VELU NACHIYAR HISTORY IN TAMIL | வேலு நாச்சியார் பற்றிய கட்டுரைVELU NACHIYAR HISTORY IN TAMIL | வேலு நாச்சியார் பற்றிய கட்டுரை

VELU NACHIYAR HISTORY IN TAMIL: இராணி வேலுநாச்சியார் பதினெட்டாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் சிவகங்கைப் பகுதியின் இராணி மற்றும் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய பெண் விடுதலைப் போராட்டத் தலைவி. இவரே இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனை ஆவார்.

VELU NACHIYAR HISTORY IN TAMIL – வாழ்க்கை வரலாறு

VELU NACHIYAR HISTORY IN TAMIL:வீரமங்கை வேலுநாச்சியார் பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஆட்சியிலிருந்த இந்தியாவின் விடுதலைக்கு ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் பெண் போராளி ஆவார்.
எத்தனையோ சாதனை மங்கைகளை தமிழ் வரலாறு பார்த்திருக்கிறது. ஆனால் வீர மங்கை என்றால் வேலுநாச்சியார் ஒருவர்தான். வேலு நாச்சியார். வீரம் என்றால் சாதாரண வீரம் அல்ல, மாபெரும் படைகளை எதிர்கொண்டு வீழ்த்திய வீரம்.
இராமநாதபுரத்திற்கு அருகிலுள்ள சக்கந்தி யென்ற ஊரில் 1730ஆம் ஆண்டு, இராமநாதபுரம் மன்னர் செல்ல முத்து சேதுபதி(முத்து விஜயரகுநாதசெல்லத்துரை சேதுபதி) – முத்தாத்தாள் நாச்சியாருக்கு ஒரே பெண் மகவாக வேலுநாச்சியார் பிறந்தார்.
தந்தை செல்லமுத்து சேதுபதி தன் மகளுக்குப் போர்க்களம் சென்று வாளெடுத்துப் போர் புரியும் பயிற்சி அளித்து ஒரு சிறந்த வீராங்கனையாகவே வளர்த்தார்.
வேலுநாச்சியார் வாள்வீச்சு, அம்பு விடுதல், ஈட்டி எறிதல், குதிரையேற்றம், யானையேற்றம் என்று எல்லா போர்க் கலைகளையும் கற்றார். இவையனைத்தும் அவருக்கு பிற்காலத்தில் உதவின. வீர விளையாட்டுக்கள் மட்டுமன்றி பாடங்களிலும் வேலு நாச்சியார் சிறந்து விளங்கினார்.
பத்து மொழிகள் திறம்பட அறிந்திருந்தார். மகாபாரதம், இராமாயணம் போன்ற இதிகாசங்கள் தெரியும். இப்படி வீறுகொண்டும் வேலு கொண்டும் வளர்ந்த இளம் பெண் வேலு நாச்சியாரின் அழகிலும் வீரத்திலும் மனதைப் பறிகொடுத்த சிவகங்கை மன்னர் முத்து வடுகநாதர், வேலு நாச்சியாரை 1746ம் வருடம் மணமுடித்தார்.
ஆற்காடு நவாப்பின் பெரும்படை ஒன்று இராமநாதபுரத்தைத் தாக்கி கைப்பற்றியது. நவாபின் அடுத்த குறி சிவகங்கையாக இருந்தது.நேரம் பார்த்துக் கொண்டிருந்த நவாப்புக்கு ஒரு அரிய வாய்ப்பு கிடைத்தது.
சிவகங்கையைத் தாக்க ஆங்கிலேயேப் படைகள் நவாப்புக்கு உதவ முன்வந்தன. அவர்களிடம் நவீனரக ஆயுதங்கள் இருந்தன. அவற்றைக் கொண்டு சிவகங்கையைத் தாக்கி தன் கட்டுக்குள் கொண்டுவரத் திட்டமிட்டான் நவாப்.
ஒரு முறை மன்னர் முத்து வடுகநாதர் காளையர் கோயிலில் வழிபாடு செய்து கொண்டிருந்தபோது நவாபின் படைகள் காளையர் கோயிலைச் சுற்றி வளைத்தனர். கொடூரமாய் தாக்கினர். ஆங்கிலேயர் கொடுத்த போர்ச் சாதனங்களைக் கொண்டு தாக்கினர்.
VELU NACHIYAR HISTORY IN TAMIL:வடுகநாதரும் அவரது படைகளும் வீரப்போர் புரிந்தனர். இருந்தும் அவர்களால் அந்தத் தாக்குதலைச் சமாளிக்க இயலவில்லை. வடுகநாதர் வாளால் வெட்டப்பட்டு இறந்தார் இளவரசியும் கொல்லப்பட்டார். காளையர் கோயில் கோட்டை நவாப்படைகளின் வசமாகியது.
திடீர் தாக்குதலில் கோட்டை வீழ்ந்து மன்னர் இறந்துவிட்டார் என்ற செய்தி வேலு நாச்சியாருக்கு எட்டியது. கதறி அழுதார். கணவரின் உடலைப் பார்க்க வேண்டும் என்று துடித்தார். தானிருந்த இடத்திலிருந்து காளையர் கோயிலுக்குச் செல்ல விரும்பினார்.
இந்தச் சமயத்தில் நாச்சியாரைக் கைது செய்ய படை ஒன்றை அனுப்பினான் நவாப். அந்தப் படை வேலு நாச்சியாரை வழியிலேயே மடக்கியது. ஆனால் நாச்சியார் மடங்கவில்லை. ஆவேசத்துடன் போரிட்டார். எதிரிப்படைகளை சிதறி ஓடச் செய்தார்.
இறந்த கணவரை சென்று பார்த்துவிட வேண்டுமென்பதுதான் அவரது ஒரே இலக்காயிருந்தது. ஆனால் தளபதிகளாயிருந்த மருது சகோதரர்கள் அவருக்கு வேறு ஆலோசனை வழங்கினார்கள். ‘கோட்டை வீழ்ந்துவிட்டது. அரசர் இறந்துவிட்டார்.
நீங்களும் போய் சிக்கிவிட்டால் நம்மால் நவாபை பழிவாங்கமுடியாது. நாட்டைக் கைப்பற்றவும் நாட்டின் பெருமையைக் காப்பாற்றவும் நீங்கள் வாழ்ந்தாக வேண்டும்.
அதனால் அங்கே போகக் கூடாது’ என்றார்கள். ஆனால் நாச்சியார் கேட்கவில்லை. கணவரின் உடலைக் காண காளையர் கோயில் சென்றார். இதற்குள் நவாப் கூட்டமும் ஆங்கிலேயப் படைகளும் சிவகங்கைக்குள் நுழைந்துவிட்டன.
வேலு நாச்சியார் காளையர் கோயிலில் கண்ட காட்சி கொடூரமானது. எங்கெங்கும் பிணக் குவியல். கோயில் திடலின் நடுவே அரசரும் இளையராணியும் ரத்தம் வடிந்து இறந்து கிடந்தார்கள். கதறி அழுதார் நாச்சியார். கணவனைக் கொன்ற கயவர்களைப் பழிவாங்கியே தீரவேண்டும் சபதமேற்றார்.
பல்லக்கு ஒன்றில் ஏறி மருது சகோதரர்களின் பாதுகாப்போடு சிவகங்கையிலிருந்து தப்பிச் சென்றார். விடிய விடிய குதிரையில் பயணம் செய்து மேலூர் சென்றார்கள்.
வேலு நாச்சியார் வீரத்தில் மட்டுமல்ல, விவேகத்திலும் கெட்டி நவாபையும் ஆங்கிலேயர் படையினரையும் வீழ்த்த மன்னர் ஹைதர் அலி உதவியை நாடுவது என்று தீர்மானித்தார். ஏனென்றால் ஆங்கிலேயருக்கும் நவாப்புக்கும் பரம எதிரி ஹைதர் அலி.
VELU NACHIYAR HISTORY IN TAMIL:அப்போது வேலுநச்சியார் சார்பாக தாண்டவராயப் பிள்ளை அன்றைய மைசூர் மன்னர் ஹைதர் அலிக்கு ஒரு கடிதம் எழுதி அதில் ஹைதர் அலி தன்னிடமிருந்து 5000 குதிரை வீரர்களையும் 5000 போர்வீரர்களையும் அனுப்பி வைத்தால் அவர்களுடன் சேர்ந்து நவாப்புக்கு எதிராகப் போரிட்டு இராமநாதபுரம் மற்றும் சிவகங்கைச் சீமை ஆகியவற்றை ஆற்காடு நவாப் வசமிருந்து மீட்க முடியும் என நம்பிக்கை தெரிவித்து உதவி கோரினார்.
அப்போது ஹைதர் அலி திண்டுக்கல்லிலிருந்தார். ஹைதர் அலியின் அரண்மனையின் முன்பு மூன்று குதிரை வீரர்கள் வந்து நின்றார்கள். வேலு நாச்சியாரிடமிருந்து வருவதாகச் சொன்னார்கள். ஹைதர் அலி அவர்களை உள்ளே வரவழைத்தான். ‘வேலு நாச்சியார் வரவில்லையா?” என்று ஹைதர் அலி கேட்க, தன் தலைப்பாகையை கழற்றினான், ஒரு வீரன். அது வேலு நாச்சியார்.
ஹைதர் அலியுடன் உருது மொழியை சரளமாகப் பேச அவருக்கு மேலும் ஆச்சர்யம். தன் வேதனைகளையும் இலட்சியத்தையும் ஹைதர் அலியிடம் விளக்கினார் வேலுநாச்சியார். அவரிடமிருந்த வீரத்தைக் கண்ட ஹைதர் அலி தன்னுடைய கோட்டையிலேயே தங்கிக் கொள்ள அனுமதி தந்தார்.
மருது சகோதரர்களின் துணையுடன், ஹைதர் அலி அளித்த பாதுகாப்பிலேயே விருப்பாச்சியில் எட்டு ஆண்டுகள் வேலு நாச்சியார் தனக்கு வேண்டிய பணிப் பெண்களுடனும், வீரர்களுடனும், விருப்பாட்சி கோட்டை, திண்டுக்கல் கோட்டைகளில் பாதுகாப்பாகத் தங்கினார்.
அங்கிருந்து தனது போர்ப் படைகளைப் பெருக்கத் துவங்கினர். வேலு நாச்சியாரின் லட்சியம் ஆங்கிலேயப் படையை அழிப்பது, நவாபை வீழ்த்துவது. சிவகங்கை சீமையில் தனது பரம்பரை சின்னமான அனுமன் கொடியை பறக்க விடுவது. அதற்கான நாளும் வந்தது.
ஹைதர் அலி தந்த நவீன ரக ஆயுதங்களுடன் நவாப்படைகளுடன் போர் செய்யக் கிளம்பினார். வேலு நாச்சியார். முதலில் காளையர் கோயிலைக் கைப்பற்றினார். சிவகங்கையிலும் திருப்பத்தூரிலும் நவாப்பின் படைகளும் ஆங்கிலப் படைகளும் பரவி நின்றன.
அவற்றைத் தோற்கடித்தால்தான் சிவகங்கையை மீட்க முடியும். வேலு நாச்சியார் தனது படைகளை இரண்டாகப் பிரித்து ஒரு படைக்கு சின்ன மருதை தளபதியாகவும், இன்னொரு படைக்கு பெரிய மருதுவுடன் இணைந்து வேலு நாச்சியார் தலைமை வகித்தார்.சின்னமருது தலைமையிலான படை திருப்பத்தூரில் இருந்த வெள்ளையர் படைகளை வீழ்த்தியது.
விஜயதசமி,நவராத்திரி அன்று சிவகங்கை அரண்மனைக்குள்ளே இருக்கும் ராஜராஜேஸ்வரி தெய்வத்தை கூட்டம், கூட்டமாக பெண்கள் சென்று வழிபடுவது வழக்கம். வெளியே ஆங்கிலேயர் படை காவல் காத்துக் கொண்டிருக்கும்.
வேலுநாச்சியாரும், அவரோடு இருந்த பெண்கள் படையும், ஆயுதங்களை ஆடைக்குள் மறைத்துக் கொண்டு கூட்டத்தோடு கூட்டமாக மாறுவேடத்தில் புகுந்து அரண்மனைக்குள் உள்ளே இருந்த கோவிலுக்குள் சென்று திடீர் தாக்குதல் நடத்தியது. இதை ஆங்கிலேயப் படைகள் எதிர்பார்க்கவில்லை. வெட்டுண்டு விழுந்தார்கள். பிழைத்தவர்கள் நாட்டைவிட்டு ஓடினார்கள்.
பின்னொரு நாளில் வேலுநாச்சியாரின் படையின் குயிலி என்ற பெண் தன் உடம்பில் தீ வைத்து வெள்ளையரின் ஆயுதக் கிடங்கை எரித்து ஆயுதங்களை அழித்தாள்.
வேலுநாச்சியார், தனது ஐம்பதாவது வயதில், தனது கணவரைக் கொன்ற ஜோசப் ஸ்மித்தையும் தளபதி பான் ஜோரையும் தோற்கடித்து தானெடுத்த சபதத்தை நிறைவேற்றி சிவகங்கையின் அரசியானார்.
சிவகங்கை கோட்டை மீது பறந்த ஆங்கிலேயரின் கொடி இறக்கப்பட்டது. வேலு நாச்சியாரின் அனுமன் கொடி ஏற்றப்பட்டது.கிட்டத்தட்டப் பத்து ஆண்டுகள் ஆட்சிப் பொறுப்பில் இருந்து சிவகங்கைச் சீமையைச் செம்மையாக வைத்திருந்தார்.
VELU NACHIYAR HISTORY IN TAMIL:1790-ல் அவரது மகளின் மறைவினால் மனமுடைந்த வேலுநாச்சியார் இதய நோயாளியாகி சிகிச்சைக்காக பிரான்ஸ் நாட்டுக்குச் சென்றார். 1793-ல் வேலு நாச்சியாரின் பேத்தியின் மரணத்தால் நாச்சியாருக்கு துயரம் அதிகமானது.
அதனால் விருப்பாட்சி அரண்மனையிலேயே தங்கினார். பெரும் போராட்டங்களை நடத்தி நாட்டை மீட்ட வேலுநாச்சியார் 25 டிசம்பர் 1796 அன்று இறந்தார்.
தன் கணவரை ஆற்காடு நவாப் மற்றும் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி ஆக்கிரமிப்பாளர்களுக்குக் காளையார் கோவில் போரில் காவு கொடுத்து விட்டு, துவண்டு போய் மூலையில் அமர்ந்து விடாமல் சிவகங்கைச் சீமையை மீட்டெடுக்கப் போராடிய இந்த வீரமங்கையின் சிலை மருது சகோதரர்கள் சிலைகளுடன், காளையார் கோவில் சிற்பத்தில் கம்பீரமாய் நிற்கிறது.
வேலு நாச்சியாருடைய காலம் வீரத்தின் காலமாக இருந்தது. அவரது வாழ்க்கை தமிழ் மண்ணின் வீரத்துக்கு சாட்சியாக இன்றும் இருக்கிறது.

இறுதி நாட்கள்

VELU NACHIYAR HISTORY IN TAMIL: 1793-இல் வேலு நாச்சியாரின் பேத்தியின் மரணத்தால் நாச்சியாருக்குத் துயரம் அதிகமானது. அதனால் விருப்பாட்சி அரண்மனையில் தங்கினார்.

பெரும் போராட்டங்களை நடத்தி நாட்டை மீட்ட வேலுநாச்சியார் டிசம்பர் 25, 1796 அன்று இறந்தார். இதன் தொடர்ச்சியாக சிவகங்கைச் சீமையை ஆட்சி புரிந்த மன்னர்களின் பட்டியல் கீழே உள்ளது.

வேலுநாச்சியார் மணிமண்டபம்

VELU NACHIYAR HISTORY IN TAMIL: சிவகங்கை மாவட்டம், சூரக்குளம் கிராமத்தில் 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வீர மங்கை வேலு நாச்சியார் நினைவு மண்டபம் தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா, 18. சூலை 2014 அன்று தலைமைச் செயலகத்தில், காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.

அருங்காட்சியகம்

VELU NACHIYAR HISTORY IN TAMIL: வேலு நாச்சியார் பயன்படுத்திய ஈட்டி, வாள் முதலான பல பொருட்கள் சிவகங்கையில் அருங்காட்சியகத்தில் வைத்துப் பாதுகாக்கப்படுகின்றன.

நினைவு தபால்தலை

VELU NACHIYAR HISTORY IN TAMIL: ராணி வேலு நாச்சியார் நினைவு தபால் தலை இந்திய அரசால் 31 டிசம்பர் 2008 அன்று வெளியிடப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *