NETAJI SUBHASH CHANDRA BOSS HISTORY IN TAMIL | நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பற்றிய கட்டுரைNETAJI SUBHASH CHANDRA BOSS HISTORY IN TAMIL | நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பற்றிய கட்டுரை

NETAJI SUBHASH CHANDRA BOSS HISTORY IN TAMIL: நேதாஜி (தலைவர்) என்று இந்திய மக்களால் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவராவார்.

இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற போது, வெளிநாடுகளில் போர்க் கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டி, இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி, அப்போது இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயருக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியவர்.

இவர் 1945 ஆகத்து 18 அன்று தைவான் நாட்டில் ஒரு விமான விபத்தில் இறந்து விட்டதாகவும், அல்லது உருசியாவிற்குச் சென்று 1970களில் இறந்துவிட்டதாகவும், அல்லது ஒரு துறவியின் வடிவில் வட இந்தியாவில் மறைமுகமாக வாழ்ந்து 1985 இல் இறந்து விட்டதாகவும் பல கருத்துக்கள் உள்ளன.

1945 ஆகத்து 14 முதல் செப்டம்பர் 20 வரை எந்த விமான விபத்தும் தைவானில் ஏற்படவில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்திருப்பது, போஸ் அவ்வாண்டு இறக்கவில்லை என்ற வாதத்திற்கு வலுவூட்டியது. இந்திய அரசால் நியமிக்கப்பட்டு இதைப்பற்றி விசாரித்த முகர்ஜி கமிஷன், நேதாஜி அவ்விமான விபத்தில் இறக்கவில்லை எனத் தெரிவித்து விட்டது.

NETAJI SUBHASH CHANDRA BOSS HISTORY IN TAMIL – பிறப்பு மற்றும் கல்வி

NETAJI SUBHASH CHANDRA BOSS HISTORY IN TAMIL: சுபாஷ் சந்திரபோஸ் 1897ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் நாள் ஒரிசாவின் கட்டாக்கில் ஜானகிநாத் போஸ் மற்றும் பிரபாவதி தேவிக்கு மகனாக பிறந்தார்.

குழந்தை பருவத்திலிருந்தே ஒரு சிறந்த மாணவராக போஸ் திகழ்ந்தார். 1911ஆம் ஆண்டு பிரசிடென்சி கல்லூரியில் இணைந்தார். பேராசிரியர் ஓட்டன் என்பவரை இந்திய விரோத கருத்துகளுக்காக தாக்கியதாக கல்லூரியிலிருந்து நீக்கப்பட்டார்.

INDIRA GANDHI HISTORY IN TAMIL | இந்திரா காந்தி பற்றிய கட்டுரை

பின் போஸ், கல்கத்தா பல்கலைகழகத்தில் ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் பட்டம் பெற்றார். 1918-ல் பி.ஏ தத்துவவியலில் பட்டம் பெற்றார். அடுத்த ஆண்டு கேம்பிரிட்ஜ், ஃபிட்ஸ் வில்லியம் கல்லூரியில் இந்திய சிவில் சர்வீஸ் தேர்வில் வென்றார்.

தனது தந்தையின் விருப்பத்திற்கு இணங்க, சிவில் சர்வீஸ் துறையில் வேலைக்கு இணைந்தார். ஆனால், அது நீண்ட காலம் நிலைக்கவில்லை. ஏனெனில், ஆங்கிலேயருக்கு அடிமையாக வேலை செய்வதாக அவர் எண்ணி பணியை ராஜினாமா செய்தார்.

சுதந்திர இந்திய இராணுவம்

NETAJI SUBHASH CHANDRA BOSS HISTORY IN TAMIL: 1941 இல் சுதந்திர இந்திய மையம் என்ற அமைப்பைத் தொடங்கி, ஆசாத்ஹிந்த் என்ற வானொலிச் சேவையையும் உருவாக்கி, விடுதலைத் தாகத்தை, அங்கிருந்த இந்திய மக்களிடம் விதைத்தார். நாட்டுக்கு எனத் தனிக் கொடியை உருவாக்கி ஜன கண மன பாடலை தேசிய கீதமாக அறிவித்தார்.

செருமனி, இத்தாலியின் உதவி கிடைக்காது எனத் தெரிந்தபின், சப்பான் செல்ல முடிவு செய்து, போர்க்காலத்தில், நீர்மூழ்கிக் கப்பல் மூலம் சப்பான் சென்று, இராணுவ ஜெனரல் டோஜோவை சந்தித்து உதவி கேட்டார். உதவிகள் தயாரானது.

பிரித்தானிய அரசுக்கு எதிராக ராஷ் பிஹாரி போஸால் உருவாக்கப்பட்டு, செயல்படாமல் இருந்த இந்திய தேசிய ராணுவத்தை, மீள் உருவாக்கம் செய்து, அதன் தலைவரானார் சுபாஷ். விடுதலைக்காகப் போராடி, நாட்டிற்காக உயிர் தர இளைஞர்கள் வேண்டுமென ஆட்கள் திரட்டி, பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்தியாவில் அனைவரும், காந்தியின் அகிம்சை வழி போராட்டத்தில் விரும்பி சென்றமையால், இராணுவத்திற்கு சிலரே செல்ல நேர்ந்தது. தமிழகத்தில், முத்துராமலிங்க தேவரால் சுமார் 600 இற்கும் மேற்பட்ட தமிழர்கள் ராணுவத்தில் இணைந்தனர்.

1943 அக்டோபர் 21 இல், சிங்கப்பூரில் நடந்த மாநாட்டில், போஸ், சுதந்திர அரசு பிரகடனத்தை வெளியிட்டார். திசம்பர் 29 ஆம் தேதி அரசின் தலைவராகத் தேசியக் கொடியை ஏற்றினார். அவற்றை சப்பான், இத்தாலி, செருமனி, சீனா உட்பட 9 நாடுகள் ஆதரித்தன.

பர்மாவில் இருந்தபடி, தேசியப் படையை இந்தியாவை நோக்கி நகர்த்தினார். ஆனால் பிரித்தானியப் படைகள் முன் தாக்கு பிடிக்க முடியாமல், இப்படை தவித்தது. மனம் தளராமல், இந்தியாவின் எல்லைக்கோடு வரை வந்தவர்களை, கொத்துக் கொத்தாக கொன்று குவித்தது பிரித்தானியப் படை.

NETAJI SUBHASH CHANDRA BOSS HISTORY IN TAMIL: இந்திய தேசிய படை தோல்வியைத் தழுவியது. அது மட்டுமல்ல; சப்பான், இரண்டாம் உலக போரில் சரணடைந்தது. எனவே போரை முன்னெடுத்து செல்ல முடியாத நிலைக்கு சுபாஷ் சந்திர போஸ் ஆளானார்.

NETAJI SUBHASH CHANDRA BOSS HISTORY IN TAMIL | நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பற்றிய கட்டுரை
NETAJI SUBHASH CHANDRA BOSS HISTORY IN TAMIL | நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பற்றிய கட்டுரை

மகாத்மா காந்தி பற்றிய இருவரின் மாறுபட்ட கருத்துகள்

NETAJI SUBHASH CHANDRA BOSS HISTORY IN TAMIL: மகாத்மா காந்தியுடனான நேருவின் முதல் சந்திப்பு 1916ஆம் ஆண்டு லக்னோ காங்கிரஸ் மாநாட்டில் நடந்தது. காந்தியுடனான முதல் சந்திப்பில் இளம் ஜவஹர்லாலுக்கு அவர் மீது ஈர்ப்பு ஏதும் ஏற்படவில்லை. ஆனால் படிப்படியாக அவர் காந்தியின்பால் ஈர்க்கப்பட்டு அவரை மிகவும் மதிக்கத் தொடங்கினார்.

மாறாக காந்தி, சுபாஷ் சந்திரபோஸ் மீது எந்தவொரு சிறப்பு விளைவையும் ஏற்படுத்தவில்லை.

பிரபல வரலாற்றாசிரியர் ருத்ராங்ஷு முகர்ஜி தனது ‘நேரு அண்ட் போஸ் பேரலல் லைவ்ஸ்’ என்ற புத்தகத்தில், “1927 வாக்கில், இருவரும் அரசியலில் காலடி எடுத்து வைத்தனர். இருவரும் பிரிட்டிஷ் இந்திய சிறைகளில் முதல் தண்டனையை அனுபவித்தனர். இருவரும் காந்தியின் தலைமையை ஏற்றுக் கொண்டனர். ஆனால் போஸ் காந்தியின் செல்வாக்கின்கீழ் முழுமையாக வரவில்லை,” என்று எழுதியுள்ளார்.

“மோதிலால் நேரு, காந்தி மற்றும் பிற காங்கிரஸ் தலைவர்களுடன் காங்கிரஸின் சிறப்பு அமர்வில் கலந்துகொள்ள நேரு 1921 செப்டம்பரில் கல்கத்தா வந்தார்.

அப்போது போஸ் சித்தரஞ்சன் தாஸுடன் பணியாற்றிக் கொண்டிருந்தார். பெரும்பாலான காங்கிரஸ் தலைவர்கள் சித்தரஞ்சன் தாஸ் வீட்டில்தான் தங்கினார்கள். அந்த நேரத்தில் ஜவஹர்லால் நேருவும் சுபாஷ் சந்திர போஸும் சந்திக்காமல் இருப்பதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு,” என்று குறிப்பிட்டுள்ளார்.

காந்தியின் ஆலோசனையின் பேரில் நேரு காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆனார்

NETAJI SUBHASH CHANDRA BOSS HISTORY IN TAMIL: ஜவஹர்லால் நேரு தனது மனைவி கமலா நேருவை ஐரோப்பாவில் கவனித்துக் கொண்டிருந்தபோது, 1936ஆம் ஆண்டு ஏப்ரலில் லக்னோவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டின் நேரு கட்சித்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவரைத் தலைவராக்கும் யோசனை காந்தியுடையது. நேரு ஐரோப்பா செல்வதற்கு முன் காந்தி நேருவுக்கு ஒரு கடிதம் எழுதினார். காங்கிரஸின் தலைமைப் பொறுப்பை அடுத்த ஆண்டு நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அதில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

“அடுத்த ஆண்டு காங்கிரஸ் தலைவராக உங்களை ஆக்குவதற்கு அனுமதிக்க வேண்டும். உங்கள் சம்மதம் பல சிரமங்களைத் தீர்க்கும்” என்று சில நாட்களுக்குப் பிறகு அவரிடம் நேரடியாகக் கோரிக்கை விடுத்தார்.

ஆரம்பத்தில் நேரு சம்மதம் தெரிவிக்க சிறிது தயக்கம் காட்டினார். ஆனால் பின்னர் அவர் காந்தியின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டார். ஆனால் காந்தியின் முடிவுக்கு காங்கிரஸின் சில வட்டாரங்களில் இருந்து எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன.

நேருவுக்கு எதிராக ராஜகோபாலாச்சாரியை போட்டியிட அனுமதிக்குமாறு காந்தியிடம் முறையிடப்பட்டது. ஆனால் காந்தி அதற்கு செவிமடுக்கவில்லை. 592இல் 541 வாக்குகளை நேரு பெற்றார்.

வெற்றி பெற்றாலும் நேரு மீதான தாக்குதல்கள் குறையவில்லை. காவ்ஸஜி ஜஹாங்கீர் அவரை ஒரு முழுமையான கம்யூனிஸ்ட் என்று அழைத்தார். நேரு மாஸ்கோவை நோக்கித் தலை வணங்க நேரம் எடுக்கமாட்டார் என்று ஹோமி மோதி எச்சரித்தார்.

திருமணம்

NETAJI SUBHASH CHANDRA BOSS HISTORY IN TAMIL: 1933 பிப்ரவரி 13 இல், உடல் நிலை சரியில்லை என வியன்னா சென்றவர், அங்கிருந்து ஐரோப்பிய நாடுகளான செக்கோசிலோவாக்கியா, போலந்து, அங்கேரி, இத்தாலி, செருமனி எனப் பயணம் மேற்கொண்டு அந்த நாடுகளில் இருந்த இந்திய இளைஞர்களை சந்தித்து, நாட்டின் விடுதலையைப் பற்றி பேசி ஒத்துழைப்பு கேட்டார்.

ஐரோப்பாவின் அரசியல்வாதிகளையும், ஆட்சியாளர்களையும் சந்தித்து விடுதலைக்கு உதவும்படி கேட்டார். 1935ல் முசோலினியை சந்தித்து ஆதரவு கேட்டார். பயணத்தில் ஆஸ்திரியாவைச் சேர்ந்த எமிலியின் அறிமுகம் கிடைத்தது. அவரைத் தனது உதவியாளராக்கிக் கொண்டார். உடல் நலம் தேறியது.

அதற்கு எமிலியும் ஒரு காரணம். இருவருக்குள்ளும் காதல் அரும்பியது. 1937 டிசம்பர் 27 இல் எமிலியை, போஸ் இரகசியமாகத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு, 1942 நவம்பர் 29 இல் அனிதா போஸ் என்ற ஒரு மகள் வியன்னாவில் பிறந்தார்.

NETAJI SUBHASH CHANDRA BOSS HISTORY IN TAMIL | நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பற்றிய கட்டுரை
NETAJI SUBHASH CHANDRA BOSS HISTORY IN TAMIL | நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பற்றிய கட்டுரை

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஜெயந்தி

NETAJI SUBHASH CHANDRA BOSS HISTORY IN TAMIL: இந்திய விடுதலைக்காக ஆயுதமேந்தி போராடிய இந்தியாவின் ஒப்பற்ற தேசப்பற்றாளரான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் ஜெயந்தி தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 23ஆம் தேதி மத்திய மற்றும் மாநில அரசுகளால் அனுசரிக்கப்படுகின்றன.

2021 ஆம் ஆண்டு மத்திய அரசு சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த ஜனவரி 23 ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் “பராக்கரம் திவாஸ்” என்கிற பெயர் சிறப்பு தினமாக கடைபிடிக்கப்படும் என அறிவித்தது.

மேற்கு வங்க மாநிலத்தின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி மற்றும் அகில இந்திய பார்வார்ட் ப்ளாக் ஆகிய இரு கட்சிகளும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த தினத்தை “தேஷ் பிரேம் திவாஸ்” என்கிற பெயரில் அனுஷ்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தன.

பாரத ரத்னா விருது

NETAJI SUBHASH CHANDRA BOSS HISTORY IN TAMIL: 1992-இல் சுபாஷ் சந்திரபோசுக்கு, இறப்புக்குப் பின்னான இந்தியாவின் மிக உயரிய விருதான, “பாரத ரத்னா” விருது வழங்கப்பட்டது. ஆனால் விருது வழங்கும் குழுவால், சுபாஷ் சந்திர போஸின் இறப்பு குறித்த ஆதாரங்களைத் தர முடியவில்லை. எனவே உச்சநீதிமன்ற ஆணையின்படி இவ்விருது திரும்ப வாங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *