BERNARDINO RAMAZZINI HISTORY IN TAMIL | பெர்னார்டினோ ராமஸ்ஸினி பற்றிய கட்டுரைBERNARDINO RAMAZZINI HISTORY IN TAMIL | பெர்னார்டினோ ராமஸ்ஸினி பற்றிய கட்டுரை:

BERNARDINO RAMAZZINI HISTORY IN TAMIL | பெர்னார்டினோ ராமஸ்ஸினி பற்றிய கட்டுரை: சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் பிறந்த இத்தாலிய மருத்துவர் பெர்னார்டினோ (Bernardino Ramazzini) ராமஸ்ஸினி. இவர் 1633, நவம்பர் 3ம் நாள், இத்தாலியின் மோடேனாவில் காப்ரி என்ற நகரில் ஐரோப்பிய வரலாற்றின் ஒரு கொந்தளிப்பான காலகட்டத்தில் பிறந்தார்.

தந்தையின் பெயர் ரமாஸ்ஸினி பார்டோலோமியோ; தாயின் பெயர் கேடரினா ரமாஸ்ஸினி. இவர்களது குடும்பம் நகரின் வசதியான குடும்பங்களில் ஒன்று.

HANS LIPPERSHEY HISTORY IN TAMIL | ஹான்ஸ் லிப்பெர்ஷே பற்றிய கட்டுரை

செய்யும் தொழில்களின் சூழல் மூலமாகவும் கூட நோய்கள் உருவாகும் என்ற உண்மையைக் கண்டறிந்தவர் பெர்னார்டினோ ராமஸ்ஸினி. இரண்டுக்குமான உறவுகளைத் தெளிவாக பதிவு செய்தவர். இதனால் இவரை தொழில்சார் மருத்துவத்தின் பிதாமகன் என்று அழைக்கின்றனர்.

தத்துவம் மற்றும் மருத்துவத்தில் படித்த ரமாஸ்ஸினி 1676 ஆம் ஆண்டின் பிற்பகுதி வரை மோடேனா பல்கலைக்கழகத்திலும் (1682-1700) மற்றும் படுவாவிலும் (1714 வரை) மருத்துவப் பேராசிரியராகப் பணியாற்றினார்.

1682ல் டியூக் ஃபிரான்செஸ்கோ டி எஸ்டாவால்( Duke Francesco d’Esta) பல்கலைக்கழகத்தில் சேர அழைக்கப்பட்டு, பல்கலைக்கழகத்தில் மருத்துவத்துறையின் தலைவராக நியமிக்கப்பட்டார். ராமஸ்ஸினி தொற்றுநோயியல், நோய்க்கான காரணங்கள், விநியோகம் மற்றும் கட்டுப்பாடு பற்றிய ஆய்வினை கொண்டார்.

மேலும், அவர் தனது இத்தாலியின் பிராந்தியத்தை அழித்த ஏராளமான வாதங்களை விவரித்தார். பிறகு தனது ஆய்வுகளை தொழில்சார் நோய்களுக்கு விரிவுபடுத்தினார். 50-க்கும் மேற்பட்ட தொழில்கள் மற்றும் அவற்றுடன் அடிக்கடி தொடர்புடைய நோய்களை ஆய்வு செய்தார்.

இளமைக்கல்வி

BERNARDINO RAMAZZINI HISTORY IN TAMIL | பெர்னார்டினோ ராமஸ்ஸினி பற்றிய கட்டுரை: தனது துவக்க கல்விக்குப்பின், ராமஸ்ஸினி 1652ல் டியூக் ரெய்னூட்டியோ I வின் பார்மா பல்கலைக்கழகத்தில் தத்துவம் படிக்க சேர்ந்தார். மூன்று ஆண்டுகள் தத்துவம் படிக்கும்போதே மனம் மருத்துவத்தில் லயித்து, 1655ல் மருத்துவப் படிப்பைத் தொடங்கினார்;

தத்துவம் மற்றும் மருத்துவம் பயின்ற பின், ரோம் சென்றார். அங்கு கிளெமென்ஸ் VIII இன் மருத்துவரான அன்டோனியோ மரியா ரோஸ்ஸின்(ஜெரோலமோ ரோஸியின் மகன்) கீழ் தனது படிப்பைத் தொடர்ந்தார்.

ரமாஸ்ஸினியின் ரோம் நகர வாழ்க்கை தொடர்பாக அதிகம் அறியப்படவில்லை. ஆனால், இந்த நகரத்தின் வர்த்தகங்களைப் பற்றி அவர் பெற்ற அறிவு, தொழில் மருத்துவம்,அங்கு அவர் தொழிலாளிகளின் நோய்கள் குறித்து எழுதிய புத்தகமான “டி மோர்பிஸ் ஆர்டிஃபிகம் டயட்ரிபா (De morbis artificum diatriba- Diseases of Workers”) பற்றிய பதிவுகள் உள்ளன. இந்த புத்தகம் அவரது அறிவியல் தேடல் மற்றும் மருத்துவ உலகின் அடுத்தடுத்த பணிகளுக்கு மிகவும் முக்கியமானது ஆகும்.

தொழில்சார் நோய்கள்

BERNARDINO RAMAZZINI HISTORY IN TAMIL | பெர்னார்டினோ ராமஸ்ஸினி பற்றிய கட்டுரை: தத்துவம் மற்றும் மருத்துவம் படிக்கும் மாணவராக இருந்தபோது தொழிலாளர்களின் ஆரோக்கியத்தில் தனது ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார். ஒரு நோயாளியை தனது தொழிலைக் கேட்பதற்கான கண்டறியும் கருவியை அவர் அறிமுகப்படுத்தினார்.

மேலும், பலவகை நோய்களுக்கு காரணங்களாக, தொழில்கள் நடக்கும் இடங்களில் உள்ள தீங்கு விளைவிக்கும் நீராவிகள், சில துகள்கள், வெப்பம், குளிர், ஈரப்பதம், ஒழுங்கற்ற உடல் இயக்கங்கள் போன்றவை வகைப்படுத்தப்பட்ட தொழில்சார் சுகாதார அபாயங்கள் என கண்டறிந்தார்.

மேலும், மாசு கலந்த / துப்புரவு இல்லாத காற்றோட்டம் தொடர்பான பிரச்சினைகளும் கூட நோய்களை விளைவிக்கும் என அறிந்து அதனை நிவர்த்தி செய்தார்;

இதற்காக முகமூடிகள் போன்ற பாதுகாப்புகளை தொழிற்சாலைகளுக்கு பரிந்துரைத்தார். அப்போதுதான் தொழில்சார் நோய்கள் குறித்த முதல் முறையான கட்டுரையான டி மோர்பிஸ் ஆர்டிஃபிகம் டயட்ரிபா (1700) தொகுத்தார்.

தொழிலாளிகளின் நேசிப்பாளர்

BERNARDINO RAMAZZINI HISTORY IN TAMIL | பெர்னார்டினோ ராமஸ்ஸினி பற்றிய கட்டுரை: இப்படி பெர்னார்டினோ ராமஸ்ஸினி தொழில்சார் நோய்கள் பற்றிய அவரது ஆய்வுகள், தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆதரிப்பது, தொழிற்சாலை பாதுகாப்பு தொடர்பாகவே பேசியது.

அத்துடன் தொழிலாளர்களின் இழப்பீட்டுச் சட்டங்களை இறுதியில் நிறைவேற்ற இவை ஊக்குவித்தன. எனவேதான் அவரால் 1700 ஆம் ஆண்டில் தொழில் நோய்கள் மற்றும் தொழில்துறை சுகாதாரம் குறித்த முதல் முக்கியமான புத்தகத்தை ராமஸ்ஸினியால் எழுத முடிந்தது.

ஆனால் இந்த காலகட்டத்தில் இத்தாலியிலுள்ள ரோமில், கலிலியோ கலிலி மீது கடவுள் துவேஷ மற்றும் மத துவேஷ வழக்கு நடந்து கொண்டிருந்தது (பூமி சூரியனைச் சுற்றி வருகிறது என்று சொன்னதனால்).

எனவே. இத்தாலியில் விசாரணையின்போது அதன் தீர்ப்பாயம் கலிலியோ கலிலியின் போதனைகளை தடைசெய்தது; குற்றவாளி தனது மதங்களுக்கு எதிரான கொள்கையை கைவிடச் செய்தது.

கார்பி பயணம்

BERNARDINO RAMAZZINI HISTORY IN TAMIL | பெர்னார்டினோ ராமஸ்ஸினி பற்றிய கட்டுரை: ரமாஸ்ஸினிக்கு கல்வி போதிப்பதுடன், ரோம் மருத்துவர் அன்டோனியோ மரியா ரோஸ்ஸி, பாப்பல் மாநிலத்திற்கு வடக்கே உள்ள வசதி குறைவான காஸ்ட்ரோவின் டச்சியில் நகர மருத்துவராகபொறுப்பு ஏற்றார். இந்த பகுதி மலேரியாவால் பாதிக்கப்பட்டது; ரமாஸ்ஸினியும் அங்கு நோய்வாய்ப்பட்டார்.

ஆனால் விரைவில் அவர் தனது சொந்த ஊரான கார்பியில் குடியேறினார். இங்கே அவர், பழங்கால இலக்கியங்களைப் படிப்பது போன்ற அறிவுசார் முயற்சிகளுக்கு நேரத்தைக் கண்டுபிடித்து செயல்படுத்தினார்.

திறமைக்கும் வாய்ப்பு

BERNARDINO RAMAZZINI HISTORY IN TAMIL | பெர்னார்டினோ ராமஸ்ஸினி பற்றிய கட்டுரை: ரமாஸ்ஸினி 1671ல் கார்பி மாகாணத்தை விட்டு வெளியேறி மோடேனாவுக்குச் சென்றார். அங்கு அவர் முதலில் கல்வி நிறுவனத்தால் கடுமையாக எதிர்க்கப்பட்டார்.

இருப்பினும், 1682ல் மோடேனாவின் இரண்டாம் டியூக், ஃபிரான்செஸ்கோ(Duke Francesco II) அவருக்கு பல்கலைக்கழகத்தில் மருத்துவத் துறையில் ஒரு வேலை வழங்கின.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *