VARAHI AMMAN HISTORY IN TAMIL | வராகி அம்மன் பற்றிய கட்டுரைVARAHI AMMAN HISTORY IN TAMIL | வராகி அம்மன் பற்றிய கட்டுரை

VARAHI AMMAN HISTORY IN TAMIL: வராகி (வாராஹி) என்பது இந்து சமயத்தின் நான்கு முக்கிய வழிபாட்டு நடைமுறை பிரிவினர்களான சைவம் (சிவ பக்தர்கள்), பிராமணியம் (பிரம்ம பக்தர்கள்), வைணவம் (விஷ்ணுவின் பக்தர்கள்), சக்தி (தேவி வழிபாடு) ஆகியோரால் வணங்கப்படும் ஒரு தெய்வமாகும்.

பொதுவாக, இரகசியமான வாமர்கா தாந்த்ரீக நடைமுறைகளைப் பயன்படுத்தி, வராஹி அம்மனை இரவில் வழிபடும் வழக்கம் உள்ளது. இவர் அம்மனின் காவல் தெய்வமாகவும், சப்தகன்னியரில் ஒருவராகவும் அறியப்படுகிறார். பௌத்த தெய்வங்களான வஜ்ரவரா மற்றும் மாரிச்சி ஆகியவை இந்து தெய்வமான வராகியிலிருந்து தோன்றியவை ஆகும்.

VARAHI AMMAN HISTORY IN TAMIL – தோற்றம்

VARAHI AMMAN HISTORY IN TAMIL: வராகி திருமாலின் வராக அம்சமாவார். இவர் வராகமெனும் பன்றி முகமும், எட்டு கரங்களையும் உடையவர். பின் இரு கரங்களில் தண்டத்தினையும், கலப்பையையும் கொண்டவராவார். இவர் கருப்பு நிற ஆடையுடுத்தி எருமை மீது அமர்ந்திருக்கிறார்.

எட்டு வராகிகள்

VARAHI AMMAN HISTORY IN TAMIL: மகா வராகி, ஆதி வராகி, ஸ்வப்னவராகி, லகு வராகி, உன்மத்த வராகி, சிம்ஹாருடா வராகி, மகிஷாருடா வராகி, அச்வாருடா வராகி என்போர் எட்டு வராகிகள் (அஷ்டவராகி) என்று அழைக்கப்படுகிறார்கள்.

VARAHI AMMAN HISTORY IN TAMIL | வராகி அம்மன் பற்றிய கட்டுரை
VARAHI AMMAN HISTORY IN TAMIL | வராகி அம்மன் பற்றிய கட்டுரை

இந்துத் தொன்மவியல்

VARAHI AMMAN HISTORY IN TAMIL: மார்க்கண்டேய புராணத்தில் காணப்படும், தேவி மகாத்மியத்திலுள்ள சும்பன் – நிசும்பன் புராணத்தின் படி, சப்தகன்னியர்கள் போன்ற பெண் கடவுளர்களின் தோற்றம் சக்தியின் வடிவமாக, கடவுளர்களின் உடல்களிலிருந்து வந்ததாகக் கருதப்படுகிறது (பெண்பால் சக்திகள்).

வராகி வராகாவிலிருந்து உருவாக்கப்பட்டது என்று வேதங்கள் கூறுகின்றன. இப் பெண் தெய்வம் ஒரு பன்றியின் முகத்தையும், ஒரு சக்கரத்தை கையில் ஏந்தியவாறும் காணப்படுகிறது. மேலும், மற்றொரு கையில் இருக்கும் வாளால் போரிடுவதைக் காண முடிகிறது.

வேதத்தில் விவரிக்கப்பட்ட போருக்குப் பிறகு, சப்த கன்னியர்களில் ஒருவரான வராகி அம்மன் பாதிக்கப்பட்டவரின் இரத்தத்தை குடித்துவிட்டு நடனம் ஆடுவதாக சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

ரக்தாபிஜா என்ற அரக்கனைக் கொன்றது குறித்து தேவி மகாத்மியத்தின் பிந்தைய அத்தியாயத்தின்படி, முக்கிய போர்வீரர்-தெய்வமாகிய துர்கா, சக்திகளை தன்னிடமிருந்து உருவாக்கி, அவர்களின் உதவியுடன் அரக்கனை படுகொலை செய்கிறார்.

SAIBABA HISTORY IN TAMIL | சீரடி சாய்பாபா பற்றிய கட்டுரை

சும்பா என்ற அரக்கன் துர்காவை நேருக்குநேரான போருக்கு சவால் விடும்போது, அவள் சப்த கன்னியர்களை தனக்குள் உள்வாங்கிக் கொள்கிறாள். வாமன புராணத்தில், தெய்வீக தாய் எனப் போற்றப்படும், சண்டிகாவின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து இந்த சக்திகள் தோன்றுகின்றன என்று கூறப்பட்டுள்ளது; இந்த சக்திகளில் ஒருவரான வராகி, சண்டிகாவின் முதுகில் இருந்து தோன்றியதாக கருதப்படுகிறது.

மார்கண்டேய புராணம் வராகியை வரங்களை அள்ளித் தருபவராகவும், வடக்கு திசையின் அதிபதியாகவும் புகழ்ந்துரைக்கிறது. ஒரு பாடலில், இந்த சக்திகள், திசைகளின் பாதுகாவலர்களாக அறிவிக்கப்படுகிறார்கள். அதே புராணத்தில் மற்றொரு சந்தர்ப்பத்தில், வராகி, ஒரு எருமையின் மீது சவாரி செய்பவள் என்று விவரிக்கப்படுகிறாள்.

தேவி பகவத புராணத்தில் வராகி, மற்ற சக்திகளுடன், துர்கா எனப்படும் ஆதிபராசக்தியால் உருவாக்கப்பட்டது என்று விவரிக்கிறது. தேவைப்படும்போது இந்த சக்திகள், பேய்களுடன் போராடுவார்கள் என்று தாயான ஆதிபராசக்தி தெய்வங்களுக்கு வாக்குறுதி அளிக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது.

ரக்தாபிஜா அரக்கனை வதம் செய்யும் புராணத்தில், வராகி ஒரு பன்றி முகவடிவம் கொண்டவர், மேலும், ஒரு சடலத்தின் மீது அமர்ந்திருக்கும்போது பேய்களை தனது தந்தங்களைப் பயன்படுத்தி சண்டையிடுவதாக விவரிக்கப்படுகிறார்.

வராக புராணத்தில், ரக்தாபிஜாவின் கதை மீண்டும் சொல்லப்படுகிறது, ஆனால் இங்கே ஒவ்வொரு சக்தியும் மற்றொரு சக்தியின் உடலில் இருந்து தோன்றும். விஷ்ணுவின் சக்தியான வைஷ்ணவியின் பின்புறத்திலிருந்து சேசன் – நாகா ( விஷ்ணு தூங்கும் பாம்புப் படுக்கை) வராகி தோன்றியதாக கூறப்படுகிறது. வராகி அதே புராணத்தில் பொறாமையைக் (அசூயா) குறிப்பதாகக் கூறப்படுகிறது.

மச்ச புராணம் வராஹியின் தோற்றத்தைப் பற்றி, வித்தியாசமான கதையைச் சொல்கிறது. வராகி, மற்றும் பிற சக்திகள் சிவ பெருமானால் உருவாக்கப்பட்டு உள்ளது. சிவன் அந்தகாசுரன் என்னும் அரக்கனை அழிப்பதற்காக இவர்களை தோற்றுவித்தார் என்று இந்த புராணத்தில் கூறப்படுகிறது.

அந்தகாசுரன் எனப்படும் அரக்கன், ரக்தாபிஜா அரக்கனைப் போல அவனுடைய ரத்தத் துளிகளில் இருந்து மீண்டும் உயிர் பெற்று எழும் வலிமையை உடையவன். ஆதலால், அந்தகாசுரனை அழிப்பதற்கு சிவன் வராகியின் உதவியைப் பெற்றார் எனக் கதையில் சொல்லப்படுகிறது.

VARAHI AMMAN HISTORY IN TAMIL | வராகி அம்மன் பற்றிய கட்டுரை
VARAHI AMMAN HISTORY IN TAMIL | வராகி அம்மன் பற்றிய கட்டுரை

வராகி அம்மன் கோயில்கள்

VARAHI AMMAN HISTORY IN TAMIL: சப்த கன்னியர்களில் ஒரு பகுதியாக வராகி அம்மனை வழிபடும் கோயில்களைத் தவிர, வராகி அம்மனை பிரதான தெய்வமாக வணங்கப்படும் குறிப்பிடத்தக்க கோயில்களும் உள்ளன.

  1. தஞ்சை பெரிய கோயிலில் தனி சன்னதியாக உள்ளது.
  2. திருப்பூர் மாவட்டத்தில் செங்கப்பள்ளியில் அருள்மிகு செரைக்கன்னிமார் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது
  3. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சாலாமேடு எனும் ஊரில் அஷ்டவராகி கோயில் உள்ளது. இக்கோயில் உலகிலேயே வராகியம்மனுக்கு அமைக்கப்பட்ட முதல் கோயிலாகக் கருதப்படுகிறது.
  4. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வழுவூர் வீரட்டேசுவரர் கோயில் வராகி வழிபட்ட தலமாக அறியப்படுகிறது.
  5. கடலூர் மாவட்டத்தில் உள்ள நெல்லிக்குப்பம் எனும் ஊரில் சப்தமாதாக்கள் (செல்லியம்மன் எனும் பெயரில்) கோவில் உள்ளது. இங்கு வராஹி அம்மனுக்கு பஞ்சமி திதியில் பூஜை மற்றும் மஹா யாகம் நடைபெறும்.
  6. தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்திற்கு அருகில் உள்ள என்.சுப்புலாபுரம் (எ) நரிப்பட்டி என்ற ஊரில் வாரஹி அம்மன் கோவில் உள்ளது
  7. திருவாரூர் தியாகராஜர் கோவிலில் சப்தமாதா தனி சன்னதியாக சப்தமாதாகள் உடன் வாரஹி அம்மன் உள்ளார்.
  8. இராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை என்ற ஊரில் உத்தரகோசமங்கை மங்கலநாதர் திருக்கோயிலுக்கு 200மீ தொலைவில் வராகி அம்மனுக்கு தனிக் கோவில் உள்ளது.
  9. இலங்கை, யாழ்ப்பாண மாவட்டத்தில், கொக்குவில் மேற்கு, கொக்குவில் என்ற ஊரில் வாராகி அம்மனுக்குத் தனிக் கோவில் உள்ளது.
  10. திருச்சி எழில்நகர் அருள்மிகு லெட்சுமி கணபதி ஆலயத்தில், வராகி அம்மனுக்கு தனிக் கோவில் உள்ளது.
VARAHI AMMAN HISTORY IN TAMIL | வராகி அம்மன் பற்றிய கட்டுரை
VARAHI AMMAN HISTORY IN TAMIL | வராகி அம்மன் பற்றிய கட்டுரை

வராகி மாலை

VARAHI AMMAN HISTORY IN TAMIL: வராகி மாலை என்னும் நூல் வீரை கவிராச பண்டிதர் என்பவரால் இயற்றப்பட்டது. காலம் 16-ஆம் நூற்றாண்டு. சிவனின் பாகம் சக்தி. சக்தியை ஏழு கூறுகளாகப் பகுத்துப் பார்ப்பது உண்டு.

  • அபிராமி, நாராயணி, இந்திராணி, கௌமாரி, வாராகி, துர்க்கை, காளி இவர்களில் வாராகி என்பவளை இந்த நூல் வராகி என்கிறது.
  • வராகி உடலுக்கு ஆற்றல் தரும் தெய்வம்.
  • இந்த நூலில் 32 கட்டளைக்கலித்துறைப் பாடல்கள் உள்ளன. பகைவனை அழிக்கும் உத்திகளான வசியம், தம்பனம், மோகனம், ஆகருடணம், உச்சாடனம் போன்றவற்றிற்கு இதில் பாடல்கள் உள்ளன.
  • பகைவனுக்குக் கொடுமையான தண்டனை வழங்குக எனக் கேட்டுக்கொள்ளும் 10 பாடல்கள் இதில் பிற்காலத்தில் மேலும் சேர்க்கப்பட்டுள்ளன. பாடல்கள் சிறந்த நடையில் அமைந்துள்ளன.

வாராஹி அம்மனை யாரெல்லாம் வழிபட வேண்டும் ?

VARAHI AMMAN HISTORY IN TAMIL: சப்த கன்னியர்களில் ஒருவராக போற்றப்படும் வாராஹி அம்மன், தெய்வீக குணமும், விலங்கின் ஆற்றலும் கொண்டவளாக விளங்குகிறாள்.

தாயை போன்ற இரக்கமும், தயாள குணம் உடையவளாக இருக்கும் வாராஹி, மூர்க்க குணம் உடையவளாக உள்ளதால் இவளை உக்ர தெய்வமாக வழிபடுகிறார்கள். இவளை வராக அவதாரம் எடுத்த மகாவிஷ்ணுவின் பெண் வடிவம் என்றும் சிலர் சொல்வதுண்டு.

சப்த கன்னியர்களான பிரம்மி, மகேஸ்வரி, வைஷ்ணவி, கெளமாரி, வராகி, இந்திராணி, சாமுண்டி ஆகியோரில் பன்றியின் முகமும், பெண்ணின் உடலும் கொண்டவள் வாராஹி. எதிரிகள், தீயசக்திகள், கடன்கள் போன்ற துயரங்கள் ஆகியவற்றை அடித்து விரட்டக் கூடிய தெய்வமாக வாராஹி விளங்குகிறாள்.

வாராஹி வழிபாட்டினை பலரும் மேற்கொண்டாலும் இந்தியாவில் காசி மற்றும் தஞ்சாவூர் பெரிய கோவிலில் மட்டுமே வாராஹிக்கு தனி சன்னதி உள்ளது.

வாராஹிக்கே முதல் பூஜை

VARAHI AMMAN HISTORY IN TAMIL: அன்னை பராசக்தியின் போர் படைத்தளபதியாக வாராஹி உள்ளதால், வாராஹியை வழிபடுபவர்களுக்கு மூன்று உலகங்களிலும் எதிரிகளே இருக்க மாட்டார்கள் என்பது ஆன்றோரின் வாக்கு. ராஜராஜ சோழனுக்கு வெற்றிகளை வாரி வழங்கிய தெய்வமாக வாராஹியே விளங்குகிறாள்.

மற்ற கோவில்களில் எந்த விழாக்கள், உற்சவங்கள் துவங்கினாலும் முழு முதற் கடவுளான விநாயகருக்கு தான் முதல் பூஜை நடைபெறும். ஆனால் தஞ்சை பெரிய கோவிலில் மட்டும் முதல் பூஜை வாராஹிக்கே நடத்தப்படும் மரபு காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

VARAHI AMMAN HISTORY IN TAMIL | வராகி அம்மன் பற்றிய கட்டுரை
VARAHI AMMAN HISTORY IN TAMIL | வராகி அம்மன் பற்றிய கட்டுரை

வாராஹி வழிபாட்டு முறை

VARAHI AMMAN HISTORY IN TAMIL: வாராஹி அம்மனை வழிபட நினைப்பவர்கள் மனதில் எந்த விதமான தீய எண்ணங்களும் இல்லாமல், மன தூய்மையுடன் தொடர்ந்து, வாராஹிக்கு உரிய மந்திரங்களை சொல்லி தினமும் மனமுருக வழிபட்டு வந்தால் அவளின் பரிபூரண அருள் கிடைக்கும்.

வீட்டில் வாராஹியின் படம் அல்லது விக்ரஹம் வைத்து வழிபட நினைப்பவர்கள் வடக்கு நோக்கி, வாராஹியின் முகம் இருக்கும் படி அமைத்து வழிபட வேண்டும். வாராஹிக்கு உரிய திசையாக வட திசை கருதப்படுகிறது.

வாராஹியை வழிபடுபவர்கள், வீட்டில் தினமும் ஒரு அகல் விளக்கு ஏற்றி வைத்து, அந்த விளக்கில் வாராஹி அம்மன் இருப்பதாக நினைத்து வழிபட வேண்டும்.

வழிபாட்டின் போது வாராஹிக்கு விருப்பமான நீலம், சிவப்பு, மஞ்சள் நிற உடைகளை உடுத்தி வழிபடுவது, மிகவும் சிறப்பான பலனை தரும். நைவேத்தியமாக தயிர் சாதம், மாதுளை படைத்து, சிவப்பு நிறம் கொண்ட மலர்களை சாத்தி வழிபடலாம்.

வாராஹியை வழிபட வேண்டியவர்கள்

VARAHI AMMAN HISTORY IN TAMIL: 27 நட்சத்திரங்களில் கிருத்திகை, பூரம், மூலம், ரேவதி நட்சத்திரங்கள் பிறந்தவர்கள் வாராஹி அம்மனை நிச்சயம் வழிபட வேண்டும்.

அதே போல் 12 ராசிகளில் மகரம், கும்பம் ராசிகளை சேர்ந்தவர்களும் வாராஹியை வழிபட கஷ்டங்கள் என்பது அவர்களை அண்டாது. மேலும், சனி ஆதிக்கம் உள்ளவர்கள், சனி திசை நடப்பவர்களும் வாராஹியை வழிபட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *