KAVIMANI DESIGA VINAYAGAMPILLAI HISTORY IN TAMIL | கவிமணி தேசிக விநாயகனார் பற்றிய கட்டுரைKAVIMANI DESIGA VINAYAGAMPILLAI HISTORY IN TAMIL | கவிமணி தேசிக விநாயகனார் பற்றிய கட்டுரை

KAVIMANI DESIGA VINAYAGAMPILLAI HISTORY IN TAMIL: கவிமணி தேசிக விநாயகம் 20ஆம் நூற்றாண்டில் குமரி மாவட்டத்திலுள்ள தேரூரில் வாழ்ந்த ஒரு புகழ் பெற்ற கவிஞர்.

பக்திப் பாடல்கள், இலக்கியம் பற்றிய பாடல்கள், வரலாற்று நோக்குடைய கவிதைகள், குழந்தைப் பாடல்கள், இயற்கைப் பாட்டுகள், வாழ்வியல் போராட்ட கவிதைகள், சமூகப் பாட்டுகள், தேசியப் பாட்டுகள், வாழ்த்துப் பாக்கள், கையறு நிலைக் கவிதைகள், பல்சுவைப் பாக்கள் என விரிந்த தளத்தில் செயல்பட்டவர்.

பிறப்பு

KAVIMANI DESIGA VINAYAGAMPILLAI HISTORY IN TAMIL: கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்கள் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த தேரூரில் 1876 ஆம் ஆண்டு சூலைத் திங்கள் 27 ஆம் நாள் வேளாளர் குலத்தில் சிவதாணுப்பிள்ளை – ஆதிலட்சுமியம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார்.

கல்வி

KAVIMANI DESIGA VINAYAGAMPILLAI HISTORY IN TAMIL: ஐந்தாவது வயதில் தேரூர் ஆரம்பப்பள்ளியில் சேர்க்கப்பட்டார். அவர் வாழ்ந்து வந்த நாஞ்சில்நாடு மலையாள நாட்டின் ஒரு பகுதியாக இருந்ததால், பள்ளியில் மலையாள மொழி கற்க வேண்டியவரானார்.

எனினும் தேரூரை அடுத்த வாணன்திட்டிலிருந்த திருவாவடுதுறை மடத்தின் தலைவர் சாந்தலிங்கத் தம்பிரானிடம் தமிழ் இலக்கிய, இலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்தார்.

NAMAKKAL KAVIGNAR HISTORY IN TAMIL | நாமக்கல் கவிஞர் பற்றிய கட்டுரை

கவிபுனையும் ஆற்றலும் கைவரப் பெற்றார். ஆரம்பப் பள்ளிக் கல்விக்குப்பின் கோட்டாறு அரசுப் பள்ளியில் பயின்றார். திருவனந்தபுரம் ஆசிரியப் பயிற்சி நிறுவனத்தில் ஆசிரியர் பயிற்சி பெற்றார்.

KAVIMANI DESIGA VINAYAGAMPILLAI HISTORY IN TAMIL – கவிமணி சிறப்பு பெயர்கள்

 • கவிமணி (சென்னை மாகாணத் தமிழ் சங்கத்தின் தலைவர் உமாமகேசுவரனார்)
 • குழந்தை கவிஞர்
 • தேவி
 • நாஞ்சில் நாட்டு கவிஞர்
 • தழுவல் கவிஞர்

கவிமணியின் படைப்புகள்

KAVIMANI DESIGA VINAYAGAMPILLAI HISTORY IN TAMIL: இளமையிலேயே கவிதை எழுதும் ஆற்றல் பெற்றிருந்தார். 1885இல் முதல் கவிதை நூல் அழகம்மை ஆசிரிய விருத்தம் எழுதப் பட்டது. மற்றைய நூல்கள்

 1. அழகம்மை ஆசிரிய விருத்தம்
 2. ஆசிய ஜோதி, (1941)
 3. மலரும் மாலையும், (1938)
 4. மருமக்கள்வழி மான்மியம், (1942)
 5. கதர் பிறந்த கதை, (1947)
 6. உமார் கய்யாம் பாடல்கள், (1945)
 7. தேவியின் கீர்த்தனங்கள்
 8. குழந்தைச்செல்வம்
 9. கவிமணியின் உரைமணிகள்
 10. மருமக்கள்வழி மான்மியம்
 11. காந்தளூர் சாலை
 12. தோட்டத்தின் மீது வெள்ளை பசு
KAVIMANI DESIGA VINAYAGAMPILLAI HISTORY IN TAMIL | கவிமணி தேசிக விநாயகனார் பற்றிய கட்டுரை
KAVIMANI DESIGA VINAYAGAMPILLAI HISTORY IN TAMIL | கவிமணி தேசிக விநாயகனார் பற்றிய கட்டுரை

விருதுகள்

KAVIMANI DESIGA VINAYAGAMPILLAI HISTORY IN TAMIL: 24 திசம்பர் 1940 இல் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழவேள் உமாமகேசுவரம் பிள்ளை கவிமணி என்ற பட்டம் வழங்கினார். 1943 இல் அண்ணாமலை அரசர் ஆத்தங்குடியில் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார்.

பெரும் பொருள் வழங்க முன் வந்தபோது அதை வாங்க மறுத்து விட்டார். 1954 இல் கவிமணிக்குத் தேரூரில் நினைவு நிலையம் அமைக்கப்பட்டது. அக்டோபர் 2005இல் இந்திய அரசு அஞ்சல் தலை வெளியிட்டுச் சிறப்பித்தது.

KAVIMANI DESIGA VINAYAGAMPILLAI HISTORY IN TAMIL: தமிழ்நாட்டின் 20-ம் நூற்றாண்டின் மறுமலர்ச்சிக் கவிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர்களில் ஒருவரான கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை (Kavimani Desika Vinayagam Pillai) பிறந்த தினம் இன்று (ஜூலை 27). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

குமரி மாவட்டம், தேரூரில் பிறந்தார் (1876). ஐந்து வயதில் தேரூர் ஆரம்பப் பள்ளியில் சேர்க்கப்பட்டார். ஒன்பதாவது வயதில் தந்தையை இழந்தார். திருவாவடுதுறை மடத் தலைவர் சாந்தலிங்கத் தம்பிரானிடம் தமிழ் இலக்கிய, இலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்தார். எம்.ஏ. பட்டம் பெற்றார்.

திருவனந்தபுரம் ஆசிரியப் பயிற்சி நிறுவனத்தில் பயின்றார். கோட்டாறு, நாகர்கோவில் பாடசாலைகளில் ஆசிரியர், திருவனந்தபுரம் பெண்கள் கல்லூரியில் பேராசிரியர் என 36 ஆண்டுகள் கல்விப் பணியாற்றினார்.

இவரது இலக்கிய வெளிப்பாட்டில் ஒரு அறிவியல் கண்ணோட்டம் பிரதிபலித்தது. நாட்டின் பண்டைய வரலாற்றை அறிந்து கொள்ளும் ஆர்வம் காரணமாக கல்வெட்டு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். சுதந்திர போராட்டத்தில் காந்தியத்துக்கு ஆதரவாகக் கவிதைகளை எழுதியதால் ‘விடுதலைக் கவிஞர்’ எனவும் போற்றப்பட்டார்.

‘ஆங்கிலத்தில் உள்ளதுபோல தமிழில் குழந்தைப் பாடல்கள் இல்லையே என்றுதான் நான் பள்ளிப் பிள்ளைகளுக்கு எளிய நடையில் பாடல்கள் எழுதினேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

‘மலரும் மாலையும்’, ‘ஆசிய ஜோதி’, ‘உமர்கய்யாம் பாடல்கள்’, ‘நாஞ்சில் நாட்டு மருமக்கள்வழி மான்மியம்’, ‘அழகம்மை ஆசிரிய விருத்தம்’, ‘கதர் பிறந்த கதை’, ‘குழந்தைச் செல்வம்’ உள்ளிட்ட இவரது படைப்புகள் குறிப்பிடத்தக்கவை. இவரது ‘தேவியின் கீர்த்தனங்கள்’ என்ற இசைப்பாடல் தொகுப்பில் இடம் பெற்ற பல பாடல்களை, இசைக் கலைஞர்கள் மேடைகளில் விரும்பிப் பாடினார்கள்.

இவரது சொற்பொழிவுகள் ‘கவிமணியின் உரை மணிகள்’ என்ற நூலாக வெளிவந்தது. சிறந்த மொழிபெயர்ப்பாளரான இவர் எட்வின் ஆர்னால்டின் ‘தி லைட் ஆஃப் ஏஷியா’ என்ற படைப்பைத் தழுவி ‘ஆசிய ஜோதி’ என தமிழில் எழுதினார். பாரசீகக் கவிஞர் உமர் கய்யாமின் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட பாடல்களைத் தழுவி தமிழில் எழுதினார்.‘மனோன்மணியம் மறுபிறப்பு’ என்ற திறனாய்வுக் கட்டுரை எழுதியுள்ளார்.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேரகராதி உருவாக்கத்தில் மதிப்பியல் உதவியாளராகப் பணியாற்றினார். ‘கம்பராமாயணம் திவாகரம்’, ‘நவநீதப் பாட்டியல்’ உள்ளிட்ட பல நூல்களின் ஏட்டுப் பிரதிகளைத் தொகுத்துள்ளார். ‘தேசியக் கவிஞர்’, ‘குழந்தைக் கவிஞர்’, ‘சமுதாயக் கவிஞர்’, ‘விடுதலைக் கவிஞர்’, ‘உணர்ச்சிக் கவிஞர்’ என்றெல்லாம் போற்றப்பட்டார்.

‘பைத்தியக்காரன்’, ‘மணமகள்’, ‘தாயுள்ளம்’, ‘வேலைக்காரன்’, ‘கள்வனின் காதலி’, ‘கண்ணின் மணிகள்’, ‘நன் நம்பிக்கை’ ஆகிய திரைப்படங்களில் இவர் எழுதிய பாடல்கள் பயன்படுத்திக் கொள்ளப்பட்டன.

‘தேசிய விநாயகத்தின் கவிப்பெருமை தினமும் கேட்பது என் செவிப்பெருமை’ என நாமக்கல் கவிஞர் பாராட்டியுள்ளார். 1940-ல் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் உமாமகேஸ்வரம் பிள்ளை இவருக்கு ‘கவிமணி’ பட்டம் வழங்கினார்.

KAVIMANI DESIGA VINAYAGAMPILLAI HISTORY IN TAMIL: இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தமிழ்க் கவிஞர்களுள் ஒருவருமான கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை 1954-ம் ஆண்டு, 78-வது வயதில் மறைந்தார். இவர் பிறந்த ஊரில் நினைவு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்திய அரசு இவர் நினைவாக 2005-ல் தபால் தலை வெளியிட்டது.

கவிஞரின் பாடல் வரிகள்

பாட்டுக் கொருபுலவன் பாரதிஅடா! – அவன்

பாட்டைப் பண்ணொடொருவன் பாடினான், அடா!

கேட்டுக் கிறுகிறுத்துப் போனேனேயடா! – அந்தக்

கிறுக்கில் உளறுமொழி பொறுப்பாய், அடா!

சொல்லுக்குச் சொல்லழகும் ஏறுமே, அடா! – கவி

துள்ளும் மறியைப்போலத் துள்ளுமே, அடா!

கல்லும் கனிந்துகனி யாகுமே, அடா! – பசுங்

கன்றும் பால் உண்டிடாது கேட்குமே, அடா!

 

உள்ளத் துள்ளது கவிதை – இன்பம்

  உருவெ டுப்பது கவிதை

தெள்ளத் தெளிந்த தமிழில் – உண்மை

  தெரிந்து ரைப்பது கவிதை

 

காக்காய்! காக்காய்! பறந்து வா

கண்ணுக்கு மை கொண்டு வா

கோழி! கோழி! கூவி வா

குழந்தைக்குப் பூக்கொண்டு வா

கோழி! கோழி! வா வா

கொக்கொக்கோ என்று வா

கோழி! ஓடி வாவா

கொண்டைப்பூவைக் காட்டு வா

 

“தோட்டத்தில் மேயுது  வெள்ளைப்பசு – அங்கே

துள்ளிக் குதிக்குது  கன்றுக்குட்டி அம்மா

என்றது  வெள்ளைப்பசு – உடன்

அண்டையில் ஓடுது கன்றுக்குட்டி.”

 

கூனக்கிழவி நிலவினிலே – இராட்டில்

  கொட்டை நூற்கும் பணி செய்வதை – இம்

மாநிலம் கண்டு மகிழ்ந்திடவே – காந்தி

மாமதி யோங்கி வளருதம்மா

 

கண்ணப்பன் பூசை கொளும்

கடவுளர் திருக்கோவிலிலே நண்ணக்

கூடாதோ நாங்கள்

நடையில் வரல் ஆகாதோ

 

கண்ணுக் கினியன கண்டு – மனதைக்

காட்டில் அலைய விட்டு

பண்ணிடும் பூசையாலே – தோழி

பயனொன்றில்லையடி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *