THANTHAI PERIYAR HISTORY IN TAMIL | தந்தை பெரியார்THANTHAI PERIYAR HISTORY IN TAMIL | தந்தை பெரியார்

THANTHAI PERIYAR HISTORY IN TAMIL: பெரியார் என்று பரவலாக அறியப்படும் ஈ. வெ. இராமசாமி சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதியை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர்.

தமிழகத்தின் மிக முக்கியமான இயக்கமாகக் கருதப்படும் திராவிடர் கழகத்தினைத் தோற்றுவித்தவர். இவருடைய சுயமரியாதை இயக்கமும், பகுத்தறிவுவாதமும் மிகவும் புகழ்பெற்றது.

இவர் வசதியான, முற்பட்ட சாதியாகக் கருதப்பட்ட நாயக்கர் என்ற சமூகத்தில் பிறந்திருந்தும், சாதிக் கொடுமை, தீண்டாமை, மூடநம்பிக்கை, வருணாசிரம தருமம் கடைப்பிடிக்கும் பார்ப்பனியம், பெண்களைத் தாழ்வாகக் கருதும் மனநிலை போன்றவற்றை எதிர்த்து மக்களுக்காகக் குரல் கொடுத்தார்.

To Download TNPSC Portal Current Affairs Tamil PDF

இம்மனநிலை வளரக் காரணமானவை மக்களிடையே இருக்கும் மூடநம்பிக்கையும், அந்த மூடநம்பிக்கைக்குக் காரணமாக இருக்கும் கடவுள் நம்பிக்கையும், கடவுள் பெயரால் உருவான சமயங்களும் தான் என்பதைக் கருத்தில் கொண்டு ஈ. வெ. ரா, தீவிர இறைமறுப்பாளாராக இருந்தார்.

THANTHAI PERIYAR HISTORY IN TAMIL: இந்திய ஆரியர்களால், தென்னிந்தியாவின் பழம்பெருமை வாய்ந்த திராவிடர்கள் பார்ப்பனரல்லாதார் என்ற ஒரு காரணத்தினால் புறக்கணிக்கப்படுவதையும், அவர்களால் திராவிடர்களின் வாழ்வு சுரண்டப்படுவதையும் இராமசாமி எதிர்த்தார்.

அவர் தமிழ்ச் சமூகத்திற்காகச் செய்த புரட்சிகரமான செயல்கள், மண்டிக்கிடந்த சாதிய வேறுபாடுகளைக் குறிப்பிடத்தக்க வகையில் அகற்றியது. தமிழ் எழுத்துகளின் சீரமைவுக்கு இராமசாமி குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளார்.தமிழக அரசு இவரது பிறந்தநாளை சமூக நீதி நாளாக (செப்17) அறிவித்தது.

இவருடைய பகுத்தறிவு, சுயமரியாதைக் கொள்கைகள் தமிழ்நாட்டின் சமூகப் பரப்பிலும், தமிழக அரசியலிலும் பல தாக்கங்களை ஏற்படுத்தியவை. இவர் ஈ.வெ.ரா, ஈ.வெ. இராமசாமி என்ற பெயர்களாலும் தந்தை பெரியார், வைக்கம் வீரர் என்ற பட்டங்களாலும் அறியப்படுகிறார்.

பிறப்பு

THANTHAI PERIYAR HISTORY IN TAMIL: பெரியார் 1879ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி வெங்கட்ட ராமசாமி நாயக்கர் எனும் இயர் பெயர் கொண்டவராய் ஈரோட்டில் பிறந்தார். தந்தை வெங்கட்ட நாயக்கர் மிக வசதியான வணிக பின்னணியை கொண்டவர்.

தாயார் முத்தம்மாள் என்ற இயற்பெயர் கொண்ட சின்ன தாயம்மாள் ஆவார். உடன் பிறந்தோர் தமையனரான கிருஷ்ணசாமி, தமக்கைகள் கண்ணம்மா மற்றும் பொன்னுதாயி ஆவர்.

காசி யாத்திரை

THANTHAI PERIYAR HISTORY IN TAMIL: 1904ஆம் ஆண்டு பெரியார் இந்துக்களின் புனித தலமாக கருதப்படும் காசிக்கு யாத்திரிகராக காசிவிசுவநாதரை தரிசிக்க சென்றார், அங்கு நடக்கும் மனிதாபிமனமற்ற செயல்கள், பிச்சை எடுத்தல், கங்கை ஆற்றில் மிதக்கவிடப்படும் பிணங்கள் போன்ற அவலங்களையும், பிராமணர்களின் சுரண்டல்களையும் கண்ணுற்றவரானார். இதனிடையே காசியில் நடந்த ஒரு நிகழ்வு அவரின் எதிரிகால புரட்சிகர சிந்தனைக்கு வித்திட்டது.

THANTHAI PERIYAR HISTORY IN TAMIL | தந்தை பெரியார்
THANTHAI PERIYAR HISTORY IN TAMIL | தந்தை பெரியார்

வைக்கம் போராட்டம் (1924-1925)

THANTHAI PERIYAR HISTORY IN TAMIL: கேரளாவில் உள்ள வைக்கம் எனும் சிறிய நகரில் பின்னாளில் திருவாங்கூர் என்று மாற்றப்பட்ட நகரில் உள்ள கோயில்களில் தீண்டாமை கொடுமை நிலவியது. கோயில்களில் அரிசன மக்கள் என்றழைக்கப்படும் தலித் மக்கள் நுழையத் தடைவிதிக்கப்பட்டிருந்தது.

கோயில் இருக்கும் வீதிகளில் நடக்கவும் தடைவிதிக்கப்பட்டிருந்த்து. 1924ஆம் ஆண்டு சாதி எதிர்ப்புகள் வலுத்திருந்த நேரம் என்பதால் சாதி எதிர்ப்பு (சத்தியாகிரகம்) போராட்டம் காந்திய வழியில் நடத்த வைக்கம் சிறந்த இடமாக தேர்ந்தெடுக்கப்பட்டது.

ஏப்ரல் 14 அன்று பெரியார் அவரின் துணைவியார் நாகம்மாளுடன் வைக்கம் வந்து போரட்டத்தில் ஒன்றாக கலந்து கோண்டனர். இருவரும் கைது செய்யப்பட்டு தனித்தனி சிறையில் அடைக்கப்பட்டனர். காந்தியின் அறிவுறுத்தலின் படி இப்போராட்டத்தில் கேரளாவைச் சாரதாவர்கள், இந்து சமயம் சாராதவரகள் கலந்து கொள்ளவில்லை.

பெரியார் கைது செய்யபட்ட போதிலும் பெரியாரின் தொண்டர்கள் கைவிடாது போராட்டத்தை தொடர்ந்ததால் இச்சட்டம் விலக்கிகொள்ளப்பட்டது. அதுமுதல் பெரியார் வைக்கம் வீரர் என அழைக்கப்படலானார்.

இந்தி எதிர்ப்பு

THANTHAI PERIYAR HISTORY IN TAMIL: 1937 இல் சக்கரவர்த்தி இராசகோபாலாச்சாரியார் மதராசு மாகாணத்தின் முதலமைச்சரானார். அவரின் ஆட்சி காலத்தில், இந்தி கட்டாய மொழியாகப் பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இது இந்தி எதிர்ப்புப் போராட்டமாக வெடித்தது. நீதிக்கட்சியைச் சார்ந்தவர்களான சர். ஏ. டி. பன்னீர் செல்வம் மற்றும் இராமசாமி இப்போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்தனர். இப்போராட்டம் 1938 இல் பலர் கைது செய்யப்பட்டுச் சிறையில் இராசாசி அரசால் அடைக்கப்பட்டவுடன் முடிவுற்றது.

THIRUVALLUVAR HISTORY IN TAMIL | திருவள்ளுவர்

அதே வருடம் தமிழ்நாடு தமிழருக்கே என்றே முழக்கமும் ஊரெங்கும் முழங்கியது. இராமசாமி பள்ளிகளில் இந்தி திணிக்கப்படுவதை எதிர்த்து அவர் இவ்வாறு முழக்கமிட்டார். இது ஆரியர்கள், திராவிடர்களின் பண்பாடுகளை ஊடுருவிச் சிதைக்கத் திட்டமிடும், அபாயகரமான தந்திரச் செயல் என குறிப்பிட்டார்.

இந்தியை ஏற்றுக்கொள்வது இந்தி பேசும் வட இந்தியர்களிடமிருந்து, தமிழர்களைப் பிரித்து அவர்களை இரண்டாம் தர குடிமக்களாக்க வழிவகுத்துவிடும். இந்தி தமிழர்களின் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்துவது மட்டுமில்லாமல், அவர்கள் நெடுங்காலமாகப் பாதுகாத்துவரும் பண்பாட்டையும் சிதைத்து விடும்.

THANTHAI PERIYAR HISTORY IN TAMIL: தமிழை இனிமேல் பயன்படுத்த முடியாத நிலைக்குத் தமிழர்கள் தள்ளப்பட்டு விடுவார்கள் என்று இராமசாமி வலியுறுத்தினார். தொடர்ந்து இந்தி எதிர்ப்பு போராட்டங்கள் 1948, 1952, மற்றும் 1965 ஆம் ஆண்டுகளில் நடந்தன

THANTHAI PERIYAR HISTORY IN TAMIL | தந்தை பெரியார்
THANTHAI PERIYAR HISTORY IN TAMIL | தந்தை பெரியார்

பெரியாரின் சிந்தனைகள்

THANTHAI PERIYAR HISTORY IN TAMIL: சமூக நீதி, சாதி, கடவுள் மறுப்பு, சமூக ஏற்றத் தாழ்வு, பெண் விடுதலை, பெண் கல்வி, விஞ்ஞானம், அரசியல், அறிவியல் என அனைத்து விஷயங்கள் குறித்தும் பெரியார் பேசினார். வயோதிகக் காலத்திலும் ஓய்வெடுக்காமல் தனது சமூகப் பணியை இடைவிடாது தொடர்ந்தார். பெரியாரின் சிந்தனை நீட்சியாகவே தமிழகத்தில் திராவிட கட்சிகள் தோன்றின.

மரணத்திற்குப் பிறகும் தமிழகத்தின் தவிர்க்க முடியாத ஆளுமையாக திகழ்ந்து கொண்டிருக்கும் பெரியாரின் சிந்தனைகள், நூற்றாண்டுகள் கடந்தும் வெளிசத்தைப் பரப்பக்கூடியவை.

 1. யார் சொல்லியிருந்தாலும் எங்கு படித்திருந்தாலும் நானே சொன்னாலும் உனது புத்திக்கும் பொது அறிவுக்கும் பொருந்தாத எதையும் நம்பாதே.
 2. ஒரு காலத்து முறைகளே எக்காலத்துக்கும் என்றால் மனிதனுக்கு அறிவு வளர்ச்சி இல்லை என்பதுதான் பொருள்.
 3. வாழ்க்கை ஒழுக்கத்தில் கணவனுக்கு ஒரு சட்டம் மனைவிக்கு வேறு சட்டம் இருக்கிறது.
 4. என்னை கடவுள் நம்பிக்கை இல்லாதவன் என்கின்றனர் சிலர், அதில் உண்மையில்லை. நான் நம்பிக்கை வைக்க அப்படி எதுவும் இருப்பதாக புலப்படக் காணோமே என ஏங்குபவன் நான்.
 5. சிந்திப்பவன் மனிதன்; சிந்திக்க மறுப்பவன் மதவாதி; சிந்திக்காதவன் மிருகம்; சிந்திக்கப் பயப்படுகிறவன் கோழை.
 6. மனிதன் பிறந்தநாள் முதற்கொண்டு சாகின்ற வரையில் உலகில் மாணவனாக இருக்கிறான்.
 7. ஓய்வு, சலிப்பு என்பவற்றை தற்கொலை என்றே கருதுகிறேன்.
 8. ஒருவன் தன் தேவைக்கு மேலே எடுத்துக் கொள்ளாவிட்டால் எல்லோருக்கும் வேண்டியவை கிடைத்துவிடும்.
 9. ஆயுதமும் காகிதமும் பூஜை செய்ய அல்ல, புரட்சி செய்ய.
 10. மதம் மனிதனை மிருகமாக்கும்; சாதி மனிதனை சாக்கடையாக்கும்.

தந்தை பெரியார் வாழ்க்கை குறிப்பு | THANTHAI PERIYAR HISTORY IN TAMIL

THANTHAI PERIYAR HISTORY IN TAMIL: பெரியார் என அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் ஈ.வெ. ராமசாமி அவர்கள் செப்டம்பர் 17, 1879-ம் ஆண்டு ஈரோட்டில் பிறந்தார். 

இவர் சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதி வேற்றுமையினை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும், சாதி மற்றும் பாலின சமத்துவம் போன்ற கொள்கைக்காகவும் போராடிய மிகப்பெரிய பகுத்தறிவாளர். 

 1. தந்தை பெரியார் 1879-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ம் தேதி வெங்கட்ட நாயக்கருக்கும், சின்னதாயம்மைக்கும் மகனாக தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஈரோடு மாவட்டத்தில் பிறந்தார். இவருடைய இயற்பெயர், ஈரோடு வெங்கட்ட இராமசாமி நாயக்கர். இவருக்கு கிருஷ்ணசாமி என்ற சகோதரனும், கண்ணம்மா மற்றும் பொன்னுதாயி என்ற இரண்டு சகோதரிகளும் இருந்தனர். இவருடைய குடும்பம் மிக வசதியான வணிகப் பின்னணியைக் கொண்டது.
 2. தந்தை பெரியார் தனது படிப்பை ஐந்தாம் வகுப்போடு நிறுத்திக் கொண்டார். 19 வது வயதில் திருமணம் செய்துக்கொண்டார். இவருக்கு பெண்குழந்தை பிறந்தது ஆனால், அந்த குழந்தை ஐந்து மாதங்களிலேயே இறந்துவிட்டது.
 3. 1902-ம் ஆண்டுகளில் கலப்புத் திருமணங்களை நடத்தி வைத்தார். அனைத்து சாதியினருடனும் சேர்ந்து சமமாக உணவு சாப்பிட்டார். இதனால் அவருக்கும், அவர் தந்தைக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு, துறவு பூண்டு காசிக்கு சென்றார் தந்தை பெரியார். காசியில் அவருக்கு நடந்த நிகழ்வுகளால் இறைமறுப்பாளராக தன்னை மாற்றிக் கொண்டார்.
 4. ஆரம்ப காலத்தில் காந்தி கொள்கைகளில் ஈடுபாடு கொண்டு 1919-ம் ஆண்டு தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டார். காந்தி தலைமையில் காங்கிரஸ் நடத்திய பல போரட்டங்களில் கலந்துக்கொண்டு சிறை சென்றார். 1922-ம் ஆண்டு சென்னை மாகாண காங்கிரஸ் கட்சி தலைவராக தந்தை பெரியார் தேர்தெடுக்கப்பட்டார்.
 5. அரசுப் பணிகளிலும், கல்வியிலும் இடஒதுக்கீட்டை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரஸ் கட்சியினர் ஏற்க மறுத்ததால், தந்தை பெரியார் 1925-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியை விட்டு விலகினார்.
 6. கேரளாவில் வைக்கம் என்னும் ஊரில் கோயிலுக்குள் நுழையவும், கோயில் வீதியில் நடக்கவும் தலித் மக்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்த தடையை எதிர்த்து நடந்த போரட்டத்தில் தந்தை பெரியார் கலந்து கொண்டு சிறை சென்றார். இந்த போராட்டதிற்கு பிறகு பெரியார் ‘வைக்கம் வீரர்’ என அழைக்கப்பட்டார்.
 7. 1925-ம் ஆண்டு சமுகத்தில் இருக்கும் மூடபழக்க வழக்கங்களை அகற்ற வேண்டும் என ‘சுயமரியாதை இயக்கம்’  தொடங்கினார். அதே அண்டு “குடியரசு நாளிதழை” தொடங்கினார் தந்தை பெரியார். இந்த நாளிதழ் மூலம் பெரியார் தன்னுடைய கொள்கைகளையும் சிந்தனைகளையும் பரப்பினார். இதற்க்கு மக்களின் பெரும் ஆதரவும் கிடைத்தது. மாநாடு, கூட்டங்கள் நடத்தி மக்களிடைய விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
 8. 1937-ம் ஆண்டு சக்கரவர்த்தி ராஜகோபாலச்சாரியார் மதராஸ் மாகாணத்தின் முதலமைச்சரானார். அவரின் ஆட்சி காலத்தில் இந்தி கட்டாய மொழியாகப் பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தி எதிர்ப்புப் போராட்டமாக வெடித்தது. 1938-ல் நீதிக்கட்சியின் சார்பாக பெரியார் இந்தி மொழிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
 9. 1939-ம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டத்தினால் சிறை வைக்கப்பட்டிருந்த இராமசாமி விடுதலையானதும், நீதிக்கட்சியின் தலைவர் பொறுப்பை ஏற்றார். பின்னர் ‘நீதிக்கட்சி’ என்ற பெயரை 1944-ம் ஆண்டு ‘திராவிட கழகம்’ என பெயர் மாற்றினார் பெரியார். திராவிட கழகத்தின் கொள்கைகள் வெகு விரைவில் மக்களிடத்தில் சேர்ந்தது. 
 10. 1949-ம் ஆண்டு முதல் திராவிடர் கழகம் தங்களை மூடநம்பிக்கை எதிர்ப்பாளர்களாகவும், சமூக சீர்திருத்தவாதிகளாகவும் சமூகத்தில் அடையாளப்படுத்தும் வகையில் செயல்பட்டனர். திராவிடர் கழகம் தலித்துக்களுக்கு எதிராகப் பயன்படுத்தபடும் தீண்டாமையை மிகத்தீவிரமாக எதிர்ப்பதிலும், ஒழிப்பதிலும் முனைப்புடன் செயல்பட்டது. பெண்கள் உரிமை, பெண் கல்வி, பெண்களின் விருப்பத்திருமணம், கைம்பெண் திருமணம், ஆதரவற்றோர் மற்றும் கருணை இல்லங்கள் போன்ற செயல்களில் ஈடுபட்டனர்.
 11. 1949-ம் ஆண்டு தனது வழிகாட்டியான தந்தை பெரியாரிடமிருந்து அண்ணாதுரை விலகி, திராவிட முன்னேற்ற கழகம் (தி.மு.க) என்ற புதிய கட்சியை தொடங்கினார்.
 12. இந்து மத கடவுள்கள் மூடநம்பிக்கைகளை மக்களிடையே வளர்ப்பதாக கூறி, 1952-ம் ஆண்டு பிள்ளையார் உருவ பொம்மைகளை உடைத்தது மட்டுமல்லாமல், இந்துக்களின் கடவுளாக கருதப்பட்ட ராமரின் உருவப்படம் எரிப்புப் போராட்டத்தையும் நடத்தினார். 
 13. 1962-ம் ஆண்டு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளராக கி. வீரமணியை நியமித்தார். முழு நேரமும் கட்சிப் பொறுப்பைக் கவனிக்கும் விதத்தில் அவருக்கு பொறுப்பை தந்தார். 
 14. அப்போதைய இந்திய கல்வி அமைச்சர் திரிகுனா சென் அவர்களால், தந்தை பெரியாருக்கு ‘யுனஸ்கோ விருது’  1973-ம் ஆண்டு ஜூன் 27-ம் தேதி வழங்கப்பட்டது.
 15. 1973-ம் ஆண்டு டிசம்பர் 19-ம் தேதி சென்னை தியாகராய நகரில் நடைபெற்ற கூட்டத்தில், சாதிமுறையையும், இழிவுநிலையையும் ஒழித்துக்கட்ட திராவிடர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபடவேண்டும்’ என்று முழக்கமிட்டு தன்னுடைய கடைசி உரையை முடித்துக்கொண்டார். இது தான் அவரின் கடைசிக் கூட்டம் ஆகும்.
 16. உலகின் மாபெரும் சுயசிந்தனையாளரும், அழியாத வரலாற்றின் அறிஞருமான தந்தை பெரியார், டிசம்பர் 24-ம் தேதி 1973-ம் ஆண்டு, தனது 94_வது வயதில் காலமானார்.
 17. தமிழ்நாடு அரசு தந்தை பெரியாரின் நினைவைப் போற்றும் வகையில் அவர் வாழ்ந்த ஈரோடு இல்லத்தை பெரியார் – அண்ணா நினைவு இல்லமாக்கியுள்ளது. 
 18. ஈ.வெ.இராமசாமி ‘பகுத்தறிவு பகலவன், ‘வைக்கம் வீரர்’ மற்றும் ‘தந்தை பெரியார்’ என பல்வேறு பெயர்களில் அழைக்கபடுகிறார்.
 19. வசதியான, முற்பட்ட சாதியாகக் கருதப்பட்ட நாயக்கர் என்ற சமூகத்தில் பிறந்திருந்தும், சாதிக் கொடுமை, தீண்டாமை, மூடநம்பிக்கை, வர்ணாஸ்ரம தர்மம் கடைப்பிடிக்கும் பார்ப்பனியம், பெண்களைத் தாழ்வாகக் கருதும் மனநிலை போன்றவற்றை எதிர்த்து மக்களுக்காகக் குரல் கொடுத்தார். 
 20. இன்றும் திராவிடர்கள் தலைநிமிர்ந்து சமத்துவத்தோடும், பகுத்தறிவோடும் வாழ்கிறார்கள் என்றால், அதில் தந்தை பெரியாரின் பணி மிகப்பெரியது. மாபெரும் சிந்தனையாளர் ‘பெரியார்’ என்றால் அது மிகையாகாது.
THANTHAI PERIYAR HISTORY IN TAMIL | தந்தை பெரியார்
THANTHAI PERIYAR HISTORY IN TAMIL | தந்தை பெரியார்

நினைவகங்கள்

THANTHAI PERIYAR HISTORY IN TAMIL: தமிழ்நாடு அரசு ஈ.வெ.ராமசாமி நினைவைப் போற்றும் வகையில் அவர் வாழ்ந்த ஈரோடு இல்லத்தை பெரியார் – அண்ணா நினைவு இல்லமாக்கியுள்ளது. இங்கு இராமசாமியின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அவரின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் அவர் போராட்டம் நடத்திய வைக்கம் இடத்தில் தந்தை பெரியார் நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு இராமசாமி அவர்களின் உட்கார்ந்த நிலையிலான நான்கு அடி உயர திருஉருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 400 பேர்கள் அமரக்கூடிய அளவிலான திறந்தவெளி அரங்கம் உள்ளது. நூல் நிலையம் உள்ளது.

மறைக்கப்பட்ட புத்தகம்

THANTHAI PERIYAR HISTORY IN TAMIL: 1979 ஆம் ஆண்டு ம.கோ.இரா தலைமையிலான அரசு நாவலர் நெடுஞ்செழியன் தலைமையில் குழு அமைத்து நெ.து. சுந்தரவடிவேலுவை இராமசாமி வாழ்க்கை வரலாற்றைச் சிறுவர்களுக்காக எழுதப்பணித்தது. 1000 பக்க அளவிலான நூலாக அவரும் எழுதித்தந்த பின்னரும் அவை எக்காரணம் கொண்டோ வெளிவரவில்லை.

சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது

THANTHAI PERIYAR HISTORY IN TAMIL: சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக ‘சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது” 1995-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெறுவோருக்கு ரூ.5,00,000 (ரூபாய் ஐந்து லட்சம் மட்டும்) விருது தொகையும், ஒரு சவரன் தங்கப்பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படுகிறது. இவ்விருதாளர், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் தேர்வு செய்யப்படுகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *