MGR HISTORY IN TAMIL | எம். ஜி. ஆர் பற்றிய கட்டுரைMGR HISTORY IN TAMIL | எம். ஜி. ஆர் பற்றிய கட்டுரை

MGR HISTORY IN TAMIL: எம். ஜி. ஆர் என்ற பெயரில் புகழ் பெற்ற, மருதூர் கோபாலன் இராமச்சந்திரன் தமிழ்த் திரைப்பட நடிகராகவும் 1977 முதல் இறக்கும் வரை தமிழ்நாட்டின் தொடர்ந்து மூன்று முறை முதலமைச்சராகவும் இருந்தவர்.

எம். ஜி. சக்கரபாணிக்குத் தம்பியான இவர், தொடக்க காலத்தில் நாடகங்களில் நடித்தார். காந்தியடிகளின் கருத்துகளால் ஈர்க்கப்பெற்று இந்திய தேசிய காங்கிரசில் இணைந்தார். 1936 இல் சதிலீலாவதி என்ற திரைப்படம் மூலம் தமிழக திரைத்துறையில் அறிமுகமாகி, கதாநாயகனாக மாறிய பிறகு, அறிஞர் அண்ணாவின் அரசியல் கருத்துகளில் ஈர்க்கப்பெற்று திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார்.

அண்ணாவின் மறைவுக்குப்பிறகு, இவரின் நண்பர் கருணாநிதியால் திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பின் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி, அதன் பாெதுச்செயலாளாராக சட்டமன்ற தேர்தலில் நின்று தொடர்ந்து மூன்று முறை தமிழகத்தில் வெற்றிபெற்று முதலமைச்சரானார். இவர் உயரிய விருதுகளில் ஒன்றான பாரத ரத்னா விருதினை பெற்றவர்.

MGR HISTORY IN TAMIL: எம்.ஜி.ஆர், என்ற பெயரில் புகழ் பெற்ற, மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன், இலங்கையின் கண்டிக்கு அருகேயுள்ள நாவலப்பிட்டியில் மருதூர் கோபாலமேனனுக்கும் சத்தியபாமாவுக்கும் மகனாகப் பிறந்தார்.

எம்.ஜி.ஆருக்கு இரண்டு மூத்த சகோதரிகளும், இரண்டு மூத்த சகோதரர்களும் உண்டு. முதலாவதாக பிறந்த சகோதரி பெயர் காமாட்சி. இரண்டாவதாகப் பிறந்த மூத்த சகோதரர் பெயர் பாலகிருஷ்ணன்.

மூன்றாவது சகோதரி சுமித்ரா, நான்காமவர் தன சக்ரபாணி. பாலகிருஷ்ணனும், சுமித்ராவும் இலங்கையில் இருக்கும்போதே இறந்துவிட்டார்கள். எம்ஜிஆரின் தந்தை மருதூர் கோபாலமேனன் வக்கீலாகக் கேரளாவில் பணிபுரிந்தார்.

வக்கீல் தொழிலில் அவ்வளவாகச் சோபிக்க முடியாத நிலையில், எம்.ஜி.ஆருக்கு இரண்டு வயதான போது மீண்டும் தாயகம் திரும்பினார்கள் அவருடைய பெற்றோர். ஆனால் தமிழகத்தில் நெருங்கிய உறவினர்கள் ஆதரிக்காத நிலையில் எம்ஜிஆரின் அப்பா கோபாலன் காலமானார்.

அதனால் தன் தாய்வழி உறவினர் சிலர் ஏற்கனவே குடியிருந்த கும்பகோணம் நகருக்கு எம்ஜிஆரின் தாயார் சத்யபாமா தன் குழந்தைகளோடு வந்தார். 

இப்படித்தான் தந்தையின் மறைவுக்குப் பின்னர் தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் எம்.ஜி.ஆர் குடியேறினார். குடும்ப சூழ்நிலைகளின் காரணமாகப் படிப்பைத் தொடர முடியாததால் இவர் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார்.

எம்ஜிஆருடன் அவரது அண்ணன் சக்ரபாணியும் சேர்ந்து நாடகத்தில் நடித்தார். நாடகத்துறையில் அறிமுகமாகி பல அனுபவங்களைப் பெற்ற பின்னரே திரைப்படத்துறைக்குச் சென்றார். திரைப்படத்துறையில் தனது அயரா உழைப்புக் காரணமாக முன்னேறி முதன்மை நடிகரானார். இவரது நடிப்பு பெரும் எண்ணிகையிலான மக்களைக் கவர்ந்தது. ORIJINAL BOYS COMPANY PHOTO

கும்பகோணத்தில் உறவினர்கள் வேலு நாயரும், மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் பின்பாட்டு பாடியவரான நாராயண நாயரும் சத்தியபாமா குடும்பத்துக்கு உதவியாக இருந்தார்கள்.

MGR HISTORY IN TAMIL: எம்.ஜி.ஆரும் சக்ரபாணியும் கும்பகோணத்திலுள்ள ஆனையடி பள்ளியில் சேர்க்கப்பட்டார்கள். அங்கு எம்.ஜி.ஆர். மூன்றாவது வகுப்பு வரை தான் படிக்க முடிந்தது. அதற்குமேல் படிக்க குடும்ப வறுமை இடம் கொடுக்கவில்லை. 

பள்ளியில் படித்தபோது எம்.ஜி.ஆர். பள்ளியில் நடைபெற்ற ‘லவகுசா’ என்ற நாடகத்தில் லவனாக நடித்தார். இது தான் எம்.ஜி.ஆர். நடித்த முதல் நாடகமும், முதல் வேடமும் ஆகும். அப்போது மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி நாடகக்குழு கும்பகோணத்தில் முகாமிட்டிருந்தது.

லவகுசா நாடகத்தில் எம்.ஜி.ஆரின் நடிப்பைப் பார்த்த நாராயண நாயர், மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியாரிடம் எம்.ஜி.ஆரின் அழகிய தோற்றத்தையும், சுறுசுறுப்பையும் கூறி கம்பெனியில் சேர்த்துக் கொள்ள சிபாரிசு செய்தார்.

தன்னையும் சேர்த்துக் கொண்டால் தான், தம்பியை நடிக்க அனுமதிக்க முடியும் என்று சக்ரபாணி சொல்ல, இருவரும் நாடகக் குழுவில் சேர்க்கப்பட்டனர். படிக்க வேண்டிய வயதில் என் பிள்ளைகளை நடிக்க வைத்துப் பிழைக்கும் நிலைக்கு ஆளாகிவிட்டேனே! என்று எம்.ஜி.ஆரின் தாயார் கண் கலங்கினாராம்.

ஆரம்பத்தில் எம்.ஜி.ஆருக்கு கும்பலில் ஒரு வேஷம். பின்னர் படிப்படியாக அவரது நடிப்புத்திறன் மற்றும் அர்ப்பணிப்புத்திறன் கண்டு கம்பெனி சிபாரிசின் பேரில் எம்.ஜி.ஆருக்கு நல்ல வேஷங்கள் கிடைக்கத் தொடங்கின. கம்பெனியில், எம்ஜிஆர், சக்ரபாணி சகோதரர்களின் நண்பர் பி.யூ.சின்னப்பா, சின்னப்பா ராஜபார்ட் ஆனதும் அவருக்கு ஸ்திரீ பார்ட்டாக எம்.ஜி.ஆர். நடிக்கத் தொடங்கினார். 

MGR HISTORY IN TAMIL: நாடகக்குழுவில் சேர்ந்து எம்.ஜி.ஆர் நடித்த முதல் நாடகம் மகாபாரதம். நடித்த வேடம் அபிமன்யு. பதினைந்து வயதுக்குள்ளாக எம்.ஜி.ஆர், அந்தக் கம்பெனி நடத்திய 30 நாடகங்களுக்கு மேல் நடித்துப் புகழ் பெற்றார். 

MGR HISTORY IN TAMIL | எம். ஜி. ஆர் பற்றிய கட்டுரை
MGR HISTORY IN TAMIL | எம். ஜி. ஆர் பற்றிய கட்டுரை

இதற்கிடையே கும்பகோணத்தில் இருந்த அவருடைய குடும்பம் சென்னைக்கு வர நேர்ந்தது. சென்னை வால்டாக்ஸ் ரோட்டில் எம்.ஜி.ஆர். தன் குடும்பத்துடன் வசித்து வந்தார். அங்கு இருக்கும் போதுதான் எம்.ஜி.ஆரின் மூத்த சகோதரி காமாட்சி தனது பதினாறாம் வயதில் நோய்வாய்ப்பட்டு இறந்து போனார். 

சகோதரியின் மறைவு எம்.ஜி.ஆரை மிகவும் பாதித்தது. அதுமட்டுமல்ல, ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியார் நாடகங்களை சரிவர நடத்த முடியாத நிலையில் தத்தளித்ததால் எம்.ஜி.ஆர் வருமானமின்றி அவதிப்பட்டார்.

எம்.ஜி.ஆருக்கு சினிமா வாய்ப்புகள் அதிகம் இல்லாமல் இருந்த காலகட்டத்தில் நாடக மன்றம் துவக்கினார். முதல் நாடகமாக ‘இடிந்த கோவில்’ திருச்சியில் துவங்கியது. அதில் ரத்னமாலா, கதாநாயகியாக நடித்தார். எம்.ஜி.ஆருக்கு ‘இடிந்த கோவில்’ என்ற பெயர் அபசகுனமாகப்பட்டது. அதனால் ‘இன்பக்கனவு’ என்று மாற்றினார். நாயகியாக ரத்னமாலாவுக்கு பதில் ஜி.சகுந்தலா நடித்தார்.

ஒவ்வொரு மாதமும் நாடக மன்றம் 1-ந் தேதி சென்னையை விட்டுக் கிளம்பினால் 20-ந் தேதி வரை வெளியூர்களில் நாடகம் நடக்கும். எப்போதும் இரவு 10-00 மணிக்கு மேல் நாடகம் துவங்கி நள்ளிரவு 2-00 மணிக்கு. சில சமயங்களில் அதிகாலை 4 -00 மணிக்கும் முடிவடையும். அதற்கு பின் உணவுண்டு. உடனே அடுத்த ஊருக்கு பயணம் துவங்கும்.

ஓவ்வொரு ஊரிலும்… நாடகம் முடிந்து எம்.ஜி.ஆர். சிறிது நேரம் மக்கள் முன் உரை நிகழ்த்துவார். அப்போது தி.மு.க.வின் கொள்கைகளைப் பற்றிச் சொல்வார். நாடகத்துடன் கட்சிப் பிரச்சாரமும் சேர்ந்தே நடந்து வந்தது. நாடகத்தில் எம்.ஜி.ஆருக்குப் மேக்கப் என்பதே கிடையாது. எம்.ஜி.ஆர் ஒரு சட்டையும், ஒரு பேண்டும் அணிந்து கொள்வார்.

NETAJI SUBHASH CHANDRA BOSS HISTORY IN TAMIL | நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பற்றிய கட்டுரை

MGR HISTORY IN TAMIL: கனவுக் கட்சியின் போது மட்டும் (சுமார் பத்து நிமிடங்கள் வரை இடம்பெறும்) விதம் விதமான வண்ண உடைகள் அணிவார். அந்தக் காட்சியின் போது அவர் ஒரு சில நொடிகளுக்குள் உடை மாற்றம் செய்து வருவது ரசிகர்களுக்கே பிரமிப்பூட்டும்.

எம்.ஜி.ஆர். எந்த ஊரில் நாடகம் நடத்துகிறாரோ அங்கு தனி பங்களாக்கள், வீடுகளை வாடகைக்குப் பிடித்து இருப்பார்கள். பெண்களுக்கும், ஆண்களுக்கும் தனித்தனியாக இடம் ஒதுக்கப்பட்டு இருக்கும். அனாவசியமாக எந்த ஒரு நடிகரும், ஒரு நடிகையைப் பார்த்து பேசி விட முடியாது. ராணுவ கட்டுப்பாடுகள் போலிருக்கும்.

அது மட்டுமல்லாமல், இரவு நேரங்களில் வெளியாட்களால் தொந்தரவு நேரக்கூடாது என்று. எம்.ஜி.ஆர். தூங்காமல் டார்ச் லைட்டுடன் தங்கும் இடத்தைச் சுற்றிக் கொண்டு இருப்பார். வீட்டிற்குள்ளும் சில சமயம் வெளிச்சம் வந்து விழும்.

எம்.ஜி.ஆர். நாடக மன்றம் நடத்திய நாடகங்கள் ‘இன்பக்கனவு, அட்வகேட் அமரன், சுமைதாங்கி இது பின்னர் நல்லவன் வாழ்வான் என்ற பெயரில் படமாகிறது, பகைவனின் காதலி’ ஆகியவை. புஷ்பலதா, ஜி.சகுந்தலா, தங்கவேலு ஆகியோர் எம்.ஜி.ஆர். நாடக மன்றத்தின் மூலமாகத் தான் சினிமாவுக்கு வந்தார்கள்.

MGR HISTORY IN TAMIL: சீர்காழியில் ‘இன்பக்கனவு’ நாடகம் நடத்திய போது, அதில் சண்டைக்காட்சியில் எம்.ஜி.ஆர் நடிக்கையில் குண்டுமணியை தூக்கிப்போடும் போது, அவர் வழுக்கி எம்.ஜி.ஆர். காலில் விழ, அதனால் எம்.ஜி.ஆரின் இடது கால் ஒடிந்து போனது. சென்னை வந்து சிகிச்சை பெற்ற எம்.ஜி.ஆர், ஆறே மாதங்களில் குணமாகி, சினிமாவில் மீண்டும் சண்டைக்காட்சிகளில் முன்னிலும் வேகமாக நடித்தார்.

MGR HISTORY IN TAMIL: இந்தியாவிலேயே தலைசிறந்த மாநிலமாக நம் தமிழகம் தொடர்ந்து திகழ்கிறது என்றால், அதற்கு இதுவரை இந்த மாநிலத்தை ஆட்சி புரிந்த தலைசிறந்த முதல்வர்களின் நிர்வாகத் திறமையே காரணம்.
அதிலும் குறிப்பாக, எம்.ஜி.ஆரின் பொற்கால ஆட்சி சாதனைகளும் முக்கிய காரணம் என்பதை, அவரது நினைவு நாளில் பட்டியலிட்டுக் காட்ட விரும்புகிறேன். எம்.ஜி.ஆர்., காலம் வரையிலான முதல்வர்களை மட்டுமே இங்கே ஒப்பீடு செய்திருக்கிறேன்.
MGR HISTORY IN TAMIL: தான் ஆட்சிக்கு வந்தால், மக்களுக்கு என்னவெல்லாம் நன்மைகள் கிடைக்கும் என்று திரைப்படங்களில் சொன்னதை எல்லாம், நிஜமாகவே நிறைவேற்றிக் காட்டினார். புரட்சித் தலைவரின் பொற்கால ஆட்சியில், தமிழகத்தை தலைநிமிரச் செய்த ஒரு சில திட்டங்களை மட்டும் இங்கே எடுத்துக் காட்டுகிறேன்.
தமிழக மக்களின் ஏழ்மையை ஒழிப்பதற்கும், மக்களுடைய அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் அதிக முன்னுரிமை கொடுத்தார். அதுவரை தனியார் கடைகளில் பகுதிநேரமாக இயங்கி வந்த ரேஷன் கடைகளில் ஏராளமான தில்லுமுல்லுகளும், முறைகேடுகளும் நடந்து வந்தன. எனவே, நேரடியாக அரசு சார்பில் 22 ஆயிரம் முழுநேர ரேஷன் கடைகளைத் திறந்தார்.
தமிழகத்தில் ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு இல்லாமல் ஒரே மாதிரியான ரேஷன் அட்டை வழங்கப்பட்டு, அனைவருக்கும் நியாய விலைக் கடைகளில் அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய், பாமாயில், கோதுமை, ரவை, மைதா போன்றவை மானிய விலையில் வழங்கப்பட்டன. எனவே, ஒவ்வொரு அட்டைதாரரும் அன்றைய பண மதிப்பில் மார்க்கெட் விலையை விட, 200 முதல் 300 ரூபாய் வரை குறைவாக பொருட்கள் வாங்கி பயனடைய முடிந்தது.

MGR HISTORY IN TAMIL: கிராமப்புறங்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்கும் தன்னிறைவுத் திட்டத்தைக் கொண்டு வந்து சாதனை படைத்தார் புரட்சித் தலைவர். சாலை, குடிநீர் வசதி, சிறு பாலங்கள், பள்ளி கட்டடங்கள், ஊரக மருந்தகங்கள், தாய் – சேய் நல விடுதிகள், மயானத்துக்குப் பாதை போன்ற அடிப்படைத் தேவைகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டதால், கிராமப்புற பொருளாதாரம் கிடுகிடுவென வளர்ச்சி அடைந்தது.

அனைத்து மக்களுக்கும் நல்ல குடிநீர் கிடைக்கச் செய்வதே நல்ல ஆட்சிக்கு அழகு. எனவே, தெலுங்கு – கங்கை திட்டத்தை உருவாக்கி, ஆந்திர மாநிலத்தில் உள்ள கிருஷ்ணா நதியிலிருந்து, தமிழக எல்லை வரை நீண்ட கால்வாய் வெட்டி, தமிழகத்திற்கு தண்ணீர் கொண்டு வந்தார். என்.டி.ராமா ராவுக்கும், எம்.ஜி.ஆருக்கும் இருந்த நட்பு காரணமாகவே இது சாத்தியமானது.

அதுபோல, கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், செயற்கை மழை திட்டம், சிறுவாணி குடிநீர் திட்டம், சாயர்புரம் குடிநீர் திட்டம் போன்றவற்றை கொண்டு வந்து நகரங்களிலும், கிராமப்புறங்களிலும் குடிநீர் வினியோகத்தை சீர்படுத்தினார்.
கல்வி தான் ஏழ்மையில் இருந்து மக்களை விடுவிக்கும் என்பதை முழுமையாக நம்பினார் எம்.ஜி.ஆர்., எனவே, மாணவர்கள் உடல் நலனுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் எம்.ஜி.ஆர்., கொண்டு வந்த சத்துணவுத் திட்டம், எத்தனை பெரிய புரட்சியைக் கொண்டு வந்தது என்பதை இந்த உலகமே அறியும்.

சிறுவர்கள் முதல் முதியோர் வரையிலும் லட்சக்கணக்கானோர் இந்த திட்டத்தின் மூலம் பயன் அடைந்தனர். விதவைகள், ஏழைப் பெண்களுக்கு சத்துணவுக் கூடத்தில் வேலை கிடைத்தது. அத்துடன், மாணவர்களுக்கு இலவச சீருடை, இலவச பாடநுால், இலவச காலணி, இலவச பற்பொடி போன்றவையும் வழங்கப்பட்டன.

MGR HISTORY IN TAMIL: எனவே, மாணவர்களின் கல்வித் தரம் உயர்ந்தது. பணக்காரர்கள் மட்டுமே படித்து வந்த பொறியியல் படிப்பை, கீழ்த்தட்டு மக்கள் வரையிலும் கொண்டு போய் சேர்த்தவர் எம்.ஜி.ஆர்., அன்றைய காலகட்டத்தில் பொறியியல் கல்லுாரிகள் துவங்க அரசிடம் போதிய நிதி வசதி இல்லாததால், எதிர்கால வளர்ச்சியை கருதி, தனியாருக்கும் அனுமதி தந்தார்.
அதனாலே தமிழகம் முழுக்க ஏராளமான பொறியியல் கல்லுாரிகள் துவக்கப்பட்டன. இன்று கம்ப்யூட்டர் உலகத்தில் தமிழர்கள் கொடிகட்டிப் பறக்கின்றனர் என்றால், அதற்கு காரணம் எம்.ஜி.ஆர்., தான்.

ஒவ்வொரு வீட்டிலும் ஒரு இன்ஜினியர் உருவான காரணத்தால், தமிழக மக்களின் பொருளாதாரம் கிடுகிடுவென வளர்ச்சி அடைந்துள்ளது. தகுதியானவர்களுக்கு மருத்துவப் படிப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக நுழைவுத் தேர்வை அறிமுகம் செய்தார்.

படித்து முடித்து வேலை இல்லாத பட்டப்படிப்பு முடித்தவர்கள், ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள், கைத்தொழில் ஆசிரியர்கள், தொழிற்பயிற்சி ஆசிரியர்கள், பொறியியல் பட்டதாரிகளுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கி, இளைஞர்களை ஊக்குவித்தார்.
தமிழ் சீர்திருத்த எழுத்தை அறிமுகம் செய்த பெருமையும் எம்.ஜி.ஆருக்குத் தான் உண்டு. அதேபோல், எம்.ஜி.ஆர்., ஆட்சிக் காலத்தில் மட்டும் ஏழு பல்கலைக் கழகங்கள் உருவாக்கப்பட்டன. இந்தியாவில் வேறு எந்த முதல்வரும் இது போன்ற சாதனை படைத்தது இல்லை.
அதேபோன்று கல்வி, வேலைவாய்ப்பில் அதுவரை எந்த அரசும் கொடுக்காத அளவுக்கு, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 50 சதவீதம் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு 18 சதவீதம் என, 68 சதவீத இட ஒதுக்கீட்டை தமிழகத்தில் முதன்முதலில் அறிமுகப்படுத்தியதும் எம்.ஜி.ஆர்., தான்.

MGR HISTORY IN TAMIL: ஆட்சி சிறப்பாக நடைபெற வேண்டும் என்றால், கீழ்மட்ட நிர்வாகம் செம்மையாக நடைபெற வேண்டும் என்பதை உணர்ந்தார் எம்.ஜி.ஆர்., எனவே, பரம்பரை பரம்பரையாக அதுவரை இருந்து வந்த மணியக்காரர் என்ற கிராம அதிகாரி பதவியை அவசர சட்டம் மூலம் ரத்து செய்து, வி.ஏ.ஓ., எனப்படும் கிராம நிர்வாக அலுவலர்களை நியமனம் செய்தார்.

அதுவரை ஒரு ஜாதியினர் மட்டுமே வகித்து வந்த பதவியை, அனைத்து ஜாதியினரும் பெற முடிந்தது. மேலும், அரசு திட்டங்கள் நேரடியாக பொதுமக்களை சென்றடைய இந்த பதவி மிகவும் உபயோகமாக இருந்தது.எம்.ஜி.ஆர்., சட்டங்களில் புரட்சிகரமானது, 1979ல் அவர் கொண்டு வந்த மது விலக்கு சட்டம் தான். மது விலக்கை கடுமையாக கடைப்பிடிக்க நினைத்த எம்.ஜி.ஆர்., மிகுந்த துணிச்சலுடன் புதுமையான அவசர சட்டங்கள் பிறப்பித்தார்.

அதன்படி, முதல் முறை மது விலக்கு சட்டத்தில் பிடிபட்டால், மூன்றாண்டுகள் சிறைத் தண்டனை; இரண்டாவது முறை பிடிபட்டால், ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை; மூன்றாவது முறை பிடிபட்டால் நாடு கடத்தப்படுவர் என்று அவசர சட்டம் கொண்டு வந்தார்.

இந்த புரட்சிகரமான திட்டத்துக்கு பெண்களிடம் அமோக ஆதரவு கிடைத்தது. ஆனால், அனைத்து எதிர்க்கட்சிகளும் இந்த திட்டத்தை ஒருசேர கடுமையாக எதிர்த்தன. அப்போது நடந்த பார்லிமென்ட் தேர்தலில், எம்.ஜி.ஆருக்கு எதிராக மக்கள் ஓட்டளித்தனர்.
MGR HISTORY IN TAMIL: ‘மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு’ என்ற எண்ணத்துடன் உடனே இந்த அதிரடி சட்டங்களை ரத்து செய்தார். அன்று இந்த திட்டத்துக்கு அனைத்துக் கட்சியினரும் ஆதரவு கொடுத்திருந்தால், இன்று ஒரு குடிகார சமூகம் உருவாகியிருக்காது. அதன்பின், தன் ஆட்சிக் காலத்திலேயே மீண்டும் மது விலக்கு சட்டத்தைக் கொண்டு வந்து காட்டினார்.

காவல் துறைக்கும், மற்ற அரசு அதிகாரிகள் செயல்படுவதற்கும் முழு சுதந்திரம் கொடுத்தார் எம்.ஜி.ஆர்., எனவே, அவரது ஆட்சிக் காலத்தில் அரசியல் தலையீடுகள் இல்லாமல் நல்லாட்சி நடந்தது.

திரைப்படங்கள் மூலம் தனிமனித ஒழுக்கம் குறித்தும், நல்லாட்சி குறித்தும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய புரட்சித் தலைவர், முதல்வர் பதவிக்கு வந்த பின்னரும் அப்படியே வாழ்ந்து காட்டி, வழி காட்டினார்.அவரது திரைப்படங்கள் இன்றும் மக்களுக்கான வாழ்க்கைப் பாடமாகத் திகழ்கின்றன என்றால் மிகையில்லை.

MGR HISTORY IN TAMIL: தான் உழைத்து சம்பாதித்த பணத்தை வாரி வாரி வழங்கும் கலியுக வள்ளலாக எம்.ஜி.ஆர்., திகழ்ந்தார். வறுமையின் பிடியில் நாடகங்களில் நடித்த காலம் துவங்கி, முதல்வராக மரணம் அடையும் வரையிலும் கொடுத்துக் கொடுத்து சிவந்த கரத்துக்கு சொந்தக்காரராக இருந்தார்.

அதேநேரம் முதல்வராக பதவிக்கு வந்த பின், எம்.ஜி.ஆர்., ஒரு சொத்துகூட வாங்கியதில்லை; சேர்த்து வைக்கவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.மேலும், எம்.ஜி.ஆர்., முதல்வராக இருந்த காலத்தில் அரசு சலுகைகளான சட்டசபை சம்பளப் படி, பெட்ரோல் செலவு, வீட்டு வாடகைப்படி, இதர மருத்துவச் செலவுகள் என எதையுமே அவர் பெற்றுக் கொண்டதில்லை.
அரசு வழங்கிய மேஜை, நாற்காலிகள் கூட தன் வீட்டுக்கு வரக்கூடாது என்பதில் பிடிவாதமாக இருந்தார். தான் உழைத்து சம்பாதித்த சொத்தையும் தன் இறப்புக்குப் பின், காது கேளாதோர் பள்ளிக்கு உயில் எழுதி வைத்தார்.
MGR HISTORY IN TAMIL | எம். ஜி. ஆர் பற்றிய கட்டுரை
MGR HISTORY IN TAMIL | எம். ஜி. ஆர் பற்றிய கட்டுரை

நடிகர் எம்.ஜி.ஆர் பற்றி பலருக்கும் தெரியாத விஷயங்கள்

MGR HISTORY IN TAMIL: எம்.ஜி.ஆர் நடிகராக மாறியதே ஒரு விபத்து தான். ஆம், பள்ளியில் நன்றாக படித்த வந்த எம்.ஜி.ஆர் வறுமையின் காரணமாக பள்ளியில் இருந்து வெளியேறியுள்ளார். அதன்பின், தனது அண்ணனும், தம்பியும் நன்றாக படிக்க வேண்டும் என்பதற்காக தான் நாடக சபாவில் இணைந்துள்ளார். முதலில் நாடக சபாவில் வெவேறு வேலைகள் செய்துகொண்டிருந்த எம்.ஜி.ஆருக்கு சில நாட்களுக்கு பின்பு வேஷம் கட்டுவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

நடிகர் எம்.ஜி.ஆர் தன்னுடைய எந்த ஒரு படத்தில் மது அருந்துவது போன்ற காட்சியிலும், சிகரெட் பிடிப்பது போன்ற காட்சியிலும் நடித்ததே இல்லை.

பல குழந்தைகள் பள்ளி செல்ல முக்கியமான காரணமாக இருந்தவரும் எம்.ஜி.ஆர் தானாம். ஏனென்றால், அவருடைய ஆட்சி காலட்டத்தில் மத்திய உணவு திட்டத்தை கொண்டு வந்த அணைத்து அரசாங்க பள்ளியிலும் இலவச உணவை வழங்கினார். இதன்முலம் பல குழந்தைகள் உணவுக்காக பள்ளியில் படிக்க சென்றார்கள்.

தனது கடைசி காலகட்டம் வரை உடற் பயிற்சிக்கு முக்கிய துவம் கொடுத்தவர் எம்.ஜி.ஆர். படப்பிடிப்பு எத்தனை மணிக்கு முடிந்தாலும், கிடைக்கும் நேரத்தில் உறங்கிவிட்டு, காலை 5 மணிக்கு எழுந்துவிடுவாராம். 5 மணிக்கு மேல் கண்டிப்பாக உடற் பயிற்சி செய்வதை தனது வாழ்க்கை முறையாக வெய்துகொண்டுள்ளார் எம்.ஜி.ஆர்.

MGR HISTORY IN TAMIL: நடிகர் எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்த உணவு மீன் தானாம். அதே போல் அவருக்கு மிகவும் பிடிக்காத விஷயம் விமான பயணம் என்று கூறப்படுகிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *