BREAST TAX HISTORY IN TAMIL | மார்பக வரி பற்றிய கட்டுரைBREAST TAX HISTORY IN TAMIL | மார்பக வரி பற்றிய கட்டுரை

BREAST TAX HISTORY IN TAMIL: முலை வரி அல்லது மார்பக வரி (Breast Tax) என்பது திருவிதாங்கூர் இராச்சியத்தில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும், தலித் இந்துக்கள் பொதுவாக தங்கள் மார்பகங்களை மறைக்கும் விதமாக ஆடை அணிய விரும்பும் பெண்களுக்கு 1924 வரை விதிக்கப்பட்ட வரியாகும்.

இதர பிற்படுத்தப்பட்ட பெண்களுக்கும் தலித் பெண்களுக்கும் மார்பகங்கள் வளரத் தொடங்கும்போது அரசாங்கத்திற்கு முலை வரியைச் செலுத்த வேண்டும் என்று நிர்பந்திக்கப்பட்டனர்.

VALLALAR HISTORY IN TAMIL | வள்ளலார் பற்றிய கட்டுரை

இதர பிற்படுத்தப்பட்ட ஆண்கள் தலை-காரம் என்று அழைக்கப்படும் இதேபோன்ற ஒரு வரியை தங்கள் தலைப்பாகைக்காக செலுத்த வேண்டும். திருவிதாங்கூரில் வரி வசூலிப்பவர்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று, பூப்பு எய்திய தலித் பெண்களிடமிருந்து முலை வரியை வசூலிப்பார்கள். பெண்ணின் மார்பகங்களின் அளவைப் பொறுத்து வரி வசூலிப்பவர்களால் வரி அளவு மதிப்பிடப்பட்டது.

இதர பிற்படுத்தப்பட்ட பெண்களும் தலித் பெண்களும் தங்கள் மார்பகங்களை மறைக்காமல் இருப்பது திருவிதாங்கூரின் நீண்டகால பாரம்பரியமாக இருந்தது. மேலும், இது ஒரு உயர் சாதி நபருக்கு மரியாதை அளிப்பதற்கான அறிகுறியாகும்.

BREAST TAX HISTORY IN TAMIL: இது இந்திய சாதி அமைப்பின் ஒரு பகுதியாகக் கருதப்பட்டது. கிறிஸ்தவ மறைபணியாளர்களின் செல்வாக்கின் விளைவாக இந்த நடைமுறை கேள்விக்குட்படுத்தப்பட்டது.

BREAST TAX HISTORY IN TAMIL – பின்னணி

BREAST TAX HISTORY IN TAMIL: திருவிதாங்கூர் இராச்சியம் அதன் கடுமையான மற்றும் அடக்குமுறை சாதி அமைப்பிற்கு பெயர் பெற்றது. இதனைக் கருத்தில் கொண்ட விவேகானந்தர் திருவிதாங்கூரை “பைத்தியக்கார விடுதி” என்று அழைத்தார்.

திருவிதாங்கூர் அரசால் தலித் இந்துப் பெண்களுக்கு முலை வரி விதிக்கப்பட்டது. அவர்கள் தங்கள் மார்பகங்களை மறைக்க விரும்பினால் அவர்கள் மார்பகங்களின் அளவிற்கு ஏற்ப வரி செலுத்த வேண்டும்.

இது உயர் சாதியினருக்கான மரியாதையாக கருதப்பட்டது. மேலும், நாடார், ஈழவர் பெண்கள் உட்பட கீழ் சாதியினர் வரி செலுத்த வேண்டியிருந்தது. பாலின சூழலியல், தலித் ஆய்வுகள் ஆகியவற்றின் பேராசிரியர் டாக்டர் ஷீபா கே.எம். இவ்வரியின் நோக்கம் சாதி படிநிலையை பராமரிப்பதாக இருந்தது என்கிறார்.

இந்த சட்டம் திருவிதாங்கூரின் பாரம்பரியத்தில் விளைந்தது. இதில் உயர் சாதி நபருக்கு மரியாதை செய்வதற்கான அடையாளமாக மார்பகங்கள் மறைக்காமல் விடப்பட்டது. ஆற்றிங்கல் இராணி ஒரு காலத்தில் கீழ் சாதி பெண் ஒருவர் துணியால் தனது மார்பகத்தை மூடியதற்காக அவளுக்குத் தண்டனையாக அவளது மார்பகத்தை வெட்டினார்.

உதாரணமாக, நம்பூதிரி பிராமணர்களுக்கு முன்னால் அல்லது கோவில்களுக்குள் நுழையும்போது நாயர் சமூகப் பெண்கள் தங்கள் மார்பகங்களை மறைக்க அனுமதிக்கப்படவில்லை.

BREAST TAX HISTORY IN TAMIL: பிராமணர்கள் தெய்வங்களின் உருவங்களுக்கு மட்டுமே தங்கள் மார்பகங்களை காட்டினர். நாடார்கள், ஈழவர்கள் மற்றும் தீண்டத்தகாத சாதிகள் போன்ற இன்னும் கீழ் சாதியினரின் பெண்கள் தங்கள் மார்பகங்களை மறைக்க அனுமதிக்கப்படவில்லை.

19 ஆம் நூற்றாண்டில் கிறிஸ்தவம் பரவியதால், கிறிஸ்தவர்களாக மாறிய நாடார் பெண்கள் தங்கள் மேல் உடலை மறைக்கத் தொடங்கினர். படிப்படியாக இந்து நாடார் பெண்கள் கூட இந்த நடைமுறையை ஏற்றுக்கொண்டனர்.

BREAST TAX HISTORY IN TAMIL: தோள் சீலைப் போராட்டம் எனப்படும் தொடர் போராட்டங்களுக்குப் பிறகு, நாடார் பெண்களுக்கு 1859இல் மார்பகங்களை மறைக்கும் உரிமை வழங்கப்பட்டது. திருவிதாங்கூர் இராச்சியத்தில் ஒருவரின் மார்பகத்தை மறைக்காமல் இருப்பது கீழ் சாதியினர் முன்னேறிய வகுப்பினருக்கு மரியாதை செய்வதின் அடையாளமாக மதிக்கப்பட்டதாக பல வரலாற்று ஆசிரியர்கள் ஆவணப்படுத்தியுள்ளனர்.

சீர்திருத்தம்

BREAST TAX HISTORY IN TAMIL: விஜயநகர சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சிக்குப் பின் மைசூரில் பிரபல சக்தியாக வளர்ந்து வந்த ஹைதர் அலியின் படை, அக்காலத்தில் மலபார் என அறியப்பட்டிருந்தக் கேரளத்தினுள் நுழைந்துத் தெற்கு மலபாரை ஆட்சி செய்துக் கொண்டிருந்த கேரள வரலாற்றில் மிகப்பெரிய மஹாராஜாவாக அறியப்பட்டிருந்த சாமிரி ராஜாவை அடக்கி அடிபணியவைத்ததோடு ஹைதர் அலியின் மைசூர் ஆட்சி மலபாருக்கும் விரிவடைந்தது.

அதனைத் தொடர்ந்து 1773 ல் மைசூர் ஆட்சியின் மலபார் கவர்னராக ச்ரீநிவாச ராவ் பதவியேற்றது முதல் 1790 வரையுள்ள 16 ஆண்டு காலம் மலபார், மைசூர் ஆட்சியின் கீழ் இருந்தது.

இதில் 9 ஆண்டுகள் ஹைதர் அலியும் 7 ஆண்டுகள் திப்புவும் ஆட்சி செலுத்தினர். மிகக் குறுகிய இந்தக் காலயளவில் மலபார் மக்களின் வாழ்க்கை முறையில் ஒரு புரட்சியையே ஏற்படுத்த திப்பு முனைந்திருந்தாலும் இஸ்லாமிய பெயர் கொண்ட ஒரு நவீனத்துவ முகம் கொண்டிருந்ததால் அவரின் சீர்திருத்தங்கள் மூட பழக்க வழக்கங்களிலும் கீழ்த்தர ஆச்சாரமுறைகளிலும் கண்மூடித்தனமான நம்பிக்கை வைத்திருந்த அச்சமூகத்தில் தேவையான மாற்றங்களை ஏற்படுத்தாமல் போனது.

அக்காலகட்டத்தில், சமூகத்தின் எல்லாப் பகுதி மக்களையும் தம் கைகளில் அடக்கி வைத்திருந்த நம்பூதிரிமார்கள், தாழ்த்தப்பட்ட பெண்களையும் ஆண்களையும் அடக்கியாண்டு மோசம் செய்து கொண்டிருந்தனர்.

தங்களைத் தெய்வத்தின் பிரதிநிதிகளாகவும் பூஜிக்கப்பட வேண்டியவர்களாகவும் அவர்கள் மனதில் நினைத்துக் கொண்டிருந்தனர். அந்த எண்ணத்தைச் சமூகத்தில் விதைப்பதிலும் அவர்கள் வெற்றி பெற்றிருந்தனர்.

“அவரின் – நம்பூதிரியின் – உடல் பவித்ரமானதாகும். சலனம் தெய்வீகக் காட்சியாகும். அவர் உண்டு மீந்த உணவு அமிர்தமாகும். மனித உயிர்களில் ஏற்றவும் உயர்ந்த நிலையில் பூஜிக்கப்பட வேண்டியவர்களாவர்; பூமியில் தெய்வத்தின் பிரதிநிதிகளாவர்.

இக்காரணங்களால் அவர்களுடன் எந்தப் பெண்ணிற்கு உறவு கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கப்பெறுகின்றதோ அவள் பாக்கியம் பெற்றவள்” என்று அக்காலத்தில் தாழ்த்தப்பட்ட மக்களிடையே நம்பிக்கை ஊட்டப்பட்டிருந்தது.

“நம்பூதிரியை மகிழ்ச்சியடைய வைப்பது தெய்வத்தைத் திருப்திபடுத்துவதற்குச் சமமானதாகும். நாயர் பெண்களுடன் சயனிப்பதற்கான உரிமை கடவுள் அவர்களுக்கு வழங்கியதாகும்.

அதனை நிராகரிப்பவர்கள் – எதிர்ப்பவர்கள் – தெய்வக்குற்றத்திற்கு ஆளாவர்”. இது போன்ற மூடநம்பிக்கைகள் சமூகத்தில் மிகுந்த நம்பிக்கையுடன் பரவியிருந்தக் காரணத்தால், அழகான பெண் குழந்தைகளைப் பெற்றிருந்த நாயர் குடும்பங்கள் தங்கள் பெண்களை ஏதாவது ஒரு நம்பூதிரியுடன் சயனிக்க வைக்க மனப்பூர்வமாக விரும்பியிருந்தனர்.

BREAST TAX HISTORY IN TAMIL: “சூத்திரப் பெண்கள் பத்தினித்தன்மையைப் பேண வேண்டிய அவசியம் இல்லை எனவும் நம்பூதிரிகளின் ஆசாபாசங்களை நிறைவேற்றி வைக்க சுயம் சமர்ப்பிக்கப்பட்டவர்கள் என்றும் இது கேரளத்திற்கு ஆச்சாரங்களைப் பரிசளித்தப் பரசுராமன் போட்டக் கட்டளையாகும் என ஆச்சாரங்களைக் கற்பித்துப் போற்றும் பிராமணர்கள் தெரிவிக்கின்றனர்”.

நங்கேலி குறித்த செவிவழிக்கதை

BREAST TAX HISTORY IN TAMIL: கிராமப்புற செவிவழிக் கதைகளின்படி நங்கேலி 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்திய துணைக்கண்டத்தின், திருவிதாங்கூர் இராச்சியத்தில் சேர்த்தலை என்ற இடத்தில் வாழ்ந்த ஒரு பெண் ஆவார். இவர் சாதி அடிப்படையிலான முலை வரிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தனது மார்பகங்களை வெட்டிக் கொண்டார்.

கதையின்படி, அவர் மார்பகங்களை வெட்டி அவற்றை வாழை இலையில் கட்டி வரி வசூலிப்பவருக்கு வழங்கினார். பின்னர் குருதி இழப்பால் இறந்தார். நங்கேலியின் மரணத்தைத் தொடர்ந்து, மக்கள் இயக்கங்கள் தொடங்கப்பட்டது. விரைவில் அவர் வாழ்ந்த இடம் முலச்சிபறம்பு (முலைச்சி இடம் என்று பொருள்) என அழைக்கப்பட்டது.

எவ்வாறாயினும், இந்த கதை இந்தியாவின் எந்த வரலாற்று பதிவுகளிலும் இடம்பெறவில்லை. மேலும் இதன் நம்பகத்தன்மையும் விவாதத்திற்குரியதாக உள்ளது. நங்கேலியின் காலத்தில் கேரளத்தில் தாய்வழி சமூகத்தில் மார்பகங்களை மறைப்பது வழக்கமல்ல என்று வரலாற்று ஆசிரியர் மனு பிள்ளை வாதிடுகிறார்.

பல தசாப்தங்களுக்குப் பிறகு பிரித்தானிய குடியேற்ற செல்வாக்கின் கீழ் விக்டோரிய மகாராணி கால நெறிமுறைகள் திருவாங்கூர் சமூகத்தில் ஊடுருவியது. இது தோள் சீலை அணியும் உரிமைக்கான அடுத்தடுத்த வர்க்கப் போராட்டங்களுக்கு வழிவகுத்தது.

BREAST TAX HISTORY IN TAMIL: அனைத்து கீழ் சாதியினருக்கும் விதிக்கப்பட்ட ஒடுக்குமுறை வரிக்கும், ஆட்சிக்கும் எதிராக நங்கேலி எதிர்ப்பு தெரிவித்ததாக அவர் நம்புகிறார். இது காலப்போக்கில் பெண்களின் கௌரவத்தை காப்பாற்றுவதற்காக ஒரு வித்தியாசமான ஆணாதிக்கத்துகு எதிரான போராட்டமாக தொடர்ந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *