KAMARAJAR HISTORY IN TAMIL | காமராசர் பற்றிய கட்டுரைKAMARAJAR HISTORY IN TAMIL | காமராசர் பற்றிய கட்டுரை

KAMARAJAR HISTORY IN TAMIL: காமராசர் 1954 ஆம் ஆண்டு அப்போதைய சென்னை மாநில முதலமைச்சர் ஆவார். இவர் ஒன்பது ஆண்டுகள் சென்னை மாநில முதல்வராகப் பதவி வகித்தார். தமிழகத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

காமராசர் எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர். இவரை, தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, அரசரை உருவாக்குபவர், பெருந்தலைவர் என்றெல்லாம் புகழ்வர்.

இவர் “கருப்பு காந்தி” என்றும் அன்போடு அழைக்கப்படுகிறார். காமராசரின் மறைவுக்கு பின், 1976 இல் இந்திய அரசு இவருக்குப் பாரத ரத்னா விருது வழங்கியது.

மதுரைப் பல்கலைக்கழகத்திற்கு, மதுரை காமராசர் பல்கலைக்கழகம் என்றும், சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் உள்நாட்டு முனையத்திற்கு காமராசர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

பிறப்பு

KAMARAJAR HISTORY IN TAMIL: குமாரசாமி மற்றும் சிவகாமி அம்மாளுக்கு 1903 ஆம் ஆண்டு ஜீலை 15 ஆம் தேதி விருதுநகரில் பிறந்தார். ”காமாட்சி” எனும் குலதெய்வத்தின் பெயரே ஆரம்பித்தில் இவருக்கு சூட்டப்பட்டது.

அவரின் தாய் செல்லமாக “ராசா” என அழைப்பதுண்டு. பிற்காலத்தில் இவ்விரு பெயர்களும் சேர்ந்தே “காமராசர்” என்று வரலாற்றில் நீங்காத இடம் பிடித்த பெயராக மாறியது.

முதல்வர்

KAMARAJAR HISTORY IN TAMIL: 1954ஆம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் தேதியன்று காமராஜர் மெட்ராஸ் மாகாணத்தின் (தமிழகம்) முதல்வராக பதவியேற்றார். தமிழகத்தில் கல்வியை மேம்படுத்தவும், கிராமப்புற மாணவர்களிடையே ஊக்கப்படுத்தவும் காமராஜர் பல்வேறு முயற்சிகளை எடுத்தார். அவரால் அறிமுகப்படுத்தப்பட்ட மதிய உணவுத் திட்டம் இந்தியா முழுவதும் பரவியது மட்டுமல்லாமல் பல உலக நாடுகளையும் சென்று சேர்ந்துள்ளது.

பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் 7 விழுக்காடாக இருந்த கல்வி விகிதம், காமராஜரின் சீர்திருத்தங்களுக்கு பின் 37 விழுக்காடாக உயர்ந்தது. பல்வேறு நீர்ப்பாசனத் திட்டங்களும் காமராஜர் காலத்தில் திட்டமிடப்பட்டவை.

தொழில்துறையை பொறுத்தவரை நெய்வேலி NLC, திருச்சி BHEL, சென்னை ICF உள்பட ஏராளமான முதலீட்டில் தொழில் நிறுவனங்கள் காமராஜர் காலத்தில் வந்தவை. மேலும், காகிதம், சர்க்கரை, ரசாயனம், சிமெண்ட் உள்ளிட்ட பல பொருட்களை உற்பத்தி செய்யும் ஆலைகளும் அமைக்கப்பட்டன.

AMBEDKAR HISTORY IN TAMIL | அம்பேத்கர் பற்றிய கட்டுரை

தொடர்ந்து மூன்று ஆட்சிக்காலத்துக்கு காமராஜர் முதல்வராக நீடித்தார். 1957 முதல் 1962ஆம் ஆண்டு வரை நடைபெற்ற தேர்தல்களில் வெற்றிபெற்றார். ஆனால், காங்கிரஸ் கட்சியின் பலம் படிப்படியாக குறைந்து வருவதை உணர்ந்த காமராஜர், 1963ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். மற்ற சீனியர் காங்கிரஸ் தலைவர்களும் பதவியை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரஸுக்கு புத்துயிர் கோடுக்க உழைக்க வேண்டுமென காமராஜர் முன்மொழிந்தார்.

இரண்டே மாதங்களில் அந்த திட்டத்தை ஏற்றுக்கொண்டது காங்கிரஸ் பணிக்குழு. அந்தத் திட்டத்திற்கு ‘காமராஜர் திட்டம்’ என்றே பெயரிடப்பட்டது. தனது திட்டத்திற்கு முன் உதாரணமாக இருக்க 1963-ஆம் ஆண்டு அக்டோபர் 3-ந்தேதி தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் அந்த அதிசய தலைவர்.

KAMARAJAR HISTORY IN TAMIL: அவரைத் தொடர்ந்து லால் பகதூர் சாஸ்திரி, ஜக்ஜிவன்ராம் முராஜிதேசாய், எஸ்கே.பட்டேல் போன்ற மூத்தத் தலைவர்களும் பதவி விலகினர். அதே ஆண்டு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பை தந்தார் ஜவகர்லால் நேரு, அதற்கு அடுத்த ஆண்டே நேரு இறந்ததைத் தொடர்ந்து இந்தியாவின் அடுத்த பிரதமராக லால் பகதூர் சாஸ்திரியை முன் மொழிந்தார் காமராஜர்.

இரண்டே ஆண்டுகளில் சாஸ்திரியும் மரணத்தைத் தழுவ அப்போது 48 வயது நிரம்பியிருந்த நேருவின் மகள் இந்திராகாந்தியை இந்தியாவின் அடுத்த பிரதமராக்கினார் காமராஜர்.

KAMARAJAR HISTORY IN TAMIL: அந்த இரண்டு தலமைத்துவ மாற்றங்களையும் அவர் மிக லாவகமாக செய்து முடித்ததால் காமராஜரை ‘கிங்மேக்கர்’ என்று அழைத்தனர் பத்திரிக்கையாளர்களும் மற்ற அரசியல்வாதிகளும்.

தமிழ்நாட்டில் மெச்சதக்க பொற்கால ஆட்சியை தந்த காமராஜர் தனது கடைசி மூச்சு வரை சமூகத்தொண்டு செய்வதிலேயே குறியாக இருந்தார். 1975-ஆம் ஆண்டு அக்டோபர் 2-ஆம் நாள் தனது 72-ஆவது அகவையில் காலமானார்.

KAMARAJAR HISTORY IN TAMIL | காமராசர் பற்றிய கட்டுரை
KAMARAJAR HISTORY IN TAMIL | காமராசர் பற்றிய கட்டுரை

நினைவுச் சின்னங்கள்

KAMARAJAR HISTORY IN TAMIL: தமிழ்நாடு அரசு, காமராசர் நினைவைப் போற்றும் வகையில் சென்னை கிண்டியில் நினைவிடம் ஒன்றை அமைத்துள்ளது. இங்குக் காமராசரின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் காமராசர் மணிமண்டபம் ஒன்றையும் அமைத்துள்ளது.

இங்குக் காமராசரின் மார்பளவு சிலையும் நூலகமும் அமைக்கப்பட்டுள்ளது. அவரின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் பொதுமக்கள் பார்வைக்குக் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.

திரைப்படங்கள்

KAMARAJAR HISTORY IN TAMIL: 2004 ஆம் ஆண்டு காமராஜ் என்கிற பெயரில் அவருடைய வாழ்க்கை வரலாற்றினைச் சித்தரிக்கும் திரைப்படம் வெளியானது. அதன் ஆங்கில மொழியாக்க குறுந்தகடு 2007-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

காமராஜரைப் பற்றிய அரிய தகவல்கள் – KAMARAJAR HISTORY IN TAMIL

  1. KAMARAJAR HISTORY IN TAMIL: காமராஜர், ஒருவரை ஒரு தடவை பார்த்து பேசி விட்டால்போதும், அவரை எத்தனை ஆண்டுகள் கழித்து பார்த்தாலும், மிகச்சரியாக சொல்வார். அந்த அளவுக்கு அவரிடம்ஞாபகசக்தி மிகுந்திருந்தது.
  2. கட்சி சுற்றுப் பயணத்தின் போது எல்லோரும் சாப்பிட்டபிறகுதான் காமராஜர் சாப்பிடுவார்.
  3. காமராஜரிடம் பேசும் போது, அவர் “அமருங்கள், மகிழ்ச்சி,நன்றி” என அழகுத் தமிழில்தான் பேசுவார்.
  4. காமராஜரின் ஆட்சி இந்தியாவின் மற்றமாநிலங்களுக்கு முன்னோடியாய் இருக்கிறது என்று முன்னாள்குடியரசுத் தலைவர் பாபு ராஜேந்திர பிரசாத்சொல்லி இருக்கிறார்.
  5. நேரு, சர்தார்படேல், சாஸ்திரி உள்ளிட்ட வட மாநிலதலைவர்களுடன் பேசும் போது மிக, மிக அழகான ஆங்கிலத்தில்காமராஜர் பேசுவதை பலரும் கேட்டு ஆச்சரியத்தில் வாயடைத்துபோய் இருக்கிறார்கள்.
  6. காமராஜருக்கு கோபம் வந்து விட்டால் அவ்வளவுதான்,திட்டி தீர்த்து விடுவார். ஆனால் அந்த கோபம் மறுநிமிடமே பனிகட்டி போல கரைந்து மறைந்து விடும்.
  7. தமிழ்நாட்டில் எந்த ஊர் பற்றி பேசினாலும், அந்த ஊரில்உள்ள தியாகி பெயர் மற்றும் விபரங்களை துல்லியமாகசொல்லி ஆச்சரியப்படுத்துவார்.
  8. காமராஜர் தன் ஆட்சி காலத்தில் உயர் கல்விக்காகரூ.175 கோடி செலவழித்தார். இது அந்த காலத்தில் மிகப்பெரிய தொகையாகும்.
  9. தனது பாட்டி இறுதி சடங்கில் கலந்து கொண்டகாமராஜர் தோளில் துண்டு போடப்பட்டது. அன்று முதல்காமராஜர் தன் தோளில் துண்டை போட்டுக் கொள்ளும்பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார்.
  10. KAMARAJAR HISTORY IN TAMIL: காமராஜருக்கு மலர்மாலைகள் என்றால் அலர்ஜி.எனவே கழுத்தில் போட விடாமல் கையிலேயே வாங்கிக்கொள்வார்.
  11. கதர்துண்டுகள் அணிவித்தால் காமராஜர் மிக, மிகமகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வார். ஏனெனில்அந்த கதர் துண்டுகள் அனைத்தையும் பால மந்திர் என்றஆதரவற்றோர் இல்லத்துக்கு கொடுத்து விடுவார்.
  12. பிறந்த நாளன்று யாராவது அன்பு மிகுதியால்பெரிய கேக் கொண்டு வந்து வெட்டசொன்னால், ” என்னய்யா… இது?” என்பார்.கொஞ்சம் வெட்கத்துடன்தான் “கேக்”வெட்டுவார்.
  13. 1966ம் ஆண்டு ஜெய்ப்பூரில் நடந்த காங்கிரஸ்மாநாட்டில் பேசிய காமராஜர், “மக்களுக்கு குறைந்தவிலையில்பொருட்களை வழங்கும் தொழில்களை நிறையதொடங்க வேண்டும்” என்றார். இந்த உரைதான்இந்திய பொருளாதார துறையில் மாற்றங்களைஏற்படுத்தியது.
  14. பெருந்தலைவரை எல்லாரும் காமராஜர் என்று அழைத்துவந்த நிலையில் தந்தை பெரியார்தான் மேடைகள்தோறும்”காமராசர்” என்று கூறி நல்ல தமிழில் அழைக்க வைத்தார்.
  15. காமராஜருக்கு “பச்சைத்தமிழன்” என்ற பெயரைசூட்டியவர் ஈ.வெ.ரா.பெரியார்.
  16. காமராஜர் தன் டிரைவர், உதவியாளர்களிடம் எப்போதும்அதிக அக்கறை காட்டுவார். குறிப்பாக அவர்கள் சாப்பிட்டுவிட்டார்களா என்று பார்த்து உறுதிபடுத்திக்கொள்வார்.
  17. காமராஜருக்கு ராமரை மிகவும் பிடிக்கும். எனவே அவர்ஓய்வு நேரங்களில் ராமாயணம் படிப்பதை வழக்கத்தில்வைத்திருந்தார்.
  18. காமராஜர் ஒரு தடவை குற்றாலத்தில் சில தினங்கள்தங்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர் சாமிதோப்பு அய்யாவைகுண்டரின் வரலாற்று காவியமான அகிலத்திரட்டு நூலைஒருவரை வாசிக்கச் சொல்லி முழுமையாகக் கேட்டார்.
  19. ஒரு தடவை 234 பஞ்சாயத்து விரிவாக்க அலுவலர்களை> பணி நீக்கம் செய்யும் கோப்பு காமராஜரிடம் வந்தது.அதில் கையெழுத்திட மறுத்த காமராஜர் அந்த 234பேரையும் வேறு துறைக்கு மாற்றி உத்தரவிட்டார்.
  20. KAMARAJAR HISTORY IN TAMIL: பிரதமர் நேரு, காமராஜரை பொதுக் கூட்டங்களில்பேசும் போதெல்லாம், “மக்கள் தலைவர்” என்றே கூறினார்.
  21. வட மதுரையில் இருந்து அரசாண்ட கம்சனின் மந்திரி சபையில்8 மந்திரிகள் இருந்ததாக பாகதம் கூறுகிறது. இதை உணர்ந்தேகாமராஜரும் தன் மந்திரி சபையில் 8 மந்திரிகளைவைத்திருந்ததாக சொல்வார்கள்.
  22. தமிழ்நாட்டில் காமராஜரின் காலடி தடம் படாதகிராமமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அவர்எல்லா கிராமங்களுக்கும் சென்றுள்ளார்.இதனால்தான் தமிழ்நாட்டின் பூகோளம் அவருக்குஅத்துப்படியாக இருந்தது.
  23. காமராஜர் திட்டத்தின் கீழ் காமராஜரே முதன்முதலாக தாமாக முன் வந்து 2.10.1963ல் முதல் அமைச்சர்பதவியை ராஜினமா செய்தார்.
  24. 9 ஆண்டுகள் முதல்-மந்திரியாக இருந்த காமராஜர்சட்டசபையில் 6 தடவைதான் நீண்ட பதில் உரையாற்றிஇருக்கிறார்.
  25. காங்கிரஸ் கட்சியை மிக, மிக கடுமையாக எதிர்த்து வந்தவர்ராமசாமி படையாச்சி, அவரையும் காமராஜர் தன் மந்திரிசபையில் சேர்த்துக் கொண்ட போது எல்லோரும்ஆச்சரியப்பட்டனர்.
  26. சட்டத்தை காரணம் காட்டி எந்த ஒரு மக்கள் நலதிட்டத்தையும் கிடப்பில் போட காமராஜர் அனுமதித்ததே இல்லை.”மக்களுக்காகத்தான் சட்டமே தவிர சட்டத்துக்காக மக்கள்இல்லை” என்று அவர் அடிக்கடி அதிகாரிகளிடம் கூறுவதுண்டு.
  27. தவறு என்று தெரிந்தால் அதை தட்டி கேட்ககாமராஜர் ஒரு போதும் தயங்கியதே இல்லை. மகாத்மாகாந்தி, தீரர் சத்தியமூர்த்தி உள்பட பலர் காமராஜரின்இந்த துணிச்சலால் தங்கள் முடிவை மாற்றியதுகுறிப்பிடத்தக்கது.
  28. காமராஜர் எப்போதும் “முக்கால் கை” வைத்த கதர்ச் சட்டையும்,4 முழு வேட்டியையும் அணிவதையே விரும்பினார்.
  29. காமராஜர் மனிபர்சோ, பேனாவோ ஒரு போதும் வைத்துக்கொண்டதில்லை. ஏதாவது கோப்புகளில் கையெழுத்துபோட வேண்டும் எனறால், அருகில் இருக்கும் அதிகாரியிடம்பேனா வாங்கி கையெழுத்திடுவார்.
  30. KAMARAJAR HISTORY IN TAMIL: காமராஜர் எப்போதும் ஒரு பீங்கான் தட்டில்தான் மதியஉணவு சாப்பிடுவார். கடைசி வரை அவர் அந்த தட்டையேபயன்படுத்தினார்.
  31. காமராஜர் தினமும் இரண்டு அல்லது மூன்று தடவைகுளிப்பார். அவருக்கு பச்சைத் தண்ணீரில் குளிப்பது என்றால்மிகவும் பிடிக்கும். குளித்து முடித்ததும் சலவை செய்த சட்டையையேபோட்டுக் கொள்வார்.
  32. காமராஜரின் எளிமை நேருவால் போற்றப்பட்டிருக்கிறது.`எனக்குத் தெரிந்து இவருடைய சட்டைப் பையில் பணம்இருந்ததில்லை’ என்று நேரு குறிப்பிட்டதுண்டு.
  33. காமராஜர் நாளிதழ்களை படிக்கும் போது எந்த ஊரில்என்ன பிரச்சினை உள்ளது என்பதை உன்னிப்பாக படிப்பார்.பிறகு அந்த ஊர்களுக்கு செல்ல நேரிடும் போது, அந்த பிரச்சினைபற்றி மக்களுடன் விவாதிப்பார்.
  34. காமராஜர் ஒரு தடவை தன் பிரத்யேக பெட்டிக்குள்,இன்சைடு ஆப்பிரிக்கா, என்ட்ஸ் அண்ட் மீனஸ், டைம், நியூஸ்வீக்ஆகிய ஆங்கில இதழ்களை வைத்திருப்பதை கண்டு எழுத்தாளர்சாவி ஆச்சரியப்பட்டார்.
  35. எந்தவொரு செயலையும் எடுத்தேன் கவிழ்த்தேன்என்று செய்து விட மாட்டார். நிதானமாகயோசித்துத்தான் ஒரு செயலில் இறங்குவார். எடுத்தசெயலை எக்காரணம் கொண்டும் செய்துமுடிக்காமல் விட மாட்டார்.
  36. காமராஜருக்கு மக்களுடன் பேசுவது என்றால்கொள்ளைப் பிரியம் உண்டு. தன்னைத் தேடி எத்தனை பேர்வந்தாலும் அவர்கள் எல்லாரையும் அழைத்து பேசி விட்டுத்தான்தூங்க செல்வார். அவர் பேசும் போது சாதாரணகிராமத்தான் போலவே பேசுவார்.
  37. காமராஜர் 1920-ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ்உறுப்பினர் ஆனார்.
  38. 1953-ல் நேருவிடம் தமக்கு இருந்த நட்பை பயன்படுத்தி,நாடாளுமன்றத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக முதல்சட்டத் திருத்தம் கொண்டு வந்தவர் பெருந்தலைவர்காமராஜர் என்பது குறிப்பிடத்தக்கது.
  39. வட இந்திய மக்கள் காமராஜரை `காலா காந்தி’என்று அன்போடு அழைத்தார்கள். `காலா காந்தி’ என்றால்`கறுப்பு காந்தி’ என்று அர்த்தம்.
  40. KAMARAJAR HISTORY IN TAMIL: சட்ட சபையில் சமர்ப்பிக்கப்படும் வரவு செலவு திட்டத்தைமுதல் முறையாக தமிழில் சமர்ப்பித்த பெருமைகாமராஜரையே சேரும்.
  41. 12 ஆண்டுகள் காமராஜர் தமிழ்நாடு காங்கிரஸ்கமிட்டித் தலைவராக இருந்து தமிழ்நாட்டில் காங்கிரஸ்வேரூன்றவும், காங்கிரஸ் ஆட்சி ஏற்படவும் பாடுபட்டார்.
  42. காமராஜர் அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டியின்தலைவராக சுமார் 2 ஆண்டு காலம் பதவி வகித்து,இந்தியாவிலுள்ள எல்லா மாநிலங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து காங்கிரஸ் கட்சி வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டார்.
  43. காமராஜர் இளம் வயதில் கொஞ்சக் காலம்இன்சூரன்ஸ் ஏஜெண்டாக இருந்தார். பின்பு அதை விட்டுவிட்டார்.
  44. காமராஜர் புகழ் இந்தியா மட்டுமின்றிஉலகமெங்கும் பரவியது. அமெரிக்காவும்,ரஷியாவும் அவரைத் தங்கள் நாடுகளுக்கு அரசுவிருந்தாளியாக வர வேண்டும் என்று வேண்டுகோள்கள்விடுத்தன.
  45. காமராஜர் 1966-ம் ஆண்டு சோவியத் நாட்டுக்குச்சென்றார். கிழக்கு ஜெர்மனி, ஹங்கேரி,செக்கோஸ்லேவாக்கியா, யூகோஸ்லோவாக்கிய, பல்கேரியாபோன்ற ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்று வந்திருக்கிறார்.
  46. தனுஷ்கோடி நாடார், முத்துசாமி ஆசாரி ஆகிய இருவரும்காமராஜரின் நண்பர்களாக அவர் வாழ்நாள்முழுவதும் இருந்தார்கள்.
  47. 1953-ல் ஒரே கிளை நூலகம் மட்டும் இருந்தது. ஏழைமாணவர்கள் பொது அறிவு பெறுவதற்காக1961-ல் 454 கிளை நூலகங்கள் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பித்துவைத்தவர் பெருந்தலைவர் காமராஜர்.
  48. 1947-க்கு முன்பு காமராஜர் சென்னைக்கு வந்தால்ரிப்பன் மாளிகையின் எதிரில் ரெயில்வே பாதையை ஒட்டியுள்ள`ஓட்டல் எவரெஸ்ட்’டில் தான் தங்குவது வழக்கம். ஒருநாளைக்கு இரண்டு ரூபாய்தான் வாடகை.
  49. காமராஜர் தனது ஆடைகளைத் தானே துவைத்துக்கொள்வார். பாரதி பக்தர் காமராஜர். எப்போதும்தன்னோடு பாரதியார் கவிதைகளை வைத்திருப்பார்.
  50. KAMARAJAR HISTORY IN TAMIL: காமராஜர் ரஷியப் பயணத்தின் போது மாஸ்கோவரவேற்பில் காமராஜர், பாரதியின் ஆகாவென்றெழுந்து பார் யுகப் புரட்சி’ என்றபாடலைப்பாடி ரஷிய மக்களின் பாராட்டுக்களைப்பெற்றார்.
  51. பிரிட்டிஷ் இளவரசியும், அவரது கணவன் எடின்பரோகோமகனும் சென்னைக்கு வந்திருந்த போது காமராஜர்தமிழகத்தின் முதல்-அமைச்சர். அவர்களோடு ஆங்கிலத்தில் பேசிஆச்சரியப்படுத்தினார்.
  52. காமராஜர் ஆட்சியில் தமிழ்நாட்டில் சுமார் 33,000 ஏரி,குளங்களை சீர்படுத்த சுமார் ரூ.28 கோடி செலவிடப்பட்டது.
  53. காமராஜரால் அறிமுகப்படுத்தப்பட்ட இலவசக் கல்விமுதன் முதலாக திருச்செந்தூரில் ஆரம்பிக்கப்பட்டது.
  54. பயிற்சி டாக்டர்களுக்கு முதன் முதலாக உதவித்தொகை வழங்கியது காமராஜர் ஆட்சியில்தான்.
  55. காமராஜர் என்றுமே பண்டிகை நாட்களைகொண்டாடியதும் இல்லை. அந்நாட்களில் ஊருக்குப்போவதுமில்லை.
  56. காமராஜருக்கு சாதம், சாம்பார், ரசம், தயிர், ஒருபொறியல் அல்லது கீரை இவ்வளவுதான்சாப்பாடு. காரமில்லாததாக இருக்க வேண்டும். இரவில்ஒரு கப் பால், இரண்டு இட்லி, காஞ்சீபுரம் இட்லி என்றால்விரும்பி சாப்பிடுவார்
  57. காமராஜரின் முகபாவத்தில் இருந்து எளிதில் யாரும்எதையும் ஊகித்து விட முடியாது. எந்தவொருவேண்டுகோளுக்கும் `யோசிக்கலாம்’, `ஆகட்டும் பார்க்கலாம்’என்று சிறுவார்த்தைதான் அவரிடம் இருந்து வெளிப்படும்.
  58. காமராஜர் விருது நகரில் இருந்து சென்னைக்குகொண்டு வந்த ஒரே சொத்து ஒரு சிறிய இரும்புடிரங்குப் பெட்டிதான்.
  59. காமராஜரின் சகோதரி மகன் 62-ல் எம்.பி.பி.எஸ்.சீட் கேட்டுசிபாரிசு செய்யக் கூறினார். ஆனால் காமராஜர்`மார்க் இருந்தா சீட் கொடுக்கிறாங்க’ எனஅனுப்பிவிட்டார். பிறகு அவர் 2 வருடம் கழித்தே எம்.பி.பி.எஸ்.-ல் சேர்ந்தார்.
  60. KAMARAJAR HISTORY IN TAMIL: 1961-ம் வருடம் அக்டோபர் மாதம் 9-ந்தேதி காமராஜரின்உருவச் சிலையை நேரு திறந்து வைத்தார். இந்த விழாவில்காமராஜரும் கலந்து கொண்டார்.
  61. பெருந்தலைவர் காமராஜர் எவரையும் மனம் நோகும்படிபேச மாட்டார். அரசியல் காழ்ப்புணர்ச்சி எதுவும்கருதாமல் நட்பு முறையுடன் மகிழ்ச்சியோடு பேசுவார்.
  62. 1947-ம் ஆண்டு அரசியல் சட்டத்தை தயாரித்த அரசியல்நிர்ணய சபையில் தலைவர் காமராஜர் அவர்களும் ஒருவராகஇருந்தார் என்ற செய்தி பலருக்கும் தெரியாது.
  63. காமராஜர் தீவிரமாக அரசியல் பங்கு பெறக்காரணமாக இருந்தவர்கள் சேலம் டாக்டர் வரதராஜுலுநாயுடு, திரு.வி.கல்யாணசுந்தரனார், சத்தியமூர்த்தி ஆகியமூவரும்தான்.
  64. பெருந்தலைவர் காமராஜரின் கல்வி புரட்சியால்1954-ல் 18 லட்சம் சிறுவர்கள் மட்டுமே படித்துக்கொண்டிருந்த நிலை மாறி 1961-ல் 34 லட்சம்சிறுவர்கள் படிக்கும் நிலை ஏற்பட்டது.
  65. 1960-ம் ஆண்டு முதல் 11-வது வகுப்புவரை ஏழைப் பிள்ளைகள்அனைவருக்கும் இலவசக் கல்வி அளிக்க உத்தரவு இட்டு அதைசெயல்படுத்தி காட்டி, இந்தியாவை தமிழ்நாட்டு பக்கம்திரும்பி பார்க்க வைத்தார்.
  66. கஷ்டப்பட்ட மாணவர்களுக்கும், நன்றாக படிக்கும்மாணவ-மாணவிகளுக்கும் இலவச ஸ்காலர்ஷிப்பணமும் பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியில்தான்ஏற்படுத்தப்பட்டது.
  67. காமராஜர் ஆட்சியில்தான் 60 வயது முதியவர்களுக்கும்பென்ஷன் திட்டம் கொண்டு வரப்பட்டது.
  68. காமராஜர் தனது ஆட்சியில் ஒவ்வொருபெரிய கிராமத்திலும் பிரசவ விடுதிகள், ஆஸ்பத்திரிகள்திறந்து வைத்து சாதனை படைத்தார்.
  69. கேரளா மாநிலத்துடன் இணைக்கப்பட்டிருந்த நாகர்கோவில்,செங்கோட்டை, சென்னையில் ஒரு பகுதியையும்தமிழ்நாட்டுடன் இணைத்த பெருமை காமராஜரையே சேரும்.
  70. KAMARAJAR HISTORY IN TAMIL: காமராஜரின் மறைவு கேட்டுப் பிரிட்டிஷ் அரசாங்கமேஇரங்கல் செய்தி பிரதமர் இந்திரா காந்திக்கு அனுப்பிவைத்திருந்தது. அதில் காமராஜரின் தியாகமும்,தேசத்தொண்டும், ஏழை மக்களின் வாழ்க்கை தரத்தைஉயர்த்த அவர் பாடுபட்டு வந்ததும் நினைவு கூறப்பட்டிருந்தது.
  71. காமராஜர் ஆட்சி காலத்தில் மின்சாரம் வழங்குவதில்இந்தியாவிலேயே தமிழகமே முதலிடம் வகித்தது.விவசாயத்திற்கு மின்சாரத்தை பயன்படுத்துவதிலும் தமிழகமேமுதல் மாநிலமாக காமராஜர் ஆட்சியில் திகழ்ந்தது.
  72. இந்திய மொழிகளிலேயே முதன் முதலாக தமிழ்மொழியில் கலைக் களஞ்சியம் காமராஜர் ஆட்சிகாலத்தில்தான் உருவாக்கப்பட்டது.
  73. பெருந்தலைவர் காமராஜருக்கு “பாரத ரத்னா”எனும் பட்டத்தை இந்திய அரசு அளித்துப் பெருமைப்படுத்தியது.
  74. காமராஜர் கண்ணீர் விட்டது மூன்று சந்தர்ப்பங்களில்தான். 1), காந்திஜி சுட்டுக் கொல்லப்பட்ட சேதி கேட்டபோது, 2). கட்சி விஷயங்களில் தனது வலக்கரமாக விளங்கியசெயலாளர் ஜி.ராஜகோபாலின் மறைவின் போது, 3).நெருங்கிய நண்பர் தியாகி பாலன் மறைந்த போது. நெருங்கிய நண்பர் தியாகி பாலன் மறைந்த போது.
  75. காமராஜர் பொது கூட்டங்களில் பேசுவதற்காகஎதுவும் குறிப்புகள் எடுத்துக் கொள்வதில்லை. எதையும்நினைவில் வைத்து கொண்டு அவற்றை மிக எளிமையாகப்பேசுவார்.
  76. காமராஜர் வெளிநாடு சுற்றுப் பயணம்செய்த போது அனைவரது பார்வையும் காமராஜர்பக்கம்தான் இருந்தது. காரணம் நாலு முழ கதர் வேட்டி,முக்கால் கை கதர் சட்டை, தோளில் கதர் துண்டு, இதுதான்.
  77. ஆளியாறு திட்டத்தை முடியாதென்று பலர் கூறியபோதிலும் முடித்துக்காட்டினார் பெருந்தலைவர்காமராஜர்.
  78. காமராஜர் விரும்பி படித்த ஆங்கில புத்தகம் பேராசிரியர்ஹாரால்டு லாஸ்கி என்பவர் எழுதிய அரசியலுக்கு இலக்கணம் Grammar of politics என்ற நூலை படித்துஅனைவரையும் வியக்க வைத்தார்.
  79. காமராஜருக்கு பிடித்த தமிழ் நூல்கள் கம்பராமாயணமும், பாரதியாரின் பாடல்களும்.
  80. KAMARAJAR HISTORY IN TAMIL: முதல்வர் ஜெயலலிதா தமிழ்நாடு அரசு சார்பில் காமராஜர் நூற்றாண்டு விழா எடுத்து சிறப்பித்தார்.
  81. பெருந்தலைவர் காமராஜரின் முதலாம்ஆண்டுநினைவு நாளன்று 15.7.1976-ல் இந்திய அரசு 25காசு தபால் தலையைவெளியிட்டது.
  82. தமிழ்நாடு சட்டப்பேரவையில் பெருந்தலைவர்காமராஜரின் திருவுருவப்படம் அப்போதைய குடியரசுதலைவர் என்.சஞ்சீவிரெட்டியால் 1977-ம் ஆண்டுதிறந்து வைக்கப்பட்டது.
  83. டெல்லியில் காமராஜரின்திரு உருவச்சிலைஅமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் பிரசித்தி பெற்றமெரினாகடற்கரைச்சாலை காமராஜர் சாலை என்றுதமிழக அரசால் பெயர்மாற்றம் செய்யப்பட்டது.
  84. தமிழக அரசு வாங்கிய கப்பலுக்கு `தமிழ் காமராஜ்’என்றுபெயரிடப்பட்டுள்ளது. சென்னை கிண்டியில்காமராஜர் நினைவாலயம்,அமைக்கப்பட்டுள்ளது.
  85. KAMARAJAR HISTORY IN TAMIL: மதுரைப் பல்கலைக்கழகத்திற்கு மதுரை காமராஜர்பல்கலைக்கழகம்என்று பெயரிடப்பட்டு, விருதுநகரில்காமராஜர் பிறந்த இல்லத்தை அவரதுநினைவுச் சின்னமாகதமிழக அரசு மாற்றியது.
  86. காமராஜரிடம் உள்ள மற்றொரு சிறப்பு அவர்மற்றவர்களுடையபணிகளில் குறுக்கிடுவதில்லை என்பதுதான்.
  87. தன்னைப் பாராட்டி யாராவது அதிகம் பேசினால்,`கொஞ்சம்நிறுத்துன்னேன்’ என்று சட்டையைப் பிடித்துஇழுப்பார். அடுத்த கட்சியைமோசமாகப் பேசினால், `அதுக்காஇந்தக் கூட்டம்னேன்’ என்றும் தடுப்பார்!
  88. மாதம் 30 நாளும் கத்திரிக்காய் சாம்பார்வைத்தாலும் மனம்கோணாமல் சாப்பிடுவார்.என்றைக்காவது ஒரு முட்டை வைத்துச்சாப்பிட்டால் அது அவரைப்பொறுத்தவரை மாயா பஜார் விருந்து!
  89. சுற்றுப் பயணத்தின்போது தொண்டர்கள் அன்பளிப்புகொடுத்தால், `கஷ்டப்படுற தியாகிக்குக்கொடுங்க’ என்று வாங்க மறுப்பார்!
  90. KAMARAJAR HISTORY IN TAMIL: பந்தாக்களை வெறுத்தவர். முதல் தடவை சைரன் ஒலியுடன் அவருக்கான பாதுகாப்பு கார் புறப்பட்டபோது தடுத்தார். `நான் உயிரோடுதான இருக்கேன். அதுக்குள்ள ஏன் சங்கு ஊதுறீங்க’ என்றுகமென்ட் அடித்தார்!
  91. இரண்டு முறை பிரதமர் ஆக வாய்ப்பு வந்தபோதும்அதைநிராகரித்துலால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்திஆகியோரை பிரதமர் ஆக்கினார். `கிங் மேக்கர்’ என்ற பட்டத்தைமட்டும் தக்க வைத்துக்கொண்டார்!
  92. காமராஜரிடம் அனுபவம் இருந்தது. தீர்க்கமானஅரசியல் நோக்கு,தன்னலமற்ற தன்மை, மக்களுக்கு சேவைசெய்கிற ஆசை இருந்தது.
  93. ஆட்சியில் இல்லாதவர்களின் குறுக்கீட்டை அவர் ஒருபோதும்அனுமதித்தது கிடையாது. சிபாரிசுகளை அவர் தூக்கி எறிந்துவிடுவார்.
  94. மக்களுக்கு நன்மை செய்யக் கூடிய திட்டங்களைசட்டவிஷயங்களைக் காட்டிக் கிடப்பில் போடுவதையோ தவிர்க்கமுற்படுவதையோ அவரால் பொறுத்துக் கொள்ளமுடியாது.
  95. வெற்றியைப் போலவே தோல்வியையும் இயல்பாகஎடுத்துக்கொள்கிற மனப்பக்குவம்கொண்டவர் காமராஜர்.
  96. அவர் `ஆகட்டும் பார்க்கலாம்’ என்றாலே காரியம்முடிந்து விட்டது என்றுஅர்த்தம். தன்னால் முடியாவிட்டால்`முடியாது போ’ என்று முகத்துக்குநேராகவே சொல்லிஅனுப்பி விடுவார்.
  97. காமராஜர் எதிர்க்கட்சிகளின் கருத்துக்களுக்குஎப்போதும்மதிப்பளிப்பவர். அவர் எதையும் மேம்போக்காகப்பார்ப்பதில்லை. அவர்கள்சொல்வதைக் கவனமுடன்கேட்டு ஆவண செய்வார்.
  98. சராசரிக்குடி மகனும் அவரை எந்த நேரத்திலும் சந்திக்கமுடியும். யார்வேண்டுமானாலும் அவரிடம் நேரில்சென்று விண்ணப் பங்களைக்கொடுக்க முடிந்தது.
  99. ஆடம்பரம், புகழ்ச்சி, விளம்பரம் எல்லாம் அறவேபிடிக்காது அவருக்கு.
  100. KAMARAJAR HISTORY IN TAMIL: சொற்களை வீணாகச் செலவழிக்கமாட்டார். ரொம்பச் சுருக்கமாகத்தான் எதையும் சொல்வார். அனாவசிய பேச்சைப் போலவே அனாவசியசெலவையும் அவர் அனுமதிப்பதில்லை.
  101. எல்லாத் தகவல்களையும் விரல் நுனியில் வைத்திருந்தார்.ஆனால்’எல்லாம் எனக்கு தெரியும்’ என்கிற மனோபவம் ஒரு போதும் அவரிடம் இருந்ததில்லை.
  102. மாநிலத்தில் எங்கே எந்த ஆறு ஓடுகிறது. எந்த ஊரில் என்ன தொழில் நடக்கிறது. எந்த ஊரில் யார் முக்கியமானவர் என்பதெல்லாம் அவருக்குத் தெரியும்.
  103. அரசுக் கோப்புகளை மிகவும் கவனமாகப் படிப்பார் தேவைப்பட்டால் அவற்றில் திருத்தங்கள் செய்யத் தயங்குவதில்லை.
  104. சொல்லும் செயலும் ஒன்றாக இல்லாவிட்டால் அவருக்குக் கோபம்வந்து விடும். உண்மையில்லாதவர்களை பக்கத்தில் சேர்க்க மாட்டார்.
  105. KAMARAJAR HISTORY IN TAMIL: ஒரு தலைவனுக்குரிய எல்லாப் பண்புகளையும் அவர் முழுமையாகப் பெற்றிருந்தார். அதனால்தான்அவரால் கட்சியை ஆட்சியை மக்களைச்சிறப்பாக வழிநடத்த முடிந்தது.
  106. சிலசமயம் இரவு படுக்கை இரண்டு மணிகூட ஆகிவிடும்.முக்கியமான பிரச்சினை பற்றிய விவாதங்கள் அதிகாலை ஐந்துமணி வரையும் நீடிப்பதுண்டு. எத்தனை மணிக்குப் படுத்தாலும் காலை ஏழு மணிக்கு விழித்துக்கொண்டு விடுவார் அவர்.
  107. காமராஜ் மக்களுக்காகத் தீட்டிய ஒவ்வொரு திட்டமும் ஒரு மகத்தானகுறிக் கோளாகவே இருந்தது.
  108. காமராஜர் ஒன்பது ஆண்டுகள் ஆட்சி செய்தார். ஆனால் ஒருமுறைகூட அவர் ஆட்சி மீது ஊழல் புகார்கள் எழவிலை. கறைபடாத கரங்களுக்குச் சொந்தக்காரர்அவர்.
  109. பணியாளர்களை மதிக்கும் பண்பு இருந்தது அவரிடம். தம்முடைய கருணை மனம் காரணமாகவே ஏழைகள் மனதில் இன்றளவும் நிலைத்து நிற்கிறார் காமராஜர்.
  110. காமராஜர் எந்த வேலையையும் தள்ளிப் போட்டதில்லை. அன்றைய வேலைகளை அன்றே முடித்து விட்டு மறு நாளுக்கான வேலைத்திட்டத்தையும் ஒழுங்கு செய்து கொண்டுவிடுவார்.
  111. KAMARAJAR HISTORY IN TAMIL: காமராஜருக்கு தினமும் புத்தகம் படிக்கிற பழக்கம் உண்டு. ஏதாவது ஒரு புத்தகத்தைப் படித்த பின்பே உறங்கச்செல்வார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *