IPHONE 15 SERIES

IPHONE 15 SERIES FEATURES: ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன் சீரிஸை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்தாண்டு ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 15 சீரிஸை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது.

ஆப்பிளின் ‘Wonderlust’ ஈவன்ட் இன்று ( செப்டம்பர் 12) நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 15 சீரிஸை அறிமுகப்படுத்துகிறது. ஐபோன் 15 சீரிஸில் ஐபோன் 15 ப்ரோ, ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ், ஐபோன் 15 பிளஸ் மற்றும் ஐபோன் 15 உள்ளிட்ட மாடல்கள் அறிமுகமாகும் என கூறப்பட்டது.

ஐபோன் 15 சீரிஸில் இடம்பெறும் ஸ்டாண்டர்ட் மற்றும் ப்ரோ மாடல்களில் Dynamic Island உள்ளிட்ட சில பொதுவான அம்சங்களை இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. தற்போது Dynamic Island அம்சந்தை ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 14 ப்ரோ மாடலுக்கு மட்டுமே வழங்கி வருகிறது. இந்த நிலையில் வரவிருக்கும் ஐபோன் 15 சீரிஸ் லைன்அப்-ல் இடம்பெறும் அனைத்து மாடல்களுக்கும் Dynamic Island அம்சம் வழங்கப்பட கூடும்.

மேற்கண்டவை தவிர புதிய ஐபோன் 15 சீரிஸில் இடம்பெறும் மாடல்களும் புதிய கலர் ஆப்ஷன்களும் இடம்பெறவாய்ப்புள்ளது. அதிலும் குறிப்பாக, ஐபோன் 15 ப்ரோ மாடல் கிரே மற்றும் ப்ளூ நிறத்திலும், மற்ற மாடல்கள் பிங்க் மற்றும் ப்ளூ நிறத்திலும் இருக்கும் என வெளியீடு முன்பு தகவல்கள் பரவின.

IPHONE 15 SERIES
IPHONE 15 SERIES

IPHONE 15 SERIES FEATURES – ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 ப்ரோ மாடல்களுக்கு இடையே எதிர்பார்க்கப்படும் வேறுபாடுகள்

IPHONE 15 SERIES FEATURES: ஐபோன் மாடல்களுக்கு கடந்த ஆண்டு பயன்படுத்தப்பட்ட அதே சிப்பை-யும், ப்ரோ மாடல்களுக்கு புதிய மற்றும் வேகமான சிப்செட்டை வழங்கும் வழக்கத்தை கடன் ஆண்டை போலவே ஆப்பிள் இந்த ஆண்டும் கடைபிடிக்கும் என தகவல் வெளியாகி இருக்கிறது.

உதாரணமாக கடந்த ஆண்டு வெளியான ஐபோன் 14-ல் A15 Bionic சிப்செட் டும், ஐ போன் 14 ப்ரோ மாடலில் A16 Bionic சிப்செட்டும் பயன்படுத்தப்பட்டது. இதை பின்பற்றி விரைவில் அறிமுகமாகும் ஐபோன் 15-ல் A16 Bionic சிப்செட்டும், ஐபோன் 15 ப்ரோ-ல் லேட்டஸ்ட்டான A17 Bionic சிப்செட்டும் கொடுக்கப்படும் என தகவல்கள் கூறுகின்றன.

CHANDRAYAAN 3 – சந்திரயான்-3: நிலவில் தூங்கும் விக்ரம் லேண்டர், மீண்டும் எப்போது செயல்படும்?

A17 Bionic சிப்செட்டானது 3.70 GHz கிளாக் ஸ்பீடை கொண்டிருக்கும் மற்றும் A16 Bionic பயன்படுத்தும் 4nm ப்ராசஸுடன் ஒப்பிடும்போது புதி சிப்செட் 3nm ப்ராசஸை அடிப்படையாகக் கொண்டிருக்கும். மேலும் இந்த சிப்செட் 6GB LPDDR5 RAM உடன் இணைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரவிற்கும் ஐபோன் 15 ப்ரோ மாடலில் மென்மையான மற்றும் ஸ்மூத்தான ஸ்க்ரோலிங்கிற்கான 120 ஹெர்ட்ஸ் ProMotion இடம்பெறும் எந்த தெரிகிறது. ஆனால் இந்த அம்சம் ஐபோன்15 மாடலில் இருக்காது. மேலும் 15 ப்ரோ சிறந்த கேமரா சிஸ்டமை கொண்டிருக்கும் பெறலாம், குறிப்பாக zooming என்று வரும் போது என்கின்றன தகவல்கள்.

IPHONE 15 SERIES
IPHONE 15 SERIES

அதே நேரம் ஐபோன் 15 மாடல்கள் 60 ஹெர்ட்ஸ் பேனல்களை கொண்டிருக்க கூடும். மற்றொரு குறிப்பிடத்தக்க வேறுபாடு என்னவென்றால் ஐபோன் 15-ல் டெலிஃபோட்டோ லென்ஸ் இருக்காது, ஆனால் இது ப்ரோ மாடல்களில் இடம்பெறும் என கூறப்படுகிறது.

எப்போதுமே ப்ரோ மாடல்களுடன் ஒப்பிடும்போது ஸ்டாண்டர்ட் ஐபோன் மாடல்களின் விலை மிகவும் குறைவாக இருக்கும். உதாரணமாக ஐபோன் 14-ன் ஸ்டிக்கர் விலை ரூ.79,900 ஆனால் ஐபோன் 14 ப்ரோ-வின் விலை ரூ.1,29,900.

கிட்டத்தட்ட இரண்டு மடல்களுக்கும் ரூ.50,000 விலை வித்தியாசம். எனவே ஐபோன் 15-ஐ விட ஐபோன் 15 ப்ரோ அதிக அம்சங்களுடன் அதிக விலையையும் கொண்டிருக்கும். குறிப்பாக ஐபோன் 15 மற்றும் 15 ப்ரோ மாடல்களுக்கு இடையே பெரிய அளவிலான வேறுபாட்டை காட்ட அவற்றின் build மெட்டீரியல்ஸ்களில் டைட்டானியம், அலுமினியம் பயன்படுத்தப்படலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *