KARUNANIDHI HISTORY IN TAMIL | மு. கருணாநிதிKARUNANIDHI HISTORY IN TAMIL | மு. கருணாநிதி

KARUNANIDHI HISTORY IN TAMIL: முத்துவேல் கருணாநிதி திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் தலைவர். தமிழக முதல்வராக ஐந்துமுறை பதவிவகித்தவர். தமிழ் இலக்கியத்திற்கு இவர் ஆற்றிய பங்களிப்புகளுக்காக கலைஞர் என்றும் முத்தமிழ் அறிஞர் என்றும் பிரபலமாக அழைக்கப்பட்டார்.

இவர் தமிழ்த் திரையுலகில் கதை, உரையாடல் பணிகளில் ஈடுபாடு கொண்டவர். இந்திய அரசியலில் தொடர்ந்து பங்கு வகித்த மிக முக்கியமான மூத்த அரசியல் பிரமுகர்களுள் ஒருவர் ஆவார்.

இவர் 2018 ஆகத்து 7-ஆம் நாள் தம்முடைய 94-ஆம் அகவையில் சென்னையில் காலமானார். ‘தூக்குமேடை’ நாடகத்தின் போது எம். ஆர். ராதா, இவருக்குக் ‘கலைஞர்’ என்ற பட்டம் அளித்தார்.

KARUNANIDHI HISTORY IN TAMIL – இளமைப்பருவம்

KARUNANIDHI HISTORY IN TAMIL: நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 சூன் 3-இல் ஏழை இசை வேளாளர் குடும்பத்தில் முத்துவேலருக்கும் அஞ்சுகம் அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார் கருணாநிதி. இவருக்கு இரு சகோதரிகள் இருந்தனர். தொடக்கக்கல்வியை திருக்குவளையில் பெற்றார்.

பின்னர் திருவாரூரிலிருந்த மாவட்ட நாட்டாண்மைக்கழக உயர்நிலைப்பள்ளியில் பள்ளியிறுதி வகுப்பு வரை பயின்றார். அங்கு இவருக்குத் தமிழாசிரியராக இருந்தவர் சி. இலக்குவனார். பள்ளியிறுதித்தேர்வில் இவர் தேர்ச்சியடையவில்லை.

KARUNANIDHI HISTORY IN TAMIL | மு. கருணாநிதி
KARUNANIDHI HISTORY IN TAMIL | மு. கருணாநிதி

இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்

KARUNANIDHI HISTORY IN TAMIL: 1957-இல் நடைபெற்ற திமுக இந்தி எதிர்ப்பு மாநாட்டில் தமிழ் நாட்டில் நடுவண் அரசால் இந்தி, திணிக்கப்படுவதை வன்மையாக எதிர்ப்பதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அக்டோபர் 13, 1957 அன்றைய நாளை இந்தி எதிர்ப்பு நாளாக பெருந்திரளான மக்களுடன் அமைதியான முறையில் கடைப்பிடிப்பது என முடிவானது.

இப்போராட்டத்துக்குத் தலைமை தாங்கிய கருணாநிதி நடுவண் அரசின் இந்தித் திணிப்பை எதிர்த்து, “மொழிப்போராட்டம்.. எங்கள் பண்பாட்டைப் பாதுகாக்க, இஃது எமது மக்களின் தன்மானம் மற்றும் எங்களது கட்சியின் அரசியல் கொள்கை.

மேலும் இந்தி என்பது உணவு விடுதியிலிருந்து எடுத்துச் செல்லும் உணவு (எடுப்பு சாப்பாடு), ஆங்கிலம் என்பது ஒருவர் சொல்ல அதன்படி சமைக்கப்பட்ட உணவு, தமிழ் என்பது குடும்பத் தேவையறிந்து, விருப்பமறிந்து, ஊட்டமளிக்கும் தாயிடமிருந்து பெறப்பட்ட உணவு” என்று முழக்கமிட்டார்.

MGR HISTORY IN TAMIL | எம். ஜி. ஆர் பற்றிய கட்டுரை

அக்டோபர், 1963, இந்தி எதிர்ப்பு மாநாடு சென்னையில் (மதராஸ்) கூட்டப்பட்டது. இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் நடுவண் அரசின் புரிந்து கொள்ளாமையை உணர்த்தும் விதமாக இந்திய அரசியலமைப்பு தேசிய மொழிகள் சட்ட எரிப்பு போராட்டம் நடத்துவதென மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது.

நவம்பர் 16 அன்று அண்ணாதுரையும், நவம்பர் 19 அன்று கருணாநிதியும் கைது செய்யப்பட்டு 25 நவம்பர் அன்று உயர் நீதிமன்ற ஆணையால் விடுவிக்கப்பட்டனர்.

முதலமைச்சர்

  • 1969–1971 –கா. ந. அண்ணாதுரை மறைவுக்குப் பின் முதல் முறை ஆட்சி
  • 1971-1976—இரண்டாவது முறையாக
  • 1989–1991 –எம். ஜி. இராமச்சந்திரன், மறைவுக்குப் பின் மூன்றாம் முறை ஆட்சி
  • 1996-2001—நான்காம் முறை ஆட்சி
  • 2006-2011—ஐந்தாம் முறை ஆட்சி

என ஐந்துமுறை முதலமைச்சராக இருந்தார்.

KARUNANIDHI HISTORY IN TAMIL | மு. கருணாநிதி
KARUNANIDHI HISTORY IN TAMIL | மு. கருணாநிதி

கருணாநிதி திட்டங்கள்

மறுமண நிதி உதவித்திட்டம்

விதவைகளின் மறுமணத்தை ஊக்குவிக்கும் வகையில் கைம்பெண் மறுமண நிதி உதவித்திட்டம்

சமத்துவபுரங்கள்

அனைத்து மக்களும் ஒரே இடத்தில் சாதி பேதமின்றி வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் கருணாநிதியால் உருவாக்கப்பட்ட குறுநகரத் திட்டம்தான் பெரியார் நினைவுச் சமத்துவபுரம். ஆகஸ்ட் 17, 1998-ல் மதுரை மாவட்டம், மேலக்கோட்டையில் முதல் சமத்துவபுரம் தொடங்கப்பட்டது.

உழவர் சந்தை

KARUNANIDHI HISTORY IN TAMIL: இடைத்தரகர்களின் தலையீடு இல்லாமல் உழவர்கள் நேரடியாக விளை பொருட்களை விற்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட திட்டம் தான் உழவர் சந்தை. மதுரை அண்ணா நகரில் நவம்பர் 14, 199-ல் முதல் உழவர் சந்தை திறக்கப்பட்டது. தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் படிபடியாக 103 உழவர் சந்தைகள் திறக்கப்பட்டன.

இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம்

விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் ஆதரவற்ற ஏழை பெண்களுக்காக தி.மு.க. ஆட்சியில் சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம்

டைடல் பார்க்

KARUNANIDHI HISTORY IN TAMIL: நாட்டிலேயே முதன்முறையாக 1997-ல் தகவல் தொழில்நுட்பக் கொள்கை தமிழகத்தில் உருவாக்கப்பட்டது. சென்னையில் ஒரு தகவல் தொழில்நுட்பப் பூங்காவை நிறுவும் வகையில் கருணாநிதியால் கொண்டுவரப்பட்டது ‘டைடல் பார்க்’. 2000-ல் அப்போதைய பிரதமர் வாஜ்பாயால் திறந்துவைக்கப்பட்டது.

அண்ணா பெயரில் நூலகம்

அண்ணா நூற்றாண்டு விழாவில் அவரைப் போற்றும் வகையில் சென்னை கோட்டூர்புரத்தில் ரூ.170 கோடியில் கருணாநிதியால் நிறுவப்பட்டது அண்ணா நூற்றாண்டு நூலகம். ஆசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாகக் கருதப்படும் சிங்கப்பூர் நூலகத்தை முன்மாதிரியாக கொண்டு கட்டப்பட்டது.

மெட்ரோ ரயில்

KARUNANIDHI HISTORY IN TAMIL: சென்னையில் அதிகரித்துவரும் வாகன நெரிசலைச் சமாளிப்பதற்காக 2006-ல் கருணாநிதியால் தொடங்கப்பட்ட திட்டம் மெட்ரோ ரயில்.

ஏழை கர்ப்பிணி பெண்களுக்கு உதவித்தொகை வழங்கும் இத்திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை திமுக ஆட்சியின்போது கருணாநிதி அமல்படுத்தினார்.

KARUNANIDHI HISTORY IN TAMIL | மு. கருணாநிதி
KARUNANIDHI HISTORY IN TAMIL | மு. கருணாநிதி

காலவரிசை

1924 ஜூன் 3: நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருக்குவளை என்ற சிற்றூரில் கருணாநிதி பிறந்தார். தந்தை பெயர் முத்துவேலர். தாயார் அஞ்சுகம்.

1938: நீதிக்கட்சியின் தலைவர்களின் பிரச்சாரத்தால் ஈர்க்கப்பட்டு, மாணவ பருவத்திலேயே அரசியலில் ஈடுபாடு காட்ட ஆரம்பித்தார்.

1941: தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம் என்ற அமைப்பை தொடங்கினார் கருணாநிதி.

1944 செப்டம்பர்: பத்மாவதி என்பவருடன் திருமணம் நடந்தது. மு.க. முத்து இவர்களின் மகன்.

1948 செப்டம்பர்: முதல் மனைவி மறைந்த நிலையில், தயாளு அம்மாளுடன் இரண்டாவது திருமணம். மு.க. அழகிரி, மு.க. தமிழரசு, மு.க. ஸ்டாலின், செல்வி ஆகியோர் இவர்களது பிள்ளைகள்.

1949 செப்டம்பர் 18: திராவிடர் கழகத் தலைவர் ஈ.வே.ராமசாமியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டையடுத்து, சி.என். அண்ணாதுரை தலைமையில் திராவிட முன்னேற்ற கழகம் துவங்கப்படுகிறது.

1950: கருணாநிதி கதை-வசனம் எழுதிய, எம்.ஜி.ஆர். நடித்த “மந்திரிகுமாரி” திரைப்படம் வெளியானது.

1952: கருணாநிதிக்கு புகழ் தேடித் தந்த, சிவாஜி கணேசனை திரையுலகுக்கு அறிமுகப்படுத்திய `பராசக்தி` படம் வெளியானது.

1953 ஜூலை 14, 15: “டால்மியா” புரம் என்ற பெயரைக் கல்லக்குடி என பெயர் மாற்றம் செய்ய வேண்டுமெனக் கோரியும், குலக் கல்வி திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் திமுக போராட்டம் நடத்தியது. தண்டவாளத்தில் படுத்து கருணாநிதி போராட்டம் நடத்தினார்.

1957: குளித்தலை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு, முதன் முதலாக சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வானார் மு. கருணாநிதி. இதற்குப் பிறகு போட்டியிட்ட எல்லா சட்டமன்ற தேர்தல்களிலும் அவர் வெற்றி பெற்றார்.

1959: சென்னை மாநகராட்சிக்கு நடந்த தேர்தலில் 100-க்கு 45 இடங்களில் வெற்றி பெற்ற திமுக, மாநகராட்சியைக் கைப்பற்றியது.

1962: தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராக பதவியேற்றார் கருணாநிதி.

1963: திமுக நடத்திய அரசியல் சட்ட எரிப்பு போராட்டத்தில் பங்கேற்ற மு. கருணாநிதிக்கு 6 மாத கடுங்காவல் தண்டனை.

1965 பிப்ரவரி 16: இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட கருணாநிதி, தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார். பிறகு ஏப்ரல் 15-ஆம் தேதி விடுதலையானார்.

1967: சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. ஆட்சியைப் பிடித்தது. கருணாநிதி பொதுப் பணித்துறை அமைச்சராகப் பதவியேற்றார்.

1969 பிப்ரவரி 10: அண்ணாவின் மறைவுக்குப் பின் , தமிழக முதலமைச்சராக முதன்முறையாகப் பதவியேற்றார் கருணாநிதி.

1971 மார்ச் 15: சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று இரண்டாது முறையாக முதலமைச்சராகப் பதவியேற்றார் கருணாநிதி.

1972 அக்டோபர் 14: திமுக-வில் இருந்து எம்.ஜி. ராமச்சந்திரன் நீக்கப்பட்டார்.

1974 ஆகஸ்ட் 15: மு. கருணாநிதியின் கோரிக்கையின் பேரில், முதலமைச்சர்களுக்கு தேசியக் கொடியை ஏற்றும் உரிமை வழங்கப்பட்டது. புனித ஜார்ஜ் கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் கருணாநிதி.

1976 ஜனவரி 31: கருணாநிதி தலைமையிலான திமுக அரசு கலைக்கப்பட்டது.

1986: இலங்கை தமிழர் பிரச்சனைக்காக, ஈழத் தமிழர் ஆதரவு அமைப்பின் (டெசோ) மாநாட்டை நடத்துகிறார் கருணாநிதி.

1988: வி.பி. சிங்கை ஒருங்கிணைப்பாளராகக் கொண்டு அமைக்கப்பட்ட தேசிய முன்னணியில் இணைந்து, மத்திய கூட்டணி அரசில் திமுக இடம்பெற்றது.

1989: எம்.ஜி. ராமச்சந்திரன் மறைவுக்குப் பிறகு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று திமுக மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. 3-ஆவது முறையாக முதலமைச்சராகப் பதவியேற்றார் கருணாநிதி.

1991 ஜனவரி 30: திமுக ஆட்சி கலைக்கப்பட்டது.

1996: சட்டமன்ற தேர்தலில் வென்று, 4-ஆவது முறையாக தமிழக முதல்வராக கருணாநிதி பதவியேற்றார்.

2001 ஜூன் 30: 2001-இல் நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தோல்வியடைந்த நிலையில், நள்ளிரவில் கருணாநிதியைக் கைது செய்தது தமிழகக் காவல்துறை. நாடு முழுவதும் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

KARUNANIDHI HISTORY IN TAMIL | மு. கருணாநிதி
KARUNANIDHI HISTORY IN TAMIL | மு. கருணாநிதி

2006: சட்டமன்ற தேர்தலில், 5-ஆவது முறையாக முதல்வராகப் பதவியேற்றார் கருணாநிதி.

2008-2009: இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரின்போது, இந்திய அரசுக்கு போதுமான அழுத்தத்தை அளிக்கவில்லை என கருணாநிதி மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

2010 மார்ச்: ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில், புதிய தலைமைச் செயலகம் – சட்டமன்ற கட்டடத்தை, பிரதமர் மன்மோகன் சிங் திறந்து வைத்தார்.

2010 ஜூன்: உலக தமிழ் செம்மொழி மாநாட்டை கோயம்புத்தூரில் நடத்தினார் கருணாநிதி.

2011: சட்டமன்ற தேர்தலில் அதிமுகவிடம் ஆட்சியை பறிகொடுத்தது திமுக.

2013: தனக்குப் பிறகு, தனது அரசியல் வாரிசாக தனது மகனும் திமுக பொருளாளருமான மு.க. ஸ்டாலின் இருப்பார் என அறிவித்தார் கருணாநிதி.

2014-16: 2014ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தல், 2016ல் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் திமுக தோல்வியடைந்தது.

2016 அக்டோபர் 25: கருணாநிதியின் உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதாக திமுக உறுதிப்படுத்தியது.

2016 டிசம்பர் 1: உடல்நலக் குறைவால் காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். டிசம்பர் 7ஆம் தேதி மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.

டிசம்பர் 15: மூச்சுத் திணறல், நுரையீரல் தொற்றுக்காக காவேரி மருத்துவமனையில் மீண்டும் சேர்க்கப்பட்ட கருணாநிதிக்கு ட்ராக்யோஸ்டமி செய்யப்பட்டது.

2017 டிசம்பர் 16: ஓராண்டுக்கு பிறகு திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் சென்றார்.

2018 ஜூலை 27 நள்ளிரவுக்கு பிறகு உடல்நலக்குறைவு காரணமாக காவேரி மருத்துவமனைக்கு கருணாநிதி அழைத்துச் செல்லப்பட்டார்.

2018 ஆகஸ்ட் 7: காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மு.கருணாநிதி மாலை 6.10 மணியளவில் காலமானார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *