KALAHASTI TEMPLE HISTORY IN TAMIL | திருக்காளத்தி காளத்தியப்பர் கோயில் பற்றிய கட்டுரைKALAHASTI TEMPLE HISTORY IN TAMIL | திருக்காளத்தி காளத்தியப்பர் கோயில் பற்றிய கட்டுரை

KALAHASTI TEMPLE HISTORY IN TAMIL: திருக்காளத்தி காளகத்தீசுவரர் கோயில் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இத்தலம் கண்ணப்பர் தொண்டாற்றிப் பேறு பெற்ற தலம் எனப்படுகிறது.

பஞ்சபூதத் தலங்களில் ஒன்றான இத்தலம் வாயுத் தலம் ஆகும். புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவரும் தஞ்சை பெரிய கோவில் கட்டிய இராசராச சோழன் மகனும், தென்னிந்தியாவின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவருமான இராசேந்திர சோழன் கட்டிய கோவிலாகும்.

இத்தலத்தில் சிலந்தி, பாம்பு, யானை என்பன சிவலிங்கத்தை பூசித்ததாகவும் அதனால் தான் இதற்கு காளத்தி (காளகத்தி) என பெயர் பெற்றதாகவும் தல புராணம் கூறுகிறது. பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.

RAMESHWARAM TEMPLE HISTORY IN TAMIL | இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில் பற்றிய கட்டுரை

வடமொழிப் புராணங்கள் பலவும் இக் கோயிலைப் போற்றுகின்றன. தமிழில் திருக்காளத்திப் புராணம், சீகாளத்தி புராணம் என்னும் இரண்டு நூல்கள் இதன் புராணத்தைக் கூறுகின்றன.

அப்பர் இங்குள்ள இறைவனைக் காளத்திநாதர், ஞானப் பூங்கோதையார் பாகத்தான் என்று குறிப்பிடுகிறார். அகண்ட வில்வ மரம், கல்லால மரம் ஆகிய இரண்டும் இக்கோயிலின் தல மரங்கள். இந்த ஊருக்கு அருகில் பொன்முகரி ஆறு ஓடுகிறது.

KALAHASTI TEMPLE HISTORY IN TAMIL | திருக்காளத்தி காளத்தியப்பர் கோயில் பற்றிய கட்டுரை
KALAHASTI TEMPLE HISTORY IN TAMIL | திருக்காளத்தி காளத்தியப்பர் கோயில் பற்றிய கட்டுரை

KALAHASTI TEMPLE HISTORY IN TAMIL – வரலாறு

KALAHASTI TEMPLE HISTORY IN TAMIL: இந்தியாவில் வாயு கடவுளுக்கு கட்டப்பட்ட ஒரே கோயிலான காளகத்தி கோயில் சோழர்களின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவரும் தஞ்சை பெரிய கோவிலை கட்டிய இராசராச சோழனின் மகனும், தென்னிந்தியாவின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவருமான இராசேந்திர சோழன் கட்டிய கோவிலாகும்.

மிகப் பழமை வாய்ந்த தென்னாட்டுக் கோயில்களுள் இதுவும் ஒன்று. சங்கத் தமிழ் இலக்கியங்களில் இக் கோயில் பற்றிய குறிப்புக்கள் உள்ளன. பல்லவர்கால நாயன்மார்களின் தேவாரப் பதிகங்களிலும் இக்கோயில் பற்றிய தகவல்கள் உள்ளன.

பொ.ஊ. 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுக்களும் இக்கோயிலில் உள்ளன. சோழர்களும், விசய நகரத்து மன்னர்களும் பல கொடைகளை இக்கோயிலுக்கு அளித்துள்ளனர். பல்லவர் காலத்தில் இருந்த இக் கோயிலை பொ.ஊ. 10 ஆம் நூற்றாண்டளவில் சோழர்கள் திருத்தி அமைத்தனர்.

முதலாம் குலோத்துங்க சோழன், தெற்குவாயிலில் அமைந்துள்ள கலிகோபுரத்தை அமைப்பித்தான். மூன்றாம் குலோத்துங்க சோழனும் சில சிறு கோயில்களை இங்கு எடுப்பித்துள்ளான்.

பொ.ஊ. 12 ஆம் நூற்றாண்டில் மன்னன் வீரநரசிம்ம யாதவராயன் தற்போதுள்ள சுற்று வீதிகளை அமைப்பித்ததுடன், நாற்புறமும் நான்கு கோபுரங்களையும் கட்டுவித்தார். பொ.ஊ. 1516 ஆம் ஆண்டைச் சேர்ந்த விசயநகரப் பேரரசர் கிருட்டிணதேவராயனின் கல்வெட்டு ஒன்றின்படி, அவர் நூறுகால் மண்டபமொன்றையும் மேற்குப் புறக் கோபுரத்தையும் கட்டுவித்ததாகத் தெரிகிறது.

இக்கோவிலின் மூலவர் ஞானபிரசுனாம்பிகை தாயார் செங்குந்த கைக்கோளர் மரபு வெள்ளாத்தூரார் கோத்திரத்தில் தோன்றியவர். இதனால் இங்கு நடைபெறும் சிவன் பார்வதி திருக்கல்யாணத்தில் இம்மரபினர் சார்பில், பெண் வீட்டு சீதனம் கொண்டுவந்து சமர்ப்பிப்பது வழக்கம்.

கட்டிடக்கலை

KALAHASTI TEMPLE HISTORY IN TAMIL: லிங்க வடிவில் உள்ள சிவனின் உருவம் யானையின் தும்பிக்கை போன்ற வடிவத்தில் வெள்ளைக் கல்லால் ஆனது. கோவில் தெற்கு நோக்கியும், கருவறை மேற்கு நோக்கியும் உள்ளது. இக்கோயில் மலையடிவாரத்தில் அமைந்துள்ளது.

அதே சமயம் இக்கோயில் ஒற்றைக்கல் மலையில் செதுக்கப்பட்டதாக ஒரு நம்பிக்கை உள்ளது. தரை மட்டத்திலிருந்து 9 அடி (2.7 மீ) உயரத்தில் பாறையில் வெட்டப்பட்ட விநாயக சன்னதி உள்ளது.

வல்லப கணபதி, மஹாலக்ஷ்மி-கணபதி, சஹஸ்ர லிங்கேஸ்வரர் போன்ற அரிய உருவங்கள் கோயிலில் காணப்படுகின்றன. காளஹதீஸ்வரரின் மனைவியான ஞானபிரசனம்மாம்பாவின் பெரிய சன்னதி உள்ளது.

கோயிலில் காசி விஸ்வநாதர், அன்னபூர்ணா, சூர்யநாராயணா, சத்யோகணபதி மற்றும் சுப்ரமணியர் ஆகியோருக்கு சிறிய சன்னதிகள் உள்ளன. சத்யோகி மண்டபம் மற்றும் ஜல்கோடி மண்டபம் என இரண்டு பெரிய மண்டபங்கள் உள்ளன. சூரிய புஷ்கரணி மற்றும் சந்திர புஷ்கரணி என இரண்டு நீர்நிலைகளுடன் தொடர்புடையது.

KALAHASTI TEMPLE HISTORY IN TAMIL | திருக்காளத்தி காளத்தியப்பர் கோயில் பற்றிய கட்டுரை
KALAHASTI TEMPLE HISTORY IN TAMIL | திருக்காளத்தி காளத்தியப்பர் கோயில் பற்றிய கட்டுரை

காளஹஸ்தி கோவில் சிறப்புகள்

KALAHASTI TEMPLE HISTORY IN TAMIL: புகழ்பெற்ற மன்னர்களில் ஒருவர் தஞ்சை பெரிய கோவில் கட்டிய ராஜராஜ சோழன் மகனும் தென்னிந்தியாவின் புகழ் பெற்ற மன்னர்களில் ஒருவர் ராஜேந்திர சோழன் கட்டிய கோவில் ஆகும். இந்த கோவிலில் சிலந்தி, பாம்பு, யானை, இவை மூன்றும் சிவலிங்கத்தை பூசித்ததாகவும் அதனால் இக்கோவிலில் (காலஹஸ்தி) என பெயர் பெற்றதாகவும் தல புராணங்கள் கூறுகின்றன.

ஸ்ரீ காளஹஸ்தி என்ற பெயரை நாம் கேட்டவுடன் முதலில் நினைவிற்கு வருவது ராகு கேது பரிகார பூஜை செய்யும் தலங்கள்தான் ஞாபகம் வரும். ஆண்கள் பெண்கள் அவர்கள் திருமணங்கள் தடை பெற்று இருக்கும் நபர்கள் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பேர் இங்கு ராகு கேது பரிகார பூஜை செய்ய வருகின்றனர். பஞ்சபூதங்களின் வாழ்விற்காக இந்த திருத்தலம் 500 வருடங்களுக்கும் மேல் கட்டப்பட்ட பழமையான கோவில் என்று கூறுகின்றனர்.

இந்த கோயிலின் வரலாற்றை நாம் கேட்கையில் இப்படியும் ஒரு பக்தி இருக்கும் என்கிற அளவிற்கு நம்மை வியப்பில் ஆழ்த்தி விடுகிறது. சைவத் தலமான ஸ்ரீ காலகஸ்தியில் சிவபெருமான் காலத்தினால் என்ற பெயரோடு ஞானப் பிரசன்னாம்பிகை தாயாரோடு அருள் பாலித்து கொண்டு இருக்கிறார்.

பல நூறு வருடங்களுக்கு முன் வனத்தில் இருந்த காட்டில் சிவபெருமானே சிலந்தி ஒன்று வந்து வழிபடுமாம். மழையில் நனைந்து கொண்டிருந்த சிவபெருமானே கண்ட அந்த சிலந்தி உமிழ்நீரில் இருந்து உருவாகும் வலையை பின்னி வைத்ததாம்.

அப்போது அங்க பேந்த கனமழையில் சட்டுனு திடீரென்று இடிஒன்று எடுத்ததில் அந்த சிலந்தி வலை எரிந்து சாம்பலானது. அதைப் பார்த்த சிலந்தி தாங்கி கொள்ள முடியாமல் உடனே இறந்து போனதாம். சிவபெருமான் அந்த சிலந்தியின் பக்தியை மெச்சிய பார்த்து சிலந்திக்கு உடனே முத்தி கொடுத்தாராம்.

ஸ்ரீ காளஹஸ்தி கோயில் பெயர் எப்படி வந்தது?

KALAHASTI TEMPLE HISTORY IN TAMIL: அகத்தியர் ஒருவர் இந்த கோவில்க்கு வந்து சிவபெருமானே வழிபடு செய்தனர்.இங்க இருக்கும் விநாயகரை வணங்காமல் சென்றதும் விநாயகரை கோபம் மூட்டியது. அதனால் விநாயகர் அருகில் இருக்கும் பொன்முகலி ஆற்றின் நீரை முழுமையாக வற்றி போக செய்துவிட்டார்.

அதனால் மனம் வருந்திய அகத்திய முனிவர் அதன் பின்னர் விநாயகரை பிரதிஷ்டை செய்து வணங்கியதாக தளபுராணம் கூறுகின்றது. பிற் காலத்தில் விநாயகர் பிரதிஷ்டை செய்த இந்த இடம் ஆழத்தில் சென்றதால் இந்த விநாயகர் பாதாள விநாயகர் என்று எல்லோராலும் அழைக்கப்படுகிறது. இன்றும் இந்த பாதாள விநாயகரை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் 20 அடி ஆழத்திற்கு செல்ல வேண்டியதாக உள்ளது.

இக்கோவிலின் பற்றி பல குறிப்புகள் தேவாரப் பாடல்களும், புராணங்களும் மிக தெளிவாக கூறுகின்றது. இங்க வரும் ஏராளமான பக்தர்களுக்கு எத்தனை குறை இருந்தாலும் அவற்றை உடனே நீக்குவதாக நம்பிக்கை உள்ளது.

திருப்பதி செல்பவர்கள் பெரும்பாலும் அங்கு இருக்கும் காலஹஸ்தே நாதரை வழிபடாமல் யாரும் வீடு திரும்பவில்லை அனைவரும் ஒரு முறையேனும் தரிசிக்க வேண்டிய திருத்தலங்களில் திருகாளஹஸ்தி திருக்கோயிலும் ஒன்று என்பதை நாம் எல்லாரும் அறிய வேண்டும்.

ஸ்ரீ காளகஸ்தி கோவில் ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் திருப்பதி மாவட்டத்தில் ஸ்ரீ வெங்கடாஜலபதி கோவிலின் ஸ்வர்ணமுகி ஆற்றங்கரையில் அங்கு அமைந்துள்ளன.

KALAHASTI TEMPLE HISTORY IN TAMIL | திருக்காளத்தி காளத்தியப்பர் கோயில் பற்றிய கட்டுரை
KALAHASTI TEMPLE HISTORY IN TAMIL | திருக்காளத்தி காளத்தியப்பர் கோயில் பற்றிய கட்டுரை

பிரார்த்தனைகள்

KALAHASTI TEMPLE HISTORY IN TAMIL: ராகு கேது தோஷம் உள்ளவர்கள் திருமணம் நீண்ட காலமாக ஆகாதவர்கள் போன்ற பல பிரச்சனைகளில் அவதிப்படுபவர்கள். இக்கோயிலுக்கு வந்து ராகு தோஷம் கேது தோஷம் நீங்கவும் சர்பதோசம் நீங்கவும் பக்தர்கள் பிரார்த்தனை செய்து கொண்டனர். இந்த கோயிலில் உள்ள சரஸ்வதி தீர்தத்தில் நீராடி அருந்தினால் பேச்சு சரியாக பேச முடியாத குழந்தைகள் கூட நன்கு பேசும் என்று பக்தர்கள் கூறுகின்றனர்.

ஸ்ரீகாளஹஸ்தி கோயிலின் முக்கியத்துவம்

KALAHASTI TEMPLE HISTORY IN TAMIL: காளஹஸ்தீஸ்வரரின் அருளைப் பெறுவதற்காக ஏராளமான பக்தர்கள் இந்த தெய்வீக ஸ்தலத்திற்கு வருகை தருகின்றனர். இந்த புனித ஸ்தலத்தில் உள்ள லட்சக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கை வலுவடைந்து, தங்கள் கிரக அட்டவணையில் இருந்து ராகு-கேதுவின் தோஷங்களை நீக்கும் பூஜைகள் மற்றும் பூஜைகள் மூலம் தங்கள் விருப்பங்களை நிறைவேற்றுகிறது.

பரிகார பூஜையை செய்வது எப்படி?

KALAHASTI TEMPLE HISTORY IN TAMIL: காளஹஸ்தி திருக்கோயில் ராகு, கேது கிரகங்களின் சிறந்த பரிகாரத் தலமாக திகழ்கிறது. இந்த ஆலயத்தில் தினமும் காலை 7.30 மணி முதல் இரவு 9 மணி வரை பரிகார பூஜை செய்யப்படுகிறது. இதற்காக கோவில் தேவஸ்தான அலுவலகத்தில் அனுமதி சீட்டு விற்பனை செய்கிறார்கள்.

காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த அனுமதி சீட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதில் பரிகார பூஜை செய்பவர் ஒரு அனுமதி சீட்டு வாங்கினாலே போதுமானது. ஒரு அனுமதி சீட்டுக்கு இரண்டு பேர் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள்.

பூஜைக்குரிய பொருட்கள் அனைத்தையும் தேவஸ்தான அலுவலகத்தில் அனுமதி சீட்டு பெறும் போதே வழங்கி விடுகிறார்கள். சுமார் 45 நிமிடம் இந்த பூஜை நடைபெறும். அர்ச்சகர்களின் வழிகாட்டுதல் படி இந்த பரிகார பூஜை சிறப்பாக செய்யப்படுகிறது. ஒரு வேளை பூஜையின் போது 200 பேர் வரை கலந்து கொள்ளலாம்.

பரிகார பூஜை செய்பவர்கள் பூஜைக்கு முதல் நாள் மாலையோ அல்லது இரவோ காளஹஸ்தி கோயிலுக்குச் செல்வது நல்லது. அப்போது தான் காலையில் சீக்கிரமாக எழுந்து குளித்து முடித்து பூஜைக்கு தயாராவதற்கு வசதியாக இருக்கும். அங்கே தங்குவதற்கு ஏராளமான விடுதிகளும், அறை வசதிகளும் உள்ளன.

KALAHASTI TEMPLE HISTORY IN TAMIL | திருக்காளத்தி காளத்தியப்பர் கோயில் பற்றிய கட்டுரை
KALAHASTI TEMPLE HISTORY IN TAMIL | திருக்காளத்தி காளத்தியப்பர் கோயில் பற்றிய கட்டுரை

பரிகார பூஜை செய்பவர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை

KALAHASTI TEMPLE HISTORY IN TAMIL: பரிகார பூஜை செய்பவர்கள் காலையில் எழுந்து தலைக்கு குளிக்க வேண்டும். அன்றைய தினம் அசைவ உணவு, மது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். மனதளவில் தூய்மையாக இருத்தல் அவசியம். முடிந்தால் காளஹஸ்தி கோவில் சிவலிங்கத்திற்கு பால் அபிஷேகத்திற்கு பால் வழங்கலாம்.

உங்களது ஜென்ம நட்சத்திரம் வரும் நாளில் இந்த பூஜையை செய்வது மேலும் சிறப்பான பலன்களைத் தரும். ராகு காலத்தில் இந்த பரிகார பூஜை செய்வது சிறப்பு. ராகு, கேது பரிகார பூஜை செய்பவர்கள், ராகு, கேது பகவான்களை தரையில் விழுந்து சாஷ்டாங்க நமஸ்காரம் செய்ய கூடாது. கோவிலுக்கு வெளியே இருக்கும் யாசகர்களுக்கு அன்னதானம் வழங்கலாம்.

இந்த பரிகார பூஜையை செய்த பின்பு வேறு எங்கும் செல்லாமல் நேராக உங்கள் இல்லத்திற்கு தான் செல்ல வேண்டும். பிற கோவில்களுக்கோ, உறவினர் வீடுகளுக்கோ செல்லக் கூடாது. வீட்டிற்கு வந்தவுடன் சிறிது நேரம் கழித்து தலைக்கு ஊற்றி குளிக்க வேண்டும். இந்த நடைமுறைகளை கடைப்பிடிப்பதன் வாயிலாக தோஷங்கள் நீங்கி வாழ்வில் வளத்தையும், முன்னேற்றத்தையும் காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *