TAJ MAHAL HISTORY IN TAMIL | தாஜ்மகால் பற்றிய கட்டுரைTAJ MAHAL HISTORY IN TAMIL | தாஜ்மகால் பற்றிய கட்டுரை

TAJ MAHAL HISTORY IN TAMIL: தாஜ் மகால் (Taj Mahal), இந்தியாவிலுள்ள நினைவுச்சின்னங்களுள், உலக அதிசயங்களில் ஒன்றாகும். இது ஆக்ராவில் அமைந்துள்ளது. முழுவதும் பளிங்குக் கற்களாலான இக்கட்டிடம், ஆக்ரா நகரில் யமுனை ஆற்றின் கரையில் கட்டப்பட்டுள்ளது.

இது காதலின் சின்னமாக உலகப் புகழ் பெற்றது. ஏழு உலக அதிசயங்களின் புதிய பட்டியலில் தாஜ் மகாலும் சேர்க்கப்பட்டுள்ளது. இக்கட்டிடம் முகலாய மன்னனான ஷாஜகானால், இறந்து போன அவனது இளம் மனைவி மும்தாஜ் நினைவாக 22,000 பணியாட்களைக் கொண்டு 1631 முதல் 1654 ஆம் ஆண்டுக்கு இடையில் கட்டிமுடிக்கப்பட்டது.

TAJ MAHAL HISTORY IN TAMIL – தோற்றம்

TAJ MAHAL HISTORY IN TAMIL: பொ.ஊ. 1631 ஆம் ஆண்டில், முகலாயப் பேரரசின் உயர்நிலையில் அப்பேரரசை ஆண்ட ஷா ஜகானின் மூன்றாம் மனைவி மும்தாஜ், அவர்களது 14 ஆவது பிள்ளையான குகாரா பேகம் பிறந்தபோது இறந்துவிட்டாள்.

பெருந் துயரம் அடைந்த மன்னன் அவளது நினைவாக இந்தக் கட்டிடத்தைக் கட்டத் தொடங்கியதாகவே அவனது வரலாற்றுக் கதைகள் கூறுகின்றன. மும்தாஜ் இறந்த அதே ஆண்டிலேயே தாஜ்மகாலின் கட்டிட வேலைகள் தொடங்கின.

முதன்மைக் கட்டிடம் 1648 இல் கட்டி முடிக்கப்பட்டது. சூழவுள்ள கட்டிடங்கள், பூங்கா ஆகியவற்றின் கட்டிட வேலைகள் ஐந்து ஆண்டுகள் கழித்தே நிறைவேறின. பேரரசன் ஷாஜகானே இக் கட்டிடத்தைப் பற்றிப் பின்வருமாறு கூறியதாகச் சொல்லப்படுகின்றது:

தாஜ்மகால், பாரசீகக் கட்டிடக்கலை மரபுகளையும், முன்னைய முகலாய மரபுகளையும் உள்ளடக்கியும், அவற்றை மேலும் விரிவாக்கியும் கட்டப்பட்டுள்ளது.

TIRUPUR KUMARAN HISTORY IN TAMIL | திருப்பூர் குமரன் பற்றிய கட்டுரை

சிறப்பாக, தைமூரிய, முகலாயக் கட்டிடங்களான ஸ்ள்ள தைமூரின் சமாதி, ஹுமாயூன் சமாதி, ஷா ஜகான் கட்டுவித்த, டெல்லியில் உள்ள ஜமா மஸ்ஜித் ஆகிய கட்டிடங்கள் இதன் வடிவமைப்புக்கு அடிப்படையாக அமைந்தன.

முன்னைய கட்டிடங்கள் சிவப்பு நிற மணற்கற்களால் கட்டப்பட்டிருந்தன. ஷா ஜகான் வெண்ணிறச் சலவைக்கற்களைப் பயன்படுத்தியுள்ளான். இவன் காலத்தில் கட்டிடங்கள் மிகவும் திருந்திய நிலையை அடைந்தன.

TAJ MAHAL HISTORY IN TAMIL | தாஜ்மகால் பற்றிய கட்டுரை

கட்டிடக்கலை

1. சமாதி

TAJ MAHAL HISTORY IN TAMIL: தாஜ்மகாலின் மையம் வெண்ணிறச் சலவைக்கல்லாலான சமாதிக் கட்டிடம் ஆகும். இது சதுரமான தளம் ஒன்றின் மீது அமைந்த, சமச்சீர் வடிவம் கொண்டதும், வளைவு வடிவிலான நுழை வாயில், பெரிய குவிமாடம் ஆகியவற்றைக் கொண்டதுமான ஒரு கட்டிடம்.

பெரும்பாலான முகலாயச் சமாதிகளைப் போலவே இதன் அடிப்படைக் கூறுகளும் பாரசீகக் கட்டிடக்கலை சார்ந்தனவாகும். இதன் அடிப்பகுதி பல அறைகளைக் கொண்ட ஒரு அமைப்பு ஆகும். இது ஒவ்வொரு பக்கமும் 55 மீட்டர்கள் நீளம் கொண்ட கனக் குற்றி வடிவமானது.

வடிவமைப்பு கட்டிடத்தின் எல்லாப் பக்கங்களிலுமே சமச்சீரானது. அடித்தளத்தின் ஒவ்வொரு மூலைக்கும் ஒவ்வொன்றாக நான்கு மினார்கள் அமைந்துள்ளன.

கட்டிடத்தின் முதன்மைக் கூடத்தில் மும்தாஜினதும், ஷா ஜகானினதும் போலியான அடக்கப் பேழைகள் வைக்கப்பட்டுள்ளன. அவர்களை உண்மையாக அடக்கம் செய்த இடம் கீழ்த் தளத்திலேயே உள்ளது.

இக்கட்டிடத்தின் சலவைக்கல் குவிமாடம் ஏறத்தாழ 35 மீட்டர் உயரம் கொண்டது. வெங்காய வடிவம் கொண்ட இக் குவிமாடம் 7 மீட்டர் உயர உருளை வடிவமான அமைப்பின் மீது உயர்த்திக் கட்டப்பட்டுள்ளது.

இதன் உச்சியில் தாமரை வடிவ அலங்கார அமைப்பின் மீது அழகான கலசம் காணப்படுகிறது. பாரசீக, மற்றும் இந்து அம்சங்களை உடையதாகக் காணப்படும் இது கட்டிடத்தின் உயரத்தை மேலும் உயர்த்திக் காட்டுகிறது.

இக் கலசம் 1800 ஆம் ஆண்டுவரை தங்கத்தினால் ஆனதாக இருந்ததாகவும் பின்னர் வெங்கலத்துக்கு மாற்றப்பட்டதாகவும் சொல்லப்படுகின்றது. இதன் உச்சியில் இஸ்லாம் மதத்தைக் குறிக்கும் பிறை உள்ளது.

இப்பெரிய குவிமாடத்தைச் சுற்றிலும் நான்கு சிறிய குவிமாடங்கள் உள்ளன. இவையும் பெரிய குவிமாடத்தைப் போலவே வெங்காய வடிவம் கொண்டவை.

வட்டமான வரிசைகளில் அமைந்த தூண்களில் தாங்கப்பட்டுள்ள இச் சிறிய குவிமாடங்களுக்குக் கீழிருக்கும் கூரை திறந்து உள்ளதால் அவற்றினூடாக கட்டிடத்தின் உட்பகுதிக்கு சூரிய ஒளி செல்லக்கூடியதாக உள்ளது.

கூரைப்பகுதியில் உள்ள சுவர்களின் மூலைகளில் அமைக்கப்பட்டுள்ள தூபிகள் கட்டிடத்தின் உயரத்தை மேலும் உயர்த்திக் காட்டுகின்றன.

அடித்தளத்தின் மூலைகளில் கட்டப்பட்டுள்ள மினார்கள் எனப்படும் கோபுர அமைப்புக்கள் 400 மீட்டர் உயரத்துக்கு எழுந்து நிற்கின்றன. இவை மரபுவழியாக இஸ்லாமிய மசூதிகளில் காணப்படும், தொழுகைக்காக மக்களை அழைப்பதற்குப் பயன்படும் மினார்களைப் போல் அமைக்கப்பட்டுள்ளன.

கீழிருந்து மேலாக ஒடுங்கிச் செல்லும் உருளை வடிவ அமைப்பைக் கொண்ட இவை ஒவ்வொன்றையும் சுற்றி, இடையில் அமைக்கப்பட்டுள்ள உப்பரிகைகள் அவற்றை மூன்று சம அளவான பகுதிகளாகப் பிரிக்கின்றன.

இவற்றின் உச்சியிலும் ஒரு உப்பரிகையும் அவற்றின் மேல் குவிமாடங்களுடன் கூடிய கூடுபோன்ற அமைப்புக்களும் காணப்படுகின்றன.

இக்குவிமாடங்கள், முதன்மைக் கட்டிடத்திலுள்ள குவிமாடங்களின் அதே வடிவில் சிறிய அளவுள்ளவையாகவும் அங்குள்ளதைப் போன்றே தாமரை வடிவ அலங்காரம், கலசம் ஆகியவற்றைக் கொண்டனவாகவும் உள்ளன.

2. வெளிப்புற அழகூட்டல்

TAJ MAHAL HISTORY IN TAMIL: தாஜ்மகாலின் வெளிப்புற அழகூட்டல், முகலாயக் கட்டிடக்கலை சார்ந்த பிற கட்டிடங்களோடு ஒப்பிடும்போது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இக் கட்டிடத்தின் வெளிப்புற அழகூட்டல், நிறப்பூச்சு, சாந்துப்பூச்சு அல்லது கற்கள் பதித்தல் மூலம் செய்யப்பட்டுள்ளது.

மனித உருவங்களையோ பிற விலங்கு உருவங்களையோ அழகூட்டல்களில் பயன்படுத்துவதைத் தடை செய்துள்ள இஸ்லாமிய மரபுகளுக்கு இணங்க அழகூட்டல்களில், வனப்பெழுத்துக்களும், செடி கொடி வடிவங்களும் பயன்பட்டுள்ளன.

தாஜ்மகாலில் பயன்படுத்தப்பட்டுள்ள வனப்பெழுத்துக்கள் “துலுத்” எனப்படும் வகையைச் சார்ந்தது. இவற்றைப் பாரசீக வனப்பெழுத்துக் கலைஞரான அமானத் கான் என்பவரால் உருவாக்கியுள்ளார். இவ் வனப்பெழுத்துக்கள் சலவைக்கல்லில், சூரியகாந்தக்கற்கள் பதித்து உருவாக்கப்பட்டவை.

TAJ MAHAL HISTORY IN TAMIL | தாஜ்மகால் பற்றிய கட்டுரை
TAJ MAHAL HISTORY IN TAMIL | தாஜ்மகால் பற்றிய கட்டுரை
3. உட்புற அழகூட்டல்

TAJ MAHAL HISTORY IN TAMIL: தாஜ்மகாலின் உட்புறக் கூடம் மரபுவழியான அழகூட்டல்களையும் தாண்டிச் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில், விலையுயர்ந்த கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. உட்கூடம் எண்கோண வடிவானது.

இதன் எல்லாப் பக்கங்களிலும் வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன எனினும் தெற்குப் பக்கப் பூங்காவை நோக்கியுள்ள கதவு மட்டுமே பயன்பாட்டில் உள்ளது.

உட்புறச் சுவர்கள் சுமார் 25 மீட்டர் உயரம் கொண்டவை. இவற்றின் மேல் சூரிய உருவினால் அழகூட்டப்பட்ட “போலி”க் குவிமாடம் அமைக்கப்பட்டுள்ளது.

4. பூங்கா

TAJ MAHAL HISTORY IN TAMIL: தாஜ்மகால் கட்டிடத் தொகுதி, 300 மீட்டர் நீளமும், 300 மீட்டர் அகலமும் கொண்ட ஒரு முகலாயப் பூங்காவைச் சுற்றி அமைந்துள்ளது. இங்கு அமைக்கப்பட்டுள்ள நடை பாதைகள், பூங்காவின் நான்கு காற்பகுதிகளையும் 16 பூம்படுகைகளாகப் பிரிக்கின்றன.

கட்டிடத்துக்கும் தொகுதியின் நுழைவாயிலுக்கும் இடைப்பட்ட பகுதியின் நடுவில் ஒரு குளம் அமைக்கப்பட்டுள்ளது. வடக்கு-கிழக்கு அச்சில் நின்று பார்க்கும்போது கட்டிடத்தின் விம்பம் இக் குளத்தில் தெரியுமாறு அமைந்துள்ளது.

பூங்காவின் பிற இடங்களில் மர வரிசைகளுடன் கூடிய பாதைகளும், செயற்கை நீரூற்றுக்களும் காணப்படுகின்றன. பாரசீகப் பூங்காக்களின் வடிவமைப்பைப் பின்பற்றி அமைக்கப்பட்ட முகலாயப் பூங்காக்கள், முகலாயப் பேரரசர் பாபரினால் இந்தியாவுக்கு அறிமுகமானது.

இது நான்கு ஆறுகள் பாயும் சுவர்க்கத்திலுள்ள பூங்காவுக்கான ஒரு குறியீட்டு வடிவமாகும். முகலாய இஸ்லாமிய நூலொன்றில், சுவர்க்கம் என்பது, மையத்தில் அமைந்துள்ள ஒரு ஊற்றிலிருந்து நான்கு திசைகளிலும் பாயும் ஆறுகளைக் கொண்ட ஒரு பூங்கா எனக் கூறப்பட்டுள்ளது.

பெரும்பாலான முகலாயப் பூங்காக்கள், சதுர வடிவானவையாகவும், சமாதியையோ அல்லது ஒரு காட்சிக் கூடத்தையோ அதன் மையப் பகுதியில் கொண்டதாக அமைந்திருப்பது வழக்கம்.

ஆனால், இந்த வழக்கத்துக்குப் புறம்பாக தாஜ்மகாலில் சமாதி ஒரு பக்கத்தை ஒட்டி அமைந்துள்ளது. யமுனை ஆற்றுக்கு மறு பக்கத்தில், மஹ்தாப் பாக் அல்லது நிலவொளிப் பூங்கா கண்டு பிடிக்கப்பட்டிருப்பதுடன், இந்தியத் தொல்லியல் ஆய்வு நிறுவனம், யமுனை நதியையும், நிலவொளிப் பூங்காவையும் உட்படுத்தி இத்தொகுதியை வடிவமைத்து இருக்கலாம் எனக் கருத்து வெளியிட்டுள்ளது.

இங்கே யமுனை ஆற்றை, சுவர்க்கத்தின் ஆறுகளில் ஒன்றாக வடிவமைப்பில் சேர்த்திருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. தாஜ்மகால் பூங்காவுக்கும், ஷாலிமாரில் உள்ள பூங்காவுக்கும் அவற்றின் அமைப்பிலும், அவற்றிலுள்ள, ஊற்றுக்கள், செங்கல் மற்றும் சலவைக்கற்கள் பதித்த நடைபாதைகள், வடிவவியல் உருக்களில் அமைந்த செங்கல் வரம்பிட்ட பூம்படுகைகள் ஆகிய கட்டிடக்கலைக் கூறுகளில் காணப்படும் ஒற்றுமையும், ஷாலிமாரை அமைத்த, அலி மர்தான் என்னும் பொறியாளரே தாஜ்மகால் பூங்காவையும் அமைத்திருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.

இப்பூங்காவைப் பற்றிய பழையகாலக் குறிப்புக்கள், இங்கே பலவிதமான பூஞ்செடிகளும், பழமர வகைகளும் ஏராளமாக இருந்ததாகக் கூறுகின்றன. முகலாயப் பேரரசு சரிவடையத் தொடங்கியதோடு இப் பூங்காவின் பராமரிப்பும் குறைந்தது. இப்பகுதி பிரித்தானியர் கைக்குப் போனபோது அவர்கள் இப் பூங்காவின் அமைப்பை மாற்றி இலண்டனில் உள்ளது போன்ற புற்றரைகளை அமைத்தனர்.

TAJ MAHAL HISTORY IN TAMIL | தாஜ்மகால் பற்றிய கட்டுரை
TAJ MAHAL HISTORY IN TAMIL | தாஜ்மகால் பற்றிய கட்டுரை
5. வெளிக் கட்டிடங்கள்

TAJ MAHAL HISTORY IN TAMIL: தாஜ்மகால் தொகுதி மூன்று பக்கங்களில் செந்நிற மணற்கற் சுவர்களால் சூழப்பட்டுள்ளது. யமுனை ஆற்றை நோக்கியுள்ள பக்கத்தில் சுவர்கள் இல்லை.

சுவருக்கு வெளியே ஷா ஜகானின் ஏனைய மனைவியர்களுடையவை உட்பட மேலும் பல சிறிய சமாதிக் கட்டிடங்கள் உள்ளன. இவற்றுள் சற்றுப் பெரிய கட்டிடம் மும்தாஜின் விருப்பத்துக்குரிய பணிப்பெண்ணுடையது.

இவற்றுட் பெரும்பாலானவை, அக்காலத்து சிறிய முகலாயச் சமாதிக் கட்டிடங்களைப் போல் செந்நிற மணற்கற்களால் ஆனவை. சுற்றுச் சுவர்களின் உட்பக்கங்களில், வளைவுகளுடன் கூடிய தூண் வரிசைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த இந்தியாவின் இந்துக் கோயில்களில் காணப்படும் அம்சம் முகலாயக் கட்டிடங்களில் பயன்பட்டது.

TAJ MAHAL HISTORY IN TAMIL: முக்கியமாகச் சலவைக்கல்லால் அமைக்கப்பட்ட முதன்மை நுழைவாயில் முந்திய பேரரசர்கள் காலத்து முகலாயக் கட்டிடங்களை நினைவூட்டுகிறது. இது சமாதிக் கட்டிடத்தை ஒத்த வளைவுகளையும், புடைப்புச் சிற்பங்களையும், பதிப்பு அழகூடல்களையும் கொண்டுள்ளது.

கறுப்பு நிறத் தாஜ் மஹால்

TAJ MAHAL HISTORY IN TAMIL: தாஜ் மஹாலைத் தன் பிரியமான மனைவிக்காகக் கட்டியெழுப்பச் சொன்ன மன்னன் ஷாஜகான் அதே சமயம் தன்னைக் குறிக்கும் வகையிலும் தாஜ்மஹாலைப் போன்ற தோற்றம் கொண்ட கறுப்பு நிறத் தாஜ் மஹாலைக் கட்டியெழுப்பியுள்ளதாகவிருந்த சந்தேகத்தின்படி ஆராய்ச்சியாளர்கள் அத்தாஜ்மஹால் இருந்த இடத்தின் சான்றுகளை ஆராய்ந்துள்ளனர்.

அண்மையில் நடைபெற்ற ஆராய்ச்சியின் பின்னர் தாஜ்மகால் கட்டப்பெற்ற சில தூரங்களில் கறுப்பு நிறத் தாஜ் மஹாலைப் போன்ற தோற்றம் அங்கு காணப்படவில்லை ஆனால் அதன் அமைப்புகள்,கற்கள் போன்றனவற்றையும் கண்டெடுத்துச் சான்றுகளைப் பார்த்தனர் அவ்வாறு கறுப்பு நிறத் தாஜ் மஹால் கட்டப்படவில்லை எனவும் இன்று விளக்குகின்றனர்.

ஆனால் அவ்விடத்தில் அமைக்கப்பட்ட ஒரு குளம் ஒன்றின் மீது மாலை நேரங்களில் தாஜ் மகாலின் தோற்றமானது கறுப்பு நிற வடிவில் தெரிவதும் குறிப்பிடத்தக்கது.

அதாவது ஷாஜகான் கவலையில் ஆழும் பொழுது கறுப்பு நிறத் தோளாடை போர்த்தப்பெற்ற இக்குளத்திலிருந்து பிரியமான மனைவி மும்தாஜ் மஹாலுக்குக் கட்டியெழுப்பிய தாஜ்மகாலைப் பார்த்து வந்தார் என்பதும் தாஜ்மகாலின் நிழல் அக்குளத்தில் விழும்பொழுது கறுப்பு நிறமாகத் தோன்றுவதும் குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்பாகும்.

TAJ MAHAL HISTORY IN TAMIL | தாஜ்மகால் பற்றிய கட்டுரை
TAJ MAHAL HISTORY IN TAMIL | தாஜ்மகால் பற்றிய கட்டுரை

மும்தாஜின் வரலாறு

TAJ MAHAL HISTORY IN TAMIL: மும்தாஜ் உண்மையான பெயர் அஜ்மன் பானு பேகம் ஆகும். மும்தாஜ் மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்த ஷாஜகான் மும்தாஜின் நினைவாக தாஜ்மஹாலை கட்டினார்.

மும்தாஜ் தனது 38 வது வயதில் தன்னுடைய 14 வது குழந்தையை பெற்றெடுக்கம்போது இறந்தார். இந்த துக்கத்தை தாங்கி கொள்ள முடியாமல் தான் மும்தாஜ்க்கு அழகிய பளுங்கு கற்களால் ஆன தாஜ்மகாலை கட்டினார் ஷாஜகான், மும்தாஜ் இறந்த உடனே புருகன் என்ற ஊரில் அவரின் உடலை அடக்கம் செய்தார் அதன் பிறகுதான் ஆக்ராவில் மும்தாஜிற்கு தாஜ்மஹால் கட்டவே ஆரம்பித்தார்.

தாஜ்மஹாலின் மர்மங்கள்

TAJ MAHAL HISTORY IN TAMIL: தாஜ்மஹாலில் இருக்ககூடிய மிகப்பெரிய மர்மமாக மக்களால் கருதபடுவது தாஜ்மஹாலில் இருக்கூடிய இரகசிய அரை , இந்த அரை உண்மையில் உள்ளதா என்பது இன்றுவரை எவருக்கும் தெரியாது ஆனால் அந்த இரகசிய அரை இருப்பதற்கான சாத்தியகூறுகள் காணப்படுகின்றன.

அவை என்னவென்றால் தாஜ்மாஹாலின் நுழைவாயிலில் மூடப்பட்ட பாதாள கிணறு போன்ற ஒன்றை காணலாம் இது அந்த இரகசிய அரைக்கு போகும் வழி என்று கூறப்படுகிறது.

TAJ MAHAL HISTORY IN TAMIL | தாஜ்மகால் பற்றிய கட்டுரை
TAJ MAHAL HISTORY IN TAMIL | தாஜ்மகால் பற்றிய கட்டுரை

தாஹ்மஹால் பாதாள அரை

TAJ MAHAL HISTORY IN TAMIL: இந்த பாதாள அரை இருப்பதற்கான மற்றொரு சாத்தியகூறு தாஜ்மஹாலின் நைல் நதி கரையோரம் அமைந்துள்ள ஒரு நுழைவாயில் இது ஒரு கதவு போன்று காணப்பட்டது.

இப்படி ஒரு மர்ம கதவு ஒன்று இருப்பதை 1974-ஆம் ஆண்டு மார்வின் மில்ஸ் என்பவர் எடுத்த புகைப்படத்தின் மூலமாக இது உண்மையென நிரூபித்தார், இந்த கதவு தற்போது செங்கற்களால் சிமெண்ட் வைத்து அடைக்கபட்டுள்ளது.

இந்த கதவு வழியாக பாதாள அறைக்கு செல்லலாம் என்றும் இந்த பாதாள அறையில் மும்தாஜ் அணிந்திருந்த தங்கம் மற்றும் வைடூரிய ஆபரணங்களும் மற்றும் பெரும் செல்வமும் அங்கு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

தாஜ்மஹாலுக்கு முன்பே கட்டபட்ட கட்டிடம்

TAJ MAHAL HISTORY IN TAMIL: இந்த கதவில் கிடைத்த பகுதிகளை வைத்து ஆய்வு செய்தபோது இது தாஜ்மஹால் கட்டுவதற்கு முன்பே 250 ஆண்டுகளுக்கு முன்பே கட்டபட்டது தாஜ்மஹாலை சுற்றியுள்ள கட்டிடங்களும் தாஜ்மஹால் கட்டுவதற்கு முன்பே கட்டபட்டது ஆகும்,

ஆனால் தாஜ்மஹால் கட்டபட்ட காலகட்டத்தில் அவை வெள்ளை நிற பளுங்கு கற்களை கொண்டு புதுபித்தனர், அதுமட்டுமின்றி தாஜ்மஹாலின் அடிப்பகுதி ஏற்கனவே கட்டபட்டது என்றும் அதன் மேல்தான் தாஜ்மஹால் கட்டபட்டது என்றும் கூறப்படுகிறது.

TAJ MAHAL HISTORY IN TAMIL | தாஜ்மகால் பற்றிய கட்டுரை
TAJ MAHAL HISTORY IN TAMIL | தாஜ்மகால் பற்றிய கட்டுரை

தாஜ்மஹால் சுரங்கபாதை மர்மங்கள்

TAJ MAHAL HISTORY IN TAMIL: இந்த தாஜ்மஹால் சுரங்கபாதை படல்கார்க் என்னும் பகுதிக்கு செல்கிறது என்று மக்கள் குறிப்பிடுகின்றனர், இந்த படல்கார்க் ஆனது தாஜ்மஹாலில் இருந்து 240 கிமி தொலைவில் உள்ள ஒரு கோட்டையாகும் இதனை ஆக்ரா கோட்டை என்று கூறுவர் இது முன்பு படல்கார்க் என்று அழைக்கப்பட்டது.

இந்த கோட்டையிலும் ஒரு இரகசிய சுரங்கபாதை இருப்பதும் தெரியவந்தது எனவே இந்த கோட்டையும் தாஜ்மஹாலும் இணைக்கபட்டுள்ளது என்று மக்கள் கூறுகின்றனர்.

என்னதான் இந்த தாஜ்மஹாலை சுற்றி நிறைய கதைகளை மக்கள் கூறினாலும் அவற்றிற்கான தெளிவான ஆதாரங்கள் இன்றுவரை கிடைக்கவில்லை மர்ம கதவு மற்றும் பாதாள அறை போன்றவை இன்றும் கட்டகதைகளாகவே உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *