SARDAR VALLABHBHAI PATEL HISTORY IN TAMIL | சர்தார் வல்லப்பாய் படேல் பற்றிய கட்டுரைSARDAR VALLABHBHAI PATEL HISTORY IN TAMIL | சர்தார் வல்லப்பாய் படேல் பற்றிய கட்டுரை

SARDAR VALLABHBHAI PATEL HISTORY IN TAMIL: சர்தார் வல்லப்பாய் படேல் (Sardar Vallabhbhai Jhaverbhai Patel) இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். குஜராத் மாநிலத்தில் பிறந்து வளர்ந்த படேல் குஜராத் மாநிலத்தில் வழக்கறிஞராக இருந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக அறவழி போராட்டங்களை நடத்தினார். இந்திய தேசிய காங்கிரசில் ஒரு தலைவராக இருந்து வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் ஒரு முக்கியமானவராக இருந்தார்.

சுதந்திர இந்தியாவின் முதல் துணைப் பிரதம அமைச்சராகவும், உள்துறை அமைச்சராகவும் பணியாற்றிய சர்தார் வல்லப்பாய் படேல் சுதந்திர இந்தியாவை ஒருங்கிணைத்த சிற்பியாவார், ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சமஸ்தானங்களையும் ஒருங்கிணைத்து, இன்றைய ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்கினார். இவர் இந்தியாவின் இரும்பு மனிதர் என்றும் இந்தியாவின் பிஸ்மார்க் என்றும் அழைக்கப்பட்டார்.

SARDAR VALLABHBHAI PATEL HISTORY IN TAMIL – வாழ்க்கை வரலாறு

SARDAR VALLABHBHAI PATEL HISTORY IN TAMIL: குஜராத்தில் 1875ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி விவசாயக் குடும்பத்தில் பிறந்தார் சர்தார் வல்லபாய் படேல். சிறு வயது முதலே படிப்பில் சிறந்த மாணவராக விளங்கினார்.

சர்தா வல்லபாய் படேல் லேவா படேல் சமூகத்திலிருந்து ஒரு குஜராத்தி குடும்பத்தில் பிறந்தார். சர்தார் வல்லபாய் படேலின் சொந்த ஊர் கரம்சாத் ஆகும். இவருக்கு சோமாபாய், நர்சிபாய் மற்றும் விதால்பாய் பட்டேல் என்ற மூன்று அண்ணன்களும், காசிபாய் என்ற தம்பியும் தைபா என்ற தங்கையும் உடன் பிறந்தவர்கள் ஆவார்.

அவரது தந்தை சுவாமிநாராயணனின் சம்ப்ரதாயின் ஒரு பக்தராக இருந்தார். அவரது தந்தை 20 கிமீ தொலைவில் உள்ள சுவாமிநாராயண் கோயிலுக்கு நடந்தே அழைத்துச் செல்வார். அது அவரது உடலை கட்டுகோப்பாகவும் வலிமையாகவும் உருவாக்க உதவியது.

படேல் தனது 22 வயதில் தன்னுடைய மெட்ரிக்குலேசன் கல்வியில் தேர்ச்சி அடைந்தார். பட்டேல் தனக்குள்ளாகவே வழக்கறிஞர் ஆக வேண்டும் என தீர்மானித்து இங்கிலாந்து சென்று வழக்குரைஞர் படிப்பு படித்தார். அவர் மற்ற வழக்குரைஞர்களின் புத்தகங்களை வாங்கி படித்து இரண்டு ஆண்டுகளில் தேர்ச்சி அடைந்தார்.

MUHAMMAD NABI HISTORY IN TAMIL | முகம்மது நபி பற்றிய கட்டுரை

1909ம் ஆண்டு படேலின் மனைவி புற்றுநோய்க்கான முக்கிய அறுவை சிகிச்சை செய்ய பம்பாயில் (மும்பை) உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தும் அவரது உடல்நிலை திடீரென மோசமடைந்ததால் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

அப்போது படேல் நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் சாட்சியை குறுக்கு விசாரணை செய்துகொண்டிருந்தார். அவரிடம் மனைவி இறந்தது குறித்த குறிப்பு கொடுக்கப்பட்டது. அதை படித்து விட்டு தனது பாக்கெட்டில் வைத்துவிட்டு தனது குறுக்கு விசாரணையை தொடர்ந்தார். அந்த வழக்கில் வெற்றியும் பெற்றார் .வழக்கு விசாரணை முடிந்த பிறகு தான் தன் மனைவி இறந்த செய்தியை மற்றவர்களுக்கு கூறினார்.

SARDAR VALLABHBHAI PATEL HISTORY IN TAMIL: பின்னர் 1910ஆம் ஆண்டு லண்டன் சென்று பட்டம் படித்து முதல் மாணவராக தேர்வானார். பிறகு நாடு திரும்பிய அவர் அகமதாபாத்தில் வழக்கறிஞராக பணிபுரியத் தொடங்கினார்.

அகமதாபாத்தில் வழக்கறிஞர் தொழில் நடத்தியபோது உள்ளூர் மக்களின் பிரச்னைகளுக்காக போராடி, அவர்களின் இதயங்களில் இடம் பிடித்தார். 1917ஆம் ஆண்டு முதன்முறையாக மாநகராட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

சுதேசி இயக்கம் உச்சத்தில் இருந்தபோது மகாத்மா காந்தியின் உரையைக் கேட்ட அவர், வழக்கறிஞர் தொழிலை உதறிவிட்டு தன்னை சுதேசி இயக்கத்தில் இணைத்துக்கொண்டார். அடுத்து கேடா, பார்டோலி உள்ளிட்ட இடங்களில் மக்களுக்காக போராட்டம் நடத்திய படேலுக்கு போராட்டங்களும், சிறைவாசமும் வாடிக்கையாகிப் போனது.

அதனைத்தொடர்ந்து காந்தி நடத்திய பல போராட்டங்களில் தன்னை முதன்மையானவராக ஈடுபடுத்திக்கொண்டார். இரண்டாவது வட்டமேஜை மாநாட்டு தோல்விக்குப் பிறகு மகாத்மா காந்தி, படேல் கைது செய்யப்பட்டு, எரவாடா மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். அப்போது முதல் காந்தியுடன் படேலுக்கு நெருக்கம் ஏற்பட்டு பின்னர் அது வளர்ந்தது.

1947ல் இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் முதல் துணை பிரதமராகவும், உள்துறை அமைச்சராகவும் பணியாற்றினார். அப்பதவிகளில் அவர் ஆற்றிய பணிகள் அத்தனை சாதாரணமானது அல்ல.

SARDAR VALLABHBHAI PATEL HISTORY IN TAMIL: நாடு முழுவதும் துண்டு துண்டாக மன்னராட்சி நடந்து கொண்டிருந்தது. 565 ராஜ்ஜியங்கள் ஆண்டு கொண்டிருந்தன. சிதறுண்டு கிடந்த நாட்டை ஒருங்கிணைக்கும் பொறுப்பை முதல் உள்துறை அமைச்சரான சர்தார் வல்லபாய் படேலிடம் ஒப்படைத்தார் பிரதமர் ஜவஹர்லால் நேரு.

பல சர்ச்சைகளுக்கும், எதிர்ப்புகளுக்கும் மத்தியில் நாட்டை ஒரே குடையின் கீழ் கொண்டுவந்து “இரும்பு மனிதர்” எனப் பெயர் பெற்றார். அவர் தனது 75ஆவது வயதில் 1950ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி காலமானார். அவரது சாதனைகளை போற்றும் வகையில் நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது 1999ஆம் ஆண்டு வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டார்.

தற்போது இவருக்காக 597 அடியில் உலகிலேயே மிகப்பெரிய சிலை குஜராத்தில் நிறுவப்பட்டுள்ளது.

SARDAR VALLABHBHAI PATEL HISTORY IN TAMIL | சர்தார் வல்லப்பாய் படேல் பற்றிய கட்டுரை
SARDAR VALLABHBHAI PATEL HISTORY IN TAMIL | சர்தார் வல்லப்பாய் படேல் பற்றிய கட்டுரை

நேரு மற்றும் படேல்

SARDAR VALLABHBHAI PATEL HISTORY IN TAMIL: நேருவும் படேலும் ஒரு அரிய கலவை. அவர்கள் ஒருவரையொருவர் பூர்த்தி செய்தார்கள். இந்திய தேசிய காங்கிரஸின் இரண்டு பெரிய தலைவர்களும் பரஸ்பர மரியாதையும் மரியாதையும் கொண்டிருந்தனர். அணுகுமுறையில் வேறுபாடுகள் இருந்தன – ஆனால் இருவரின் இறுதி இலக்கு இந்தியாவிற்கு எது சிறந்தது என்பதைக் கண்டுபிடிப்பதாகும்.

கருத்து வேறுபாடுகள் பெரும்பாலும் காங்கிரஸின் படிநிலை, வேலை செய்யும் முறை அல்லது சித்தாந்தங்கள் தொடர்பானவை. காங்கிரசுக்குள் – நேரு இடதுசாரி (சோசலிசம்) என்று பரவலாகக் கருதப்பட்டார், அதே நேரத்தில் படேலின் சித்தாந்தங்கள் வலதுசாரி (முதலாளித்துவம்) உடன் இணைந்திருந்தன.

1950ல் நேருவுக்கும் படேலுக்கும் இடையே காங்கிரஸ் தலைவர் வேட்பாளர்கள் தேர்வில் வேறுபாடுகள் இருந்தன. நேரு ஜே.பி.கிரிப்லானியை ஆதரித்தார். படேலின் தேர்வு புருஷோத்தம் தாஸ் டாண்டன். இறுதியில், பட்டேலின் வேட்பாளர் புருஷோத்தம் தாஸ் டாண்டனிடம் கிரிப்லானி தோற்கடிக்கப்பட்டார்.

எவ்வாறாயினும், காங்கிரஸிலும் அரசாங்கத்திலும் ஒரு பெரிய பிளவை ஏற்படுத்தும் அளவுக்கு வேறுபாடுகள் ஒருபோதும் பெரியதாக இல்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

காந்தி மற்றும் படேல்

SARDAR VALLABHBHAI PATEL HISTORY IN TAMIL: பட்டேல் காந்திக்கு எப்போதும் விசுவாசமாக இருந்தார். இருப்பினும், அவர் சில விஷயங்களில் காந்திஜியுடன் வேறுபட்டார்.

காந்திஜியின் படுகொலையைத் தொடர்ந்து, அவர் கூறினார்: “அவரது அழைப்பிற்குக் கீழ்ப்படிந்த மில்லியன் கணக்கான மக்களைப் போல நான் அவருக்குக் கீழ்ப்படிதலுள்ள சிப்பாய் என்பதைத் தவிர வேறொன்றுமில்லை.

ஒரு காலத்தில் எல்லோரும் என்னை அவருடைய கண்மூடித்தனமான பின்பற்றுபவர் என்று அழைத்தார்கள். ஆனால், அவருக்கும் எனக்கும் தெரியும், நான் அவரைப் பின்தொடர்ந்தேன், ஏனென்றால் எங்கள் நம்பிக்கைகள் உயர்ந்தன.

SARDAR VALLABHBHAI PATEL HISTORY IN TAMIL | சர்தார் வல்லப்பாய் படேல் பற்றிய கட்டுரை
SARDAR VALLABHBHAI PATEL HISTORY IN TAMIL | சர்தார் வல்லப்பாய் படேல் பற்றிய கட்டுரை

ஒற்றுமைக்கான சிலை (Statue Of Unity)

SARDAR VALLABHBHAI PATEL HISTORY IN TAMIL: குஜராத்தில் நிறுவப்பட்டிருக்கும் சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார். இந்த சிலை ஒற்றுமைக்கான சிலை (Statue Of Unity) என்று அழைக்கப்படுகிறது. குஜராத்தின் நர்மதை கரையில் இது நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலைதான் உலகிலேயே மிகவும் உயரமான சிலை ஆகும்.

கடந்த 2013 அக்டோபர் மாதம் 31ம் தேதி பிரதமர் மோடி இந்த சிலைக்கு அடிக்கல் நாட்டினார். அப்போது அவர் குஜராத் முதல்வராக இருந்தார். இவர் இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்பட்ட காரணத்தால், இந்தியா முழுக்க பல்வேறு பகுதிகளில் இருந்து இவரின் சிலைக்காக இரும்பு கொண்டு வரப்பட்டது.

ஆம் இந்த சிலைக்கு உள்ளே இருக்கும் இரும்பு பல்வேறு மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்டது. நர்மதா டேமில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த சிலை அமைக்கப்பட்டு இருக்கிறது.

இதை வடிவமைத்தது, பத்ம பூஷன் விருது பெற்ற சிற்பி ராம் வி சுடர். லார்சன் மற்றும் டொப்ரோ நிறுவனம் இதில் முக்கிய பணிகளை செய்துள்ளது. இதை உருவாக்க 250 இன்ஜினியர்கள், 3400 பணியாளர்கள் உழைத்து இருக்கிறார்கள். இதை உருவாக்க மொத்தமாக 40 மாதம் ஆகியுள்ளது.

இதுதான் உலகிலேயே மிகவும் உயரமான சிலையாகும். இதன் உயரம் 182 அடியாகும். சீனாவின் ஸ்பிரிங் டெம்பிள் புத்தரின் 177 மீட்டர் சிலை கொண்டிருந்த பெருமையை இது முறியடித்துள்ளது. அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலையைவிட இது இரண்டு மடங்கு உயரம் கொண்டது.

இந்த சிலை முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரானது இல்லை. உள்புறம் மட்டுமே இந்தியாவில் தயாரானது. வெளிப்புறம் 553 வெண்கல தகடுகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் 10-15 நேனோ பேனல்கள் உள்ளது. இது சீனாவில் தயாரிக்கப்பட்டது.

SARDAR VALLABHBHAI PATEL HISTORY IN TAMIL: இதை உருவாக்க 2389 கோடி ரூபாய் செலவு ஆகியுள்ளது. இந்த சிலைக்கு உள்ளே கீழ் புறத்தில் பெரிய அருங்காட்சியகம் உள்ளது. இது பட்டேலின் நினைவாக உருவாக்கப்பட்ட மியூசியம் ஆகும். இதில் 40, 000 அரிய ஆவணங்கள் உள்ளது. 2000க்கும் அதிகமான புகைப்படங்கள் உள்ளது. பட்டேலின் வாழ்க்கையை பறைசாற்றும் பொருட்களும் இருக்கிறது.

சர்தார் வல்லபாய் படேலின் மேற்கோள்கள்

  • “வேலை என்பது வழிபாடு ஆனால் சிரிப்புதான் வாழ்க்கை. வாழ்க்கையை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ளும் எவரும் ஒரு துன்பகரமான இருப்புக்குத் தன்னைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். மகிழ்ச்சியையும் துக்கத்தையும் சம வசதியுடன் வாழ்த்துபவர் உண்மையில் சிறந்த வாழ்க்கையைப் பெற முடியும்.
  • “எனது கலாச்சாரம் விவசாயம்.”
  • “எங்கள் சுதந்திரத்தை அடைய நாங்கள் கடுமையாக உழைத்தோம்; அதை நியாயப்படுத்த நாம் கடினமாக முயற்சி செய்ய வேண்டும்.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *