BHARATHIYAR HISTORY IN TAMIL: சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (Subramania Bharati, திசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921) கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர்.
பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீன தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார். தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு, பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார்.
தம் எழுத்துகள் மூலமாக மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். எட்டப்ப நாயக்கர் மன்னர் இவருடைய கவித்திறனை மெச்சி, கலைமகள் எனப் பாெருள்படும் பாரதி என்ற பட்டம் வழங்கினார்.
IPHONE 15 SERIES FEATURES: ஐபோன் 15 சீரிஸ் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்
பாரதியாரின் நூல்கள் தமிழ்நாடு மாநில அரசினால் 1949-ஆம் ஆண்டில் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. இந்தியாவிலேயே முதன்முதலாக நாட்டுடைமை ஆக்கப்பட்ட இலக்கியம் பாரதியாருடையதாகும்.
இவரை சிந்துக்குத் தந்தை, செந்தமிழ்த் தேனீ, புதிய அறம் பாட வந்த அறிஞர், மறம் பாட வந்த மறவன் என்றெல்லாம் பாரதிதாசன் இவரைப் புகழ்ந்துள்ளார். இவர் இந்தியா, விஜயா முதலான இதழ்களை நடத்தி, விடுதலைப் போருக்கு வித்திட்டவர்.
பாரதி, இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். பால கங்காதர திலகர், உ. வே. சாமிநாதையர், வ. உ. சிதம்பரம் பிள்ளை, மகான் அரவிந்தர் முதலியோர் இவரின் சமகாலத்தைய மனிதர்கள் ஆவர். இவர் விவேகானந்தரின் சீடரான, சகோதரி நிவேதிதையைத் தமது குருவாகக் கருதினார்.
புனைப்பெயர்கள் / BHARATHIYAR HISTORY IN TAMIL
- காளிதாசன்
- சக்திதாசன்
- சாவித்திரி
- ஷெல்லிதாசன்
- நித்திய தீரர்
- ஓர் உத்தம தேசாபிமானி
சிறப்பு பெயர்கள்
- மகாகவி
- மக்கள் கவிஞர்
- வரககவி
- தேசியக்கவி
- விடுதலைக்கவி
- அமரக்கவி
- முன்னறி புலவன்
- தமிழ்க்கவி
- உலககவி
- தற்கால இலக்கியத்தின் விடிவெள்ளி
- பாட்டுக்கொரு புலவன் பாரதி
- நீடு துயில் நீக்கப் பாடி வந்த நிலா
- காடு கமழும் கற்பூரச் சொற்கோ
- புதுக்கவிதையின் முன்னோடி
- பைந்தமிழ் தேர்பாகன்
- சிந்துக்குத் தந்தை
- மீசை கவிஞன்
- முண்டாசு கவிஞன்
பாரதியார் படைப்புகள்
- குயில் பாட்டு
- கண்ணன் பாட்டு – இந்துக் கடவுளான கண்ணன் மீது பாடிய பாடல்களின் தொகுப்பாகும்.
- சுயசரிதை
- தேசிய கீதங்கள்
- பாரதி அறுபத்தாறு
- ஞானப் பாடல்கள்
- தோத்திரப் பாடல்கள்
- விடுதலைப் பாடல்கள்
- விநாயகர் நான்மணிமாலை
- பாரதியார் பகவத் கீதை (பேருரை)
- பதஞ்சலியோக சூத்திரம்
- நவதந்திரக்கதைகள்
- உத்தம வாழ்க்கை சுதந்திரச்சங்கு
- ஹிந்து தர்மம் (காந்தி உபதேசங்கள்)
- சின்னஞ்சிறு கிளியே
- ஞான ரதம்
- பகவத் கீதை
- சந்திரிகையின் கதை
- பாஞ்சாலி சபதம்
- புதிய ஆத்திசூடி
- பொன் வால் நரி
- ஆறில் ஒரு பங்கு
நாட்டுத் தொண்டு
BHARATHIYAR HISTORY IN TAMIL: சுதரந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றுள்ளார். வெள்ளையர் ஆட்சியின் கீழ் அடிமைப்பட்டுக் கிடந்த இந்திய மக்களின் உள்ளங்களில் இவரின் பாடல்கள் விடுதலை வேட்கை என்னும் காட்டுத்தீயை மூட்டும் அக்கினிக் குஞ்சுகளாய் அமைந்தன.
சமுதாயத் தொண்டு
BHARATHIYAR HISTORY IN TAMIL: பெண் விடுதலைக்காவும், சாதி பேதங்களற்ற சமுதாயத்தை உருவாக்கவும், மூடப்பழக்க வழக்கங்களையும் அடியோடு ஒழிக்கவும் போராடினார்.
இலக்கியத் தொண்டு
BHARATHIYAR HISTORY IN TAMIL: பாரதியார் தமிழுக்கு வளஞ்சேர்க்கும் இலக்கியங்களைப் படைத்தார்,. அவருடைய கவிதைகளில் கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் போன்றவை மிகவும் புகழ் பெற்றவை.
கீதையை மொழிபெயர்த்துள்ளார். ஞானரதம், சந்திரிகையின் கதை, தராசு முதலிய உரைநடை இலக்கியங்களை எழுதியுள்ளார்.
1887ஆம் ஆண்டு அவருடைய தாயார் இலக்குமி அம்மாள் காலமானார். அப்போது பாரதிக்கு 5 வயது. தாயின் இறப்புக்கு பிறகு பாட்டி பாகீரதி அம்மாளிடம் கொஞ்சம் நாள் வளர்ந்து வந்தார்.
1893 – இளமையிலேயே கவிபாடும் திறமை பெற்றிருந்த சுப்பிரமணியன், எட்டையபுர சமஸ்தானப் புலவர்கள் அவையில் பாரதி என்ற பட்டம் பெற்றார். அன்று முதல் இவர் “சுப்பிரமணிய பாரதியார்”என அழைக்கப்பெற்றார். ஆங்கிலக்கவிஞர் ஷெல்லியின் மீது கொண்ட ஈடுபாட்டினால் தனக்கு “ஷெல்லிதாசன்’ என்னும் புனைபெயரை சூட்டிக் கொண்டார்.
1897 ஆம் ஆண்டு செல்லம்மா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.
1898 – 1902 – பாரதியார் தனது அத்தையின் ஆதரவில் காசியில் வாழ்ந்தார். காசி இந்துக் கல்லூரியில் மெட்ரிகுலேஷன் தேரச்சி பெற்றார். பின்னர் அலகாபாத் சர்வகலாசாலையில் புதுமுகத் தேர்வில் முதன்மையாகத் தேர்வு பெற்றார். வடமொழியோடு இந்தியிலும் தேர்ச்சி பெற்றார்.
To Know More About Blogangle
1902-1903 – எட்டையபுரம் மன்னர் அழைப்பிற்கிணங்க எட்டையபுரம் வந்தார். அரசவைக் கவிஞராகப் பணி புரிந்தார். 1903 இல் பணியை விட்டு விலகினார்.
1904 – மதுரையில் சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார். பின் அதனை விடுத்து சென்னையில் சுதேசமித்திரன் நாளிதமில் துணையாசிரியராகப் பணி புரிந்தார். மதுரையில் பாரதி எழுதிய பாடல் ‘விவேகபானு’ இதழில் வெளியானது.
1904 – நவம்பர் முதல் ஆகஸ்ட் 1906 வரை சுதேசிமித்திரனில் உதவி ஆசிரியராக பணியாற்றினார்.
1905-1906 – கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி -யின் நட்பு கிடைத்தது. தாதாபாய் நெளரோஜி தலைமையில் கோல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் கலந்து கொண்டார். விவேகானந்தரின் சிஷியை நிவேதிதா தேவியைச் சந்தித்து அவரையே தனது குருவாக ஏற்றுக் கொண்டார். அரசியல் குருவாக பாலகங்காதர திலகரையும் ஏற்றுக் கொண்டார்.
1907 – இந்தியா என்ற வார இதழின் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். உடன் Young India என்ற ஆங்கில இதழையும் பொறுப்பேற்று நடத்தினார். சூரத் காங்கிரஸ் மாநாட்டிற்குச் சென்றார். அங்கு திலகர், லாலா லஜபதிராய், அரவிந்தர் போன்றோரைச் சந்தித்தார்.
1908 – ஸ்வதேச கீதங்கள் என்ற முதல் நூலை வெளியிட்டார். தனது உணர்ச்சிமிக்க பாடல்களால் இந்தியா பத்திரிகையின் மூலமாக விடுதலைப் போராட்டத்தை நடத்தினார். அதனால் ஆங்கிலேயே அரசு பாரதி மீது வாரண்ட் பிறப்பித்தது. நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க பாரதி புதுவை சென்றார். அங்கே குவளைக் கண்ணனின் நட்பு கிடைத்தது.
1909 – பாரதியின் இரண்டாம் கவிதைத் தொகுதியான ஜன்மபூமி வெளியானது.
1912 – பாரதி கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம், புதிய ஆத்திச்சூடி போன்ற கவிதை நூல்களை வெளியிட்டார். பகவத்கீதையை தமிழில் மொழிபெயர்த்தார்.
BHARATHIYAR HISTORY IN TAMIL: 1918 – கடலூர் அருகே பாரதி கைது செய்யப்பட்டு 34 நாள்கள் கழித்து விடுதலையானார். பின்பு அங்கிருந்து கடையம் புறப்பட்டுச் சென்றார்.
1918-1920 – கடையத்தில் வசித்த பாரதி வறுமையால் மிகவும் துன்பமடைந்தார். அவருக்கு யாவரிடமிருந்தும் உதவி கிடைக்கவில்லை. மீண்டும் சென்னை வந்த சுதேசமித்திரனில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார்.
1921 – திருவல்லிக்கேணி கோயில் யானை பாரதியாரைத் தாக்கியதில் அவர் நோய்வாய்ப்பட்டார்.
இதே ஆண்டு செப்டம்பர் 12 (11 ஆம் தேதி நள்ளிரவு தாண்டி, 12 ஆம் தேதி) அதிகாலை 1.30 மணியளவில் வீர தமிழனின் நா ஓய்ந்தது. எனினும் அவரின் வீர உரைகளும், பாடல்களும் செவிகளில் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. அப்போது பாரதிக்கு 39 வயது.
1948 – எட்டையபுரத்தில் பாரதிக்கு மணிமண்டபம் எழுப்பப்பட்டது.
1960 – பாரதியாரின் உருவம் பொறிக்கப்பட்ட தபால் அஞ்சல் தலை இந்திய அரசால் வெளியிடப்பட்டது.
1982 – பாரதியாரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது.
BHARATHIYAR HISTORY IN TAMIL: 1999 – எட்டயபுரத்தில் பாரதிக்கு மணிமண்டபமும், மைய மண்டபத்தில் மகாகவி பாரதியின் ஏழு அடிய உயர திருவுருவச்சிலை அமைக்கப்பட்டு அன்றைய பஞ்சாப் மாநில முதல்வர் தர்பாராசிங் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.(11.12.1999)
பாரதியார் – சிறப்பு
- BHARATHIYAR HISTORY IN TAMIL: “புரட்சி, பொதுவுடைமை” என்ற வார்த்தையை முதன் முதலில் பயன்படுத்தியவர் = பாரதியார்
- முதன் முதலில் தமிழ்க்கவிதைகளில் புதிய முயற்சிகளை மேற்கொண்வர் = பாரதியார்.
- அவரின் கவிதை வடிவம் தமிழின் மரபான செய்யுள் வடிவமும் நாட்டார் பாடல்களின் ஓசை வடிவமும் கலந்தது.
- தமிழில் புதுமையான வடிவத்தில் அமைந்த முதல் வசன கவிதை நூல் = பாரதியாரின் “காட்சி”.
- கவிதையில் சுயசரிதம் எழுதிய முதல் கவிஞர் இவரே
- பாரதியாரின் நூல்கள் தமிழ்நாடு மாநில அரசினால் 1949-ஆம் ஆண்டில் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. இந்தியாவிலேயே முதன்முதலாக நாட்டுடைமை ஆக்கப்பட்ட இலக்கியம் பாரதியாருடையதாகும்
- பரலி நெல்லையப்பர் = பாரதியார் ஒரு அவதாரப் புருஷர், இவர் நூலைத் தமிழர் வேதமாகக் கொள்வார்களாக
- நாமக்கல் கவிஞர் = பாரதியை நினைத்திட்டாலும் சுதந்திரத்தின் ஆவேசம் சுருக்கென்று ஏறும்; இந்தியன் நான் என்றிடும் நல் இறுமாப்பு உண்டாம்
- கவிமணி = பாட்டுக்கொரு புலவன் பாரதி
- கவிமணி = இவரின் பாப்பா பாட்டில் நெஞ்சை பறிகொடுத்தேன்
- பாரதியின் சுயசரிதமே தமிழின் முதல் சுயசரிதம்
மறைவு
BHARATHIYAR HISTORY IN TAMIL: ஜூலை 1921-ல் ஜூலை மாதம் திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோவிலுக்கு சென்றபோது, எதிர்பாராவிதமாக அந்த கோவில் யானையால் தூக்கி எறியப்பட்டதால் பலத்த காயமுற்று மிகவும் நோய்வாய்ப்பட்டார். செப்டம்பர் 11, 1921-ல் தனது 39-ஆவது வயதில் காலமானார்.
நினைவுச் சின்னங்கள்
BHARATHIYAR HISTORY IN TAMIL: எட்டயபுரத்திலும், சென்னையில் உள்ள திருவல்லிக்கேணியிலும் பாரதியார் வாழ்ந்த இடத்தை பாரதியாரின் நினைவு இல்லமாக தமிழ்நாடு அரசு மாற்றி இன்று வரை பொதுமக்களின் பார்வைக்காக பராமரித்து வருகிறது.
எட்டயபுரத்தில், பாரதியின் நினைவாக மணிமண்டபம் அமைக்கப்பட்டு, திருவுருவச் சிலையும் வைக்கப்பட்டுள்ளது.