THIRUVANNAMALAI TEMPLE HISTORY IN TAMIL: திருஅண்ணாமலையார் கோயில் என்றும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் என்றும் அறியப்படும் தலம் சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாகும்.
இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும். திருவாசகத் திருத்தலங்களில் ஒன்று என்ற பெருமையினையும் கொண்ட தலமாகும். இத்தலத்தின் மூலவர் அருணாசலேசுவரர் என்றும், அம்பிகை உண்ணாமுலையாள் என்றும் அழைக்கப்படுகிறார்.
பிரம்மாவிற்கும் திருமாலுக்கும் தங்களுக்குள் யார் பெரியவர் என வாக்குவாதம் எழ, இடையில் நெருப்புப் பிழம்பு தோன்ற ‘நம்மில் யார் இதன் அடியையும் முடியையும் கண்டறிபவரே, நம்மில் பெரியவர்’ என உரைத்தனர்.
TAJ MAHAL HISTORY IN TAMIL | தாஜ்மகால் பற்றிய கட்டுரை
அதன் அடியைக் காண, திருமால் வராக வடிவெடுத்து நிலத்தினைக் குடைந்து சென்று பல ஆண்டுகள் பயணம் செய்தும் அடியைக் காண இயலாமல் திருமால் திரும்ப, அன்ன வடிவமெடுத்து முடியைக் காணச்சென்ற பிரம்மர், வானிலிருந்து கீழே வரும் தாழம்பூவிடம் இது யாதென வினவ அதற்கு இது சிவபெருமானெனவும், நான் சிவனாரின் தலையிலிருந்து பல ஆண்டுகளாக விழுந்துக் கொண்டிருக்கிறேன் என உரைத்த தாழம்பூவிடம் நீ திருமாலிடம், நான் இந்த நெருப்புப் பிழம்பாக நின்ற சிவனின் முடியைக் கண்டுவிட்டேன் எனக் கூறும்படி கேட்டார் பிரம்மர்.
தன்னால் அடியைக் கண்டறிந்தளக்க முடியாததை ஒப்புக் கொண்ட திருமாலிடம், பிரம்மன் நான் பகிரதனுக்காக ஆகாயகங்கையைத் தனது செஞ்சடையில்தாங்கி சிவகங்கை எனப் பெயர்மாற்றிய சிவபெருமானின் முடியைக் கண்டுவிட்டதாகவும், அதற்கு இந்தத் தாழம்பூவே சாட்சி என உரைத்தும் நீ எனக்கு ஒரு குழந்தைக்கு ஒப்பானவனெனக் கூறி எள்ளிநகையாடியதால், ஆத்திரமுற்ற சிவன், பத்மகற்பத்தில் பிரம்மன் திருமாலின் உந்தி கமலத்தில் தோன்றுவாரெனவும், தாழம்பூ சிவபூசையில் இனிமேல் பயன்படாதெனவும் உரைத்தார்.
To Download TNTEXTBOOK Old & New School Book
தாழம்பூ, தன்னிடம் மன்னிப்பு கேட்டதற்கிணங்கிய சிவன் நான் புவியில் எனது பக்தைக்காகக் குழந்தையாக அவதரித்த உத்திர கோசமங்கையெனும் திருத்தலத்தில் மட்டும் பயன்படுவாயெனவும் அருளினார்.
திருமாலால் தன்னை அளக்க இயலாததால் திருமாலை சிறியவரென உரைப்பார்களெனவும், பிரம்மா கேட்ட மன்னிப்பினால் அவருக்கு வழிபாடு நிகழவேண்டி சிவபெருமான் சிவலிங்கத்தின் அடிப்பாகத்தில் பிரம்மர், நடுப்பாகத்தில் திருமால், மேல்பாகத்தில் சிவனும் நின்று சிவலிங்கமாகத் தோன்றினர்.
தன்னை நோக்கித் தவமியற்றிய பார்வதியைத் தன்னுடைய இடப்பாகத்தினிலமர்த்தி அர்த்தநாரீஸ்வரராய் (கருவறையின் பின் புறம் ஐம்பொன் சிலை உள்ளது) நின்ற பெருமைக்கு உரிய தலம் இத்தலம் ஆகும். “திருஅண்ணாமலையை நினைக்க முக்தி” என்று பக்தர்களால் போற்றப்படும் சிறப்பு வாய்ந்த தலம் இது.
THIRUVANNAMALAI TEMPLE HISTORY IN TAMIL: இத்தலத்தினை நால்வர் என்று அழைக்கப்படும் அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகியோர் தேவாரம் பதிகங்களைப் பாடியுள்ளார்கள். இத்தலத்தின் மூலவர் சிவபெருமான் என்றாலும், இங்குள்ள முருகன் மீது அருணகிரி நாதர் பாடல்களைப் பாடியுள்ளார்.
இத்தலத்தில் உள்ள மலை எல்லா யுகங்களிலும் அழியாமல் இருப்பதாகவும், இம்மலையானது சிவபெருமானே என்றும் சைவர்கள் நம்புகிறார்கள். இதனால் இம்மலையை வலம் வருதலைக் கடைபிடிக்கின்றனர். இவ்வாறு மலையை வலம் வருதல் கிரிவலம் என்று அழைக்கப்படுகிறது.
பல்வேறு நகரங்களிலிருந்தும் ஊர்களிலிருந்தும் எண்ணற்ற சித்தர்கள் இந்நகருக்கு வந்து வாழ்ந்து சமாதியடைந்துள்ளார்கள். அவர்களில் ரமணர், சேசாத்திரி சாமிகள், விசிறி சாமிகள், குரு நமச்சிவாயர், குகை நமச்சிவாயர் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களின் சமாதிகள் கிரிவலப் பாதையில் அமைந்துள்ளன.
THIRUVANNAMALAI TEMPLE HISTORY IN TAMIL: முக்தி தரும் தலங்களில் திருவண்ணாமலை நினைத்தாலே முக்தி தரும் என்பது சைவர்களின் நம்பிக்கையாகும்.
சொல்லிலக்கணம்
THIRUVANNAMALAI TEMPLE HISTORY IN TAMIL: அண்ணாமலை – அண்ணா என்ற சொல்லுக்கு நெருங்க இயலாதது என்று பொருளாகும். பிரம்மாவினாலும் திருமாலினாலும் சிவபெருமானின் அடியையும், முடியையும் நெருங்க இயலாததால் இம்மலையை அண்ணாமலை என்று அழைக்கின்றனர்.
THIRUVANNAMALAI TEMPLE HISTORY IN TAMIL – காலம்
THIRUVANNAMALAI TEMPLE HISTORY IN TAMIL: திருவண்ணாமலையிலுள்ள மலையானது 260 கோடி ஆண்டுகள் பழமையானது என பீர்பால் சகானி என்ற விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.
சைவர்களின் நம்பிக்கைப்படி இம்மலையானது கிருத யுகத்தில் நெருப்பு மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபரயுகத்தில் தங்க மலையாகவும், தற்போது நடைபெறும் கலி யுகத்தில் கல் மலையாகவும் இருக்கிறது.
பால் பிரண்டன் எனும் ஆய்வாளார் தனது மெசேஜ் பிரம் அருணாச்சலா எனும் நூலில் “லெமூரியா கண்டத்தின் எஞ்சிய பகுதி திருவண்ணாமலை” எனக் கூறியுள்ளார்.
கோயில் அமைப்பு
THIRUVANNAMALAI TEMPLE HISTORY IN TAMIL: 24 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்கோயில் 6 பிரகாரங்களையும் 9 ராஜகோபுரங்களையும் கொண்டதாகும்.
இக்கோயில் மலையடிவாரத்தில் இருப்பது சிறப்பு. இச்சிவாலயத்தில் 142 சன்னதிகள், 22 பிள்ளையார்கள், 306 மண்டபங்கள், 1000 தூண்களைக் கொண்ட ஆயிரங்கால் மண்டபம், அதன் அருகே பாதள லிங்கம், 43 செப்புச் சிலைகள், கல்யாண மண்பம், அண்ணாமலையார் பாத மண்டபம் ஆகியவை அமைந்துள்ளன.
கோபுரங்கள்
THIRUVANNAMALAI TEMPLE HISTORY IN TAMIL: அண்ணாமலையார் கோயிலில் ஒன்பது கோபுரங்கள் உள்ளன. அவைகளில் ராஜ கோபுரம், பேகோபுரம், அம்மணியம்மன் கோபுரம், திருமஞ்சன கோபுரம், கிளி கோபுரம், வல்லாள மகாராஜா கோபுரம் ஆகியவை குறிப்பிடத் தக்கவையாகும். தெற்கு கட்டை கோபுரம், வடக்கு கட்டை கோபுரம், மேற்கு கட்டை கோபுரம் ஆகிய கோபுரங்கள் உள்ளன.
மண்டபங்கள்
THIRUVANNAMALAI TEMPLE HISTORY IN TAMIL: இச்சிவாலயத்தில் 306 மண்டபங்கள் உள்ளன. அவற்றில் ஆயிரம் கால் மண்டபம், தீப தரிசன மண்டபம், 16 கால் மண்டபம், புரவி மண்டபம், ஏழாம் திருநாள் மண்டபம் ஆகியவை உள்ளன.
சந்நிதிகள்
THIRUVANNAMALAI TEMPLE HISTORY IN TAMIL: சிவபெருமான் இத்தலத்தில் சுயம்பு மூர்த்தியாக உள்ளார். இத்தலத்தில் உள்ள மலையே சிவலிங்கம் என்பது நம்பிக்கை. அம்மன் உண்ணாமலையம்மை ஆவார். முருகன், விநாயகர், அர்த்தநாரீசுவரர், பெருமாள், பைரவர், பிரம்மலிங்கம், பாதாளலிங்கம் ஆகிய சன்னதிகள் உள்ளன.
தீர்த்தங்கள்
- சிவகங்கை தீர்த்தம்
- பிரம்ம தீர்த்தம்
வழிபாடு
THIRUVANNAMALAI TEMPLE HISTORY IN TAMIL: இக்கோவிலில் ஆறுகால பூசை தினமும் நடைபெறுகிறது. பஞ்ச பருவ பூசைகளும், சுக்ரவாரம் மற்றும் சோமவார பூசைகளும் நடைபெறுகின்றன. பஞ்ச பருவ பூசைகள் என்று அழைக்கப்படுபவை, அமாவாசை, கிருத்திகை, பிரதோசம், பௌர்ணமி, சதுர்த்தி பூசைகளாகும்.
குழந்தையில்லாதவர் திருவண்ணாமலையைக் கிரிவலம் வந்து தங்களுக்குக் குழந்தை பிறக்க அண்ணாமலையை வேண்டுகின்றார்கள். அவ்வாறு குழந்தை பிறந்தால் கரும்புத் தொட்டிலினை இட்டு மீண்டும் கிரிவலம் வந்து வேண்டிக் கொள்கின்றார்கள். இவ்வாறு கரும்புத் தொட்டியலிடுவது இக்கோவிலின் முக்கிய நேர்த்திக் கடன்களில் ஒன்றாகும்.
விழாக்கள்
THIRUVANNAMALAI TEMPLE HISTORY IN TAMIL: அண்ணாமலையார் கோயிலில் ஆண்டுதோறும் நான்கு பிரம்மோற்சவங்கள் நடைபெறுகின்றன.
1. ஆனி மாத பிரம்மோற்சவம்
THIRUVANNAMALAI TEMPLE HISTORY IN TAMIL: ஆனி மாத பிரம்மோற்சவம் என்பது தட்சணாயன பிரம்மோற்சவம் என்று அழைக்கப்படுகிறது.
கொடியேற்றத்துடன் தொடங்கும் இந்த விழா, அண்ணாமலையார், உண்ணாமலை அம்மனுக்குச் சிறப்பு அபிசேக ஆராதனையும் பராசக்தியம்மன், விநாயகர், சந்திரசேகரர் சாமிகளுக்குப் பூசைகள் செய்யப்படுகின்றன.
விநாயகர் மற்றும் சின்னநாயகர் அம்மன், சந்திரசேகரர் வீதியுலா, ஆயிரங்கால் மண்டபத்தில் நடராஜர் எழுந்தருளுதல், ஆனி திருமஞ்சனம் ஆகியவை நடைபெறுகின்றன.
2. மாசி மகம் தீர்த்தவாரி
THIRUVANNAMALAI TEMPLE HISTORY IN TAMIL: வள்ளாள ராஜாவின் மகனாகச் சிவபெருமானே பிறந்ததாக ஒரு தொன்மக் கதையுண்டு. இதன் காரணமாக வள்ளாள மகாராஜாவின் திதியைச் சிவபெருமானே அளிக்கின்றார். இந்நிகழ்வினை மாசி மகம் தீர்த்தவாரி என்றழைக்கின்றனர்.
3. கார்த்திகை தீபம்
THIRUVANNAMALAI TEMPLE HISTORY IN TAMIL: கார்த்திகை தீப நாளை ஒட்டி கார்த்திகை தீப பிரம்மோற்சவ திருவிழா அண்ணாமலையார் கோவிலில் நடைபெறுகிறது.
இதில் பத்து நாட்கள் உற்றவர்களின் ஊர்வலங்களும், மூன்று நாள் தெப்ப திருவிழாவும் அதனையடுத்துச் சண்டிகேசுவர் உற்சவமும் நடைபெறுகிறது.
சிவன், கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தில், திருமால், பிரம்மன் இருவருக்கும் அக்னி வடிவமாகக் காட்சி தந்தார். இந்நாளிலேயே தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது.
அன்று அதிகாலையில் அண்ணாமலையார் சன்னதியில் ஒரு தீபம் ஏற்றி, அதன் மூலம் மேலும் ஐந்து தீபங்கள் ஏற்றி பூசைசெய்வர். பின்பு அந்தத் தீபங்களை ஒன்றாக்கி அண்ணாமலையார் அருகில் வைத்து விடுவர்.
இதனை, ‘ஏகன் அநேகனாகி அநேகன் ஏகனாகுதல்’ தத்துவம் என்கிறார்கள். பரம்பொருளான சிவனே, பல வடிவங்களாக அருளுகிறார் என்பதே இந்நிகழ்ச்சியின் உட்கருத்தாகும்.
4. பரணி தீபம்
THIRUVANNAMALAI TEMPLE HISTORY IN TAMIL: பத்தாம் நாள் அதிகாலை 4.00 மணிக்கு, மூலவர் கருவறைமுன் மிகப்பெரிய கற்பூரக் கட்டியில் ஜோதி ஒளி ஏற்றி, தீபாராதனை காட்டி, அதில் ஒற்றை தீபம் ஏற்றுவார்கள்.
இந்த ஒற்றை நெய்தீபத்தால் நந்திமுன் ஐந்து பெரிய அகல் விளக்கு ஏற்றுவார்கள். அதன்பின் உண்ணாமுலை அம்மன் சந்நிதியிலும் ஐந்து பெரிய அகல் விளக்கில் தீபம் ஏற்றுவார்கள். இந்த பரணிதீபம் காலையில் நடக்கும்.
பரணி தீபம் ஏற்றப்பட்ட பிறகு, அதைக் கொண்டு பஞ்சமுகதீபம் ஏற்றப்படுகிறது. பரணி தீபத்தினை இறுதியாக பைரவர் சந்நிதியில் வைக்கின்றனர்.
5. மகாதீபம்
THIRUVANNAMALAI TEMPLE HISTORY IN TAMIL: மகா தீபம் கார்த்திகை தீப திருவிழா நாளின் மாலையில் அண்ணாமலை மலையின் மீது ஏற்றப்படுகிறது. இம்மலை 2,668 அடி உயரமானதாகும். மாலை நேரத்தில் பஞ்சமூர்த்திகள் தீப மண்டபத்தில் எழுந்தருளுகின்றனர்.
அவர்களைத் தொடர்ந்து வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே காட்சிதருகின்ற அர்த்தநாரீசுவரர் உற்சவ கோலம் தீபமண்டபத்திற்கு எடுத்து வரப்படுகிறது. அவர் முன்பு அகண்ட தீபம் ஏற்றப்படுகிறது.
இத்தீபம் ஏற்றப்படுகின்ற அதே நேரத்தில், மலையில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. இந்த மகாதீபத்தினைப் பக்தர்கள் மலையின் மீது ஏறிப் பார்க்கின்றனர்.
பஞ்சபூதம்
THIRUVANNAMALAI TEMPLE HISTORY IN TAMIL: இந்து மதத்தின் படி, நெருப்பு, காற்று, நீர், ஆகாயம் மற்றும் நிலம் ஆகிய ஐந்து கூறுகளின் அண்டத் தொகுப்பாக வாழ்க்கை தொடங்கியது.
ஒவ்வொரு பஞ்ச பூதக் கோயிலிலும் சிவபெருமான் ஐந்து அங்கங்களை வெளிப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. அவர் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் பிருத்வி லிங்கமாக, நிலச் சின்னமாகத் தோன்றினார்.
அண்ணாமலையார் கோயிலில் அக்னி லிங்கமாகவும், ஜம்புகேஸ்வரர் கோயிலில் நீரைக் குறிக்கும் அப்பு லிங்கமாகவும், காளஹஸ்தீஸ்வர கோயிலில் காற்றைக் குறிக்கும் வாயுலிங்கமாகவும், நடராஜர் கோயிலில் வானத்தைக் குறிக்கும் ஆகாச லிங்கமாகவும் தோன்றினார்.
இந்து புராணங்களில், பார்வதி தேவி சிவபெருமானின் கண் இமைகளை சிறிது நேரம் மூடினார். ஒரு வினாடியின் ஒரு பகுதியே இருந்தபோதிலும், அந்த வினாடியில் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து ஒளியும் மறைந்து, பல ஆண்டுகளாக பிரபஞ்சம் இருளில் மூழ்கியது.
அதன் பிறகு தேவியும் மற்ற தேவர்களும் தவம் செய்தனர். சிவபெருமான் பின்னர் ஆனைமலை மலையின் உச்சியில் எரியும் நெருப்புத் தூணாகத் தோன்றி, பிரபஞ்சத்திற்கு ஒளியை மீட்டெடுத்தார்.
பின்னர் அவர் பார்வதியுடன் இணைந்து சிவனின் பாதி பெண், பாதி ஆண் வடிவமான அர்த்தநாரீஸ்வரரை உருவாக்கினார். அண்ணாமலை, அல்லது சிவப்பு மலை, அண்ணாமலையார் கோவிலுக்கு பின்னால் அமைந்துள்ளது மற்றும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ளது. மலையானது தூய்மையானது மற்றும் லிங்கமாக அல்லது சிவனின் அடையாளப் படமாகப் போற்றப்படுகிறது.
அதர ஸ்தலம்
THIRUVANNAMALAI TEMPLE HISTORY IN TAMIL: அத்தாரா ஸ்தலம் என்பது தெய்வங்களும் தெய்வங்களும் கூட பிரார்த்தனை செய்ய வரும் ஒரு கோயில். அத்தரா ஸ்தலம் வளாகத்தில் ஆறு கோவில்கள் உள்ளன. ஆறு கோவில்களில் இது மணிபூரக ஸ்தலம். பிரம்மா, விஷ்ணு, சூரியன், சந்திரன் மற்றும் எட்டு வசுக்கள் இக்கோயிலில் வழிபட்டதாகக் கூறப்படுகிறது.
திருவண்ணாமலை மலையில் சித்தர்கள் என்று அழைக்கப்படும் பல அற்புதமான உயிரினங்கள் வாழ்ந்துள்ளன. அருணகிரிநாதர், விடாபட்ச் தேவர், குரு நமச்சிவாயர், குகை நமச்சிவாயர், அருணாசல தேசிகர், தெய்வசிகாமணி, மகான் சேஷாத்ரி சுவாமிகள், ஸ்ரீ யோகி ராம் சூரத் குமார் மற்றும் ஸ்ரீ ரமண மகரிஷி ஆகியோர் இங்கு வாழ்ந்த புகழ்பெற்ற துறவிகள் ஆவார். கோயிலும் அதைச் சுற்றியுள்ள மலைகளும் பல பெரிய ஆன்மீகத் தலைவர்களின் வாழ்க்கைக் கதைகளுடன் பின்னிப் பிணைந்துள்ளன.