MUTHURAMALIGA DEVAR HISTORY IN TAMIL: முத்துராமலிங்கத் தேவர் ஆன்மிகவாதியாகவும், சாதி பாகுபாட்டை எதிர்ப்பவராகவும், சுதந்திரப் போராட்டத் தியாகியாகவும் விளங்கியவர். நேதாஜி சுபாஷ் சந்திர போசின் தலைமையில் பிரித்தானிய அரசை எதிர்த்த இந்திய தேசிய இராணுவத்திற்குத் தமிழகத்திலிருந்து பெரும் படையைத் திரட்டி அனுப்பிய பெருமை இவரைச் சாரும்.
தலைசிறந்தப் பேச்சாளராகவும் ஆன்மீகவாதியாகவும் திகழ்ந்த இவரது பிறந்த நாளை அரசு விழாவாகத் தமிழக அரசு பசும்பொன்னில் வருடந்தோறும் கொண்டாடி வருகின்றது.
பசும்பொன்னில் மூன்று நாட்கள் கோலாகலமாக நடக்கும் தேவர் குருபூஜை விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இலட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு பால்குடம் எடுத்தல், அலகு குத்துதல், முளைப்பாரி செலுத்துதல், முடிக்காணிக்கை செலுத்துதல், பொங்கல் வைத்தல், தீச்சட்டி செலுத்துதல், அபிஷேகம் செய்தல் ஆகிய செயல்களின் மூலம் இவரை வணங்குகின்றனர். மேலும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் தமிழக அமைச்சர்களும் வருடந்தோறும் கலந்துகொண்டு வணங்குகின்றனர்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் என்றும் அறியப்பட்ட இவர், அகில இந்திய பார்வார்ட் ப்ளாக் கட்சியின் தமிழகத் தலைவராகவும் தேசியத் துணைத் தலைவராகவும் இருந்தார்.
இக்கட்சி நேதாஜி, தேவருடன் இணைந்து தொடங்கியதாகும். இவர் மூன்று முறை இக்கட்சி சார்பாக இந்திய பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
1957-ஆம் ஆண்டு தேசிய பாதுகாப்பு சட்டத்தின்படி ஒரு நாடாளுமன்ற உறுப்பினாரான இவரை, மதுரையில் காவல்துறை கைது செய்தது. இரு வாரங்களுக்குப் பிறகு கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக இவர் சேர்க்கப்பட்டுப் பின்னர் இந்தக் கொலைக்கும் இவருக்கும் தொடர்பு இருக்குமா? என்று சந்தேகிக்கக் கூட முடியாது என்று கூறி நீதி மன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.
குழந்தைப் பருவமும் குடும்ப வாழ்க்கையும்
MUTHURAMALIGA DEVAR HISTORY IN TAMIL: பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தமிழ்நாட்டின் தென்கிழக்கு மாவட்டமான இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பசும்பொன் என்கிற சிற்றூரில் மிகுந்த வசதி படைத்த ஜமீன் குடும்பத்தில் அக்டோபர் 30, 1908 -ல் உக்கிரபாண்டி தேவருக்கும் இந்திராணி அம்மையாருக்கும் பிறந்த ஒரே மகனாவார்.
இவரது தாயார் இவருக்கு ஒருவயது நிரம்பும் முன்பே காலமானார். இவர் தாயை இழந்த பின்பு இவரது தந்தையார் குறுகிய காலத்திலேயே மறுமணம் புரிந்துகொண்டார்.
அந்த இரண்டாவது மனைவியாரும் இறந்த காரணத்தினால் உக்கிரபாண்டி தேவர் மீண்டும் ஒரு திருமணம் புரிந்து கொண்டார். இதனால் முத்துராமலிங்க தேவர் இவரது உறவின் முறை பாட்டியான பார்வதியம்மாளின் பாதுகாப்பில் பசும்பொன்னை அடுத்துள்ள கல்லுப்பட்டி என்கிற கிராமத்தில் வளர்ந்தார்.
இளமைப் பருவத்தில் தேவரவர்கள் குழந்தைசாமிப்பிள்ளை என்கிற குடும்ப நண்பரால் கல்வி பயிற்றுவிக்கப்பட்டார். குழந்தைசாமி பிள்ளை தேவரின் பள்ளிப்படிப்பிற்கு மிகுந்த சிரத்தை எடுத்து தனிக்கல்வி பயிற்சி அமைத்துக் கொடுத்தார்.
பின்னர் ஆரம்பப்பள்ளி படிப்பைக் கமுதியில் உள்ள அமெரிக்கன் மிசனரீசால் நடத்தப்பட்டு வந்த பள்ளியில் முடித்தார். பின்னர் தேவர் திருப்பரங்குன்றம் அருகில் உள்ள பசுமலை மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்து படித்தார். பின்னர் மதுரையில் உள்ள யூனியன் கிறிஸ்டியன் மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்து பள்ளிப்படிப்பை முடித்தார்.
ARIGNAR ANNA HISTORY IN TAMIL | அறிஞர் அண்ணா பற்றிய கட்டுரை
1924ஆம் ஆண்டு ஏற்பட்ட உடல்நலக்குறைவின் காரணத்தால் தேவர் அவர்கள் பள்ளிப்படிப்பை முழுமையாக முடிக்க இயலவில்லை. தேவரின் தந்தையார் உக்கிரபாண்டித்தேவர் 1939 ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் நாள் மறைந்தார்.
1933-ம் ஆண்டு முதுகுளத்தூர் தாலுகாவில் உள்ள சாயல்குடி என்ற கிராமத்தில் சேதுராமன் செட்டியார் என்பவர் சுவாமி விவேகானந்தர் பெயரில் ஒரு வாசகசாலை திறந்தார்.
அந்த விழாவில் விவேகானந்தர் படத்தை திறந்து பேச அழைக்கப்பட்டிருந்த மதுரை கிருஷ்ணசுவாமி பாரதி வரவில்லை. அப்போது தேவர் சாயல்குடி அருகேயுள்ள எஸ். இலந்தைகுளம் என்ற கிராமத்திற்கு ஒரு பஞ்சாயத்திற்காக வந்திருந்தார். இதையறிந்த சேதுராமன் செட்டியார் அங்கு சென்று தேவரை அழைத்து விழாவில் கலந்துகொண்டு பேச அழைத்தார்.
அதுவரை எந்தவொரு மேடையிலும் பேசியிராத தேவர் விவேகானந்தரின் தத்துவங்களைப் பற்றி 3 மணிநேரம் பேசினார். அவரது சொற்பொழிவு அனைவரையும் கட்டிப்போட்டது.
பின்னாளில் முதல்வரான காமராஜரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தேவரின் பேச்சைக் கேட்டார். தேவரைப் போல பேசக் கூடியவர்களின் சேவை காங்கிரஸ் கட்சிக்குத் தேவை என்று அவர் கருதினார்.
முக்கிய நிகழ்வுகள் – MUTHURAMALIGA DEVAR HISTORY IN TAMIL
MUTHURAMALIGA DEVAR HISTORY IN TAMIL: 1920-ஆம் ஆண்டிலிருந்து அப்போதைய மதராஸ் மாகாணத்தில் மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் அமுலில் இருந்த குற்ற பரம்பரை சட்டம் என்கிற சட்டத்திற்கு எதிராகத் தேவர் அவர்கள் முதன்முதலாகப் போராடினார்.
1936-ஆம் ஆண்டு பர்மாவில் இருந்து திரும்பி வந்த தேவர் தென்தமிழகத்தில் காங்கிரசின் வளர்ச்சிக்கு உழைத்தார். பின்னாளில் வந்த தேர்தலில் தேவர் முதுகுளத்தூர் தொகுதியில் நீதிக்கட்சியின் வேட்பாளரை எதிர்த்து நின்று வெற்றிபெற்றார். இதுவே தேவரின் முதல் தேர்தல் வெற்றியாகும்.
1937-ஆம் ஆண்டு பிப்ரவரியில் இராமநாதபுரம் தொகுதியில் தேவர் போட்டியிட்டார். இவரது அரசியல் வளர்ச்சியைக் கண்டு பயந்துபோன ஆங்கிலேய நீதி கட்சியரசு, பலம் வாய்ந்த எதிர் வேட்பாளராக இராமநாதபுர மன்னர் அவர்களை நிறுத்தியது. ஆனாலும் முத்துராமலிங்க தேவர், அந்தத் தேர்தலில் மன்னரை எதிர்த்து மாபெரும் வெற்றிபெற்றார்.
பிப்ரவரி 1948-இல் காங்கிரஸ் கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக, பார்வர்ட் பிளாக் கட்சி தனித்து பிரதான எதிர்க்கட்சியானது. இதில் தேவர் பார்வர்ட் பிளாக் கட்சியின் தமிழ்நாட்டின் தலைவரானார்.
1952-ஆம் ஆண்டு சுதந்திர இந்தியாவின் முதல் பொது தேர்தல் நடைபெற்றது. லோக் சபா மற்றும் சட்டமன்ற உறுப்பினர் என இரண்டு தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடந்தன. இதில் தேவர், அருப்புகோட்டை லோக்சபா தொகுதியிலும் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதியிலும் போட்டியிட்டார். இரண்டிலும் வெற்றியும் பெற்றார்.
சிறப்பு
MUTHURAMALIGA DEVAR HISTORY IN TAMIL: முத்துராமலிங்க தேவரின் விருப்பத்திற்கு இணங்க 06.09.1939 அன்று நேதாஜி மதுரைக்கு வருகை தந்தார்.
நடுவண் அரசு 1995ம் ஆண்டு முத்துராமலிங்க தேவரின் அஞ்சல்தலையை வெளியிட்டு சிறப்பித்தது.
முத்துராமலிங்க தேவர் தம் சொத்துக்கள் முழுவதையும் 17 பாகங்களாகப் பிரித்து, ஒரு பாகத்தை மட்டும் தனக்கு வைத்துகொண்டு மீதி 16 பாகங்களையும் 16 பேர்களுக்கு இனாம் சாசனமாக எழுதி கொடுத்தார்
கொள்கைகள்
MUTHURAMALIGA DEVAR HISTORY IN TAMIL: ஆன்மிகம், தேசியம், பொதுவுடைமை, ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் காங்கிரஸ் அல்லாத ஆட்சி ஆகியன இவரது முக்கிய கொள்கைகளாக இருந்தன.
தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள், வீரமற்ற விவேகம் கோழைத்தனம் – விவேகமற்ற வீரம் முரட்டுத்தனம் என்பனவல்லாம் இவர் மொழிந்த வாசகங்களாகும்.
ஒரு தேசியவாதியாக தேவர் அவர்கள் திராவிடர் கழகம் மற்றும் அதன் வழி கட்சியான திராவிட முன்னேற்ற கழகம் ஆகியனவற்றை அவற்றின் பிரிவினை வாதம் மற்றும் குறுகிய நோக்கு போன்ற கொள்கைகளுக்காக வெறுத்தார்.
அதேநேரம் தேவர் லெனினிசம்-மார்க்சிசம் இரண்டையும் ஏற்றுக்கொள்ளவில்லை. இவரது மறைவுக்கு பின் பார்வர்ட் பிளாக் கட்சி தனது அழிவின் பாதையில் சென்றது. இந்த கட்சியின் அடுத்த தலைவராக P.K.மூக்கையா தேவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சிறந்த பேச்சாளர்
MUTHURAMALIGA DEVAR HISTORY IN TAMIL: தேவர் சிறந்த பேச்சாற்றல் கொண்டவராக இருந்தார். குறைந்தது மூன்று – நான்கு மணிநேரம் சொற்பொழிவாற்றும் நாவன்மை பெற்றிருந்தார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் ஆங்கிலத்திலும் சிறந்த புலமையும் பேச்சாற்றலும் கொண்டவராக இருந்தார்.
ஆன்மீகத்தில் தேவர் கொண்டிருந்த ஞானமும், ஆன்மீக சொற்பொழிவுகளும் இவருக்கு தெய்வத்திருமகன் என்ற பெயரை பெற்றுத்தந்தன.
இவர் தமிழ் இலக்கியங்களை கற்றுத் தேர்ந்தவராக இருந்தார். இவரது சொற்பொழிவுகளில் தமிழ் பாடல்களின் மேற்கொள்கள் இடம்பெற்றும் வந்தன.
முத்துராமலிங்க தேவர் மரணம்
MUTHURAMALIGA DEVAR HISTORY IN TAMIL: கடந்த 1962ம் ஆண்டு தேர்தலில் முத்துராமலிங்க தேவர் வெற்றி பெற்றும் உடல்நல குறைவு காரணமாக அவரால் நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்க முடியாமல் போனது.
எனவே, மதுரை திருநகரில் தங்கி ஓய்வும், சிகிச்சையும் பெற்று வந்த முத்துராமலிங்க தேவர்1963ம் ஆண்டு அக்டோபர் 29ம் தேதி மரணமடைந்தார்.
அவர் மரணத்திற்கு பின்னர், தனது உடலை சொந்த ஊரான பசும்பொன்னில் அடக்கம் செய்ய வேண்டும் என, கூறி இருந்ததால் 30ம் தேதி பசும்பொன்னில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
கௌரவிப்புக்கள்
MUTHURAMALIGA DEVAR HISTORY IN TAMIL: தேவரின் நினைவாகவும் அவரைப் போற்றும் வகையிலும் தமிழக அரசாலும் தேவரின் பக்தர்களாலும் தேவர் குருபூஜை சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
முத்துராமலிங்க தேவர் பிறந்ததும் இறந்ததும் ஒரே நாளான அக்டோபர் 30 ஆகும். இதனாலேயே தேவர் ஜெயந்தியும் குருபூஜையும் ஒரே நாளில் கொண்டாடப்படுகின்றன.
தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா, 2010ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தில், “முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு தங்கக் காப்பு அளிக்கப்படும்” என்று அறிவித்தார். இதன் அடிப்படையில் 09.02.2014 அன்று 13 கிலோ எடைகொண்ட தங்கக் காப்பு அணிவித்தார்.