RAMAKRISHNAR HISTORY IN TAMIL | இராமகிருஷ்ணர் பற்றிய கட்டுரைRAMAKRISHNAR HISTORY IN TAMIL | இராமகிருஷ்ணர் பற்றிய கட்டுரை

RAMAKRISHNAR HISTORY IN TAMIL: ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் எனப் பரவலாக அறியப்படும் ஸ்ரீகதாதர சட்டோபாத்யாயர் 19ஆம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த ஆன்மீகவாதிகளுள் ஒருவர்.

இவர் விவேகானந்தரின் குருவாவார். அனைத்து மதங்களும் ஒரே இறைவனை அடையும் வெவ்வேறு வழிகளே என்பதை தன் அனுபவங்கள் மூலம் உணர்ந்து அதையே வலியுறுத்தியவர்.

RAMAKRISHNAR HISTORY IN TAMIL – வாழ்க்கை குறிப்பு

RAMAKRISHNAR HISTORY IN TAMIL: கதாதர், க்ஷூதிராம் (பிறப்பு கி.பி.1775) – சந்திரமணிதேவி தம்பதியினருக்கு நான்காவது குழந்தையாக மேற்கு வங்காளத்திலுள்ள காமார்புகூர் எனும் சிறிய கிராமத்தில் பிறந்தார்.

சிறு வயதில் ஆடல் பாடல்களிலும், தெய்வங்களின் படங்கள் வரைவதிலும், களிமண்ணில் சிலைகள் செய்வதிலும் ஆர்வமாயிருந்த கதாதருக்கு கணிதம் பிடிக்காத பாடமாய் இருந்தது. கிராமத்தின் செல்லப்பிள்ளையாக அவர் விளங்கினார்.

சற்று வளர்ந்தவுடன் பள்ளிப்படிப்பு பொருள் ஈட்டுவதையே நோக்கமாக கொண்டிருப்பதாக கருதிய அவர் பள்ளி செல்ல மறுத்தார். இயற்கையை ரசிப்பதிலும், பக்திப் பாடல்கள் பாடுவதிலும், புராணக் கதைகள் கேட்பதிலும், நண்பர்களுடன் விளையாடுவதிலும் பொழுதைக் கழித்தார். சிறு வயதிலேயே ஆன்மீக விஷயங்களில் ஆழ்ந்த ஞானம் உடையவராயிருந்தார்.

VELU NACHIYAR HISTORY IN TAMIL | வேலு நாச்சியார் பற்றிய கட்டுரை

கதாதரர் மிகவும் சிறியவராக இருந்த போது அவரது தந்தை காலமாகி விட்டதால் தாய் சந்திரமணி, அண்ணன் ராம்குமார் ஆகியோரின் பராமரிப்பில் வளர்ந்து வந்தார். கதாதரை விட ராம்குமார் ஏறக்குறைய முப்பத்தொரு வயது மூத்தவர்.

ராம்குமாரின் திருமணம் கி.பி.1820 இல் நடந்தது.கி.பி.1849ஆம் ஆண்டில் ராம்குமாரின் மனைவி அழகிய ஆண்மகவு ஒன்றை ஈன்றாள். மறுகணமே அதன் முகத்தைப் பார்த்தவாறு உயிர் நீத்தாள். அந்தக் குழந்தைக்கு அட்சயன் என்று பெயரிடப்பட்டது.

அதன்பின் ராம்குமாரை வறுமையும், துயரமும் வாட்டின. மனைவியின் நினைவுகளில் இருந்து விடுபடவும், பொருளீட்டவும் குடும்பப் பொறுப்பை சகோதரர் ராமேசுவரரிடம் (பிறப்பு கி.பி.1826) ஒப்படைத்துவிட்டு கல்கத்தா சென்றார்.

RAMAKRISHNAR HISTORY IN TAMIL: அங்கு ஜாமாபுகூர் என்னுமிடத்தில் சமஸ்கிருத பாடசாலை ஒன்றைத் தொடங்கி சிறுவர்களுக்கு கல்வி கற்பிக்கலானார். அத்துடன் திகம்பர மித்ரர் மற்றும் ஓரிரு செல்வந்தர்களின் வீட்டில் தினசரி பூஜையும் செய்து வந்தார். பள்ளியிலிருந்து மிகவும் குறைந்த வருவாய்தான் அவருக்குக் கிடைத்தது.

இறுதி நாட்கள்

RAMAKRISHNAR HISTORY IN TAMIL: ஸ்ரீராமகிருஷ்ணரின் இந்த சாதனைகள் பற்றி கேள்விப்பட்டு அப்போது கல்கத்தாவில் இருந்த பலர் அவரைப் பார்க்க வந்தனர். இவர்களுள் நரேந்திரநாத் தத்தா எனப்பட்ட சுவாமி விவேகானந்தர் குறிப்பிடத்தக்கவர்.

நாட்கள் செல்லச் செல்ல, அவரைப் பார்க்க வருவோரின் கூட்டம் அதிகரித்துக்கொண்டே சென்றது. அவர் நாள் முழுவதும் அவர் சீடர்களுடன் ஆன்மீகம் பற்றிய விவாதங்கள் புரிவது சர்வசாதாரணமானது.

அப்போது அவரை வந்து அடிக்கடி சந்தித்த மகேந்திரநாத் குப்தா, தினமும் அவர் கூறுபவற்றையும், அவர் புரிந்த விவாதங்களைப் பற்றியும் வீட்டுக்குச் சென்றவுடன் தன் தினக்குறிப்புப் புத்தகத்தில் குறிப்பெடுத்துக் கொண்டார்.

இந்த குறிப்புகளே, பின்னாட்களில் The Gospel of Sri Ramakrishna என்ற பெயரில் தொகுக்கப்பட்டது. இது தமிழில் ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுத மொழிகள் என்ற பெயரில் மூன்று பாகங்களாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

RAMAKRISHNAR HISTORY IN TAMIL: ஸ்ரீராமகிருஷ்ணரின் கடைசி நாட்களில் தொண்டைப் புற்றுநோய் அவரைத் தாக்கியது. அவருடைய சீடர்கள் அவரை கல்கத்தாவின் அருகில் உள்ள காசிப்பூர் என்ற இடத்தில் தோட்டவீட்டில் வைத்து வைத்தியம், சேவை செய்தனர். 1885 டிசம்பர் 11ஆம் நாளிலிருந்து 1886 ஆகத்து 15 வரை இங்கு தங்கினார். ஸ்ரீராமகிருஷ்ணரின் 1886 ஆகத்து 16 அன்று மகா சமாதி அடைந்தார்.

RAMAKRISHNAR HISTORY IN TAMIL | இராமகிருஷ்ணர் பற்றிய கட்டுரை
RAMAKRISHNAR HISTORY IN TAMIL | இராமகிருஷ்ணர் பற்றிய கட்டுரை

இராமகிருஷ்ணா இயக்கம்

RAMAKRISHNAR HISTORY IN TAMIL: இராமகிருஷ்ணா மிஷன் மற்றும் இராமகிருஷ்ணா மடம் என்பவை இராமகிருஷ்ணா இயக்கம் அல்லது வேதாந்த இயக்கம் எனப்படும் உலகளாவிய ஆன்மீக இயக்கத்தின் இரட்டை அமைப்புகளாகும்.

இராமகிருஷ்ணா மிஷன் உதவிபுரிந்திடவும் மக்கள் பணியாற்றிடவும் தன்னார்வத் தொண்டர்களைக் கொண்டு மே 1,1897ஆம் ஆண்டு ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான சுவாமி விவேகானந்தரால் நிறுவப்பட்ட அமைப்பாகும்.

நலவாழ்வு, பேரழிவு மீட்புப் பணிகள், கிராம வளர்ச்சி, பழங்குடி மேம்பாடு, துவக்க மற்றும் உயர்நிலைக் கல்வி மற்றும் பண்பாடு பேணுதல் எனப் பலதுறைகளில் முக்கிய பங்காற்றி வருகிறது.

தனது நூற்றுக்கணக்கான துறவிகளின் மற்றும் ஆயிரக்கணக்கானத் தொண்டர்களைக் கொண்டு இப்பணிகளை அவ்வமைப்பு நிறைவேற்றி வருகிறது. கர்ம யோகம் எனப்படும் செயல்வழி வழிபாட்டுக் கொள்கைகளைக் கொண்டு இச்செயல்களை செய்து வருகிறது.

2013 ஆம் ஆண்டின் உத்தராகண்டம் பேரிடர் மீட்புப்பணியில் ராமகிருஷ்ண மிஷனின் பங்கு குறிப்பிடத்தக்கது. இந்த மிஷனின் தலைமையகம் இந்தியா கொல்கத்தாவிலுள்ள பேலூர் மடத்தில் அமைந்துள்ளது.

1993 ஆம் ஆண்டு நிகழ்த்திய உரையில் யுனெஸ்கோ அமைப்பின் இயக்குநர் ஜெனரல் ஃபெடரிகோ மேயர், 1945 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட யுனெஸ்கோவின் அடிப்படைச் சட்ட திட்டம் 1897 இல் ஆரம்பிக்கப்பட்ட ராமகிருஷ்ண மிஷனின் நோக்கம், செயல்பாடுகளோடு ஒத்திருப்பதைக் கண்டு வியந்து குறிப்பிட்டுள்ளார்.

இராமகிருஷ்ணரின் ஆணை (Ramakrishna Order)

RAMAKRISHNAR HISTORY IN TAMIL: இராமகிருஷ்ணரின் ஆணை (Ramakrishna Order) என்பது இராமகிருட்டிணரால் நிறுவப்பட்ட துறவற பரம்பரையாகும். இராமகிருட்டிண மடத்தில் ஆண் சந்நியாசிகள் மற்றும் பிரம்மச்சாரிகள் உள்ளனர்.

1886 சனவரியில் கோசிபூர் மாளிகையில் அவர் தனது நெருங்கிய சீடர்களில் பன்னிரண்டு பேருக்கு துறவரத்தை வழங்கினார். 1886 ஆம் ஆண்டில் இராமகிருஷ்ணர் காலமான பிறகு விவேகானந்தர் தலைமையில் இளம் சீடர்கள் ஒரு புதிய துறவற ஒழுங்காக ஒழுங்கமைத்தனர்.

இராமகிருஷ்ண ஆணையை, இளம் துறவிகளுக்குப் பயிற்சி அளிக்கும் சட்டப்பூர்வ நிறுவனமான இராமகிருட்டிண மடத்துடன் இதை குழப்பிக் கொள்ளக் கூடாது. அனாதை இல்லங்கள், மருத்துவமனைகள், ஆரம்பப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் – அத்துடன் கிராமங்களில் பேரிடர் நிவாரணம் மற்றும் பொருளாதார மேம்பாடு உள்ளிட்ட தொண்டுப் பணிகளைச் செய்யும் இராமகிருசுண இயக்கம் என்ற இணையான அமைப்பும் உள்ளது.

இராமகிருஷ்ணர் பொன்மொழிகள்

 1. விறகில் தீ இருப்பதை உணர்ந்தவன் ஞானி, அதில் தீ மூட்டி உணவு சமைத்து சாப்பிட்டவன் விஞ்ஞானி.
 2. ஒரு கெட்ட பழக்கத்தைவிட வேண்டும் என்றால், ஒரு நல்ல பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும், இதற்கு தீவிரமான முயற்சி தேவை.
 3. கீழே கொட்டிய கடுகை பொருக்கி எடுப்பது போல, பல திசைகளிலும் ஓடும் மனதை ஒரு நிலைப்படுத்துவது எளிதன்று. ஆனால் வைராக்கியத்தால் அதைச் சாதிக்க முடியும்.
 4. மனிதர்கள் புகழ்வதும் விரைவு, இகழ்வதும் விரைவு. எனவே: மற்றவர்கள் உன்னைப் பற்றிச் சொல்லும் வார்த்தைகளைக் கவனியாதே.
 5. முற்பிறவியில் நடந்து கொண்டதற்கு ஏற்பவே பெரும்பாலும் எல்லாம் நடக்கிறது. ஏதோ திடீரென நடப்பதாக மக்கள் நினைக்கிறார்கள்.
 6. உன்னிடம் தீவிர நம்பிக்கை இருக்குமானால், நீ மனமுருகித் தேடும் பொருள் உனக்கு கிடைத்தே தீரும்.
 7. வேலை செய்வது நல்லது. அது மனதை பண்படுத்துகிறது. ஆனால், பலன் கருதாமல் செய்ய வேண்டும்.
 8. ஈரமுள்ள குச்சி தீப்பற்றாது. அதுபோல் உலக ஆசை கொண்டவனுக்கு கடவுள் அருள் கிடைக்காது.
 9. ஆழ்ந்த நம்பிக்கை இமயமலை போன்றது. அதை எவராலும் அசைக்க முடியாது.
 10. வண்டு தேன் மலரைத் தவிர வேறு எதன் மீதும் உட்காராது. அதுபோல, உண்மையான துறவி இறை ஆனந்தத்தைத் தவிர வேறு ஆனந்தங்களை ஏற்றுக் கொள்ளமாட்டான்.
 11. அறிவு பலவீனமானது, நம்பிக்கை பலமானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *