CHANDRAYAAN 3CHANDRAYAAN 3

CHANDRAYAAN 3: இஸ்ரோவின் சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் தற்போது நிலவில் இரவு என்பதால் உறக்க நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

அங்கு மீண்டும் சூரிய உதயம் வரும் போது திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் என இஸ்ரோ நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இந்தியாவின் கனவு திட்டமான சந்திரயான் -3 வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. ஆகஸ்ட் 23-ம் தேதி சந்திரயான் -3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இதன் மூலம் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய 4-வது நாடு என்றும் தென்துருவத்தில் கால் பதித்த முதல் நாடு என்ற பெருமையையும் இந்தியா பெற்றது.

விக்ரம் லேண்டர் தரையிறங்கியப் பின் அதில் இருந்து பிரக்யான் ரோவர் வெளிவந்தது. விக்ரம் லேண்டர் தரையிறங்கிய இடத்தில் இருந்தும், பிரக்யான் ரோவர் நிலவின் மேற்பரப்பில் நகர்ந்து சென்றும் ஆய்வு செய்து நிலவின் மர்மங்களை உலகுக்கு சொல்லியது.

IPHONE 15 SERIES: ஆப்பிள் ஐபோன் பற்றிய கட்டுரை

ஒரு நிலவு நாள் (14 பூமி நாட்கள்) லேண்டர் மற்றும் ரோவர் நிலவில் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்த பின் நிலவில் இரவு தொடங்கும் முன் செப்டம்பர் 4-ம் தேதி லேண்டர் மற்றும் ரோவர் உறக்க நிலையில் வைக்கப்பட்டது.

இந்நிலையில் செப்.22 நிலவில் மீண்டும் சூரிய ஒளி கிடைக்கும் போது மீண்டும் செயல்படும் என எதிர்பார்ப்பதாக இஸ்ரோ நம்பிக்கை தெரிவித்துள்ளது.

சந்திரயான்-3 (Chandrayaan 3)

CHANDRAYAAN 3: சந்திரயான்-3 (Chandrayaan-3) என்பது இந்திய நிலாப்பயண சந்திரயான் திட்டத்தில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இசுரோ) திட்டமிட்டுள்ள மூன்றாவது மிக அண்மைய நிலாத் தேட்டத் திட்டமாகும்.

2023 சூலையில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் 2019 இல் சந்திரயான்-2 இல் ஏவப்பட்டதைப் போன்று, விக்ரம் என்ற நிலாத் தரையிறங்கியையும், பிரக்யான் என்ற நிலாத் தரையூர்தியையும் கொண்டுள்ளது.

சந்திரயான்-3 சதீசு தவான் விண்வெளி மையத்தில் இருந்து 2023 சூலை 14 அன்று ஏவப்பட்டது. விண்கலம் 2023 ஆகத்து 5 அன்று நிலாவின் சுற்றுப்பாதையில் நுழைந்தது. விக்ரம் தரையிறங்கி பிரக்யான் தரையூர்தியுடன் நிலாவின் தென்முனைப் பகுதியில் ஆகத்து 23 அன்று 12:33 ஒசநே நேரத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கி, தென்முனையில் தரையிறங்கிய முதலாவது நாடாகவும், அத்துடன் நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்கிய நான்காவது நாடாகவும் இந்தியாவை உருவாக்கியது.

தரையிறங்கி 2023, செப்டம்பர் 3 அன்று இறங்கிய இடத்தில் இருந்து துள்ளிக் குதித்து 30–40 cm (12–16 அங்) அளவு தள்ளிய இருப்பை அடைந்தது. விக்ரம் தரையிறங்கியும் பிரக்யான் தரையூர்தியும் செப்டம்பர் முறையே செப்டம்பர் 2 அன்றும் 4 அன்றும் இறங்கிய இடத்தில் உள்ள சூரிய ஆற்றல் அருகி வந்ததால் உறங்க வைக்கப்பட்டன.

தரையிறங்கியும் தரையூர்தியும் செப்டம்பர் 22 அண்று சூரிய எழுச்சியின்போது மீண்டும் வேலை செய்ய திட்டமிடப்பட்டது. என்றாலும், செப்டம்பர் 22 அன்று விக்ரம் தரையிறங்கியும் பிரக்யான் தரையூர்தியும் விழிப்பு அழைப்புக்குத் துலங்காமல் தவறவிட்டன.

நோக்கம்

CHANDRAYAAN 3: இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் சந்திரயான்-3 இன் நோக்கங்களாகப் பின்வருபவற்றைக் கொண்டுள்ளது.

  • தரையிறங்கியைப் பாதுகாப்பாகவும் மெதுவாகவும் நிலாத்தரையில் இறக்கிவிடல்.
  • நிலாவில் தரையூர்தி உலாவும் திறன்களை நோக்கீட்டாலும் செயல்விளக்கத்தாலும் நிறுவுதல்
  • நிலாவின் உட்கூற்றை நன்கு புரிந்து கொள்ளவும் நடைமுறைக்குப் பயன்படுத்தவும்
  • நிலாத்தரையில் கிடைக்கும் வேதி, இயல்தனிமங்களின் மீது களத்திலேயே அறிவியல் செய்முறைகளை மேற்கொண்டு அவற்றின் நோக்கீடுகளைப் பதிவுசெய்தல் கோளிடை எனும் சொல் இருகோள்களுக்கு இடையே தேவைப்படும் தொழில்நுட்பங்களை உருவாக்கிச் செயல்படுத்தலைக் குறிக்கும் அடைமொழியாகும்

சந்திரயான்-1 (Chandrayaan-1)

CHANDRAYAAN 3: சந்திரயான்-1 (Chandrayaan-1) என்பது இந்திய விண்வெளி ஆய்வு மையத்தால் சந்திரயான் திட்டத்தின் கீழ் விண்வெளிக்குச் செலுத்தப்பட்ட ஆளில்லாத நிலாப் பயணக்கலம் ஆகும். இது 2009 ஆகத்து வரை இயக்கத்தில் இருந்தது.

இத்திட்டத்தில் ஒரு நிலா வட்டணைக்கலமும் ஒரு தரையிறக்க நிலா மொத்தல் கலமும் அடங்கியிருந்தன. இந்தியா இந்த விண்கலத்தினை முனைய ஏவூர்தி(PSLV-XL) ஐப் பயன்படுத்தி 2008 அக்தோபர், 22 இல் ஆந்திரப் பிரதேசம் சிறி அரிகோட்டா, சத்தீசு தவான் விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் ஏவியது.

இது இந்திய விண்வெளி நிகழ்ச்சிநிரலில் பேருந்தாற்றலை அளித்தது. ஏனெனில் இதன் வழி இந்தியா நிலாத் தேட்டத்துக்கான தொழில்நுட்பத்தை ஆய்வுவழி தானே தனித்து உருவாக்கியது. சந்திரயான்-1 விண்கலம் 2008 நவம்பர் 8 இல் நிலா வட்டணையில் செலுத்தப்பட்டது.

நிலா மொத்தல் கலம் சந்திரயான் வட்டணைக்கலத்தில் இருந்து பிரிந்து கட்டுப்பாடான பாணியில் இறங்கி, 2008 நவம்பர் 14 இல் நிலாவின் தென் முனையில் குதித்து மொத்தியது.

எனவே இந்தியா நிலாவில் ஒரு பொருளை வைத்து வெற்றிகண்ட நான்காம் நாடாகியது. மொத்தல் கலம் சேக்கிள்டன் குழிப்பள்ளத்தில் 15.01 ஒபொநே நேரத்தில் மோதியது. மொத்திய இடம் சவகர் புள்ளி எனப்பெயரிடபட்டது.

இதன் முதன்மையான நோக்கம் நிலவுப்பரப்பில் பல்வேறு கனிமங்கள், தனிமங்களின் பரவலை ஆய்வு செய்வதும், முழு நிலவுப் பரப்பையும் அதிக துல்லியத்துடன் முப்பருமான வரைபடமாக்கலும் ஆகும்.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் முனையச் செயற்கைக்கோள் ஏவுகலமான முனையச் செயற்கைக்கோள் ஏவூர்தி சந்திராயன் I கலத்தை 240 கி.மீ x 24000 கி.மீ புவி வட்டணையில் செலுத்தும்.

பின்னர் விண்கலம் தன்னகத்துள்ள முற்செலுத்த அமைப்பின் துணைகொண்டு 100 கி.மீ முனைய வட்டணையில் நிலவைச்சுற்றிவரும்படி நிலைநிறுத்தவும் திட்டமிடப்பட்டது.
இப்பணித்திட்டத்தின் தலைவராக மயில்சாமி அண்ணாதுரை இருந்தார்.திட்ட மதிப்பீட்டுத் தொகை 386 கோடி உரூபா ஆகும்.

CHANDRAYAAN 3: இந்தியாவின் ஆய்வுக் கருவிகள் போக பன்னாட்டு விண்வெளி நிறுவனங்களான நாசா, ஐரோப்பிய விண்வெளி நிறுவனம், பல்கேரியாவின் ஆய்வுக் கருவிகளும் இத்திட்டத்தில் அடங்கும்.

இரண்டாண்டுகளுக்குள் நிலா மேற்பரப்பு முழுவதும் அளக்கையிட்டு மேற்பரப்பில் அமையும் வேதிம உட்கூற்களின் முழு தரைப்படத்தையும் அதன் நிலப்பொதிவியல் முப்பருமான உருவரையையும் பதிவு செய்ய கருதப்பட்டது. நிலா முனனை வட்டாரங்களில் பனிவடிவில் நீர் உறைய வாய்ப்புள்ளதால் அவை ஆர்வத்தோடு அலசப்பட்டன.

ஏறத்தாழ ஓராண்டுக்குப் பின்னர், திறன்குன்றிய வெப்பக் கவசம், விண்மீன் தடங்காணி உட்பட பல தொழில்நுட்பக் கோளாறுகளை வட்டணைக்கலம் உணரத் தொடங்கியது; சந்திரயான்-1 தன் தகவல் பரிமாற்றத்தினை 2009 ஆகத்து 28 அன்று 20:00 ஒபொநே மணி நேரத்தில் நிறுத்தியது. உடனே இந்திய விண்வேளி ஆய்வு நிறுவனம் சந்திரயான்-1 இன் பணி நிறைவுற்றதாக அறிவித்தது.

CHANDRAYAAN 3: சந்திரயான்-1 இரண்டாண்டுகளுக்குப் பதிலாக 312 நாட்களே இயங்கியது; என்றாலும், இத்திட்டம் நிலாத் தண்ணீர் உட்பட பெரும்பாலான தன் அறிவியல் நோக்கங்களை வென்றெடுத்தது.

இந்த தேட்ட முனைவின் பல்வேறு சாதனைகளில் நிலா மண்ணில் பரவலாக நீர்மூலக்கூறுகள் பொதிந்துள்ளதைக் கண்டறிந்தமை சிறப்பானதாகும்.

CHANDRAYAAN 3: இயக்கத்தை நிறுத்திய ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, நாசா தன் தரை வீவாணி அமைப்புகளைக் கொண்டு 2016 ஜூலை 2 இல் சந்திரயான்-1 இன் இருப்பை நிலா வட்டணையில் நிலாவைச் சுற்றிக்கொண்டிருப்பதை மீளக் கண்டறிந்தது.

தொடர்ந்து மும்மாத நோக்கிடுகளுக்குப் பின்னர் துல்லியமாக இரண்டு ஆண்டுகட்கு ஒருமுறை குத்துயரத்தில் 150 கிமீ முதல் 270 கிமீ வரை மாறும் அதன்வட்டணை இயக்கத்தை நாசா கண்டறிந்தது.

சந்திரயான்-2 (Chandrayaan-2)

CHANDRAYAAN 3: சந்திரயான்-2 (Chandrayaan-2) என்பது சந்திரயான்-1 இற்குப் பின்னர் நிலாவை ஆய்வு செய்வதற்காக ஏவப்பட்ட இந்தியாவின் இரண்டாவது விண்கலம் ஆகும். இந்திய விண்வெளி ஆய்வு மையத்தினால் (இசுரோ) வடிவமைக்கப்பட்ட இவ்விண்கலம், ஸ்ரீஹரிக்கோட்டா விண்வெளி மையத்தில் இருந்து 2019, சூலை 22 அன்று நிலாவை நோக்கி ஜி. எஸ். எல். வி மார்க் III ஏவுகலன் மூலம் ஏவப்பட்டது.

இவ்விண்கலத்தில் நிலா சுற்றுக்கலன், தரையிறங்கி, தரையூர்தி(நடமாடும் ஆய்வகம்) ஆகியன உள்ளடங்கியிருந்தன. இவை அனைத்தும் இந்தியாவிலேயே வடிவமைத்து கட்டமைக்கப்பட்டன. இதன் முதன்மையான அறிவியல் குறிக்கோள் நிலா மேற்பரப்பு உட்கூற்று வேறுபாடுகளை ஆய்வு செய்து படம் வரைதலும் நிலாத் தண்ணீர் செறிவாக அமையும் இடங்களைக் கண்டறிதலும் ஆகும்.

தரையூர்தி நிலாவின் மேற்பரப்பில் வேதிப்பகுப்பாய்வை 14 நாட்களுக்கு (1 நிலா நாள்) மேற்கொள்ளவும், தான் திரட்டிய தரவுகளைச் சுற்றுக்கலன், தரையிறங்கியூடாக புவிக்கு அனுப்பவும் திட்டமிடப்பட்டிருந்தது.

சுற்றுக்கலன் ஒரு ஆண்டு காலம் நிலாவைச் சுற்றி 100 x 100 கிமீ சுற்றுவட்டத்தில் சுற்றிவந்து தனது பணிகளை மேற்கொள்ளும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. 2019 செப்டம்பர் 7 இல் நிலாவில் நிலநேர்க்கோட்டின் கிட்டத்தட்ட 70° தெற்கே மன்சீனசு சி, சிம்பேலியசு என் ஆகிய இரு குழிகளிடையேயுள்ள மேட்டுச்சமவெளியில் சந்திரயான்-2 இன் தரையிறங்கியும், உலாவியும் இறங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

என்றாலும், 2019, செப்டம்பர் 6 இல் தரையிறங்க முயலும்போது, தன் திட்டமிட்ட தடவழியில் இருந்து விலகியதால் அது நிலாத்தரையில் மொத்தியநிலைக்குத் தள்ளப்பட்டது. எனவே, தரையிறங்கியை வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கம் செய்ய இயலவில்லை.

CHANDRAYAAN 3: இசுரோ பெற்ற பழுது பகுப்பாய்வு அறிக்கையின்படி, மொத்தல் சிறு மென்பொருள் வழுவியதால் நேர்ந்ததாகக் கூறப்பட்டது. இதனால், இசுரோ 2023 இல் சந்திரயான்-3 வழியாக நிலாத்தரையில் மென்மையான தரையிறக்கத்துக்கு மறுமுயர்சி செய்ய முடிவெடுத்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *