BHARATHIDASAN IN TAMIL | பாரதிதாசன்BHARATHIDASAN IN TAMIL | பாரதிதாசன்

BHARATHIDASAN IN TAMIL: பாரதிதாசன் (Bharathidasan, 29 ஏப்ரல் 1891 – 21 ஏப்ரல் 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து, பெரும் புகழ் படைத்த பாவலர் ஆவார். இவருடைய இயற்பெயர் கனகசுப்புரத்தினம் ஆகும். தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால், ‘பாரதிதாசன்’ என்று தம் பெயரை மாற்றிக் கொண்டார்.

பாரதிதாசன், தம் எழுச்சி மிக்க எழுத்துகளால், “புரட்சிக் கவிஞர்” என்றும் “பாவேந்தர்” என்றும் பரவலாக அழைக்கப்படுபவர். இவர் குயில் என்னும் (கவிதை வடிவில்) ஒரு திங்களிதழை நடத்தி வந்தார்.

பிறப்பு – BHARATHIDASAN IN TAMIL

BHARATHIDASAN IN TAMIL: பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள், தென்னிந்தியாவில் இருக்கும் புதுவையில், ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி, 1891 ஆம் ஆண்டில் கனகசபை முதலியார் மற்றும் இலக்குமி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார்.

THIRUVALLUVAR HISTORY IN TAMIL | திருவள்ளுவர்

அவரது தந்தை, அவ்வூரில் பெரிய வணிகராக இருந்தார். பாரதிதாசன் அவர்களின் இயற்பெயர் சுப்புரத்தினம். அவரது தந்தையின் பெயரின் முதல் பாதியை, தன்னுடைய பெயரில் இணைத்து ‘கனகசுப்புரத்தினம்’ என்று அழைக்கப்பட்டார்.

பாரதியார் மீது பற்று

BHARATHIDASAN IN TAMIL: தமிழ்மொழி மீது பற்றுக் கொண்டவராக இருந்த பாரதிதாசன் அவர்கள், அவரது மானசீக குருவாக சுப்ரமணிய பாரதியாரைக் கருதினார். அவரது பாடலைத் தனது நண்பனின் திருமண நிகழ்வின் போது பாடிய அவர், பாரதியாரை நேரில் சந்திக்கவும் செய்தார்.

பாரதியிடமிருந்து பாராட்டுக்கள் பெற்றதோடு மட்டுமல்லாமல், அவரது நட்பும் கிடைத்தது அவருக்கு. அன்று முதல், அவர் தனது இயற்பெயரான கனகசுப்புரத்தினம் என்பதை ‘பாரதிதாசன்’ என்று மாற்றிக் கொண்டார்.

பாரதிதாசன் சிறப்புப் பெயர்கள்

  1. புரட்சிக்கவி (அறிஞர் அண்ணா)
  2. புரட்சிக்கவிஞர் (பெரியார்)
  3. பாவேந்தர்
  4. புதுவைக்குயில்
  5. பகுத்தறிவு கவிஞர்
  6. தமிழ்நாட்டு இரசுல் கம்சதேவ்
  7. இயற்க்கை கவிஞர்

புனைப் பெயர்கள்

BHARATHIDASAN IN TAMIL: பாரதிதாசன் பல்வேறு புனைப் பெயர்களில் தனது கவிதைகளை எழுதி வெளியிட்டுள்ளார். அவையாவன,

  1. கண்டழுதுவோன்
  2. கிறுக்கன்
  3. கிண்டல்காரன்
  4. பாரதிதாசன்
BHARATHIDASAN IN TAMIL | பாரதிதாசன்
BHARATHIDASAN IN TAMIL | பாரதிதாசன்

பாரதிதாசன் இயற்றிய நூல்கள்

  1. இசை அமுது
  2. பாண்டியன் பரிசு
  3. எதிர்பாராத முத்தம்
  4. சேரதாண்டவம்
  5. அழகின் சிரிப்பு
  6. புரட்சிக்கவி
  7. குடும்ப விளக்கு
  8. இருண்ட வீடு
  9. குறிஞ்சித்திட்டு
  10. கண்ணகி புரட்சிக்காப்பியம்
  11. மணிமேகலை வெண்பா
  12. காதல் நினைவுகள்
  13. கழைக்கூத்தியின் காதல்
  14. தமிழச்சியின் கத்தி
  15. இளைஞர் இலக்கியம்
  16. சுப்பிரமணியர் துதியமுது
  17. சுதந்திரம்
  18. தமிழியக்கம் (ஒரே இரவில் எழுதியது)

பாரதிதாசன் நாடகங்கள்

  1. ஐயர் வாக்குப் பலித்தது
  2. விகடக் கோர்ட்
  3. மூளை வைத்தியம்
  4. சிந்தாமணி
  5. லதாக்ருகம்
  6. தமிழச்சியின் கத்தி
  7. வீரத்தாய்
  8. இரணியன் அல்லது இணையற்ற வீரன்
  9. கற்கண்டு
  10. நல்ல தீர்ப்பு
  11. புரட்சிக் கவி
  12. பொறுமை கடலினும் பெரிது
  13. ஒன்பது சுவை
  14. போர் மறவன்
  15. அமைதி
  16. ஏழை உழவன்
  17. காதல் வாழ்வு
  18. மருத்துவர் வீட்டில் அமைச்சர்
  19. சத்திமுத்தப் புலவர்
  20. இன்பக்கடல்
  21. குளத்தில் குரங்கு
  22. கழைக்கூத்தியின் காதல்
  23. ஆரிய பத்தினி மாரிஷை
  24. குழந்தை நாடகம் (முத்துப் பையன்)
  25. படித்த பெண்கள் (1948)
  26. படித்த பெண்கள் (1949)
  27. கருஞ்சிறுத்தை
  28. சேரதாண்டவம்
  29. ஆக்கம் தீவினை (திருக்குறள் சினிமா)
  30. சௌமியன்
  31. அமிழ்து எது?
  32. ரஸ்புடின்
  33. கோயில் இரு கோணங்கள்
  34. சமணமும் சைவமும்
  35. அம்மைச்சி
  36. தலைமலை கண்ட தேவர்
  37. மேனி கொப்பளித்ததோ?
  38. பிசிராந்தையார் 1,2
  39. பாரதப் பாசறை
  40. குடும்ப விளக்கும் குண்டுக் கல்லும்
  41. இசைக் கலை
  42. பறவைக் கூடு
  43. மக்கள் சொத்து
  44. குழந்தை நாடகம்
  45. நிமிஷ நாடகம்
  46. கொய்யாக் கனிகள்
  47. போர்க்காதல்
  48. ஆனந்த சாகரம்
  49. வஞ்ச விழா
BHARATHIDASAN IN TAMIL | பாரதிதாசன்
BHARATHIDASAN IN TAMIL | பாரதிதாசன்

பாவேந்தர் பாரதிதாசனிடம் பார்ப்பன எதிர்ப்புக் கொள்கை

BHARATHIDASAN IN TAMIL: பாவேந்தர் பாரதிதாசனிடம் பார்ப்பன எதிர்ப்புக் கொள்கை மிகவும் அழுத்தமாகவே இருந்தது எனபதற்கு அவர் எழுதிய இந்க கவிதையே சான்றாக இருக்கிறது.

பார்ப்பான்பால் படியாதீர்
சொற்குக் கீழ்ப் படியாதீர்…
ஆர்ப்பான் நம் நன்மையிலே
ஆர்வம் மிக உள்ளவன் போல்!
நம்ப வேண்டாம்…
தமிழின்பேர் சொல்லிமிகு
தமிழரிடைத் தமிழ்நாட்டில் வாழ்ந்திட்டாலும்

தமிழழித்துத் தமிழர் தம்மைத்
தலைதூக்கா தழித்துவிட
நினைப்பான் பார்ப்பான்
அமுதாகப் பேசிடுவான்
அத்தனையும் நஞ்சென்க
நம்பவேண்டாம்
தமிழர்கடன் பார்ப்பானைத்
தரைமட்டம் ஆக்குவதே…

BHARATHIDASAN IN TAMIL: இவ்வளவு எதிர்ப்புணர்ச்சியும் பாரதியாரை அணுகும் போது அடிபட்டுப் போகிறது. ஏனென்றால் இதில் சொல்லப்பட்டுள்ள பார்ப்பனர்க்கே உரிய தீய நோக்கங்களும் செயல்பாடுகளும் இல்லாமல் தமிழ் இனம், தமிழ்நாடு, தமிழ் மொழி ஆகியவற்றின் முன்னேற்றத்திற்காகத் தன் பணியை முழுமையாகச் செய்தவர் பாரதியார் என்பது பாரதிதாசன் எனும் பெயர் மாற்றத்திற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள்

BHARATHIDASAN IN TAMIL: பாரதிதாசன் அவர்களுக்கு பெரியார், “புரட்சி கவிஞர்” என்ற பட்டமும், அறிஞர் அண்ணா, ‘புரட்சிக்கவி’ என்ற பட்டமும் வழங்கினர். தமிழ்நாடு மாநில அரசாங்கம், அவரது நினைவாக ஆண்டுதோறும் ஒரு தமிழ் கவிஞருக்கு ‘பாரதிதாசன் விருதினை’ வழங்கி வருகிறது மற்றும் ‘பாரதிதாசன் பல்கலைக்கழகம்’ என்ற பெயரில் ஒரு மாநில பல்கலைக்கழகம் திருச்சிராப்பள்ளியில் நிறுவப்பட்டது.

  • 1946 – அவரது “அமைதி-ஊமை” என்ற நாடகத்திற்காக அவர் ‘தங்கக் கிளி பரிசு’ வென்றார்.
  • 1970 – அவரது மரணத்திற்குப் பின், அவரது ‘பிசிராந்தையார்’ நாடகத்திற்காக அவருக்கு ‘சாஹித்ய அகாடமி விருது’ வழங்கப்பட்டது
  • 2001 – அக்டோபர் மாதம் 9ஆம் தேதி, சென்னை தபால் துறை மூலமாக ஒரு நினைவு அஞ்சல்தலை அவரது பெயரில் வெளியிடப்பட்டது.

இறப்பு

BHARATHIDASAN IN TAMIL: எழுத்தாளர், திரைப்படக் கதாசிரியர், கவிஞர், அரசியல்வாதி என்று பன்முகம் கொண்ட பாரதிதாசன் அவர்கள், ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி, 1964 ஆம் ஆண்டில் இயற்கை எய்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *