MAHATMA GANDHI HISTORY IN TAMIL | மகாத்மா காந்தி பற்றிய கட்டுரைMAHATMA GANDHI HISTORY IN TAMIL | மகாத்மா காந்தி பற்றிய கட்டுரை

MAHATMA GANDHI HISTORY IN TAMIL: மோகன்தாசு கரம்சந்த் காந்தி என்பவர் ஒரு இந்திய வழக்குறைஞரும், அன்னிய ஆட்சியை எதிர்த்த தேசியவாதியும், அரசியல் அறனாளரும் ஆவார். இவர் மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார்.

இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் “விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை” என்று அழைக்கப்படுகிறார்.

JAWAKARLAL HISTORY IN TAMIL | ஜவகர்லால் நேரு பற்றிய கட்டுரை

சத்தியாக்கிரகம் என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது. இவரது பிறந்த நாள் இந்தியாவில் காந்தி ஜெயந்தி என்று கொண்டாடப்படுகிறது.

MAHATMA GANDHI HISTORY IN TAMIL – பிறப்பு

MAHATMA GANDHI HISTORY IN TAMIL: மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள், 1869 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 02 ஆம் நாள், இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள “போர்பந்தர்” என்ற இடத்தில் கரம்சாந்த் காந்திக்கும், புத்திலிபாய்க்கும் மகனாகப் பிறந்தார்.

இவருடைய தாய்மொழி குஜராத்தி ஆகும். மேலும் அவருடைய தந்தை கரம்சாந்த் காந்தி, போர்பந்தரில் ஒரு திவானாக பணியாற்றி வந்தார்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

MAHATMA GANDHI HISTORY IN TAMIL: மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள், பள்ளியில் படிக்கும்போதே நேர்மையான மாணவனாக விளங்கினார். தன்னுடைய 13 ஆம் வயதிலேயே கஸ்தூரிபாயை திருமணம் செய்துகொண்ட மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள், பதினெட்டு வயதில் ‘பாரிஸ்டர்’ எனப்படும் வழக்கறிஞர் கல்விக்காக இங்கிலாந்து சென்றார்.

தன்னுடைய வழக்கறிஞர் கல்வியை வெற்றிகரமாக முடித்து, பாரதம் திரும்பிய காந்தி பம்பாயில் சிறிது காலம் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.

MAHATMA GANDHI HISTORY IN TAMIL | மகாத்மா காந்தி பற்றிய கட்டுரை
MAHATMA GANDHI HISTORY IN TAMIL | மகாத்மா காந்தி பற்றிய கட்டுரை

இந்திய விடுதலைப் போராட்டத்தில்

MAHATMA GANDHI HISTORY IN TAMIL: தென்னாப்பிரிக்காவில் காந்தி தலைமையேற்று நடத்திய போராட்டங்களைப் பற்றி இந்திய மக்கள் அறிந்திருந்தனர்.

காந்திக்கு, கோபால கிருஷ்ண கோகலே, ரவீந்திரநாத் தாகூர் போன்றோருடன் நட்பு ஏற்பட்டது. காந்தி இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து ஆங்கிலேயர்க்கு எதிரான விடுதலைப் போராட்டத்தில் முழு வீச்சில் ஈடுபட்டார்.

1924ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தின் தலைவராக காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். தலைமையேற்றவுடன் காங்கிரசில் பல மாற்றங்களை அறிமுகப்படுத்தி இயக்கத்திற்கு புத்துயிர் ஊட்டினார். அறப்போராட்ட வழிமுறைகளையும் சுதேசி போன்ற கொள்கைகளையும் வலியுறுத்தி காங்கிரஸ் இயக்கத்தை இந்தியாவின் மாபெரும் விடுதலை இயக்கமாக்கினார்.

பிப்ரவரி 1930ல் ஆங்கிலேய அரசு, இந்தியாவில் இந்தியர்களால் தயாரிக்கப்படும் உப்புக்கு வரி விதித்தது. மேலும், இந்தியாவில் இந்தியரால் தயாரிக்கப்படும் உப்பை பிரிட்டிஷ் அரசாங்கத்தை தவிர வேறு யாரும் விற்கக் கூடாது என்ற சட்டத்தையும் இயற்றியது.

இதை விலக்கிக் கொள்ளுமாறு காந்தி பிரிட்டிஷாரிடம் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. சத்தியாகிரக முறையில் இதை எதிர்க்க முடிவெடுத்த காந்தி மார்ச் 2, 1930 அன்று 78 சத்தியாகிரகிகளுடன் அகமதாபாத்திலிருந்து குஜராத் கடலோரத்தில் இருந்த தண்டி நோக்கி 240 மைல் நடைப் பயணத்தை துவக்கினார்.

23 நாட்கள் நடைப் பயணத்திற்குப் பிறகு, தன் சகாக்களுடன் தண்டி கடற்கரை வந்து சேர்ந்த காந்தி, அங்கிருந்த கடல் நீரை காய்ச்சி உப்பு தயாரித்து பிரிட்டிஷ் சட்டத்திற்கு எதிராக பகிரங்கமாக பொதுமக்களுக்கு விநியோகித்தார்.

மேலும் இந்தியாவில் கடலோரத்தில் இருந்த அனைத்து இந்தியர்களையும் இது போல் உப்பு தயாரித்து பயன்படுத்தச் சொன்னார். இந்தியாவின் பல இடங்களில் இது போல் நடந்தது; காந்தி உட்பட பல்லாயிரக் கணக்கான இந்தியர்கள் சிறையிலடைக்கப்பட்டனர்.

வேறு வழியில்லாமல் பிரிட்டிஷ் அரசாங்கம் காந்தியுடன் பேச்சு வார்த்தை நடத்தி இறுதியில் வரியை நீக்கிக் கொண்டது. உப்பு சத்தியாகிரகம் என்று அழைக்கப்படும் இந்நிகழ்வு இந்திய விடுதலைப் போராட்ட சரித்திரத்தில் ஒரு திருப்புமுனையாக கருதப்படுகிறது. 1942ல் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு போராட்டத்திலும் காந்தி பெரும் பங்கு வகித்தார்.

இது போன்ற பல போராட்டங்களின் முடிவில் 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் நாள் இந்தியா சுதந்திர நாடாக மலர்ந்தது. ஆனால் காந்தியோ, சுதந்திர கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளாமல், இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையை நினைத்து மனம் வருந்தி துக்கம் அனுசரித்தார்.

மறைவு

MAHATMA GANDHI HISTORY IN TAMIL: மகாத்மா காந்தி 1948 ஆம் ஆண்டு, ஜனவரி 30 ஆம் நாள் மாலை (5:17 மணி) தன் வாழ்நாளில் இறுதியாக 144 நாட்கள் தங்கியிருந்த டில்லி பிர்லா மாளிகை (காந்தி சமிதி) தோட்டத்தில் நாதுராம் கோட்ஸேவால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

சுயசரிதை

MAHATMA GANDHI HISTORY IN TAMIL: காந்தி குஜராத்தி மொழியில் எழுதிய சுயசரிதை, சத்திய சோதனை என்ற பெயரில் தமிழ் மொழியிலும் An Autobiography: The Story of My Experiments with Truth என்ற பெயரில் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன.

காந்தி நினைவிடம்

MAHATMA GANDHI HISTORY IN TAMIL: கடலின் கரையில் இந்தியாவின் தலைசிறந்த மகனுக்கு ஒரு வாழும் நினைவுச்சின்னம் உள்ளது. பெரிய மனிதரின் செய்திகளைப் போலவே, அமைப்பு அமைதியாக இருக்கிறது. கன்னியாகுமரியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடம்,மகாத்மாவின் போதனைகள் மற்றும் வாழ்க்கையை காட்சிப்படுத்துகிறது.

கன்னியாகுமரியின் அனைத்து பரபரப்பான சுற்றுலாப் பகுதிகளிலிருந்து வெகு தொலைவில் கடற்கரையில் அமைந்துள்ள காந்தி நினைவுச்சின்னம் அமைதியான அமைப்பில் கடலுடன் சரியான பின்னணியை வழங்குகிறது.

காந்தி மண்டபம் என்றும் அழைக்கப்படும் இந்த நினைவுச்சின்னம் இந்தியாவின் வளமான வரலாற்றை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. மகாத்மா காந்தி கன்னியாகுமரிக்கு இரண்டு முறை விஜயம் செய்த காலக்கட்டத்தில், நாடு முழுவதும் சுதந்திரச் செய்திகளை வழங்கி, மக்களை சுதந்திரப் போராட்டத்தில் சேர தூண்டினார்.

1948 இல் அவர் இறந்ததைத் தொடர்ந்து, காந்தியின் அஸ்தி 12 வெவ்வேறு கலசங்களில் வைக்கப்பட்டு, இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அதில் ஒரு கலசம் கன்னியாகுமரிக்கு கொண்டு வரப்பட்டு, அந்த கலசம் வைக்கப்பட்ட இடத்திலேயே நினைவிடம் கட்டப்பட்டுள்ளது.

நினைவிடத்தின் மையப் பகுதியானது 79 அடி உயரமுள்ள இளஞ்சிவப்பு போர்டிகோவாகும், மேலும் காந்தியின் மறைவின் போது அவரது வயதைக் குறிக்கிறது. இந்த கட்டிடம் ஒரிசா கட்டிடக்கலை பாணியில் இருந்து உத்வேகம் பெறுகிறது.

அவரது பிறந்த நாளான ஒவ்வொரு அக்டோபர் 2ம் தேதியும், கலசம் வைக்கப்பட்டிருந்த அதே இடத்தில் சூரியக் கதிர்கள் விழும் வகையில் கட்டப்பட்டுள்ள இந்தக் கட்டிடம் ஒரு திறப்புடன் கூடிய உச்சவரம்பைக் கொண்டுள்ளது.

MAHATMA GANDHI HISTORY IN TAMIL | மகாத்மா காந்தி பற்றிய கட்டுரை
MAHATMA GANDHI HISTORY IN TAMIL | மகாத்மா காந்தி பற்றிய கட்டுரை

மகாத்மா காந்தி பற்றி பலருமறியாத 10 உண்மைகள

MAHATMA GANDHI HISTORY IN TAMIL: அமைதி நோபல் பரிசுக்கு மகாத்மா காந்தி ஐந்து முறை பரிந்துரைக்கப்பட்டார், இன்றுவரை அவருக்கு பரிசுவழங்காததற்கு குழு வருத்தம் தெரிவிக்கிறது.

நடைபயிற்சி சிறந்த உடற்பயிற்சி என்று காந்தி நம்பினார், ஒவ்வொரு நாளும் சுமார் 18 கி.மீ. வரை அவர் நடப்பாராம்.

உலகெங்கிலும் ஆயிரக்கணக்கானோரை ஈரத்த அவரது சட்ட ஒத்துழையாமை இயக்கம் பிரிட்டனை சேர்ந்த ஹென்றி ஸ்டீபன்ஸ் சால்ட் என்பவரால் ஈர்க்கப்பட்டது, அவர் தான் ஹென்றி டேவிட் தோரூவின் படைப்புகள் நோக்கி காந்தியை அறிமுகப்படுத்தினார். இது அவரது சிந்தனையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது.

நான்கு கண்டங்களில் உள்ள 12 நாடுகளில் சிவில் உரிமைகள் இயக்கத்திற்கு காந்தி பொறுப்பேற்றார்.

அவர் ஆங்கிலத்தை ஐரிஷ் உச்சரிப்புடன் பேசுவார், ஏனென்றால் அவரது முதல் ஆசிரியர்களில் ஒருவர் ஒரு ஐரிஷ் மனிதர்.

தென்னாப்பிரிக்காவில் இருந்தபோது, காந்தி கால்பந்தை ஊக்குவித்தார். மேலும் டர்பன், பிரிட்டோரியா மற்றும் ஜோகன்னஸ்பர்க்கில் மூன்று கால்பந்து கிளப்புகளை நிறுவ உதவினார்.

ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் மகாத்மா காந்தியின் ரசிகர். அதனால் தான் அவர் வட்ட கண்ணாடிகளை அணிந்திருந்தார்.

லியோ டால்ஸ்டாய், ஐன்ஸ்டீன் மற்றும் ஹிட்லர் என அவரது காலத்தின் பல முக்கிய நபர்களுடன் காந்திதொடர்பு கொண்டார்.

கிரேட் பிரிட்டன் – காந்தி எதிர்த்துப் போராடிய அதே நாடு – காந்தியை கௌரவிக்கும் விதமாக 1969 ஆம்ஆண்டில் ஒரு ஸ்டாம்ப் வெளியிட்டது.

காந்தி சுடப்பட்டபோது அவர் அணிந்திருந்த உடைகள் மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

கொள்கைகள்

MAHATMA GANDHI HISTORY IN TAMIL: பகவத் கீதை, ஜைன சமய கொள்கைகள், லியோ டால்ஸ்டாயின் எழுத்துக்கள் போன்றவற்றால் ஈர்க்கப்பட்ட காந்தி, சத்தியம், அகிம்சை ஆகிய கொள்கைகளை தன் வாழ்நாள் முழுவதும் விடாமல் கடைபிடித்தார்.

அசைவ உணவுகளை தவிர்க்கும் வைணவ குடும்பத்தில் பிறந்த காந்தி, சிறு வயதில் புலால் உணவை சிறிது உண்டாலும், பின்னர் சைவ உணவையே, குறிப்பாக பழங்கள், கடலை, ஆட்டுப்பால் போன்றவற்றையே உண்டு வாழ்ந்தார்.

சைவ உணவே அசைவ உணவை விட மனித உடலுக்கு ஆரோக்கியமானது என்று தன் சோதனைகள் மூலம் அறிந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். 1902 ஆம் ஆண்டுக்குப் பிறகு, பிரம்மச்சரிய விரத்தையும் கடைபிடித்தார். இவர் தனது காமத்தை வெல்லும் பொருட்டு பல்வேறு சோதனைகளைச் செய்து வந்தார்.

அவை பெரும் விமரிசனத்திற்கு உள்ளாகின.அவரது பரிசோதனைகளை அவரது மனைவியின் அனுமதியுடன் தான் செய்தார். இவை இன்றளவும் சரியாகப் புரிந்து கொள்ளப்படாமல் விமர்சிக்கப்படுகின்றன.

வாரத்திற்கு ஒருநாள் மௌன விரதம் மேற்கொண்டார். தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பியவுடன், மேல்நாட்டு உடை அணிவதைத் தவிர்த்து இந்திய உடைகளையே அணியத் தொடங்கினார். உள்நாட்டில் தயாரிக்கப்படும் காதி உடையையே இந்திய மக்கள் உடுத்தவேண்டும் என்று அறிவுறுத்தினார்.

மகாத்மா காந்தியின் மிகச்சிறந்த பொன்மொழிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *