INDIRA GANDHI HISTORY IN TAMIL | இந்திரா காந்தி பற்றிய கட்டுரைINDIRA GANDHI HISTORY IN TAMIL | இந்திரா காந்தி பற்றிய கட்டுரை

INDIRA GANDHI HISTORY IN TAMIL: இந்திரா காந்தி (இந்திரா பிரியதர்சினி காந்தி) இந்தியாவின் மூன்றாவது பிரதமரும், ஒரே இந்திய பெண் பிரதமரும் ஆவார். அவர், இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவின் ஒரே மகளும் ஆவார்.

இவரது இயற்பெயர் இந்திரா பிரியதர்சினி, ஃபெரோஸ் காந்தியுடனான திருமணத்திற்கு பின் இந்திரா பிரியதர்சினி காந்தி சுருக்கமாக இந்திரா காந்தியாக மாறினார்,

INDIRA GANDHI HISTORY IN TAMIL – வாழக்கை குறிப்பு

INDIRA GANDHI HISTORY IN TAMIL: இந்தியாவின் இரண்டாவது பிரதமராக இருந்த லால் பகதூர் சாஸ்திரியைத் தொடர்ந்து சில நாட்கள் தற்காலிகப் பதவி வகித்த குல்சாரிலால் நந்தாவுக்குப் பின்னர் ஜனவரி 19 1966-இல், பிரதம மந்திரியாகப் பதவியேற்ற இவர் மார்ச் 24 1977 வரை பதவியில் இருந்தார்.

1977-இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பெரும் தோல்வியடைந்த இவர் மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெற்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றார். 14 ஜனவரி 1980-இல் பிரதமராக மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்ட இவர் 1984-இல் கொலை செய்யப்படும் வரை பதவியில் இருந்தார்.

இவர் ஒரு சிறந்த அரசியல் திட்டமிடலாளரும், சிந்தனையாளரும் ஆவார். அரசியல் அதிகாரத்துக்கான அசாதாரண பற்றை அவர் கொண்டிருந்தார். ஆணாதிக்க மனப்பாங்கைக் கொண்ட இந்திய சமுதாயத்தில், ஒரு பெண்ணிடம் எதிர்பார்க்கப்படும் தன்மைகளுக்கு மாறாக வலுவான அதிகார பலத்துடன் மிகவுயர்ந்த பதவியிலிருந்து நாட்டை வழி நடத்தினார்.

ஒரு பிரதம மந்திரியாக, அவருக்குக் கிடைக்கக்கூடிய அனைத்து வளங்களையும் பயன்படுத்தி தனது பலத்தையும் அதிகாரத்தையும் வலுப்படுத்திக் கொண்டார். அவருக்கிருந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி, வலு குறைந்த அமைச்சரவைகளை அமைத்துக் கொண்டதாகக் குற்றம் சாட்டுகிறார்கள்.

SARDAR VALLABHBHAI PATEL HISTORY IN TAMIL | சர்தார் வல்லப்பாய் படேல் பற்றிய கட்டுரை

இந்திய தேசிய காங்கிரசிலிருந்த பலம் மிக்க முதிர்ந்த தலைவர்களை ஓரங்கட்டினார். இதன் ஒரு அங்கமாக 1969-இல் குடியரசுத் தலைவர் நியமனத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து ஆளும் கட்சியாக இருந்த இந்திய தேசிய காங்கிரஸ் பிளவுபட்டது. இந்திரா காங்கிரஸ் என்று அழைக்கப்பட்ட, இவருடைய தலைமையில் அமைந்த பிரிவு மிகுந்த பலத்துடன் தொடர்ந்தும் ஆட்சியில் இருந்தது.

1971-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அவரது கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. அச்சமயத்தில், மேற்கு, கிழக்குப் பாகிஸ்தான்களுக்கு இடையில் ஏற்பட்ட பிணக்கில், கிழக்குப் பாகிஸ்தானின் தனிநாட்டுக் கோரிக்கைக்கு ஆதரவாகப் பாகிஸ்தானுடன் போரைத் தொடங்கி, கிழக்குப் பாகிஸ்தானுக்குள் படைகளை அனுப்பினார். இந்த வெற்றிகரமான நடவடிக்கையினால் கிழக்குப் பாகிஸ்தான், பாகிஸ்தானிலிருந்து பிரிந்து வங்காளதேசம் என்ற தனி நாடாகியது.

1975 இல் அவசர நிலையை அறிவித்த இந்திரா காந்தி, அரசியல் சட்டத்தின் 352 ஆவது விதியை பயன்படுத்தி தனக்கான அதிகாரங்களை அதிகப்படுத்திக் கொண்டதன் மூலம் எதிர்க்கட்சிகளை ஒடுக்க முயற்சித்தார் என்று குற்றம் சாட்டப்பட்டார்.

19 மாதங்கள் நீடித்த இந்த நெருக்கடி நிலைமை இந்திரா காந்தியின் செல்வாக்கை பெருமளவு பாதித்தது. எனினும் தனது செல்வாக்கை பிழையாக மதிப்பீடு செய்த இவர், தேர்தலை நடத்திப் பெருந் தோல்வியைத் தழுவினார்.

இவரது சொந்தத் தொகுதியிலேயே தோல்வியடைந்தார். இவருக்கு வாரிசாக வளர்க்கப்படுவதாகச் சொல்லப்பட்ட இவரது இரண்டாவது மகனான சஞ்சய் காந்தியும் தோல்வியைத் தழுவினார்.

INDIRA GANDHI HISTORY IN TAMIL: எனினும் இவரது கட்சிக்கு மாற்றாகப் பதவியில் அமர்ந்த பல கட்சிக் கூட்டணி, உட்பூசல்கள் காரணமாக அதன் முழுப் பதவிக்காலத்தையும் நிறைவு செய்ய முடியாமல் மூன்று ஆண்டுகளில் கவிழ்ந்தது.

இவ்வாறு எதிர்க்கட்சிகளின் இயலாத்தன்மை வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டதனால், அடுத்து நடைபெற்ற தேர்தலில் இந்திராவையே மக்கள் மீண்டும் தெரிவு செய்தனர். இந்திரா தனது முன்னைய தவறுகளிலிருந்து பாடம் படித்துக்கொண்டார். அவருடைய இரண்டாவது ஆட்சிக்காலம் மிதமான அதிகாரத்துவம் கொண்டதாகவே அமைந்தது.

எனினும் இவரது இந்த ஆட்சிக்காலம் சுமுகமானதாக அமையவில்லை. இக்காலத்தில் இவருக்கு வாரிசாக வரக்கூடியவரென எதிர்பார்க்கப்பட்ட சஞ்சய் காந்தி தானே செலுத்திய விமானத்தில் விழுந்து நொறுங்கியதில் காலமானார்.

சீக்கியத் தீவிரவாதம் வளர்ந்துவந்தது. சமய மற்றும் தீவிரவாதத் தலைவராக இருந்த ஜர்னைல் சிங் பிந்தரன்வாலேயின் அதிகரித்து வந்த செல்வாக்கு இந்திய ஒருமைப்பாட்டுக்குச் சவாலாக அமையுமென இந்தியத் தலைவர்கள் அஞ்சினார்கள். இந்திரா படையை அனுப்பித் தீவிரவாதிகளை ஒடுக்க எண்ணினார்.

சீக்கியர்களின் புனிதக் கோயிலான பொற் கோயிலுக்குள் ஆயுதங்களுடன் ஒளிந்திருப்பதாகக் கருதப்பட்ட தீவிரவாதிகளையும், அவர்களின் தலைவரையும் பிடிக்க இராணுவம் பொற்கோயிலுக்குள் புக அனுமதி வழங்கினார்.

INDIRA GANDHI HISTORY IN TAMIL: தொடர்ந்து இடம்பெற்ற படை நடவடிக்கைகள் இந்திராவை சீக்கியர்களின் கோபத்துக்கு ஆளாக்கியது. இதன் தொடர்ச்சியாக, அக்டோபர் 31, 1984-இல் சீக்கியர்களான, அவரது சொந்தப் பாதுகாவலர் இருவராலேயே சுட்டுக் கொல்லப்பட்டார்.

INDIRA GANDHI HISTORY IN TAMIL | இந்திரா காந்தி பற்றிய கட்டுரை
INDIRA GANDHI HISTORY IN TAMIL | இந்திரா காந்தி பற்றிய கட்டுரை

12 வயதுப் போராளி

INDIRA GANDHI HISTORY IN TAMIL: 1921-ல் தாத்தா மோதிலால் நேருவின் மடியில் அமர்ந்துகொண்டு, அலகாபாத் நீதிமன்ற நடவடவடிக்கைகளைக் கவனிக்க முயன்றுகொண்டிருந்தார் நான்கு வயது இந்து. அதன் இறுதியில் தாத்தாவுக்கும் தந்தைக்கும் ஆறு மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

பிறகு அதுவே அவருக்குப் பழகிவிட்டது. ஒருகட்டத்தில் வீட்டுக்கு வரும் விருந்தினர்களை வரவேற்கும் இந்திரா, “வீட்டில் எல்லோரும் ஜெயிலுக்குப் போயிட்டாங்க” என்று பெருமிதத்தோடு சொல்லும் அளவுக்கு முன்னேறியிருந்தார்.

நாட்டுக்காக ஒரு குடும்பமே சிறைச்சாலைக்குச் செல்வது பெருமைதான். ஆனால் சிறுமி இந்திராவின் வாழ்வில் நேரு குடும்பத்தின் சிறைவாசம் ஏற்படுத்திய தாக்கம் மிக அதிகம். அன்புசெலுத்த, அருகிலிருந்து கவனித்துக்கொள்ள, குடும்பத்தினர் யாரும் இல்லாத சூழல் அந்தச் சிறுமியின் வாழ்வில் தீராத தனிமையையும் மகிழ்ச்சியின்மையையும் ஏற்படுத்தியது. அதுவே அவரை இறுக்கமானவராகவும் மாற்றிவிட்டது. இதன் தாக்கம் அவரது வாழ்நாள் முழுவதும் தொடர்ந்தது.

ஐந்து வயது முதல் பதினேழு வயதுவரையுள்ள சிறார்களைக் கொண்டு தானே உருவாக்கிய ‘வானர சேனை’யோடு சுதந்திரப் போராட்டத்தில் இணைந்தார் இந்திரா. அப்பொழுது அவருக்கு 12 வயது! கடிதங்கள், ரகசிய ஆவணங்களைக் காவல்துறையின் அடக்குமுறையை மீறி தலைவர்களிடம் கொண்டுபோய் சேர்ப்பது, தடியடியில் காயம்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள், வீராங்கனைகளின் காயங்களுக்கு மருந்திடுவது என்று நீண்டது ‘வானர சேனை’யின் பணி.

தேடிவந்த பொறுப்புகளும் பதவிகளும்

INDIRA GANDHI HISTORY IN TAMIL: இந்தியா விடுதலை அடைந்ததும் பிரதமர் நேருவின் வீட்டு நிர்வாகம், இந்தியா – பாகிஸ்தான் பிரிவினை மற்றும் உள்நாட்டு மதக் கலவரத்தில் அகதிகளானவர்களுக்கு காந்தியோடு சேர்ந்து பணியாற்றுதல், தனது தந்தையோடு வெளிநாடுகளுக்கு அரசுமுறைப் பயணங்களை மேற்கொள்ளுதல் ஆகிய முக்கியப் பொறுப்புகளை இந்திரா ஏற்கவேண்டியிருந்தது.

இது அவருக்கு அரசியல், வெளியுறவுக் கொள்கை, ராஜதந்திரம் தொடர்பான பயிற்சியாக அமைந்தது. அதீத கடமையுணர்ச்சியோடும் அர்ப்பணிப்போடும் இந்திரா அவற்றில் ஈடுபட்டார்.

நேரு மரணமடைந்தபோது, ஆனந்த பவனம் தேசத்துக்கு அர்ப்பணிக்கப்பட்டிருந்தது. குடியிருக்க வீடுகூட இல்லாத நிலையில்தான் நேரு இந்திராவை விட்டுச் சென்றிருந்தார். நேருவின் மரணத்துக்குப் பிறகு துயரத்தில் ஆழ்ந்திருந்த இந்திரா, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் காமராஜர், பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி இவர்களின் வற்புறுத்தலால் சாஸ்திரி அமைச்சரவையில் செய்தி ஒளிபரப்புத் துறை அமைச்சரானார். பிறகு நடந்தது வரலாறு!

பொதுத்தேர்தலுக்கு 13 மாதங்களே இருந்த நிலையில் சாஸ்திரியின் எதிர்பாராத மரணம் நிகழ்ந்தது. காமராஜர் பிரதமர் பதவியை ஏற்க மறுத்துவிட்டு இந்திரா காந்தியின் பெயரை முன்மொழிந்தார். மக்கள் செல்வாக்கு மிகுந்த நேருவுக்குப் பிறகு, நாடு முழுவதும் இந்திராவே எளிய மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தார்.

ஜனவரி 19, 1966-ல் இந்திரா காந்தி, இந்தியாவின் முதல் பெண் பிரதமரானார். பாராளுமன்ற மைய மண்டபத்தில் இருந்து பதவியேற்க ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகைக்கு இந்திரா காந்தி மக்கள் வெள்ளத்தில் மிதந்து செல்ல நெடுநேரமானது.

முரண்பாடுகள்

INDIRA GANDHI HISTORY IN TAMIL: மறைந்த இந்திய பிரதம மந்திரி இந்திரா காந்தி, 1970களில் உத்தியோகப்பூர்வமாக இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட குழந்தைகளைக் கொண்ட ஆண்கள் தங்களை கருத்தடை செய்து கொள்ள வேண்டும் என்ற ஒரு கட்டாய கருத்தடைத் திட்டத்தை கொண்டு வந்தார்.

ஆனால் திருமணம் ஆகாத பல இளைஞர்கள், அரசியல் எதிர்ப்பாளர்கள் மற்றும் அறியாமையிலிருந்த ஆண்களும் கருத்தடை செய்யப்பட்டதாக நம்பப்பட்டது. இந்தியாவில் இந்த திட்டம் இன்றும் நினைவு கூறப்படுவதுடன் விமர்சிக்கப்படுகிறது.

மேலும் குடும்ப கட்டுப்பாடு மீது பொதுமக்களுக்கு ஒரு தவறான வெறுப்பை உருவாக்குவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. இது அரசின் திட்டங்களை பல ஆண்டுகளுக்கு பாதிப்பிற்குள்ளாக்கியது.

INDIRA GANDHI HISTORY IN TAMIL | இந்திரா காந்தி பற்றிய கட்டுரை
INDIRA GANDHI HISTORY IN TAMIL | இந்திரா காந்தி பற்றிய கட்டுரை

படுகொலை

INDIRA GANDHI HISTORY IN TAMIL: தொடர்ந்து இடம்பெற்ற நடவடிக்கைகள் இந்திராவை சீக்கியர்களின் கோபத்துக்கு ஆளாக்கியது. இதன் தொடர்ச்சியாக, சீக்கியர்களான, அவரது சொந்தப் பாதுகாவலர் இருவராலேயே சுட்டுக் கொல்லப்பட்டார். இந்திரா காந்திக்கு எண்ணிலடங்கா காவலர்கள் இருந்தனர்.

அவர்களில் இருவர் சத்வந்த் சிங் மற்றும் பீண்ட் சிங், இருவருமே சீக்கியர்கள். அவர்கள் 1984 அக்டோபர் 31ஆம் தேதி, புதுடெல்லியில் உள்ள எண் 1, சப்தர்ஜங் சாலையில் இருந்த தலைமை அமைச்சரின் வீட்டுத் தோட்டத்தில் தங்களின் சேவை ஆயுதங்களால் இந்திரா காந்தியைப் படுகொலை செய்தனர்.

ஐரிஷ் தொலைக்காட்சிக்காக பிரிட்டிஷ் நடிகர் பீட்டர் உஸ்தினோவ்வால் ஓர் ஆவணப்படத்திற்கு பேட்டி அளிப்பதற்காக, இந்திரா சத்வந்த் மற்றும் பீண்ட்டின் காவலில் இருந்த விக்கெட் கேட்டைக் கடந்து சென்றார்.

INDIRA GANDHI HISTORY IN TAMIL: அந்த சம்பவத்தைத் தொடர்ந்து உடனடியாக கிடைத்த தகவலின்படி, பீண்ட் சிங் அவரின் பக்கவாட்டு ஆயுதத்தால் அவரை மூன்று முறை சுட்டார், சத்வந்த் சிங் ஒரு ஸ்டென் சப்மெஷின் துப்பாக்கியால் 30 ரவுண்டுகள் சுட்டார். அவரின் பிற காவலாளிகளால் பீ்ண்ட் சிங் சுட்டு கொல்லப்பட்டார், சத்வந்த் சிங் சுடப்பட்டு, கைது செய்யப்பட்டார்.

இந்திரா அவரின் அரசாங்கக மகிழுந்தில் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படும் போது வழியில் உயிர் துறந்தார், ஆனால் பல மணி நேரங்களுக்கு அவர் இறந்ததாக அறிவிக்கப்படவில்லை.

அவர் அனைத்திந்திய மருத்துவ விஞ்ஞான பயிலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டார், அங்கு அவரை மருத்துவர்கள் சோதனை செய்தனர். அந்த சமயத்தில் 29 உள் சென்று வெளியேறிய காயங்கள் இருந்ததாக அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவித்தது, சில அறிக்கைகள் அவரின் உடலில் இருந்து 31 குண்டுகள் எடுக்கப்பட்டதாக தெரிவித்தது.

அவர் ராஜ்காட்டிற்கு அருகில் நவம்பர் 3ஆம் தேதி எரியூட்டப்பட்டார். அவரின் இறப்புக்கு பின்னர், புதுடெல்லியைச் சுற்றி வளைத்த இந்திரா காந்தியின் மதிப்பிற்கு பாத்திரமான காங்கிரஸ் அரசியல்வாதிகளால் அதிருப்தி உட்பிரிவுகள் உருவாக்கப்பட்டது.

INDIRA GANDHI HISTORY IN TAMIL: காந்தியின் நண்பரும், சுயசரிதையாளருமான புபுல் ஜெயகர் இந்திராவின் பதட்டத்தையும், ஆப்ரேஷன் ப்ளூஸ்டாரின் விளைவாக என்ன நடக்கும் என்பது குறித்த அவரின் முன்னெச்சரிக்கையும் வெளிப்படுத்தி காட்டினார்.

அரசியல் காலவரிசை

  • 1980 ஜனவரி முதல் பாதுகாப்பு அமைச்சர்
  • மார்ச் 1971 முதல் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர்
  • 1970 ஜூன் முதல் நவம்பர் 1973 வரை உள்துறை அமைச்சர்
  • ஜூலை 16, 1969 முதல் ஜூன் 26, 1970 வரை நிதியமைச்சர்
  • அதேசமயம், செப்டம்பர் 1967-மார்ச் 1977; ஜூன் 1972-மார்ச் 1977; ஜனவரி 1980 முதல் அணு சக்தி மற்றும் விண்வெளி அமைச்சர். செப்டம்பர் 5, 1967 முதல் பிப்ரவரி 14, 1969 வரை வெளிவிவகாரத்துறை அமைச்சர்
  • ஜனவரி 1966-மார்ச் 1977 மற்றும் ஜனவரி 14, 1980 முதல் இந்திய பிரதம மந்திரி. 1966-77 காலக்கட்டத்தில் திட்டக்குழு தலைவர்
  • 1964 – ராஜ்யசபா உறுப்பினர் மற்றும் இந்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர்
  • 1955 – காங்கிரஸ் பணிக் குழு மற்றும் கட்சியின் மத்திய தேர்தல் குழு உறுப்பினர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *