RAMESHWARAM TEMPLE HISTORY IN TAMIL | இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில் பற்றிய கட்டுரைRAMESHWARAM TEMPLE HISTORY IN TAMIL | இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில் பற்றிய கட்டுரை

RAMESHWARAM TEMPLE HISTORY IN TAMIL: இராமேசுவரம் இராமநாதசுவாமி திருக்கோயில் (Ramanathaswamy Temple) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர், அப்பர் ஆகியோரின் பாடல் பெற்ற இத்தலம் தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில், ராமேஸ்வரத்தில் அமைந்துள்ளது.

இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. இத்தலத்தில் இராவணனைக் கொன்ற பாவம் தீர இராமன் வழிபட்டார். இக்கோயிலின் மூலவர் பெயர் ராமநாதசுவாமி, அம்மன் பெயர் பர்வத வர்த்தினி.

ராமநாதசுவாமி கோயில் அதன் கம்பீரமான அமைப்பு, கம்பீரமான கோபுரங்கள், சிக்கலான சிற்ப வேலைப்பாடுகள் மற்றும் தாழ்வாரங்கள் ஆகியவற்றிற்காக அறியப்படுகிறது, இது ஒரு கட்டிடக்கலை அதிசயமாக உள்ளது. கோயிலில் வழிபடப்படும் முக்கிய தெய்வம் லிங்க வடிவில் உள்ளது.

சுமார் 17.5 அடி உயரமுள்ள பெரிய சிலையான நந்தி சிலையும் உள்ளது. இங்கு வழிபடப்படும் மற்ற தெய்வங்களில் விசாலாக்ஷி, பர்வதவர்த்தினி, விநாயகர் மற்றும் சுப்ரமணியர், உற்சவ சிலை, சயனகிரிஹா மற்றும் பெருமாள் ஆகியோர் அடங்குவர்.

VARAHI AMMAN HISTORY IN TAMIL | வராகி அம்மன் பற்றிய கட்டுரை

கோயிலின் பின்னணியில் உள்ள புராணக்கதை இந்திய இதிகாசமான ராமாயணத்தில் இருந்து ராமருடன் தொடர்புடையது. ராமர், அசுர அரசன் ராவணனை தோற்கடித்த பிறகு, பிராயச்சித்தத்தின் ஒரு பகுதியாக சிவபெருமானை வழிபட விரும்பியதாக நம்பப்படுகிறது.

காசியில் இருந்து தனக்கு ஒரு லிங்கத்தைக் கொண்டு வருமாறு அனுமனிடம் கேட்கிறார். ஹனுமான் திரும்பி வருவதை தாமதப்படுத்தியபோது, ​​​​சீதா தேவி மணலைக் கொண்டு சிவலிங்கத்தை உருவாக்கினார்,

இதனால் ராமர் பிரார்த்தனை செய்தார். ராமலிங்கம் என்று அழைக்கப்படும் அதே சிவலிங்கம் இப்போது ராமநாதசுவாமி கோவிலில் வழிபடப்படுவதாக நம்பப்படுகிறது. கைலாசத்திலிருந்து அனுமன் கொண்டு வந்த லிங்கம் விஸ்வலிங்கம் என்று அழைக்கப்படுகிறது.

கோயிலுக்குள் 22 தீர்த்தங்கள் (புனித நீர்நிலைகள்) உள்ளன, அங்கு பக்தர்கள் தங்கள் பாவங்களைப் போக்க நீராடுவர்.

கோயில் அமைவிடம்

RAMESHWARAM TEMPLE HISTORY IN TAMIL: மதுரையிலிருந்து கிழக்கே 161 கி. மீ., தொலைவில் வங்காள விரிகுடா கடற்கரையில் ராமேஸ்வரம் எனுமிடத்தில் அமைந்துள்ளது.

RAMESHWARAM TEMPLE HISTORY IN TAMIL | இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில் பற்றிய கட்டுரை
RAMESHWARAM TEMPLE HISTORY IN TAMIL | இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில் பற்றிய கட்டுரை

RAMESHWARAM TEMPLE HISTORY IN TAMIL – தல வரலாறு

RAMESHWARAM TEMPLE HISTORY IN TAMIL: இராவணனிடமிருந்து சீதையை மீட்க, இராவணனிடம் போர் புரிந்து அவனை கொன்றார் ராமன். ராவணன் பிராமணன் ஆதலால் ராமனுக்கு பிரம்மஹத்தி தோஷம் வரக்கூடாது என்பதற்காகவும் இராவணனைக் கொன்ற பாவத்தினை நீங்க ராமன் மணலால் ஆன லிங்கத்தை வைத்து பிரதிசுடை செய்தார்.

எனவே ராமனே ஈசுவரனை வணங்கியதால் இக்கோயில் மூலவர் சிவபெருமானுக்கு இராம நாத சுவாமி என்றும் ராமேசுவரம் அதாவது இராம ஈசுவரம் என்றும் பெயர் பெற்றது. இங்குள்ள அக்னி தீர்த்தத்தில் நீராடி ராமநாதரை வழிபட்டால் பாவங்கள் நீங்கி வாழ்வு வளம்பெருகும் என்பது இந்து தர்ம நம்பிக்கை.

காசி – இராமேசுவரம் யாத்திரை முறை

RAMESHWARAM TEMPLE HISTORY IN TAMIL: காசி, இராமேசுவரம் யாத்திரை செல்பவர்கள் முதலில் ராமேசுவரத்தில் அக்னி தீர்த்தத்தில் நீராடி, மணல் மற்றும் தீர்த்தம் எடுத்துக்கொண்டு காசி சென்று, கங்கை தீர்த்தத்தில் மணலை போட்டுவிட்டு, காசி விசுவநாதருக்கு அக்னி தீர்த்ததை அபிசேகம் செய்து, காசியிலிருந்து கங்கை தீர்த்தம் எடுத்து வந்து, ராமநாதருக்கு அபிசேகம் செய்ய வேண்டும்.

அம்மன் சன்னதி

RAMESHWARAM TEMPLE HISTORY IN TAMIL: இங்கு கோயில் கொண்டுள்ள அம்மன் பெயர் பர்வத வர்தனி அம்மன். பர்வதவர்த்தினி அம்பிகை பீடத்திற்கு கீழே ஆதிசங்கரர் நிறுவிய ஸ்ரீசக்கரம் உள்ளது. சக்தி பீடங்களில் இத்தலம், சேதுபீடம் ஆகும்.

அம்பிகைக்கு சித்திரைப் பிறப்பன்று மட்டும் சந்தனக்காப்பு அலங்காரம் செய்கின்றனர். அம்மன் சன்னதி பிரகாரத்தில் வீடணன் அமைத்த ஆதிசேசன் மீது பள்ளி கொண்ட கோலத்தில் பெருமாள் காட்சி தருகிறார்.

அம்பாள் சன்னதியில் அஷ்டலட்சுமி மற்றும் மேற்கு நோக்கிய சண்டிகேஸ்வரி ஆகியோர் உள்ளனர். முதல் பிரகாரத்தில் சீதை அமைத்த மணல் லிங்கத்திற்கு ராமர் பூஜை செய்யும் சன்னதி அமைந்துள்ளது.

RAMESHWARAM TEMPLE HISTORY IN TAMIL | இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில் பற்றிய கட்டுரை
RAMESHWARAM TEMPLE HISTORY IN TAMIL | இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில் பற்றிய கட்டுரை

சுவாமி சன்னதி

RAMESHWARAM TEMPLE HISTORY IN TAMIL: பல்லாயிரக்கணக்கான ருத்ராட்சங்கள் சேர்த்து பின்னப்பட்ட பந்தலில் நடராசர் காட்சி தருகிறார். யோகக் கலையில் தேர்ச்சி பெறவும், நாகதோச நிவர்த்திக்காகவும் இந்த சன்னதியில் நாகவடிவில் உள்ள பதஞ்சலி முனிவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.

இரு லிங்கங்களுக்கு மத்தியில் சரசுவதி, சங்கரநாராயணர், அர்த்தநாரீசுவரர், ஏகாதச ருத்ர லிங்க சன்னதிகள் அமைந்துள்ளது.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலை பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்

சிவ லிங்கம்

RAMESHWARAM TEMPLE HISTORY IN TAMIL: ராமர் விஷ்ணுவின் அவதாரம் ஆவார். அவர் சிவபெருமானை தனது குரு அல்லது ஆசிரியராக கருதினார். ராமர் பிராமணனான ராவணனை கொன்றதால் பிரம்மஹத்தி தோஷத்தை பெற்றார்.

எனவே தன் தோஷத்தை கழிக்க ஒரு சிவ லிங்கத்தை நிறுவினார். இது கோவிலுக்குள் நிறுவப்பட்டுள்ளது மற்றும் இந்து மதத்தைப் பின்பற்றுபவர்களுக்கான மிக முக்கியமான யாத்திரை மையங்களில் ஒன்றாகும்.

இரண்டு லிங்கங்கள்

RAMESHWARAM TEMPLE HISTORY IN TAMIL: பலருக்கு தெரியாத ஒரு தகவல் என்னவென்றால் ராமநாதசுவாமி கோயிலில் 2 லிங்கங்கள் உள்ளன. ஒன்று விஸ்வலிங்கம் மற்றும் ராமலிங்கம். ராமலிங்கம் சீதா தேவியால் கட்டப்பட்டது. விஸ்வலிங்கம் ஹனுமானால் கைலாசத்தில் இருந்து இங்கு கொண்டுவரப்பட்டது.

புனித யாத்திரை தலம்

RAMESHWARAM TEMPLE HISTORY IN TAMIL: இந்துக்களின் முக்கியமான 4 புனித யாத்திரைகளில் ராமேஸ்வரமும் ஒன்றாக இருக்கிறது. மற்றவை கேதார்நாத் & பத்ரிநாத், கங்கோத்ரி & யம்னோத்ரி, துவாரகா.

RAMESHWARAM TEMPLE HISTORY IN TAMIL | இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில் பற்றிய கட்டுரை
RAMESHWARAM TEMPLE HISTORY IN TAMIL | இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில் பற்றிய கட்டுரை
பல புனித ஆலயங்களின் உறைவிடம்

RAMESHWARAM TEMPLE HISTORY IN TAMIL: இந்த கோயிலில் சிவலிங்கங்கள் மட்டுமின்றி பல தெய்வங்களின் உறைவிடமாகவும் உள்ளது. ராமநாதசுவாமி சன்னதி, கருப்பு கிரானைட் கற்களால் கட்டப்பட்டு உள்ளது. மேற்கூரை கோபுரத்தில் தங்க பூச்சு பூசப்பட்டு உள்ளது.

சேதுமாதவன், விசாலாக்ஷி, மகாகணபதி, சந்தானகணபதி, நடராஜர், பர்வதவர்த்தினி, ஆஞ்சநேயர், ராமநாதசுவாமி, சுப்ரமணியர் மற்றும் மகாலட்சுமி உள்ளிட்ட சன்னதிகள் இந்த கோயிலில் உள்ளன.

இந்த திருக்கோயில் ராமேஸ்வரத்தில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. ராமநாத சுவாமி கோயில் 1212 தூண்களை கொண்டுள்ளது. தவிர உலகிலேயே மிக நீளமான பிரகாரம் என்ற பெருமையைப் பெற்ற ராமநாதசுவாமி கோயில் நடைபாதை பிரகாரம் வடக்கு மற்றும் தெற்கில் 640 அடி, மேற்கு மற்றும் கிழக்கில் 400 அடி கொண்டது.

20-க்கும் மேற்பட்ட தீர்த்தங்கள்

RAMESHWARAM TEMPLE HISTORY IN TAMIL: மகாலட்சுமி தீர்த்தம், சாவித்திரி தீர்த்தம், காயத்ரி தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம், சங்கு தீர்த்தம், சக்கர தீர்த்தம், சேது மாதவ தீர்த்தம், நள தீர்த்தம், நீல தீர்த்தம், கவய தீர்த்தம், கவாட்ச தீர்த்தம், கந்தமாதன தீர்த்தம், பிரம்மஹத்தி விமோசன தீர்த்தம்.

கங்கா தீர்த்தம், யமுனை தீர்த்தம், கயா தீர்த்தம், சர்வ தீர்த்தம், சிவ தீர்த்தம், சத்யாமிர்த தீர்த்தம், சந்திர தீர்த்தம், சூரிய தீர்த்தம், கோடி தீர்த்தம் உள்ளிட்ட தீர்த்தங்கள் உள்ளன. கடலில் நீராடி, பின்னர் 22 கிணறுகளில் நீராடி, தெய்வத்தின் முன் செல்ல வேண்டும்.

ஜோதிர்லிங்கங்கள்

RAMESHWARAM TEMPLE HISTORY IN TAMIL: இந்து புராண படி சிவபெருமான் ஜோதியாக வெளிப்பட்டுக் காட்சியளித்த லிங்கங்கள் ஜோதிர்லிங்கங்கள் என்று கூறப்படுகின்றன. இந்த 12-ல் ஒரு ஜோதிர்லிங்கம் ராமநாதசுவாமி கோயிலின் வளாகத்தில் உள்ளது. மத நம்பிக்கைகளின்படி, 12 ஜோதிர்லிங்கங்களையும் தரிசித்து பிரார்த்தனை செய்பவர் சொர்க்கம் அல்லது மோட்சத்தை அடைவார்.

22 தீர்த்தங்களும் அதன் பலன்களும்

RAMESHWARAM TEMPLE HISTORY IN TAMIL: பக்தர்கள் முதலில் கடலில் தான் நீராட வேண்டும். அதன் பின் கோயில் உள்ளே அமைந்துள்ள 22 தீர்த்தங்களிலும் பின் வரும் வரிசையில் நீராட வேண்டும்.

1. மகாலட்சுமி தீர்த்தம் – செல்வ வளம் பெறலாம்.
2. சாவித்திரி தீர்த்தம் – பேச்சாற்றலைப் பெறலாம்.
3. காயத்ரி தீர்த்தம் – உலக நன்மைகள் உண்டாகும்.
4. சரஸ்வதி தீர்த்தம் – கல்வியில் சிறந்து விளங்கலாம்.
5. சங்கு தீர்த்தம் – வசதிகள் நிறைந்த வாழ்க்கை அமையும்.
6. சக்கர தீர்த்தம் – மனோதிடம் பெறலாம்.
7. சேது மாதவ தீர்த்தம் – காரியத் தடைகளை கடந்து வெற்றி பெறலாம்.
8. நள தீர்த்தம் – அனைத்து தடைகளும் அகலும்.
9. நீல தீர்த்தம் – எதிரிகள் தொல்லைகள் நீங்கும்.
10. கவய தீர்த்தம் – பகை மறையும்.
11. கவாட்ச தீர்த்தம் – கவலைகள் நீங்கும்.
12. கந்தமாதன தீர்த்தம் – எந்தத் துறையிலும் வல்லுனர் ஆகலாம்.
13. பிரம்மஹத்தி விமோசன தீர்த்தம் – பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.
14. கங்கா தீர்த்தம் – பாவங்கள் அனைத்தும் நீங்கும்.
15. யமுனை தீர்த்தம் – உயர் பதவிகள் வந்து சேரும்.
16. கயா தீர்த்தம் – முன்னோர்களின் ஆசிகள் கிடைக்கும்.
17. சர்வ தீர்த்தம் – எந்தப் பிறவியிலும் செய்திருந்த பாவங்கள் அகலும்.
18. சிவ தீர்த்தம் – எல்லாவிதமான பிணிகளும் நீங்கும்.
19. சத்யாமிர்த தீர்த்தம் – ஆயுள் விருத்தி பெறலாம்.
20. சந்திர தீர்த்தம் – கலைகளில் ஆர்வம் உண்டாகும்.
21. சூரிய தீர்த்தம் – எதிலும் முதன்மை ஸ்தானத்தை அடையலாம்.
22. கோடி தீர்த்தம் – முக்தியை வழங்குகிறது.

RAMESHWARAM TEMPLE HISTORY IN TAMIL | இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில் பற்றிய கட்டுரை
RAMESHWARAM TEMPLE HISTORY IN TAMIL | இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில் பற்றிய கட்டுரை
கடலுக்குள் நவகிரகங்கள்

RAMESHWARAM TEMPLE HISTORY IN TAMIL: இராமேஸ்வரத்தில் அமைந்துள்ள கடல் அலைகள் இல்லாதது, ஆரவாரமில்லாதது. இராமபிரான் தனது  கையால் ஒன்பது பிடி மணலைக் கொண்டு பிரதிஷ்டை செய்த நவகிரக ஸ்தலம் இது.

பக்தர்கள் இங்குள்ள நவகிரங்களை தொட்டு அவர்களது கைகளாலேயே அபிஷேகம், அர்ச்சனை செய்து கொள்ளலாம். புராண காலம் முதலே கடல் நடுவே 9 கல் சிலைகளாக நவகிரகங்கள் அமைந்துள்ள அற்புதமான காட்சி அனைவரும் வியக்கும் வண்ணம் உள்ளது.

ஏன் அக்னி தீர்த்தம் என அழைக்கப்படுகிறது?

RAMESHWARAM TEMPLE HISTORY IN TAMIL: இராவணனிடமிருந்து மீட்கப்பட்ட சீதா தேவி தன் கற்பை நிரூபிக்க, அக்னி பிரவேசம் செய்ய வைத்தார் ராமன். அப்போது சீதையின் கற்புத் திறன், அக்னியையே சுட்டதாகவும், அதை தாங்க முடியாத அக்னி பகவான், கடலில் மூழ்கி, தன் வெப்பத்தைத் தணித்துக் கொண்டதாக புராண வரலாறு கூறுகிறது. இதன் காரணமாக அக்னி தீர்த்த என அழைக்கப்படுகிறது.

இந்த அக்னி தீர்த்த கரையில் ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை, தை அமாவாசை ஆகிய நாட்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க பல்லாயிரக்கணக்கானோர் கூடுவது வழக்கம்.

பாதாள பைரவர்

RAMESHWARAM TEMPLE HISTORY IN TAMIL: ராமேஸ்வரம், இராமநாதர் சிலையை உருவாக்கி சிவலிங்க பூஜை செய்த ராமபிரானின் பிரம்மஹத்தி தோஷம் நீங்கியது. அந்த தோஷம் எங்கு செல்வது என்று தெரியாமல் திணறியது.

யாரையாவது பற்றிக் கொள்ளலாமா என சென்று கொண்டிருந்த போது சிவ பெருமானின் தன் வடிவங்களில் ஒன்றான பைரவரை அனுப்பி, அந்த பிரம்ம ஹத்தி தோஷத்தை தன்னுடைய பாதத்தில் அழுத்தி பாதாளத்திற்குத் தள்ளினார்.

பின்னர் ஆலையத்திலேயே தங்கிய பைரவர், தன்னை தரிசிக்க வரும் பக்தர்களின் பாவத்தை பாதாளத்திற்கு தள்ளி அருள் வழங்கி வருகிறார். அதனால் தான் இவருக்கு பாதாள பைரவர் என பெயர் வந்தது. இவருடைய சன்னதிக்கு அருகில் தான் முக்தி தரக்கூடிய கோடி தீர்த்தம் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *