர் தோற்றுவித்த மார்க்கத்திற்கு “சர்வ சமய சமரச சுத்த சன்மார்க்க சங்கம்” என்று பெயரிட்டார்.
சைவ சமயத்தில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்த வள்ளலாரை, பழமைவாதிகள் கடுமையாக எதிர்த்தனர். இவர் சாதிய பாகுபாடுகளை கடுமையாகச் சாடினார்.
“வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம், வாடினேன்” என்று பாடிய வள்ளலார், 1867-ல் கடலூர் மாவட்டம் வடலூரில் “சத்ய ஞான சபை” என்ற சபையை நிறுவினார். இங்கு வரும் அனைவருக்கும் 3 வேளைகளும் உணவு இலவசமாக வழங்கப்பட்டது.
இன்றளவும் செயல்பட்டு வரும் இந்த தர்ம சபை வள்ளலார் பெயரால் லட்சக்கணக்கான மக்களுக்குப் பசியாற்றி வருகிறது. தர்ம சபைக்கான உணவுப் பொருட்களை தமிழ்நாடு அரசு குறைந்த விலைக்கு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
KALLANAI DAM HISTORY IN TAMIL | கல்லணை பற்றிய கட்டுரை
எதிலும் பொது நோக்கம் வேண்டும், பசித்தவர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி வேறுபாடு கருதாது உணவளித்தல் வேண்டும், மத வெறி கூடாது ஆகியவை இவரின் முக்கிய கொள்கைகள் ஆகும்.
இவ்வாறு பல கொள்கைகளை கொண்டிருந்த வள்ளலார், முதன்மைக் கொள்கையாக ‘கொல்லாமை’ கொள்கை ஆகிய உயிர்களிடத்தில் அருள் செய்யும் கொள்கையைப் பரப்பியவர்.
VALLALAR HISTORY IN TAMIL: “எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க” என்று கூறியவர். இவர் பாடிய ஆறாயிரம் பாடல்களின் தொகுப்பே ‘திருவருட்பா’ என்று அழைக்கப்படுகிறது. இவரது சேவையை கருத்தில் கொண்டு, இந்திய அரசு 2007ஆம் வருடம் இவருக்கு அஞ்சல் தலை வெளியிட்டு கௌரவித்தது.
VALLALAR HISTORY IN TAMIL – பிறப்பு
VALLALAR HISTORY IN TAMIL: இவர் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து 10 மைல் தொலைவில் உள்ள மருதூரில் புரட்டாசி 19 (5 அக்டோபர் 1823) இல் கருணீகர் குலத்தில் பிறந்தவர். பெற்றோர் இராமையாபிள்ளை, சின்னம்மையார்.
இவரோடு சபாபதி, பரசுராமன், உண்ணாமுலை, சுந்தராம்பாள் ஆகிய நால்வரும் உடன்பிறந்தவர்கள். இராமலிங்கர் பிறந்த ஆறாம் மாதத்திலேயே தந்தையை இழந்தார்.
தாயார் குழந்தைகளோடு பொன்னேரி சின்னகாவனம் பகுதிக்கு சென்று வாழ்ந்தார். பின்னர் சென்னையில் ஏழு கிணறு பகுதி 39, வீராசாமி பிள்ளை தெருவில் உள்ள வீட்டில் குடியேறினார். அண்ணன் சபாபதி சமயச் சொற்பொழிவு செய்து வந்தார்.
வள்ளலார் நிகழ்த்திய அற்புதங்கள்
VALLALAR HISTORY IN TAMIL: தனது யோக, தியான சாதனைகளால் பல சித்திகள் கைவறப்பற்ற வள்ளலார் அவற்றை ஆன்மீக மற்றும் பிற மக்களின் துயர் நீக்க பயன்படுத்தி உள்ளார்.
ஒரு முறை தனது ஆன்மீக சிந்தனை கருத்துக்களை எழுதிக் கொண்டிருந்த பொழுது இரவு வேளை ஆகிவிட்ட படியினால் தீபத்தை வைத்துக்கொண்டு வள்ளலார் எழுதிக் கொண்டிருந்தார்.
அப்பொழுது தீபத்தில் எண்ணெய் குறைந்து தீபம் அணைய தொடங்கிய பொழுது வள்ளலார் அந்த தீபத்தில் எண்ணையை ஊற்றுவதற்கு பதிலாக தண்ணீரை ஊற்றிவிட்டார்.
இருந்தும் அந்த தீபம் அணையாமல் எண்ணெயை ஊற்றியது போல சுடர்விட்டு எரிந்தது. இந்த காட்சியை அங்கிருந்த மக்கள் பலரும் கண்டு வள்ளலாரின் யோக ஆற்றலை எண்ணி வியந்தனர்.
ஒருமுறை வள்ளலார் அவரின் நண்பர்களுடன் இரவு வேளையில் சென்று கொண்டிருந்த பொழுது கொள்ளையர்கள் அவர்களை மடக்கி நிறுத்தி கொள்ளையடிக்க முயன்றனர்.
அப்பொழுது கொள்ளையர்களில் சிலர் தங்கள் கைகளில் வைத்திருந்த ஆயுதங்களால் வள்ளலார் மற்றும் அவரை சார்ந்தவர்களை தாக்க முற்பட்ட பொழுது வள்ளலார் அக்கொள்ளையர்களைப் பார்த்து “உயர்த்திய கை உயர்த்தியப்படியே நிற்கட்டும்” எனக் கூற அந்த கொள்ளையர்களின் கை அப்படியே நின்று விட்டது.
VALLALAR HISTORY IN TAMIL: அவர்களால் அந்த கையை இறக்க முடியாமல் கதறி அழுது, வள்ளலாரின் சக்தியை உணர்ந்து தங்களின் செயலுக்கு மன்னிப்பு கேட்டனர். உடனே வள்ளலார் அவர்களும் அவர்களை மன்னித்து களவு தொழிலை விட்டொழித்து நியாயமான முறையில் உழைத்து வாழும் படி அறிவுறுத்தி அனுப்பினார்.
வள்ளலாரின் பன்முக ஆற்றல்கள்
- அருளாசிரியர்
- இதழாசிரியர்
- இறையன்பர்
- உரையாசிரியர்
- சமூக சீர்திருத்தவாதி
- சித்தமருத்துவர்
- சிறந்த சொற்பொழிவாளர்
- ஞானாசிரியர்
- தீர்க்கதரிசி
- நூலாசிரியர்
- பசிப் பிணி போக்கிய அருளாளர்
- பதிப்பாசிரியர்
- போதகாசிரியர்
- மொழி ஆய்வாளர் (தமிழ்)
- பண்பாளர்
திருவருட்பா
VALLALAR HISTORY IN TAMIL: இவர் பாடிய ஆறாயிரம் பாடல்களின் திரட்டு, திருவருட்பா என்று அழைக்கப்படுகிறது. இது ஆறு திருமுறைகளாக பகுக்கப்பட்டு உள்ளது.
திருவருட்பா, முதலில் இராமலிங்கஅடிகளின் தலைமைச் சீடர் தொழுவூர் வேலாயுதனாரால் நான்கு திருமுறைகளாக வெளியிடப்பட்டன. பின்னர் ஐந்தாம், ஆறாம் திருமுறைகள் வெளியிடப்பட்டன.
VALLALAR HISTORY IN TAMIL: முன்னாள் தமிழக அறநிலையத்துறை ஆணையாளர் பாலகிருஷ்ணன், இராமலிங்கரின் உரைநடை, கடிதங்கள் முதலியவற்றைத் தனி நூலாகத் தொகுத்து வெளியிட்டார். பின்னர் ஊரன் அடிகளும் காலமுறைப் பதிப்பு வெளியிட்டுள்ளார்.
புத்தகங்கள்
- திருவருட்பா
- வள்ளலார் பதிப்பித்தவை
- வரலாற்றுப் புத்தகங்கள்
- அகவல் உரை விளக்கம்
- திருவருட்பா விளக்கவுரைகள்
- ஆராய்வுகள்
- தயவு சரவணானந்தா
உரைநடை நூல்கள்
- அணிந்துரை: சுவாமி சரவணானந்தா
- ஆராய்ச்சிக் குறிப்புகள் – உரைநடை நூல்கள் – தவத்திரு. ஊரன் அடிகள்
- ஜீவகாருண்ய ஒழுக்கம் – 1
- ஜீவகாருண்ய ஒழுக்கம் – 2
- ஜீவகாருண்ய ஒழுக்கம் – 3
- மனு முறைகண்ட வாசகம்
வியாக்கியானங்கள்
- வேதாந்த தேசிகர் குறட்பா ஒன்றன் உரை
- பொன்வண்ணத் தந்தாதி 22-ம் செய்யுள் உரை
- வள்ளலார் இராமலிங்க அடிகள் – “தமிழ்” என்னும் சொல்லுக்கிட்ட உரை
- ஒழிவிலொடுக்கப் பாயிரவிருத்தி
- தொண்டமண்டல சதகம்
- “உலகெலாம்” என்னும் மெய்ம்மொழிப்பொருள் விளக்கம் வழிபடு
- கடவுள் வணக்கப் பாட்டுரை
மருத்துவக் குறிப்புகள்
- மூலிகை குண அட்டவணை
- சஞ்சீவி மூலிகைகள்
- மருத்துவக் குறிப்புகள்
உபதேசங்கள்
- அனுஷ்டான விதி
- கணபதி பூஜா விதி
- செவ்வாய்க்கிழமை விரத முறை
- சுப்பிரமணியம்
- திருவருண் மெய்ம்மொழி
- அருள்நெறி
- பேருபதேசம்
- நித்திய கரும விதி
- உபதேசக் குறிப்புகள்
வள்ளலாரின் அற்புத வாழ்க்கை போதனை
நான்கு நபர்களை புறக்கணி
- மடையன்
- சுயநலக்காரன்
- முட்டாள்
- சோம்பேறி
நான்கு நபர்களுடன் தோழமை கொள்ளாதே!
- பொய்யன்
- துரோகி
- பொறாமைக்கைரன்
- மமதை பிடித்தவன்
நான்கு நபர்களுடன் கடினமாக நடத்தாதே!
- அனாதை
- ஏழை
- முதியவர்
- நோயாளி
நான்கு நபர்களுக்கு உனது கொடையை தடுக்காதே!
- மனைவி
- பிள்ளைகள்
- குடும்பம்
- சேவகன்
நான்கு விசயங்களை ஆபரணமாக அணி!
- பொறுமை
- சாந்த குணம்
- அறிவு
- அன்பு
நான்கு நபர்களை வெறுக்காதே!
- தந்தை
- தாய்
- சகோதரன்
- சகோதரி
நான்கு விசயங்களை குறை!
- உணவு
- தூக்கம்
- சோம்பல்
- பேச்சு
நான்கு விசயங்களை தூக்கிப்போடு!
- துக்கம்
- கவலை
- இயலாமை
- கஞ்சத்தனம்
நான்கு நபர்களுடன் சேர்ந்து இரு!
- மனத்தூய்மை உள்ளவன்
- வாழ்க்கை நிறைவேற்றுபவன்
- கண்ணியமானவன்
- உண்மையானவன்
நான்கு விசயங்கள் செய்!
- தியானம், யோகா
- நூல் வாசிப்பு
- உடற்பயிற்சி
- சேவை செய்தல்
இராமலிங்க அடிகள் கொள்கைகள்
- இறந்தவர்களை எரிக்கக் கூடாது. சமாதி வைத்தல் வேண்டும்
- எதிலும் பொது நோக்கம் வேண்டும்
- எந்த உயிரையும் கொல்லக்கூடாது
- எல்லா உயிர்களும் நமக்கு உறவுகளே. அவற்றைத் துன்புறுத்தக்கூடாது
- சிறு தெய்வ வழிபாடு கூடாது. அவற்றின் பெயரால் பலி இடுதலும் கூடாது
- பசித்தவர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கருதாது உணவளித்தல் வேண்டும்
- புலால் உணவு உண்ணக்கூடாது
- கடவுள் ஒருவரே. அவர் அருட்பெருஞ்சோதி ஆண்டவர்
- சாதி, மதம், இனம், மொழி முதலிய வேறுபாடு கூடாது
- மத வெறி கூடாது
வள்ளலார் இறப்பு
VALLALAR HISTORY IN TAMIL: தன் வாழ்நாளில் சாதி – சமய வேறுபாடுகளற்ற சமுதாய உருவாக்க அரும்பாடுபட்டவரும், மக்களுக்கு மெய்யான இறைவழியை காட்டி அவர்களை இறைநிலையை அடைய தொடர்ந்து முயற்சித்தவருமான வள்ளல் பெருமான் எனப்படும் வள்ளலார் அவர்கள் 1874 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30 ஆம் தேதி தைப்பூச திருநாள் அன்று வடலூரில் உள்ள சித்தி வளாகத்தில் ஒரு தனி அறைகுள்ளாக சென்று தாழிட்டுக் கொண்டார்.
தான் தாளிட்டுக்கொண்ட அறையை யாரும் ஒரு வருட காலத்திற்குள்ளாக திறக்க கூடாது என தன் சீடர்களுக்கு கட்டளை இட்டார். நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் வாழ்க்கை வரலாறு அதன்படியே ஒரு வருட காலம் கழித்து வள்ளலார் தாளிட்ட அறையை திறந்து பார்த்த பொழுது அங்கு வள்ளலார் இருந்ததற்கான அடையாளம் ஏதுமே இல்லை என்பதை கண்டு அவரது சீடர்கள் வியப்புற்றனர்.
ஈடுயிணையில்லா தவ யோகியாக திகழ்ந்த வள்ளலார் ஒளியுடல் பெற்றவர் என்றும், எனவே ஜோதி வடிவான இறைவனுடன் தன்னுடைய தேகத்தை ஒளி வடிவாகி கலந்துவிட்டார் என அவரது சீடர்கள் நம்புகின்றனர்.
VALLALAR HISTORY IN TAMIL: அதன்படியே இன்றும் தைப்பூசத் திருநாள் அன்று சித்தி வளாகத்தில் வள்ளலார் ஜோதி நிலை அடைந்த அறையில் ஜோதி தரிசனம் பக்தர்களுக்கு காட்டப்படுகிறது.